அகாபே அன்பு AGAPAO LOVE |
அன்பு இருவகைப்படும். அவையாவன:
- 1. அகாபே அன்பு
இது தெய்வீக அன்பு இது பரிபூரணமானது.
- 2. பிலேயோ அன்பு
இதை சகோதரசிநேகம் என அமைக்கலாம்
இயேசு கிறிஸ்து சீமோன் பேதுருவிடம் இவ்விரண்டு விதமான அள்ளபயும் குறிப்பிடுகிறார்:
அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார் யோவா 21:35.
பேதுருவை இயேசு எப்போதும் சீமோனே என்றே அழைப்பார். லூக்கா 22:34 ஆவது வசனத்தில் மட்டும் பேதுருவே என்று கூறுகிறார்.
அவர் அவனை நோக்கி: “பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன்” என்றார். லூக்கா 22:34
மற்ற சீஷர்களைவிட பேதுரு இயேசு கிறிஸ்துவிடத்தில் அதிக அன்பாக இருப்பதாக பெருமைப்பட்டுக் கொண்டான். ஆகையினால் இயேசு அவனிடம் இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். (மத் 26:33-35) இயேசுகிறிஸ்து மூன்று தடவை பேதுருவிடம் என்மீது அன்பாக இருக்கிறாயா என்று கேட்கிறார். முதல் இரண்டு முறை கேட்கும்போது நீ என்னிடத்தில் அன்பாய் இருக்கிறாயா” என்று கேட்கிறார். இதற்கான கிரேக்க வார்த்தை ‘அகாபே (agapan) என்பதாகும். இதற்கு பரிபூரணமான அன்பு என்று பொருள். பேதுரு இயேசு கிறிஸ்துவிற்குப் பதில் கூறும்போது ஆம் ஆண்டவரே உம்மை நேசிக்கிறேன்” என்று கூறுகிறான் நேசிக்கிறேன் | என்பதன் கிரேக்க வார்த்தை ‘பிலேயோ (phileo) என்பதாகும் இதற்கு சகோதர சிநேகம், நட்பு என்று பொருள் மூன்றாம் முறையாக இயேசு கிறிஸ்து பேதுருவிடம் கேட்கும்போது என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்று கேட்பதற்குப் பதிலாக ‘என்னை நேசிக்கிறாயா“ என்று கேட்கிறார். அதாவது இயேசு கிறிஸ்து இரண்டு முறை அகாபே (agapao) என்னும் சொல்லைப் பயன்படுத்தி விட்டு, மூன்றாம் முறையாக பிலேயோ (philen) என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். இதன் பொருள் என்னவெனில் “பேதுரு என்மீது நீ தெய்வீக அன்பு வைத்திருக்கிறாயா” என்று இரண்டு முறை கேட்டுவிட்டு பின்பு மூன்றாம் முறையாக “நீ என்மீது சகோதர அன்பாவது வைத்திருக்கிறாயா” என்று கேட்கிறார். இயேசு கிறிஸ்து மூன்றாம் முறையாக இந்த வார்த்தையைப் பயன்படுத்தியதினால் பேதுரு மிகுந்த துக்கப்பட்டு ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்” என்று தன்னைத் தாழ்த்துகிறான்.