யூதா 1 : 5-7 விளக்கம்

யூதா 1 : 5-7 விளக்கம்

யூதா 1 : 5-7 விளக்கம்

யூதா 1:5. நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்து தேசத்தி-ருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.

யூதா 1:6. தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கி-களினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்.

யூதா 1:7. அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

5- ன் தொடர்பு வசனங்கள்
  • A எண் 14:22-37; 26:64-65; உபா 2:15-16; சங் 106:26; 1 கொரி 10:1-12; எபிரேயர் 3:16—4:2;
  • B 2 பேதுரு 3:1.
6- ன் தொடர்பு வசனங்கள்
  • A மத்தேயு 8:29; 25:41; எபே 6:12; 2 பேதுரு 2:4;
  • B யோவான் 8:44; எபிரேயர் 10:27;
  • C 2 பேதுரு 2:9; வெளி 20:10.
7- ன் தொடர்பு வசனங்கள்
  • A ஆதி 13:13; 18:20; 19:24-26; உபா 29:23; எரேமியா 50:40; மத்தேயு 25:41; லூக்கா 17:29; ரோமர் 1:26-27; 1 கொரி 6:9; 2 பேதுரு 2:6;
  • B ஆதி 19:5; ஏசாயா 1:9; 13:19; ஓசியா 11:8; ஆமோஸ் 4:11; மாற்கு 9:43-49; 2 பேதுரு 3:7;
  • C எரேமியா 20:16; எசேக்கியேல் 16:49-50; மத்தேயு 11:24;
  • D புலம்பல் 4:6; E ஏசாயா 33:14.
5- ன் முக்கிய வார்த்தைகள்

1:5 “நினைப்பூட்ட”- 2 பேதுரு 1:12-15.

“கர்த்தர்”- இது ஒரு புனைப் பெயர் (கிரேக்கப் பதம் குரியோஸ்). புதிய ஏற்பாட்டில் எங்கும் இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டது. முந்திய வசனத்தில் யூதா அவரை ‘ஆண்டவர்’ என்று அழைக்கிறார். எகிப்திலிருந்து தமது ஜனங்களை விடுவித்தார் என்கிறார். அங்கு ‘யேகோவா’ என்று கூறப்படுகிறது. காண்க: யாத் 3:7-12; 18:10; 19:2. யூதா இயேசுவை யேகோவா என்கிறார். காண்க: லூக்கா 2:11. ன் குறிப்பு.

“அழித்தார்”- எபிரேயர் 3:16-19; 1 கொரி 10:1-6; எண் 14:11, 22, 23; சங் 78:22, 32, 33; 106:18, 24, 26, 29.

6- ன் முக்கிய வார்த்தைகள்

1:6 “ஆதிமேன்மையைக்”- 2 பேதுரு 2:4.

“வாசஸ்தலத்தை”- பரலோகம்.

“மகாநாளின்”- முடிவில் வரும் நியாயத்தீர்ப்பின் நாள் (வெளி 20:11-15).

7- ன் முக்கிய வார்த்தைகள்

1:7 “அப்படியே”- சோதோமின் ஜனங்களின் பாவமும், வ 6ல் சொல்லப்பட்ட தூதர்களின் பாவமும் ஒன்றாக இருக்கிறது. ஒப்பிடுக: ஆதி 6:1-4.

“அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து”- ஆதி 19.

“அக்கினியின்”- 2 பேதுரு 2:6; மல்கியா 4:1; மத்தேயு 3:10, 12; 24:41.

விரிவான விளக்கம்

நினைப்பூட்டுதல் யூதா 1 : 5-7

சத்தியத்தைப் புரட்டுகிற கள்ளப்போதகர்களைக்குறித்து அப்போஸ்தலர் யூதா எச்சரித்து எழுதுகிறார். இவர்கள் ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்கள். சாதுரியமாகப் பேசக்கூடியவர்கள். ஆரம்பத்தில் கர்த்தரை விசுவாசிப்பதுபோல நடிக்கிறார்கள். அதன்பின்பு தங்களுடைய சுயரூபத்தையும், சுயசுபாவத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். இப்படிப்பட்டவர்களைக் குறித்து விசுவாசிகள் ஏற்கெனவே அறிந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களைக் குறித்து யூதா விசுவாசிகளுக்கு நினைப்பூட்ட விரும்புகிறார்.

நமக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிற சத்தியங்களை நாம் மறுபடியும் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும். நாம் பிரசங்கம்பண்ணும்போது ஒவ்வொரு முறையும் புதிய சத்தியத்தை பிரசங்கம்பண்ணவேண்டுமென்று எதிர்பார்க்கக்கூடாது. ஏற்கெனவே பிரசங்கம்பண்ணிய செய்தியை ஜனங்கள் மறந்துவிடக்கூடாது. அதற்காக அந்தச் செய்திகளை அவர்களுக்கு மறுபடியும் நினைப்பூட்டுவது தவறல்ல. மறந்துபோனதை மறுபடியும் நினைவுபடுத்தவேண்டும். மறப்பது மனுஷசுபாவம். ஆனாலும் மறந்துபோனதை நினைவுபடுத்திக்கொள்கிற கிருபைகளை கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிறார். அப்போஸ்தலர் யூதா விசுவாசிகளுக்கு நினைப்பூட்டுகிற ஊழியத்தைச் செய்கிறார்.

அப்போஸ்தலர் யூதா மூன்று காரியங்களை நினைப்பூட்டுகிறார். அவையாவன : 1. கர்த்தர் தமது ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார். 2. தங்கள் ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாத தூதர்களை அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார். 3. சோதோம் கொமோரா பட்டணத்தார் நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்தார்கள்.

கர்த்தர் தமது ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்தார். அவர்களை வனாந்தரத்தின் வழியாக கானான் தேசத்திற்கு வழிநடத்திச் சென்றார். தேவன் விசுவாசியாத இஸ்ரவேலை வனாந்தரத்திலே அழித்தார். வனாந்தரத்திலே கர்த்தர் அநேக அற்புதங்களை நடப்பித்தார். அவர்களுக்குப் போஜனமாக அநுதினமும் மன்னாவைப் புசிக்கக்கொடுத்தார். பருகுவதற்கு நல்ல தண்ணீரைக் கொடுத்தார். தம்முடைய வார்த்தையை கர்த்தர் அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் உறுதிபண்ணினார். ஆனாலும் இஸ்ரவேல் ஜனங்களில் அவிசுவாசிகளாயிருந்தவர்கள் தங்கள் அவிசுவாசத்தில் அழிந்துபோனார்கள்.

வனாந்தரத்தில் வழிநடத்தப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களைவிட அதிகமான சிலாக்கியங்கள் நமக்குக் கிடைத்திருக்கிறது. தம்மை விசுவாசியாதவர்களுக்கு விரோதமாக தேவனுடைய கரம் நீட்டப்பட்டிருக்கிறது. வேதாகமத்தில் அவிசுவாசிகளுக்கு விரோதமாக எச்சரிப்பின் வார்த்தைகள் சொல்லப்பட்டிருக்கிறது. இவைகளையெல்லாம் நாம் நினைவுகூர்ந்து, கர்த்தரைப்பற்றும் விசுவாசத்தில் உறுதியாய்த் தரித்திருக்கவேண்டும்.

தேவதூதர்கள் ஆதிமேன்மையுள்ளவர்கள். ஆனால் அவர்களோ தங்கள் ஆதிமேன்மையை காத்துக்கொள்ளவில்லை. கர்த்தர் தம்முடைய தூதர்களுக்கு வானத்திலே மகிமையான வாசஸ்தலத்தை ஸ்தாபித்திருந்தார். ஆனால் விழுந்துபோன தூதர்களோ தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளவில்லை. ஏராளமான தூதர்கள் தங்களுக்குரிய வாசஸ்தலத்தையும் விட்டுவிட்டார்கள். இந்தத் தூதர்கள் தேவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினார்கள். இதனால் தங்களுடைய மகிமையான ஸ்தானத்தை இழந்துபோனார்கள்.

கர்த்தர் விழுந்துபோன தூதர்களை அப்படியே விட்டுவிடவில்லை. சர்வசிருஷ்டிகளும் தங்களை சிருஷ்டித்தவரை ஆராதிக்கவேண்டும். சிருஷ்டிகரை ஆராதியாமல் அவருக்கு விரோதமாய்க் கிரியை செய்வது பாவம். தேவதூதர்கள் கர்த்தரை ஆராதியாமல், அவருக்கு விரோதமாக கலகம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களை மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டியிருக்கிறார். இப்போது அவர்களை அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு அப்போஸ்தலர் யூதா இந்தச் சம்பவத்தை நினைப்பூட்டி எழுதுகிறார். நாமும் இந்தச் சத்தியத்தை மறந்துவிடாமல், நினைவில் வைத்திருந்து, கர்த்தருக்கு விரோதமாக கலகம்பண்ணாமல், அவருக்குப் பயபக்தியாய் ஜீவிக்கவேண்டும்.

அப்போஸ்தலர் யூதா சோதோம் கொமோராவின் அழிவைப்பற்றியும் விசுவாசிகளுக்கு நினைப்பூட்டுகிறார். இவர்களுடைய அழிவு எல்லா விசுவாசிகளுக்கும் திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறது. சோதோம் கொமோரா பட்டணத்தார் விபசாரம்பண்ணினார்கள். அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்தார்கள். இவர்களோடு சேர்ந்து இவைகளை சூழ்ந்த பட்டணத்தார்களும் விபச்சாரம்பண்ணினார்கள். மாம்சத்தின் இச்சைகளின்படி நடந்து தங்களுடைய ஆத்துமாவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினார்கள்.

தேவன் பரிசுத்தர். அவர் நீதிபரர். அவர் தம்முடைய பரிசுத்தத்திலும், நீதியிலும்

ஒருபோதும் மாறுவதில்லை. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். நம்முடைய கர்த்தர் இப்போது பரிசுத்தராயிருக்கிறதுபோலவே, சோதோம் கொமோராவின் காலத்திலும் பரிசுத்தராகவே இருந்தார். அவர்கள் அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து விபசாரம்பண்ணினார்கள். பாவத்தின் சம்பளம் மரணம். தங்கள் பாவத்தினிமித்தமாய் அவர்களெல்லோரும் நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்தார்கள்.

இவர்கள் நமக்கு திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தால் நமக்குத் தண்டனை உண்டு. இந்தச் சத்தியத்தை நாம் மறந்துவிடாமல் நினைவில் வைத்திருக்கவேண்டும். சோதோம் கொமோரா பட்டணத்தாரைப்போல நாம் அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து விபசாரம் பண்ணிவிடக்கூடாது. நாம் கர்த்தருக்குப் பயந்து பரிசுத்தமாய் ஜீவிக்கவேண்டும்.


தேவனுடைய கிருபையிலிருந்து விழுந்து போனவர்களுக்கு எடுத்துக்காட்டுக்கள்

1. லூசிபர் – இவன் பாவம் செய்யும் வரையிலும் தேவனோடு பாவமில்லாதவனாக நடந்தவன். (எசே 28:1-17) தேவனுடைய கிருபையிலிருந்து விழுந்தவன். பரலோகத்திலிருந்து வெளியேற்றப் பட்டவன். (ஏசா 14:12-14; லூக்கா 10:8) பாவ இச்சைகளுக்கு அவன் இடம் கொடுத்தான். (யோவான் 8:44) நித்திய நரகத்திற்கு நியமிக்கப்பட்டான். (மத் 25:41; வெளி 20:10).

2. பரிசுத்த தூதர்கள் (ஐர்ப்ஹ் ஹய்ஞ்ங்ப்ள்) – தேவனுடைய பரிசுத்த தூதர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் லூசிபரோடு சேர்ந்து கலகம் பண்ணினார்கள். (வெளி 12:3,7-12) அவர்கள் சாத்தானோடு நரகத்திற்கு நியமிக்கப் பட்டார்கள். (மத் 25:41; ஏசா 24:21) இவர்களில் அநேகர் காமவிகாரம் கொண்டு இப்பொழுது நரகத்தில் இருக்கிறார்கள். (2பேதுரு 2:4; யூதா 1:6-7) தேவதூதர்கள் தேவனுடைய குமாரர்கள். (ஆதி 6:1-4; யோபு 1:6; யோபு 2:1; யோபு 38:4-7) பாவம் செய்கிறவர்களுக்குப் பட்சபாதமில்லாமல் தண்டனை கொடுக்கப்படுகிறது.

3. பிசாசுகள் (உங்ம்ர்ய்ள்) – பிசாசுகளும் பாவமில்லாமல் சிருஷ்டிக்கப்பட்டவை. தேவனுடைய கிருபையிலும் சிலாக்கியத்திலும் இருந்தவை. அவை பாவம் செய்து நித்திய அழிவைத் தங்களுக்குத் தேடிக் கொண்டன. (மத் 8:29; மாற்கு 5:7; லூக்கா 8:28-32; யாக் 2:19). பிசாசுகள் இப்பொழுது பாதாளத்தில் உள்ளன. (வெளி 9).

4. ஆதாமிற்கு முந்திய சந்ததியார் (டழ்ங்-ஹக்ஹம்ண்ற்ங்ள்) – ஆதாமிற்கு முன்பாகவே மனுஷ சந்ததி இருந்ததாக வேதபண்டிதர்களில் சிலர் வியாக்கியானம் கூறுகிறார்கள். (ஆதி 1:2; ஏசா 14:12-14; எரே 4:23-26; எசே 28:11-17; 2பேதுரு 3:5-8) ஆதாமிற்கு முன்பாக லூசிபர் பூமியை ஆளுகை செய்ததாகவும், எல்லா ஜனங்களையும் தேவனுக்கு எதிராக பாவம் செய்ய தூண்டியதாகவும் இதன் விளைவாக பூமியானது ஜலத்தினால் அழிக்கப்பட்டதாகவும் இவர்கள் கூறுகிறார்கள். (ஆதி 1:2; 2பேதுரு 3:5-8) இவர்களுடைய கருத்தின் பிரகாரம் இந்த ஜலப்பிரளயத்தில் மனுஷரோ, விலங்குகளோ, நகரங்களோ, தாவர வர்க்கங்களோ தப்பிப் பிழைக்க வில்லை. (எரே 4:23-26)

5. ஆதாமும், ஏவாளும் தேவனுடைய கிருபையில் சிருஷ்டிக்கப்பட்டார்கள். (ஆதி 1:26-31) அவர்கள் பாவம் செய்து தேவகிருபையிலிருந்து விழுந்து போனார்கள். நித்திய ஜீவனை இழந்துவிட்டார்கள். (ஆதி 2:17; ஆதி 3:1-19; ரோமர் 5:12-21; 2கொரி 11:3). பாவத்திலிருந்து அவர்கள் இரட்சிக்கப் பட்டார்களா என்று எந்த வேதவாக்கியமும் கூறவில்லை. பழைய ஏற்பாட்டின் விசுவாச வீரர்களின் பெயர் அட்டவணையில் இவர்களுடைய பெயர்கள் காணப்பட வில்லை. (எபி 11) ஆதாம் தன்னுடைய 810 வயதிலும் பாவியாகவே இருந்தான். (ஆதி 6:3) அவன் தேவனுடைய பிள்ளை. (லூக்கா 3:38) ஆனால் அவன் பாவம் செய்து தேவனுடைய கிருபையிலிருந்து விழுந்தான்.

6. ஆதாமியர்கள் (ஆக்ஹம்ண்ற்ங்ள்) – ஆதாமின் சந்ததியாரை இந்த வாக்கியம் குறிக்கிறது. ஆதாமின் சந்ததியார் ஒரு காலத்தில் தேவனுடைய கிருபையில் இருந்தார்கள். பாவம் செய்து தேவகிருபையை இழந்து போனார்கள். இதனால் மனுக்குலத்திற்கு மரணம் வந்தது. (ரோமர் 5:12-21; 1கொரி 15:21-22; 2கொரி 11:3)

7. இஸ்ரவேலரில் அநேகர் (ஙஹய்ஹ் ஒள்ழ்ஹங்ப்ண்ற்ங்ள்) – இஸ்ரவேலர்கள் யாத் 32 ஆவது அதிகாரத்திற்கு முன்பு பாவம் செய்யாமல் மறுபடியும் பிறந்தவர்களாக இருந்தார்கள். (உபா 32:18; கலா 4:28-29), மீட்கப்பட்டிருந்தார்கள் (யாத் 15:13; உபா 21:8), பரிசுத்தமாக்கப் பட்டிருந்தார்கள் (யாத் 31:13; லேவி 20:8), மனம்மாறியிருந்தார்கள் (சங் 19:7), கிருபையில் இருந்தார்கள் (யாத் 33:12-17; சங் 84:11), ஜீவபுஸ்தகத்தில் அவர்களுடைய பெயர்கள் எழுதப் பட்டிருந்தது (யாத் 32:32-33; யாத் 69:25-29), நமக்குள்ள சுவிசேஷம் அவர்களுக்கும் இருந்தது (கலா 3:6-14; எபி 4:2), அவர்கள் பாவம் செய்த போது தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டு தங்களுடைய நித்திய ஜீவனை இழந்து போனார்கள். (யாத் 32:32-33; 2கொரி 10:1-18; எபி 2:14; யூதா 1:5). பலமுறை அவர்கள் தேவனைப் பரீட்சை பார்த்து தேவனைவிட்டு விலகி சபிக்கப்பட்டார்கள். (உபா 17:3; உபா 29:26; நியா 2:11-23; நியா 3:5-14; நியா 4:1; நியா 5:31; நியா 6:1; நியா 8:28-35; நியா 10:6-11:33; நியா 12:7-13:1; நியா 20:13; 1சாமு 2:12-36; 1சாமு 3:11-14; 1இராஜா 11:1-13,38-39; 1இராஜா 12:25-33; 1இராஜா 13:33-34; 1இராஜா 14:16-31; 1இராஜா 15:29; 1இராஜா 16:2; 2இராஜா 17:7-23)

8. நாதாபும், அபியுவும் (சஹக்ஹக்ஷ ஹய்க் ஆக்ஷண்ட்ன்) – தேவனுடைய பரிசுத்த ஆசாரியர்கள் (யாத் 19:6; யாத் 22:31). பாவத்தில் விழுந்தார்கள். (லேவி 10:1-20; எண் 3:4).

9. கோராகு, தாத்தான், அபிராம் (ஃர்ழ்ஹட், உஹற்ட்ஹய், ஆக்ஷண்ழ்ஹம்) – போன்ற தேவனுடைய மனுஷர்கள் பாவம் செய்து தேவனை விட்டுப் பிரிந்து பாதாளத்திற்குப் போனார்கள்.

பாதாளம் – -&ள்!–ஆ – ள்ட்ங்ட்-ர்ப்ங்’, ள்ட்ங்ட்-ர்ப்ங்’ – 7585

பொதுப்பெயர்ச்சொல் – பாதாளம், நரகம் (எண் 16:1-3,23-33).

10. சவுல் (நஹன்ப்) – மனம்மாறி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டவன். (1சாமு 10:9-13,21-24) அஞ்சனம் பார்த்து பாவம் செய்தான். (1சாமு 28; லேவி 19:31; லேவி 20:6). பரிசுத்த ஆவியை இழந்தான். (1சாமு 16:12-23) தேவனால் சபிக்கப்பட்டான். தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டான். (1சாமு 31:1-6; 1நாளா 10:13-14).

11. இயேசுவின் சீஷர்களில் அநேகர் இயேசுவையும், அவருடைய கிருபையையும் விட்டுப்பிரிந்து போய் அவரைப் பின்பற்றாமல் போனார்கள். (யோவான் 6:66). அவர்கள் சிறிதுகாலம் இயேசுவை விசுவாசித்தார்கள். (லூக்கா 8:13). கேட்டுப்போனார்கள். (எபி 10:26-39).

12. யூதாஸ் (ஓன்க்ஹள்) – ஒரு காலத்தில் இரட்சிக்கப்பட்டவன். பின்பு இயேசுவைக் காட்டிக் கொடுத்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டான்.

13. அனனியாவும், சப்பிராளும் (ஆய்ஹய்ண்ஹள் ஹய்க் நஹல்ல்ட்ண்ழ்ஹ) – இவர்கள் இரட்சிக்கப்பட்டு சபையில் ஒரே இருதயமாகவும், ஒரே ஆத்துமாவாகவும் இருந்தார்கள். (அப் 4:32-5:1) பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்கூறி உடனடியாக மரித்துப் போனார்கள். (அப் 5:1-11)

14. கலாத்தியர்கள் ஆவியில் ஆரம்பம் பண்ணி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டவர்கள். (யூதா 3:2-4) இதன் பின்பு விரைவில் கிறிஸ்துவையும், அவருடைய கிருபையையும் விட்டு விலகிப் போனார்கள். (யூதா 1:6; யூதா 5:4).

15. தேமா (உங்ம்ஹள்) – ஆதித்திருச்சபையில் பிரசங்கித்தவன். (கொலோ 4:14; பிலே 1:24) பாவத்தில் விழுந்து இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசை வைத்து தேவனுடைய கிருபையை இழந்து போனான். (2தீமோ 4:10). ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. (1யோவான் 2:15-17).

16. இமெனேயும், அலெக்சந்தரும் (ஐஹ்ம்ங்ய்ஹங்ன்ள் ஹய்க் ஆப்ங்ஷ்ஹய்க்ங்ழ்) – இவர்கள் இருவரும் ஒரு காலத்தில் விசுவாசிகளாக இருந்தார்கள். அதன் பின்பு விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள். (1தீமோ 1:19-20).

17. ஏராளமானோர் பணத்தின்மீது ஆசை பாராட்டி, விசுவாசத்தை விட்டு வழுவிப் போனார்கள். (1தீமோ 6:10,21).

18. இளவயதுள்ள விதவைகளில் அநேகர் கிறிஸ்துவுக்கு விரோதமாய் காமவிகாரம் கொண்டு முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விட்டு விட்டு ஆக்கினைக்குட்பட்டார்கள். (1தீமோ 5:11-13).

19. இமெனேயும், பிலேத்தும் (ஐஹ்ம்ங்ய்ஹங்ன்ள் ஹய்க் டட்ண்ப்ங்ற்ன்ள்) – இவர்கள் சத்தியத்தை விட்டுவிலகி மற்றவர்களுடைய விசுவாசத்தையும் கவிழ்த்துப்போட்டார்கள். (2தீமோ 2:17-19).

20. ஒரு காலத்தில் இரட்சிக்கப்பட்டு, பின்பு வழிவிலகிப் போகிறவர்கள் விசுவாசத்தை விலகிப்போகிறார்கள். அவர்களுடைய பின்நிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். (ரோமர் 1:21-32; எபி 6:4-9; எபி 10:26-29; 2பேதுரு 2:20-22)

21. சபைகளில் ஏராளமானோர் பின்பு பின்வாங்கிப் போய்விடுகிறார்கள். அவர்கள் மறுபடியும் மனந்திரும்பி, கர்த்தரிடத்தில் வர வேண்டும். இல்லையெனில் அழிவு அவர்களுக்கு நிச்சயம். (வெளி 2:5,10,16,20-23; வெளி 3:3,11,16).

ஒரு காலத்தில் தேவனுடைய கிருபையிலிருந்து விட்டு பின்பு தேவனுடைய கிருபையிலிருந்து விலகிப்போனவர்களுக்கு வேதாகமத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன. அவர்கள் மனந்திரும்பி மறுபடியும் கிறிஸ்துவிடம் வர வேண்டும். தேவனுடைய நிபந்தனைகளுக்குக் கீழ்ப்படிந்து ஜீவிக்க வேண்டும்.

பிரமாணங்களும் எச்சரிப்புக்களும்

மோசேயின் காலத்திற்கு முன்பு

1. நீ சாகவே சாவாய். (ஆதி 2:17).

2. நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு. (ஆதி 17:1).

3. நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள். (ஆதி 18:19).

குணமாக்கும் உடன்படிக்கைக்குட் பட்டவர்கள்

4. நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன். (யாத் 15:26).

மோசேயின் பிரமாணத்திற்கு உட்பட்டவர்கள்

5. அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன். (யாத் 16:4).

6. நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக் கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள். (யாத் 19:5).

7. எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன். (யாத் 32:33).

8. குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர். (யாத் 34:6-7).

9. நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால், நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழைபெய்யப் பண்ணுவேன். (லேவி 26:3-13; உபா 7:12-24; உபா 11:13-14; உபா 28:1-14).

10. நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும்…..என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில்…..நான் உங்களைச் சபிப்பேன். (லேவி 26:14-45; உபா 28:15-68).

11. உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற் போவதினால், கர்த்தர் உங்களுக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்போல நீங்களும் அழிவீர்கள். (உபா 8:11-20).

12. நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து, ….. கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ள வேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். (உபா 10:12-13).

13. உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள். இல்லாவிடில் கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, மழை பெய்யாமற்போகவும், தேசம் தன் பலனைக் கொடாமலிருக்கவும் வானத்தை அடைத்துப்போடுவார். (உபா

11:16-21).

14. இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்…..தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும்……தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல்,…… நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும். (உபா 11:26-28).

பாலஸ்தீன உடன்படிக்கைக்குட்பட்டவர்கள்

15. நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக. (உபா 29:1,9,13-15).

16. இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளைக் கேட்டும், தாகத்தினிமித்தம் வெறிக்கக் குடித்து, மன இஷ்டப்படி நடந்தாலும் எனக்குச் சுகமுண்டாயிருக்கும் என்று தன் உள்ளத்தைத் தேற்றிக்கொண்டால் கர்த்தர் அவனை மன்னிக்கச் சித்தமாயிரார். (உபா 29:19-28).

17. உன் தேனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி…நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தால், உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்குஇரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளுவார். (உபா 30:1-10).

18. ஜீவனையும், நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன். நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும் வேண்டும். (உபா 30:11-16).

19. நீ கேளாதபடிக்கு, மனம் பேதித்து, இழுப்புண்டுபோய், வேறே தேவர்களைப் பணிந்து, அவர்களைச் சேவிப்பாயானால்…. நெடுநாள் வாழாமல் நிச்சயமாய் அழிந்து போவீர்கள். (உபா 30:17-20)

யோசுவா கூறிய பிரமாணங்களும், எச்சரிப்புக்களும்

20. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்ளுவாய். (யோசு 1:7-8).

21. மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதை விட்டு, வலது புறமாகிலும், இடதுபுறமாகிலும் விலகிப் போகாமல், அதையெல்லாம் கைக் கொள்ளவும் செய்யவும் நிர்ணயம் பண்ணிக்கொள்ளுங்கள்…..நீங்கள் பின்வாங்கிப்போய், உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளைச் சேர்ந்து, அவர்களோடே சம்பந்தங்கலந்து, நீங்கள் அவர்களிடத்திலும் அவர்கள் உங்களிடத்திலும் உறவாடினால், உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார்…உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகு மட்டும், அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள். (யோசு 23:6-14).

22. உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே சொன்ன நல்ல காரியமெல்லாம் உங்களிடத்திலே எப்படி நிறைவேறிற்றோ, அப்படியே உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி, அந்நிய தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்து கொள்ளுங்காலத்தில், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும், கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார். (யோசு 24:14-16).

23. கர்த்தர் உங்களுக்கு நன்மைசெய்திருக்க, நீங்கள் கர்த்தரைவிட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தால், அவர் திரும்பி உங்களுக்குத் தீமை செய்து, உங்களை நிர்மூலமாக்குவார். (யோசு 24:20).

சாமுவேல் கூறிய பிரமாணங்களும், எச்சரிப்புகளும்

24. நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள்தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள். (1சாமு 12:14).

25. நீங்கள் இன்னும் பொல்லாப்பைச் செய்யவே செய்வீர்களானால், நீங்களும் உங்கள் ராஜாவும் நாசமடைவீர்கள். (1சாமு 12:24-25).

26. தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர் ……..உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது. (1சாமு 13:13-14).

தாவீது, சாலொமோன் ஆகியோர் கூறிய பிரமாணங்களும், எச்சரிப்புக்களும்

27. தேவன் சொன்ன தம்முடைய வார்த்தையைத் திடப்படுத்துகிறதற்கு…நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக. (1இராஜா 2:3-4).

28. உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும், தங்கள் முழு ஆத்துமாவோடும் கர்த்தருக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் வழியைக் காத்துக் கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை. (1இராஜா 2:3).

29. நீயும் என் கட்டளைகளையும், என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடிக்கப்பண்ணுவேன். (1இராஜா 3:14).

30. நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு, நீ என் வழிகளில் நடந்து…. என் கட்டளைகளையும், என் கற்பனைகளையும் கைக்கொள்ளும்படிக்கு என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்கிறதுண்டானால், நான் உன்னோடிருந்து….உனக்கு நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலை உனக்குத் தருவேன். (1இராஜா 9:3-9; 1இராஜா 11:1-38; 2நாளா 7:19-22).

31. நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும்….எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாய் இருந்தார்களேயானால் (2இராஜா 21:7-8).

32. என் கற்பனைகளின்படியும் என் நியாயங்களின்படியும் செய்ய உறுதியாயிருப்பானானால். (1நாளா 28:7-10).

33. என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து அவர்கள் தேசத்துக்கு úக்ஷமத்தைக் கொடுப்பேன். (2நாளா 7:14).

34. நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார். நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார். (1நாளா 28:9).

35. நீங்கள் வழிவிலகி, நான் உங்களுக்கு முன்வைத்த என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் விட்டுப்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வீர்களேயாகில், நான் அவர்களுக்குக் கொடுத்த என் தேசத்தில் இருந்து அவர்களைப் பிடுங்கி, என் நாமத்திற்கென்று நான் பரிசுத்தப்படுத்தின இந்த ஆலயத்தை என் சமுகத்தினின்று தள்ளி, அதை எல்லா ஜனசதளங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச்சொல்லாகவும் வைப்பேன். (2நாளா 7:19-22).

பழைய ஏற்பாட்டுக்கால தீர்க்கதரிசிகள் கூறிய பிரமாணங்களும், எச்சரிப்புக்களும்

36. நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார். நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார். அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டு விடுவார். (2நாளா 15:2).

37. நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால், அவர் உங்களைக் கைவிடுவார். (2நாளா 24:20).

38. அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த ஸ்தலத்தின்மேல் இறங்கும் (2நாளா 34:25).

39. அடங்கார்களேயாகில் பட்டயத்துக்கு இரையாகி, ஞானம் அடையாமல் மாண்டுபோவார்கள். (யோபு 36:12).

40. கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்……நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன். (ஏசா 1:4-15).

41. நீங்கள் மனம்பொருந்திச் செவி கொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள். (ஏசா 1:19-20; எரே 1:16; எரே 2:13,17,19; எரே 5:19; எரே 9:13; எரே 15:6; எரே 16:11; எரே 17:13; எரே 19:4; எரே 22:9).

42. கேளார்களேயாகில், நான் அப்படிப்பட்ட ஜாதியை வேரோடே பிடுங்கிப்போட்டு அழித்துவிடுவேன். (எரே 12:17).

43. நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான். (எசே 3:20-21).

44. பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். (எசே 18:4).

45. நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப் படுவதில்லை. அவன் செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான். (எசே 18:24-26).

46. நீதிமான் துரோகம்பண்ணுகிற நாளிலே அவனுடைய நீதி அவனைத் தப்புவிப்பதில்லை. துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் தன் அக்கிரமத்தினால் விழுந்து போவதுமில்லை. நீதிமான் பாவஞ்செய்கிற நாளிலே தன் நீதியினால் பிழைப்பதுமில்லை……அவன் செய்த தன் அநியாயத்திலே சாவான். (எசே 33:12-13).

47. நீங்கள் கேளாமலும், என் நாமத்துக் மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்தியாமலுமிருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன். (மல் 2:2).

புதிய உடன்படிக்கை – கிருபையின் காலம்

கிறிஸ்து கூறிய பிரமாணங்களும் எச்சரிப்புக்களும்

48. நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப் படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப் படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. (மத் 5:13).

49. முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். (மத் 10:22).

50. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப் படுவதில்லை. (மத் 12:32-33).

51. தங்களுக்குள்ளே வேர்கொள்ளாத படியினாலே, கொஞ்சக்கால மாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள். (மத் 13:21; லூக்கா 8:13).

52. ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். (மத் 16:24).

53. அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்திய ஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள். (யோவான் 6:27)

54. நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள். (யோவான் 8:31).

55. பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்….அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான். குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (யோவான் 8:34-35).

56. என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. (யோவான் 10:26-27)

57. என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான். (யோவான் 14:21-23).

58. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான். அப்படிப் பட்டவவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள். அவைகள் எரிந்துபோம். (யோவான் 15:6).

59. என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். (யோவான் 15:9).

60. நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். (யோவான் 15:10-13).

61. நாங்கள்

உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள். (யோவான் 15:14).

பவுல் கூறிய பிரமாணங்களும் எச்சரிப்புக்களும்

62. தேவனுடைய கிருபையிலே நிலை கொண்டிருக்கும்படி அவர்களுக்குப் புத்தி சொன்னார்கள். (அப் 13:43).

63. சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொன்னார்கள். (அப் 14:22).

64. அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்….. தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். (ரோமர் 1:21-32).

65. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்கள். (ரோமர் 1:32; ரோமர் 2:2-3).

66. சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். (ரோமர் 2:7).

67. எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா? (ரோமர் 6:16-23).

68. பாவத்தின் சம்பளம் மரணம். (ரோமர் 6:23).

69. மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை. (ரோமர் 8:1-4).

70. மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள். ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். (ரோமர் 8:12-13).

71. அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால், அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள். (ரோமர் 11:20-23).

72. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். (1கொரி 3:17)

73. அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. (1கொரி 6:9-10).

74. பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? (1கொரி 8:11).

75. மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாத படிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன். (1கொரி 9:27)

76. நான் உங்களுக்குப் பிரசங்கித்த பிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே. (1கொரி 15:2).

77. விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்களே. (2கொரி 1:24).

78. நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம். (2கொரி 5:10).

79. தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய் பெறாதபடிக்கு, உடன் வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம். (2கொரி 6:1).

80. சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். (2கொரி 11:3).

81. இயேசு கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களோ? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள். (1கொரி 9:27, 2கொரி 13:5).

82. உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். (கலா 1:6-9).

83. நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன். (கலா 2:18).

84. நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை. (கலா 2:21)

85. சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்? (கலா 3:1; கலா 5:7).

86. ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப் போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? (கலா 3:3; கலா 5:19-21).

87. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். (கலா 3:11)

88. நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும், வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி? (கலா 4:9)

89. நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக் குறித்துப் பயந்திருக்கிறேன். (கலா 4:11).

90. கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப் படுகிறேன்…உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறேன். (கலா 4:19-20)

91. நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.(கலா 5:1,3)

92. நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள். (கலா 5:4).

93. புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும். (கலா 5:9; 1கொரி 5:7-8).

94. நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள். (கலா 5:15).

95. ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள். அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். (கலா 5:16).

96. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. (கலா 5:19-21).

97. மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான். ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். (கலா 6:7-8).

98. கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்ற படியாக நடந்துகொண்டீர்கள். (எபே 2:2).

99. கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். (எபே 5:6).

100. நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன். (பிலி 1:11).

101. அதிக பயத்தோடும், நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். (பிலி 2:12).

102. கர்த்தருக்குள் நிலைத்திருங்கள். (பிலி 4:1).

103. நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும், உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும். (கொலோ 1:22).

104. நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக. (கொலோ 2:6-7).

105. லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல. (கொலோ 2:8)

106. தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீர முழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக் கொள்ளாமல், மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப் பாருங்கள். (கொலோ 2:18-19)

107. இவைகளைப் பூமியில் உண்டு பண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள். இவைகளின் பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும். (கொலோ 3:5-6).

108. அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான். பட்சபாதமே இல்லை. (கொலோ 3:25).

109. நான் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், எங்கள் வேலை வீணாய்ப் போகத் தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட் படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன். (1தெச 3:5).

110. நீங்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால், நாங்கள் பிழைத்திருப்போம். (1தெச 3:8).

111. சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கு நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு…… நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (2தெச 1:8-9).

112. எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலகவேண்டும். (2தெச 3:6,14).

113. இவைகளைச் சிலர் நோக்காமல் வீண் பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப் போனார்கள். (1தீமோ 1:5-6).

114. நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு. இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள். (1தீமோ 1:18-20).

115. ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்டு பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள். (1தீமோ 4:1).

116. உன்னைக்குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு. இவைகளில் நிலைகொண்டிரு. இப்படிச் செய்வாயானால் உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக் கொள்ளுவாய். (1தீமோ 4:16).

117. ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான். (1தீமோ 5:8).

118. அவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்க் காமவிகாரங்கொள்ளும்போது விவாகம் பண்ண மனதாகி, முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விடுவதினாலே ஆக்கினைக்குட்படுவார்கள். (1தீமோ 5:11-12).

119. சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள். (1தீமோ 5:15).

120. பணஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் இதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள். (1தீமோ 6:10).

121. விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள். (1தீமோ 6:12,19).

122. சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். (1தீமோ 6:21).

123. நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம். (2தீமோ 2:11).

124. நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார். (2தீமோ 2:12).

125. அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப் போடுகிறார்கள். (2தீமோ 2:18).

126. நீ கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திரு. (2தீமோ 3:14-15).

127. நாம் கேட்ட சத்தியங்களை விட்டு விலகாதபடிக்கு அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய் கவனிக்க வேண்டும். (எபி 2:1).

128. இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்குத் தப்பித்துக் கொள்ள முடியாது. (எபி 2:4).

129. கிறிஸ்துவினுடைய வீடாக இருக்கும் நாம் நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும், மேன்மை பாராட்டுதலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருக்க வேண்டும். (எபி 3:6).

130. சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். (எபி 3:12).

131. உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள். (எபி 3:13).

132. நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். (எபி 3:14).

133. அவருடைய இளைப்பாறுத-ல் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப் போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம் (எபி 4:1-2).

134. அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுத-ல் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்

(எபி 4:11)

135. நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக் கடவோம். (எபி 4:14).

136. மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப் படுத்துகிறபடியால், மனந்திரும்புதற் கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். (எபி 6:4-9).

137. நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள். (எபி 6:11).

138. உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டும். (எபி 6:12).

139. நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ள வேண்டும். (எபி 6:18-19).

140. நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம். (எபி 10:23).

141. நாம் வேண்டுமென்றே பாவம் செய்தால் தேவனுடைய நியாயத்தீர்ப்பும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையும் நமக்கு நிச்சயமாய் வரும். (எபி 10:26-31).

142. மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள் (எபி 10:35).

143. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன் மேல் தேவனுடைய ஆத்துமா பிரியமாயிராது. (எபி 10:38-39).

144. பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட வேண்டும். (எபி 12:1).

145. முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள். (எபி 12:13).

146. ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர்முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். (எபி 12:15-17).

147. பேசுகிறவருக்கு நீங்கள் செவி கொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்க மாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப் போகாம-ருக்க, பரலோகத்தி-ருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்? (எபி 12:25).

148. அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக் கடவோம். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே. (எபி 12:28-29).

யாக்கோபு கூறிய பிரமாணங்களும், எச்சரிப்புக்களும்

149. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும். பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். (யாக் 1:13-15).

150. ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது. (யாக் 2:26).

151. ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும். (யாக் 4:17).

152. சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம் போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். (யாக் 5:19-20)

பேதுரு கூறிய பிரமாணங்களும், எச்சரிப்புக்களும்

153. எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன். (அப் 10:35).

154. தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது. (1பேதுரு 3:12).

155. நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்? (1பேதுரு 4:18).

156. இவைகள்இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப் பட்டதை மறந்து கண் சொருகிப்போன குருடனாயிருக்கிறான். (2பேதுரு 1:9).

157. உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள். இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. (2பேதுரு 1:10).

158. பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப் பட்டவர்களாக ஒப்புக்கொடுத்தார் (1பேதுரு 2:4-9).

159. அக்கிரமக்காரரை ஆக்கினைக் குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார். (2பேதுரு 2:9).

160. செம்மையான வழியைவிட்டுத் தப்பி நடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப் போனவர்கள். (2பேதுரு 2:15).

161. வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்த்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள். (2பேதுரு 2:18).

162. எதினால் ஒருவன் ஜெயிக்கப் பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே. (2பேதுரு 2:19)

163. கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்த பின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப் பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும். (2பேதுரு 2:20-22)

164. நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். (2பேதுரு 3:14).

165. அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்து போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். (2பேதுரு 3:17,18).

யோவான் கூறிய பிரமாணங்களும், எச்சரிப்புக்களும்

166. நாம் அவரோடே ஐக்கியப் பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம். (1யோவான் 1:6).

167. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1யோவான் 1:7).

168. அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். (1யோவான் 2:3).

169. அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. (1யோவான் 2:4).

170. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு பூரணப்பட்டிருக்கும். நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். (1யோவான் 2:5).

171. ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான். (1யோவான் 2:9).

172. ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. (1யோவான் 2:15-17).

173. தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். (1யோவான் 2:17).

174. நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். (1யோவான் 2:24-25)

175. அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும் படிக்கு அவரில் நிலைத்திருங்கள். (1யோவான் 2:28).

176. நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள். (1யோவான் 2:29).

177. அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான். (1யோவான் 3:3).

178. பாவஞ்செய்கிற எவனும் நியாயப் பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். (1யோவான் 3:4; எசே 18:4; கலா 5:21).

179. அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை. பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை. அவரை அறியவுமில்லை. (1யோவான் 3:6)

180. பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான். (1யோவான் 3:8).

181. தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான் (1யோவான் 3:9)

182. நீதியைச் செய்யாமல் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. (1யோவான் 3:10).

183. தன் சகோதரனில் அன்புகூராமல் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல (1யோவான் 3:10,15).

184. சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். (1யோவான் 3:14).

185. தன் சகோதனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான். மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது (1யோவான் 3:15).

186. ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? (1யோவான் 3:17).

187. அன்பில்லாதவன் தேவனை அறியான். (1யோவான் 4:7-8).

188. தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். (1யோவான் 5:1-5).

189. மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல் செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார். (1யோவான் 5:16) தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவான். (யாக் 5:19-20; எசே 18:4; கலா 5:21).

190. கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். (2யோவான் 1:9).

191. நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான். தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை. (3யோவான் 1:11).

யூதா கூறிய பிரமாணங்களும், எச்சரிப்புக்களும்

192. நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் மறுதலிக்கிறவ பக்தியற்றவர்களாகிய சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள். (யூதா 1:4).

193. கர்த்தர் தமது ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார். (யூதா 1:5; 1கொரி 10).

194. தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக் கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத் தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார். (யூதா 1:6-7).

195. தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். (யூதா 1:21).

196. நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக்காத்திருங்கள். (யூதா 1:21).

கிறிஸ்துவும், யோவானும் கூறிய பிரமாணங்களும், எச்சரிப்புக்களும்

197. நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக. (வெளி 2:4-5).

198. நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன். (வெளி 2:10).

199. நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன். (வெளி 2:16).

200. தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலர்பேர்…… பாத்திரவான்களான படியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள். ஜெயங் கொள்ளுகிறவனெவனோ

அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும். (வெளி 3:4-5).

201. ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். (வெளி 3:5; வெளி 22:18-19; யாத் 32:32-33; சங் 69:25-29).

202. சீக்கிரமாய் வருகிறேன். ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு. (வெளி 3:11).

203. நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப்போடுவேன். (வெளி 3:15-16).

204. தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக் கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக் கொள்ளுகிறவன் பாக்கியவான். (வெளி 16:15).

205. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக் காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள். (வெளி 21:8).

206. தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் பரிசுத்த நகரத்தில் பிரவேசிப்பதில்லை. (வெளி 21:27; வெளி 22:15,19).

207. அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும். அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும். நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். (வெளி 22:11).

208. ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளைத் தேவன் அவன்மேல் கூட்டுவார். (வெளி 22:18).

209. ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், அவனுடைய பங்கைத் தேவன் எடுத்துப்போடுவார். (வெளி 22:19).

210. இந்தப் புஸ்தகத்தில் எழுதப் பட்டவைகளிலிருந்தும் அவனுடைய பங்கைத் தேவன் எடுத்துப்போடுவார் (வெளி 22:19).

நிச்சயத்தைப் பற்றிக் கூறும் வேதவசனங்கள்

  1. என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட் பட்டிருக்கிறான். (யோவான் 3:15-16,36; யோவான் 5:24).

    2. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை. ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை. (யோவான் 10:27-29).

    3. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். (ரோமர் 8:35-39).

    4. நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. (ரோமர் 5:8-9).

    5. கிறிஸ்து இயேசுவுக்குட் பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின் படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை. (ரோமர் 8:1).

    6. அவன் நின்றாலும் விழுந்தாலும்…..தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே. (ரோமர் 14:4).

    7. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ் சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார். தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். (1கொரி 1:8-9).

    8. தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும், குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டார். (எபே 1:4).

    9. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள். (எபே 1:13).

    10. நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று தேவனுடைய பரிசுத்த ஆவியை முத்திரையாகப் பெற்றுக்கொண்டீர்கள். (எபே 4:30).

    11. உங்கள் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவார். (பிலி 1:6).

    12. நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறார். (2தீமோ 1:12).

    13. இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப் பட்டிருக்கிறது. (1பேதுரு 1:5).

    14. நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். (1யோவான் 2:1-2).

    15. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். (1யோவான் 3:2).

    16. வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவர். (யூதா 1:24).

    தேவனுக்குக் கீழ்ப்படியும்போது நம்முடைய ஆத்துமாவிற்கு நித்திய பாதுகாப்பு உண்டாகிறது. (யோவான் 6:27; யோவான் 10:27-29; யோவான் 15:1-8; 1கொரி 9:27; எபி 6:4-9; எபி 10:26-29; 2பேதுரு 2:20-22) ஆகையினால் தனக்கு நித்திய பாதுகாப்பு உண்டாக வேண்டுமென்று ஒரு விசுவாசி விரும்பும்போது அவர் தேவனுடைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜீவிக்க முன்வர வேண்டும். பாவம் செய்தே ஆகவேண்டுமென்று மனுஷருக்கு எந்தவிதமான நிர்பந்தமும் இல்லை. தேவனோடு ஒத்துழைத்து ஜீவித்தால் பாவம் செய்யாமல், தேவனுக்குப் பிரியமாக ஜீவிக்க முடியும். விசுவாசத்தினாலும், தேவனுக்குக் கீழ்ப்படிவதினாலும், தேவனுடைய கிருபையினாலும் நம்முடைய ஆத்துமாவிற்கு உத்தரவாதம் உண்டாகிறது.

    இந்தத் தூதர்கள் தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக் கொள்ளவில்லை. தங்களுடைய வாசஸ்தலத்தையும், இவர்கள் விட்டுவிட்டு, பூமிக்கு வந்து மனுஷருடைய குமாரத்திகளைத் திருமணம் செய்தார்கள். ஸ்திரீயின் வித்தில் தூதருடைய வித்து கலந்துவிட்டது. (ஆதி 6:1-4, 2பேதுரு 2:4) சோதோம், கொமேரா ஆகிய ஊரின் ஜனங்களைப் போல தேவதூதர்களும் விபச்சாரம்பண்ணி நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்தார்கள்.

    தேவதூதர்கள் தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டு விட்டு மனுஷருடைய வாசஸ்தலத்திற்கு வந்து மனுஷரோடு பாவம் செய்தார்கள்.

    தூதர்கள் விபச்சாரம்பண்ணியதினால் அவர்கள் இப்பொழுது நித்திய சங்கிலிகளினால் கட்டப்பட்டு, அந்தகாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். மகா நாளின் நியாயத்தீர்ப்பைத் தூதர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்தத் தூதர்களைப் போல என்று பொருள். இந்தத் தூதர்களைப் போல சோதோம், கொமோரா பட்டணத்தாரும் விபச்சாரம் பண்ணினார்கள். அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்தார்கள். நித்திய ஆக்கினைக்குத் திருஷ்டாந்தமாக வைக்கப் பட்டிருக்கிறார்கள் ஆதியாகம் 19 ஆம் அதிகாரத்தில் சோதோம், கொமோரா பட்டணத்தாரின் பாவம் கூறப்பட்டிருக்கிறது. ஆண்புணர்ச்சிக்காரர்களாக இருந்தார்கள். இயற்கையின் சுபாவத்திற்கு விரோதமாகக் கிரியை செய்து, தூதர்களும் பாவம் செய்தார்கள். பூமியிலுள்ள மனுஷருடைய குமாரத்திகளைத் திருமணம் செய்து, இராட்சத சந்ததியை உண்டுபண்ணினார்கள். மனுஷரும், தூதர்களும் தேவன் தங்களுக்கு நியமித்து வைத்திருந்த இயல்பான சுபாவங்களை விட்டுவிட்டு தேவனுடைய பிரமாணத்திற்கு மீறி ஜீவித்தார்கள்.

    மனுஷர் மனுஷரோடு விபசாரம் பண்ணுவது, தூதர் மனுஷ ஸ்திரீகளோடு விபசாரம்பண்ணுவது ஆகிய சுபாவத்திற்குப் புறம்பான காரியங்கள். ஸ்திரீகள் ஸ்திரீகளோடு விபசாரம் பண்ணுவதைப் பற்றிய குறிப்பு ரோமர் 1:24-32 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது.

    சுபாவத்திற்கு விரோதமாக விபசாரம்பண்ணுகிறவர்களுக்கு நித்திய அக்கினியின் ஆக்கினை உண்டு என்பதற்கு இவர்கள் திருஷ்டாந்தமாக வைக்கப் பட்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *