யூதா 1:8 விளக்கம்

யூதா 1:8 விளக்கம்

யூதா 1:8 விளக்கம்

யூதா 1:8. அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.

தொடர்பு வசனங்கள்

  • A எபிரேயர் 13:17;
  • B 1 தீமோ 1:10; 1 பேதுரு 2:17;
  • C ஆதி 3:5; யாத் 22:28; எண் 16:3, 12-13; சங் 2:1-6; 12:3-4; நீதி 30:11, 17; பிரசங்கி 10:20; எரேமியா 38:25-28; லூக்கா 19:14; அப் 7:27, 39; 23:5; 1 கொரி 3:17; 1 தெச 4:8; 2 பேதுரு 2:10-12; யூதா 9-10.

முக்கிய வார்த்தைகள்

  • சொப்பனக்காரராகிய”- இவர்கள் உண்மைக்குப் புறம்பானவர்கள். சொந்த சரீரத்தைக் கறைப்படுத்திக்கொண்டு மாமிச இச்சையில் வாழுகிறார்கள். சொப்பனக்காரர் என்பது, இவர்கள் தேவனிடமிருந்து தரிசனத்தில் வெளிப்பாட்டைப் பெறுகிறவர்கள் (உபா 13:1-3; எரேமியா 23:25-26).
  • மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு”- ரோமர் 1:24; 1 கொரி 6:18.
  • கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி’ ‘மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்”– 2 பேதுரு 2:10.

விரிவான விளக்கம்

சொப்பனக்காரர் யூதா 1:8

யூதா கள்ளப்போதகர்களையும், பக்தியற்றவர்களையும் “”சொப்பனக்காரர்” என்று சொல்லுகிறார். இவர்கள் கிறிஸ்துவின் சீஷர்களை வஞ்சிக்கிறார்கள். தங்கள் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொள்கிறார்கள். சொப்பனக்காரர்கள் கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களை தூஷிக்கிறார்கள். சொப்பனக்காரருக்கு கர்த்தருடைய வார்த்தை முக்கியமல்ல. இவர்களுடைய சொப்பனங்கள்தான் இவர்களுக்கு முக்கியம்.

இவர்களுடைய உபதேசங்களுக்கு சொப்பனங்களே அஸ்திபாரமாயிருக்கிறது. தங்களுடைய சொப்பனத்தின் பிரகாரமாக இவர்கள் தங்கள் மாம்சத்தை அசுசிப்படுத்துகிறார்கள். இந்தப் பிரபஞ்சமே பரலோகம் என்பது இவர்களுடைய உபதேசம். இந்தப் பிரபஞ்சத்தில் மாம்சத்தின் இச்சைகளை நிறைவேற்றி சந்தோஷமாய் ஜீவிக்கவேண்டுமென்பது இவர்களுடைய போதகம்.

ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கோ இந்தப் பிரபஞ்சம் நித்திய வாசஸ்தலமல்ல. நாம் சிறிதுகாலம் இந்தப் பூமியிலே பரதேசிகளைப்போல சஞ்சரிக்கிறோம். பரலோகமே நம்முடைய நித்திய வாசஸ்தலம். சொப்பனக்காரர்கள் இந்தப் பூமியை பரலோகம் என்று சொல்லிக்கொண்டு, கடைசியிலே நரகத்திற்குப் போய்விடுகிறார்கள். கர்த்தரை அசட்டைபண்ணுகிறவர்களுக்கும், கர்த்தருடைய மகத்துவங்களைத் தூஷிக்கிறவர்களுக்கும் நரகமே நித்திய வாசஸ்தலம்.

சொப்பனக்காரர் தங்கள் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொள்கிறார்கள். பாவம் செய்யும்போது மாம்சம் கறைபடுகிறது. மனுஷர் தங்கள் மாம்சத்தில்தான் அதிகமாகப் பாவம் செய்கிறார்கள். மனுஷருடைய பாவங்களில் அநேகம் தங்கள் மாம்சத்திற்கு விரோதமாகச் செய்யப்படும் பாவங்களாகும். இதனால் மனுஷர் தங்கள் பாவத்தினால் தங்கள் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொள்கிறார்கள். தங்களுடைய ஆத்துமாவைக் காயப்படுத்துகிறார்கள்.

சொப்பனக்காரர் கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள். இவர்கள் மனச்சாட்சியின் சத்தத்திற்கு செவிகொடுப்பதில்லை. இந்தப் பிரபஞ்சமே இவர்கள் விரும்புகிற வாசஸ்தலம். உலகத்தின் காரியங்களையும், உலகப்பிரகாரமான காரியங்களையும் இவர்கள் அதிகமாய் நேசிக்கிறார்கள். மாம்சத்தின் இச்சைகளை நிறைவேற்றப் பிரியப்படுகிறார்கள். தேவனுடைய வார்த்தையையும் மனச்சாட்சியின் சத்தத்தையும் சொப்பனக்காரர் புறக்கணித்துவிடுகிறார்கள்.

விபசாரக்காரரின் பாவங்கள்

1. மாம்சத்தை அசுசிப்படுத்திக் கொள்கிறார்கள். (யூதா 1:8; ரோமர் 1).

2. கர்த்தத்துவத்தையும், அவருடைய பிரமாணத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள். (யூதா 1:8).

3. கர்த்தரையும், ஆளுகை செய்கிறவர்களையும் அசட்டை பண்ணுகிறார்கள். (யூதா 1:8; 2பேதுரு 2).

4. தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள். (யூதா 1:10).

5. தங்களைக் கெடுத்துக் கொள்கிறார்கள். (யூதா 1:10; ரோமர் 1).

6. வஞ்சகத்திலே விரைந்தோடி பாவத்திற்குள்ளாகி கெட்டுப்போனார்கள். (யூதா 1:11; ஆதி 4).

7. கூலிக்காக வஞ்சகம் பண்ணுகிறார்கள். (யூதா 1:11; 2பேதுரு 2:15; எண் 31:8,16).

8. கோராவைப்போல எதிர்த்துப் பேசினார்கள் (யூதா 1:11; எண் 16).

9. மாய்மாலமான சுபாவத்தைக் கொண்டிருக்கிறார்கள். (யூதா 1:12).

10. அவபக்தியான கிரியைகளைச் செய்கிறார்கள். (யூதா 1:14; ரோமர் 1).

11. தேவனுக்கு விரோதமாகக் கடின வார்த்தைகளைப் பேசுகிறார்கள். (யூதா 1:15).

12. முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களுமாக இருக்கிறார்கள். (யூதா 1:16).

13. தங்களுடைய இச்சைகளின்படி நடக்கிறார்கள். (யூதா 1:4,16,18).

14. இறுமாப்பானவைகளைப் பேசி, தற்பொழிவிற்காக முகஸ்துதி செய்கிறார்கள். (யூதா 1:16).

15. சத்தியத்தைப் பரியாசம் பண்ணுகிறார்கள். (யூதா 1:18; 2பேதுரு 3:3).

16. ஜென்மசுபாவத்தாராய் இருக்கிறார்கள். (யூதா 1:19).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *