யூதா 1:9 விளக்கம்

யூதா 1:9 விளக்கம்

யூதா 1:9 விளக்கம்

பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப்

பிசாசுடனே தர்க்கித்துப் பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான்.

தொடர்பு வசனங்கள்

  • A உபா 34:6; தானி 10:13, 21; 12:1; சகரியா 3:2; 2 பேதுரு 2:11; வெளி 12:7;
  • B மாற்கு 15:29; 1 தெச 4:16;
  • C லூக்கா 23:39-40; 1 பேதுரு 3:9;
  • D யாத் 22:28; 1 நாளா 12:17; ஏசாயா 37:10-20;
  • E ஏசாயா 36:13-21; 37:3-4.

முக்கிய வார்த்தைகள்

மிகாவேல்”தானி 10:13, 21; 12:1; வெளி 12:7. பிரதான தூதன் என்பவன் தூதர்களில் தலைமையானவன்.

மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப்”இந்த சம்பவம் வேதாகமத்தில் குறிப்பிடப்படவில்லை. இதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அல்ல உபா 29:29.

பிசாசுடனே”காண்க: மத்தேயு 4:1. ன் குறிப்பு.

கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக”சாத்தானிடம் பேசும்பொழுது மிகாவேல் மிகவும் கவனத்துடன் பேசுவதைப் பார். நியாயத்தீர்ப்பும் குற்றப்படுத்தலும் தேவனிடம் விட்டு விட வேண்டியவைகள்.

விரிவான விளக்கம்

மிகாவேல் யூதா 1:9

அப்போஸ்தலர் யூதா பிரதான தூதனாகிய மிகாவேலைப்பற்றி எழுதுகிறார். இதைத் தொடர்ந்து மோசேயினுடைய சரீரத்தைப்பற்றியும் சொல்லுகிறார். மோசேயினுடைய சரீரத்திற்கு எப்படி வியாக்கியானம் கொடுக்கலாமென்று வேதபண்டிதர்கள் ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்து பிசாசுடனே தர்க்கித்துப் பேசினார். மிகாவேல் பிசாசை தூஷணமாய்க் குற்றப்படுத்த துணியவில்லை. மிகாவேல் பிசாசுக்குப் பயப்படவில்லை. ஆனாலும் பிசாசை தூஷணமாய்க் குற்றப்படுத்தினால், தேவனுடைய நாமம் தூஷிக்கப்படுமோ என்று தயக்கத்தோடு பேசினார்.

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் பல காரியங்களைக் குறித்து விவாதம்பண்ணுகிறோம். நம்முடைய விவாதத்தினால் விசுவாசிகளுடைய மனது புண்படக்கூடாது. தேவனுடைய நாமமும் தூஷிக்கப்படக்கூடாது. தேவையில்லாமல் தர்க்கம்பண்ணி பிரச்சனையைப் பெரிதுபண்ணிவிடக்கூடாது. வார்த்தைகளை அளவாய்ப் பேசவேண்டும். நம்முடைய நாவைக் கட்டுப்படுத்தி ஆளுகை செய்யவேண்டும். சத்தியத்தை உறுதிபண்ண பிசாசின் ஆலோசனை நமக்குத் தேவையில்லை. பொய்யை மிகைப்படுத்திச் சொல்லி சத்தியத்தை உறுதிபண்ணவேண்டும் என்னும் அவசியமும் நமக்கு இல்லை.

பிரதான தூதனாகிய மிகாவேல் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினார். ஆனாலும் பிசாசை அவர் தூஷணமாய்க் குற்றப்படுத்த துணியவில்லை. மிகுந்த பொறுமையோடும், ஞானத்தோடும், “”கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராகஎன்று மிகாவேல் பிசாசுடனே சொன்னார். இத்துடன் மிகாவேல் தன் தர்க்கத்தை முடித்துக்கொண்டார். தர்க்கத்தை நீடிக்கவில்லை.

சில சமயங்களில் நாம் தர்க்கம்பண்ணுவது நமக்கே ஆபத்தாக வந்துவிடும். தர்க்கம்பண்ணும்போது கட்டுப்பாடில்லாமல் பேசினால் தேவனுடைய நாமம் தூஷிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. தர்க்கம்பண்ணுவதற்குப் பதிலாக அவர்களை கர்த்தருடைய சமுகத்தில் ஒப்புக்கொடுத்துவிடலாம். கர்த்தர் தம்முடைய சித்தத்தின்படி அவர்களுக்குச் செய்யட்டும் என்று தீர்மானம்செய்து, நாம் கர்த்தருடைய சமுகத்தில் அமைதியாயிருக்கலாம்.

மிகாவேலைத் தவிர வேறு எந்தத் தூதருக்கும் பிரதான தூதன் என்னும் பெயர் வழங்கப்பட வில்லை. ஆயினும் மிகாவேலைப் போலவே மேலும் பல பிரதான தூதர்கள் இருந்ததாக வேதவசனம் கூறுகிறது. (தானி 10:13).

பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினார். இந்தக் காரியம் மோசே மரித்த பின்பு நடைபெற்றது. கல்வாரி சிலுவையில் இயேசு கிறிஸ்து மரணத்தை ஜெயிக்கும் வரையிலும் பிசாசிற்கு மரணத்தின்மீது அதிகாரம் இருந்தது. பிசாசானவன் மோசேயைத் தனக்கு வேண்டுமென்று கேட்டான். ஆனால் தேவனோ அங்கு இடைப்பட்டு, மோசேயின் சரீரத்தை எடுத்து மோவாபின் தேசத்தில் அடக்கம் பண்ணினார். இயேசு கிறிஸ்துவே உயிர்த்தெழுதலின் முதலாவது கனியாக இருப்பவர். அதாவது இயேசு கிறிஸ்துவே முதலாவது உயிர்த்தெழுந்தார். மோசே உயிர்த்தெழ வேண்டுமானால், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பே உயிர்த்தெழ வேண்டும். கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு மோசே தன்னுடைய கல்லறையிலிருந்து வெளிவந்தாரா என்று வேதவசனம் தெளிவுபடுத்தவில்லை. ஆயினும் மோசே மத் 17:1-8 ஆகிய வசனங்களில் தன்னுடைய ஆவியில் இருந்தார் என்று வேதபண்டிதர்கள் கூறுகிறார்கள்.

மிகாவேல் பிசாசை தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்:கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான். பரிசுத்தவான்களுக்கு இந்த வாக்கியம் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது. விசுவாசிகள் எல்லாக் காரியங்களுக்கும் சாத்தானையே குற்றப்படுத்தி அவன்மீது எல்லாப் பழிகளையும் போட்டுவிடுகிறார்கள். தாங்கள் செய்யும் தவறுகளுக்கும், சாத்தானையே பொறுப்பானவனாக்குகிறார்கள்.

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page