யூதா 1:14,15 , 16 விளக்கம்
தொடர்பு வசனங்கள்
1:14
- A உபா 33:2; சங் 50:3-5; மத்தேயு 16:27; 24:30-31; 25:31; 1 தெச 3:13; 2 தெச 1:7-8; எபிரேயர் 11:5-6;
- B ஆதி 5:18, 21-24; யோபு 19:25-27; தானி 7:9-10; சகரியா 14:5; வெளி 1:7;
- C 1 நாளா 1:1-3.
1:15
- A 1 சாமு 2:3; சங் 9:7-8; 50:1-6; 94:4; 98:9; பிரசங்கி 11:9; 12:14; யோவான் 5:22-23, 27; அப் 17:31; ரோமர் 2:5, 16; 1 கொரி 4:5; வெளி 22:12-15;
- B யாத் 16:8; சங் 31:18; 37:6; 73:9; 149:9; ஏசாயா 37:22-36; தானி 7:20; 11:36; மல்கியா 3:13-15; மத்தேயு 12:31-37; ரோமர் 3:19-20; 14:10; 1 கொரி 5:13; 1 தீமோ 1:9; 2 பேதுரு 2:6-9; வெளி 13:5-6, 11; 22:20;
- C யூதா
1:16
- A 2 பேதுரு 2:10, 18;
- B பிலி 2:14;
- C லேவி 19:15; எண் 16:11; சங் 15:4; 1 கொரி 10:10; 1 தீமோ 6:5; 1 பேதுரு 4:2; 2 பேதுரு 2:1-3; யூதா 18;
- D எண் 14:36; உபா 1:27; யோபு 17:4-5; 32:21; 34:19; சங் 17:10; 73:9-11; 106:25; நீதி 28:21; ஏசாயா 29:24; லூக்கா 15:2; 19:7; யோவான் 6:41, 61; கலா 5:16, 24; 1 தெச 4:5; 2 தீமோ 4:3; யாக்கோபு 1:14-15; 2:1-9; 1 பேதுரு 1:14; 2:11; 2 பேதுரு 3:3; யூதா 15;
- E லூக்கா 5:30.
முக்கிய வார்த்தைகள்
1:14-15 ஆதி 5:18, 21-24 . இந்த வார்த்தைகள் வேதாகமத்திலுள்ளவைகளல்ல. ஏனோக்கு ஆயிரக்கணக்கான வருடங்களுக்குமுன் பேசின வார்த்தைகளைப் பரிசுத்த ஆவியானவர் யூதாவுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். (ஏனோக்கின் புத்தகம் என்று ஒன்று உள்ளது. அது தேவ ஆவியானவரால் எழுதப்பட்டது அல்ல, அதில் பல வேடிக்கையான கதைகள் உண்டு. யூதா அதிலிருந்து பகுதிகளை எழுதினால் என்று நிரூபிக்க முடியாது). யூதா கூறுவதன்றி, ஏனோக்கு ஒரு தீர்க்கதரிசி என்று நாம் சொல்ல முடியாது. ஏனோக்கின் நாட்களில் ஜனங்கள் தேவனற்றவர்களாக இருந்தார்கள்; இன்றும் அப்படித்தான் உள்ளது. ஆகவே, அவர் அதைக் கடினமாகக் கண்டிக்கிறார்.
1:14ஏனோக்கு கூறின தீர்க்கதரிசனம் இந்த நாட்களுக்குரியது.
1:15 “கண்டிக்கிறதற்கும்”- அப் 17:31.
1:16 இந்த வசனத்தில் தேவனற்ற ஜனங்களின் ஐந்து குணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
“தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்”- எதிலும் அவர்கள் நேர்மையாகவோ, உண்மையாகவோ இருப்பதில்லை. தாங்கள் கேட்க விரும்புவதை மற்றவர்களிடம் கூறுகிறார்கள். அவர்களது நோக்கம் ஏதாவது ஆதாயம் பெறுவதே. இதை நாம் இன்று ஒவ்வொருவரிலும் காணவில்லையா? – வீண் புகழ்ச்சி பற்றி காண்க: யோபு 32:21-22; சங் 12:2-3; நீதி 26:28; 28:23; 29:5; ரோமர் 16:18; 1 தெச 2:5.
மேலும் சில விளக்கம்
ஏனோக்கு யூதா 1:14,15 , 16
யூதா 1:14. ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும். அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,
யூதா 1:15. தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்,
அப்போஸ்தலர் யூதா ஏனோக்கின் தீர்க்கதரிசனத்தை இங்கு எழுதுகிறார். வேதாகமத்தில் இந்தத் தீர்க்கதரிசனம் வேறு எங்கும் எழுதப்படவில்லை, ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்பதுநான் ஏனோக்கு சொன்ன தீர்க்கதரிசனம். கர்த்தர் வரும்போது அவர் தம்முடைய மகிமையோடு வருவார். ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட வருவார். துன்மார்க்கரை கண்டிக்கிறதற்காக கர்த்தர் வருகிறார். எல்லோருக்கும் நியாயத்தீர்ப்பு கொடுக்கிறதற்காக கர்த்தர் வருகிறார்.
அவபக்தியுள்ள யாவரும், அவபக்தியாய் செய்து வந்த அவபக்தியான கிரியைகளிளிமித்தம், அவர்களைக்
கண்டிக்கிறதற்கு கர்த்தர் வருகிறார்.
தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகள் எல்லாவற்றினிமித்தம் அவர்களை கண்டிக்கிறதற்காக கர்த்தர் வருகிறார். கர்த்தருடைய வருகையின்போது துன்மார்க்கருக்கு மன்னிப்பு இல்லை.
கிருபையின் காலத்தில்தான் நமக்கு பாவமன்னிப்பும் ஆத்தும இரட்சிப்பும் கொடுக்கப்படும். இதுவே கிருபையின் காலம். கிருபையின் காலம் முடிந்த பின்பு அவர் மறுபடியும் வருகிற காலம் வரும். அப்போது அவர் தம்முடைய கிருபையை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, நீதியை வெளிப்படுத்துவார். எல்லோருக்கும் நியாயத்தீர்ப்பு கொடுக்கிறதற்காக வருகிறார்.
யூதா ஏனோக்கு சொன்ன தீர்க்கதரிசனத்தைப்பற்றி எழுதும்போது, அவபக்தியுள்ளவர்கள், அவபக்தியாய் செய்து வந்த சகல அவபக்தியான கிரியைகள், அவபக்தியுள்ள பாவிகள் என்னும் வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்லுகிறார்.
இக்காலத்தில் பக்தியுள்ளவர்களுக்கும், அவபக்தியுள்ளவர்களுக்கும் அதிக வித்தியாசமில்லை. இந்த உலகத்தாரும் பக்தியுள்ளவர்களையும், அவபக்தியுள்ளவர்களையும் வித்தியாசம் பார்ப்பதுமில்லை. உலகத்தாருக்கு இவ்விரு பிரிவாரும் ஒன்றுபோலவே இருப்பார்கள்.
உலகத்து ஜனங்களுக்கு உலகப்பிரகாரமான காரியங்கள்தான் முக்கியமானதாகத் தெரியும். ஆனால் கர்த்தரோ மனுஷர் பார்க்கிற விதமாகப் பார்ப்பதில்லை.
அவர் நம்முடைய இருதயத்தைப் பார்க்கிறார். இருதயத்திலுள்ள பக்தியைப் பார்க்கிறார். கர்த்தர் மனுஷரை பக்தியுள்ளவர்களென்றும், அவபக்தியுள்ளவர்களென்றும் இரண்டு பிரிவாகப் பிரித்துவிடுகிறார். இதுபோலவே மனுஷருடைய கிரியைகளை பக்தியான கிரியைகளென்றும், அவபக்தியான கிரியைகளென்றும் இரண்டுவிதமான கிரியைகளாகப் பிரித்துவிடுகிறார். கர்த்தருக்கு விரோதமாய் கடினவார்த்தைகளைப் பேசுவதுகூட பாவம்தான். இதற்கும் ஆக்கினைத்தீர்ப்பு உண்டு. கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நாளில், அவருக்கு விரோதமாகப் பேசின பேச்சுக்கள், செய்த கிரியைகள் எல்லாம் நீதியாய் நியாயம் விசாரிக்கப்படும். இதற்கேற்ற தண்டனை நீதியாய்க் கொடுக்கப்படும்.
யூதா இந்தத் தீர்க்கதரிசனத்தை எந்தப் புஸ்தகத்தின் மூலமாகக் கற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை. அவருடைய காலத்தில் ஏனோக்கின் புஸ்தகத்தை ஜனங்கள் பயன்படுத்தினார்கள். ஆதித்திருச்சபை தலைவர்களான ஓரிகன், தெர்த்தூலியன் ஆகியோர் இந்தப் புஸ்தகத்தின் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
முறுமுறுக்கிறவர்கள் யூதா 1:16
யூதா 1:16. இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப்பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்.
கள்ளப்போதகர்கள் விசுவாசிகளை வஞ்சிக்கிறார்கள். இவர்கள் துன்மார்க்க சுபாவமுள்ளவர்கள். இவர்களிடத்தில் காணப்படுகிற இன்னும் சில தீயசுபாவங்களைப்பற்றி யூதா விரிவாக எழுதுகிறார்.
இவர்கள் முறுமுறுக்கிறவர்கள். மற்றவர்களுக்கு விரோதமாக எப்போதும் முறுமுறுக்கிறவர்கள் தீயசுபாவமுடையவர்கள். இவர்கள் தங்களுடைய சிந்தையில் பலவீனராயும் துன்மார்க்கராயும் இருப்பார்கள்.
முறுமுறுக்கிறவர்களுக்கு எதிலும் திருப்தி இருக்காது. என்ன நடந்தாலும் இவர்கள் கோபப்படுவார்கள். தாங்கள் இப்போதிருக்கிற நிலமையில் திருப்தியடையமாட்டார்கள். கர்த்தருடைய கிருபையினால் தாங்கள்
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என்னும் எண்ணம் இவர்களிடத்தில் இருக்காது. எவ்வளவு இருந்தாலும் இவர்களிடத்தில் திருப்தியோ, சந்தோஷமோ இருக்காது.
முறுமுறுக்கிறவர்கள் தங்களைப்பற்றியும், மற்றவர்களைப்பற்றியும் எப்போதும் முறையிட்டுக்கொண்டிருப்பார்கள். தங்களைத் தவிர இந்த உலகத்தில் இவர்களுடைய கண்களுக்கு யாருமே நல்லவர்களாகத் தெரியமாட்டார்கள்.
மற்றவர்களைப்பற்றி எப்போதும் முறையிட்டுக்கொண்டும். குறைசொல்லிக்கொண்டும் இருப்பார்கள். மற்றவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்களென்று நினைப்பார்கள். ஆனால் மற்றவர்களுக்கு இருக்கக்கூடிய வசதிகளும் வாய்ப்புக்களும் தங்களுக்கு இல்லையென்று தங்களைப்பற்றி மற்றவர்களிடத்தில் முறையிடுவார்கள்.
இப்படிப்பட்டவர்கள் தங்கள் சுயஇச்சைகளின்படி நடப்பார்கள். இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப் பேசும். சந்தியத்தைப் பேசாது, இவர்களிடத்தில் மனத்தாழ்மையிருக்காது. தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள். தங்களைப்பற்றி எல்லோரும் பெருமையாக பேசவேண்டுமென்று எதிர்பார்த்து மற்றவர்களைப் புகழ்ந்து பேசுவார்கள். கர்த்தருடைய சத்திய வசனம் இப்படிப்பட்டவர்களை ஆளுகை செய்வதில்லை. இவர்களுடைய சுயஇச்சைகளே இவர்களை ஆளுகை செய்கிறது.