விசுவாசம்

faith

விசுவாசம்

 

விசுவாசம் என்பது எப்போதுமே இயேசுவின் சீடன் ஒருவனுக்கு அடையாளமாக விளங்குகிறது. துவக்ககால சீடர்கள் விசுவாசிகள் என்று அறியப்பட் டார்கள். …விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” (மாற்கு 9:23) என்றார் இயேசு.

விசுவாசம் என்பது தேவனை முற்றிலும் சார்ந்திருப்பதாகும். ஆதாம் பாவம் செய்தபோது, தேவனைச் சார்ந்திருப்பதை விட்டு விட்டு, சார்பற்ற நிலையை அடைந்தான் (இதுவே அவிசுவாசம்), எனவேதான் தேவன் விசுவாசத்திற்கு மிக அதிகமான முக்கியத்துவம் கொடுத்தார். விசுவாசம் என்ற வழியின் மூலமாகவே நாம் தேவனோடுள்ள உறவுக்குள் நுழைகிறோம் (தேவனைச் சார்ந்திருத்தல்).

இவ்வாறு தேவனைச் சார்ந்திருப்பதையே விசுவாசம் என்று அழைக்கிறோம். உங்கள் ஐம்புலன் உணர்வுகளாகிய பார்த்தல், கேட்டல், சுவைத் தல், நுகர்தல் மற்றும் தொடு உணர்வுக்கும் அப்பால் விசுவாசம் உங்களை அழைத்துச் செல்கிறது. உங்களுடைய குறுகிய எல்லைக்குட்பட்ட திறன்களிலிருந்து விசுவாசம் உங்ககளை விடுவிக்கிறது. விசுவாசத்தின் மூலம் நீங்கள் செயலற்ற நிலையிலிருந்து, தேவனுடைய செயல் திறன் நிலையை எட்டுகிறீர்கள்.

இத்தகைய விசுவாச வாழ்க்கை வாழும்படியாகவே நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் இந்த விசுவாச – வாழ்க்கையில் நம்மால் “கூடாத காரியம் ஒன்று மிராது” (மத். 17:20),

A.விசுவாசம் என்பது என்ன?

தேவன் கூறியுள்ளவற்றுக்கு ஏற்றபடி கீழ்ப்படிதலுடன் செயல் படுவதே விசுவாசமாகும். மெய்யான விசுவாசம் இவற்றின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது:

  • கீழ்ப்படிதல்
  • ஏற்றபடியான கிரியை
  • ஆண்டவருடைய வார்த்தையைக் (குரல்) கேட்டல்.

“விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபி. 11:1). விசுவாசம் வேறு ஒரு நபரின்மீதோ அல்லது அந்த நபரின் வார்த்தையின்மீதோ நம்பிக்கையும், நிச்சயமென்ற உறுதியும் கொள்வதாகும். தேவனில் விசுவாசம் வைப்பது என்பது சுயத்தை நம்புவதற்குப் பதிலாக தேவன்மீது நம்பிக்கை வைப்பதாகும். சுயத்தையே நம்பிக்கொண்டிருப்பதை விடுத்து, நாம் அவரில் நம்பிக்கை வைக்கிறோம். நமது குறுகிய அறிவைச் சார்ந்திருப்பதை விட்டுவிட்டு அவரது எல்லையற்ற அறிவின் பொக்கிஷத்திலிருந்து பெறத்துவங்குகிறோம்.

B. இரண்டு வகையான ஞானம்

“உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, என் பேச்சும் பிரசங்கமும் மனுஷஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், என் ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.

“அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களாகிய ஞானத்தையுமல்ல,

தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த தேவ ஞானத்தையே பேசுகிறோம்” (1கொரி. 2:4-7). 8 முதல் 16 வரையுள்ள வசனங்களையும் பார்க்கவும்.

1. உணர்வுகளின் அறிவு

இயல்பான மனிதன் பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல் மற்றும் தொடுதல் என்ற ஐந்து உணர்வுகளின் மூலமாகவே தன்முழு அறிவையும் பெறுகிறான். இது குறுகிய அறிவாகும்; இதுவே மனுஷஞானம்’ என்று குறிப்பிடப்படுகிறது.

2.வெளிப்படுத்தப்படும் அறிவு

இந்த அறிவு ஐந்து புலனுணர்வுகளை அடிப்படையாகக் கொண்டதுமல்ல; இயல்பான பகுத்தறிவினாலும் பெறப்படுவதுமல்ல- இது ஆண்டவருடைய வார்த் தையின் சத்தியத்திலிருந்து பெறப் படுகிறது. இது மனிதனின் ஆவியினாலே பெற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த அறிவே ‘தேவ ஞானம்’ என்று அழைக்கப்படுகிறது – “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்” (2கொரி. 5:6).

C. விசுவாசத்தின் அடிப்படை

தேவனில் விசுவாசம் வைத்திருப்பது மூன்று முக்கிய உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது.

1.தேவனின் இயல்பு

“ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத் தத்தம் பண்ணினபோது, ஆணையிடும் படி தம்மிலும் பெரியவர் ஒருவரு மில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு…”(எபி. 6:13).

அ. அவரால் தம்மை மாற்றிக் கொள்ள முடியாது. “நான் கர்த்தர், நான் மாறாதவர்…”(மல்.3:6). யாக்கோபு 1:17 வசனத்தையும் பார்க்கவும்.

ஆ.அவரால் தோல்வியடைய முடியாது. “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்” (யோபு 42:2). 1நாளாகமம் 28:20 வசனத்தையும் பார்க்கவும்.

இ. அவரால் பொய் கூற முடி யாது. “பொய் சொல்ல தேவன் ஒரு மனி தன் அல்ல; மனம் மாற அவர் ஒரு மனு புத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?” (எண். 23:19). தீத்து 1:3 வசனத்தையும் பார்க்கவும்.

2. தேவனுடைய குமாரனின் மீட்பின் கிரியை

…விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசு-அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்” (எபி. 12:1,2).

ஆண்டவர் மீதுள்ள நமது விசுவாசத்திற்கு கிறிஸ்துவே மூலா தாரமாக இருக்கிறார். அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றிய உண்மையே நமது விசு வாசத்திற்கு அடித்தளமாக இருக்கிறது.

… அவரே (இயேசுவே) தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (1கொரி. 1:31), ரோமர் 5:1,2 வசனங்களையும் பார்க்கவும்.

3. ஆண்டவருடைய வார்த்தை

“வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவ தில்லை” (மத் 24:35), ஏசாயா 40:8 வசனத்தையும் பார்க்கவும்.

“அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார்” (எரே. 1:12).

அவரது வார்த்தை என்றும் சத்தியமாக நிலைத்து நிற்கிறது. தேவன் தாம் பேசியுள்ள அனைத்தி லிருந்தும், நமது சூழ்நிலைக்கேற்ப, ஒரு குறிப்பிட்ட வார்த்தையை நமக்காக நேரடியாகக் கொண்டு வரும்போது விசுவாசம் வருகிறது. இந்த வகையில் கூறப்படும்போது தேவனுடைய வார்த்தை நமக்கு ஜீவ னுள்ளதாக வெளிப்பட்டு, நமக்குள் விசுவாசத்தை உருவாக்குகிறது.

D, எவ்வாறு விசுவாசம் கிரியை செய்கிறது?

சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும்கூட. நமது வாழ்க்கை யில் தொடர்ந்து செயல்படுவதே விசுவாசத்தில் நோக்கமாக (ரோமர் 3:27) இருக்கிறது. (2கொரிந்தியர் 57, மற்றும் யாக்கோபு 1:56 வசனங் களைப் பார்க்கவும்). அதுகீழ்க்கண்ட வழியில் கிரியை செய்கிறது;

1. தேவன் நமக்கு விசுவாசத்தை அளிக்கிறார்.

“விசுவாசததினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி. “விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப் படுகிறது” (இந்த ரோமர் 1:17 வசனத்தை ஆபகூக் 2:4 வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கவும்).

அவர் அருளும் விசுவாசத்தி னாலே நீதிமான் பிழைப்பான். இந்த விசுவாசத்தை அவர் ஓர் ஈவாக நமக்கு அளிக்கிறார்.

“க்ருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது (அந்த விசுவாசம்) உங்களால் உண் டானதல்ல, இது தேவனுடைய சவு.. (எபே. 2:8) அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே…” (ரோமர் 12:3),

2.ஆண்டவரிடமிருந்து வரும் ஒரு வார்த்தையின் மூலம் விசுவாசம் வருகிறது

முதலாவதாக, நமது சூழ் நிலைக்கு ஏற்றபடி ஒரு “வார்த் தையைப்” பேசுவதின்மூலம் தேவன் நமக்கு ஊக்கமூட்டுகிறார்.

வேதாகமத்தை வாசிப்பதின் மூலமோ அல்லது உங்கள் ஆவிக்குள் பேசும் பரிசுத்த ஆவியான வரின் குரலைக் கேட்பதின்மூலமோ நீங்கள் இந்த வார்த்தையைப் பெறலாம்.

..விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” (ரோமர் 10:17). ஆதியாகமம் 15:3-5, 17:15-27, மற்றும் யோசுவா 1:8 வசனங்களையும் பார்க்கவும்.

3. வார்த்தைக்குக் கீழ்ப்படிதல்

நமது சூழ்நிலையில் விசுவாசம் செயல்பட வேண்டுமானால் நாம் அந்த வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும். விசுவாசம் அமர்ந் திருக்கச் செய்வதல்ல, செயல்படத் தேவனின் அநேக வாக்குத்தத்தங்கள் ஒரு நிபந் தனைக்கு உட்பட்டவை நாம் நமது பங்கைச் செய்வோமானால், அவர் தமது பங்கைச் செய்து முடிப் பார்.

“… விசுவாசமும் கிரியைகளில்லா திருந்தால் தன்னிலேதானே செத்ததா யிருக்கும்” (யாக். 2:17), யாக்கோபு 1:22-25, ஆதியாகமம் 15:6, மத்தேயு பார்க்கவும்.

4. நமது விசுவாசத்திற்கான பரீட்சை

 

இது பரீட்சிக்கப்படுவதற்கான வேளையாகும். நம்மைச் சுற்றிலும் நடைபெறும் அனைத்தும் ஆண்ட வர் கூறியதற்கு மாறாக இருப்பது போலக் காணப்படுகின்றன; நாம் விசுவாசிப்பதற்கு இயல்பான நிரூபணம் எதுவும் இருப்பதாகத் தென்படவில்லை. இந்த வேளையில், நமது விசுவாசம் முழுவதும் அவ ருடைய வார்த்தையையே (அவர் நம்மிடம் கூறியதையே) சார்ந் திருக்கிறது.

“இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்பட வேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவித மான சோதனைகளினாலே துக்கப்படு கிறீர்கள்.

“அழிந்துபோகிற பொன் அக்கினி யினாலே சோதிக்கப்படும்; அதைப் பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதா யிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது, உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையு முண்டாகக் காணப்படும்” (1பேதுரு 1:6,7). ரோமர் 4:16-21, சங்கீதம் 105:17-19 வசனங்களையும் பார்க்கவும்.

விசுவாசத்தில் நாம் நம்மை அவருடைய உண்மைக்குள் சமர்ப் பிக்கிறோம். நமது சந்தேகம் மற்றும் போராட்ட வேளைகளில், ஆண்ட வர் உண்மையுள்ளவராக இருக் கிறார்; அவர் நம்மைக் கைவிடுவ தில்லை.

நாம் உண்மையில்லாதவர்களா யிருந்தாலும், அவர் உண்மையுள்ளவரா யிருக்கிறார்; அவர் தம்மைத்தாமே மறுதலிக்க மாட்டார்” (2தீமோ. 2:13).

தோமா மற்றும் பேதுருவின் விசுவாசம் சோதிக்கப்பட்டபோது அவர் அவர்களுக்கு உண்மையுள்ள வராக இருந்தார். இயேசு அவர் களைக் கைவிடவில்லை. “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே” (எபி. 13:5).

5.விளைவு

எப்போதுமே இதன் இறுதிப் பலன் விசுவாசிக்கு வெற்றியளிப்பதாகவும், ஆண்டவருக்கு மகிமை யளிப்பதாகவும் உள்ளது (யாக்கோபு 1:2-4, 12; ஆதியாகமம் 21:1-3; சங்கீதம் 105:19-22; அப்போஸ்தலர் 3:16; எபிரெயர் 6:13-15 வசனங் களையும் பார்க்கவும்).

“தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” (1யோவான் 5:4).

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *