1யோவா 1:4 விளக்கம்
1யோவா 1:4. உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.
தொடர்பு வசனங்கள்
- A யோவான் 15:11;
- B ஆபகூக் 3:17-18; யோவான் 16:24; 2 கொரி 1:24; 2 யோவான் 12;
- C யோவான் 3:29; எபே 3:19; பிலி 1:25-26.
முக்கிய வார்த்தைகள்
“சந்தோஷம்”– லூக்கா 2:10; யோவான் 15:11; 16:22-24; 17:13; ரோமர் 14:17; கலா 5:22. சந்தோஷம் என்பது, சத்தியத்தை இருதயத்தில் ஏற்றுக்கொண்டு அதை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதாகும். ஆகவே, யோவான் தான் கிறிஸ்துவிடம் கற்றுக்கொண்ட சத்தியத்தை அவர்களுக்கு எழுதுகிறான். சத்தியத்தை முழுமையாக அறிந்துகொள்ளுவதும் முழுமையாக அதற்குக் கீழ்ப்படிதலுமே, முழுமையான சந்தோஷத்தைத் தரும்.
விரிவான விளக்கம்
சந்தோஷம் 1யோவா 1:4
விசுவாசிகளுடைய சந்தோஷம் பெருகியிருக்கவேண்டும். நம்முடைய சந்தோஷம் நிறைவாயிருக்கவேண்டும். நம்முடைய சந்தோஷம் பாவத்தினால் கறைபடிந்த சந்தோஷமாயிருக்கக்கூடாது. அது பரிசுத்தமுள்ள சந்தோஷமாயிருக்கவேண்டும். மனுக்குலத்திலுள்ள நமக்கு நித்திய சந்தோஷத்தைக் கொடுக்கவேண்டுமென்பது தேவனுடைய சித்தமாயிற்று. நாம் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்கவேண்டும். கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூரவேண்டும்.
நாம் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து ஜீவிக்கும்போது நம்முடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும். கர்த்தர் ஆவிக்குரிய சந்தோஷத்தினால் நம்மை நிரப்புவார். நம்முடைய விசுவாசம் பரிசுத்தமுள்ளதாகவும், உறுதியுள்ளதாகவும் இருக்கும்போது, நம்முடைய சந்தோஷம் பரிசுத்தமானதாகவும், நிறைவானதாகவும் இருக்கும். நாம் சந்தோஷமாயிருக்க வேண்டுமென்று அப்போஸ்தலர் விரும்புகிறார். நம்முடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு அப்போஸ்தலர் யோவான் இந்த நிருபத்தை நமக்கு எழுதுகிறார்.