1யோவா 1:3 விளக்கம் 

1யோவா 1:3 விளக்கம் 

1யோவா 1:3 விளக்கம் 

 

1யோவா 1:3. நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.  

தொடர்பு வசனங்கள் 

 

  • A யோவான் 17:3, 21; அப் 4:20; 1 கொரி 1:9; பிலி 2:1; 1 யோவான் 1:1; 
  • B 2 கொரி 13:14; பிலி 3:10; எபிரேயர் 3:14; 1 யோவான் 1:7; 
  • C அப் 13:32, 41; 20:27; ரோமர் 15:27; 1 கொரி 1:30; 15:1; எபே 3:6; பிலி 1:7; கொலோ 1:13; 1 தெச 1:10; 1 தீமோ 6:2; எபிரேயர் 2:12; 3:1; 1 பேதுரு 5:1; 1 யோவான் 1:5; 2:23-24; 5:10-11; 
  • D ஏசாயா 66:19; யோவான் 14:20-23; 17:11, 25; அப் 2:42; 
  • E சங் 2:7; 22:22.

சில முக்கிய வார்த்தைகள் 

 

நாங்கள் கண்டும்இந்த மூன்று வசனங்களிலும் மூன்றாவது முறையாக இதைக் கூறுகிறார். இது பிற அப்போஸ்தலரிடமிருந்து கேட்ட செய்தியல்ல என்றும், அவர்கள் கூறிய கட்டுக் கதையல்ல என்றும் ஆணித்தரமாகக் கூறுகிறார். அவர்கள் கூறுவது என்னவென்று அவர்களுக்குத் தெரியும். ஏனென்றால், அவர்கள் இயேசுவைத் தனிப்பட்ட முறையில் கண்டும், கேட்டுமிருக்கிறார்கள்.

 

ஐக்கியம்அப் 2:42; 1 கொரி 1:9; 2 கொரி 13:14; பிலி 3:10. கிரேக்க மொழியில் இது பகிர்ந்து கொள்ளுதல் எனப்படும். கிறிஸ்துவைக் குறித்த உண்மையைப் பறைசாற்றுவதற்கு அவருக்குப் போதிய காரணங்கள் இருந்தன. இது ஒன்று. மற்றவை வ 4லிலும்; 2:1, 12-14; 5:13. லிலும் காணப்படுகின்றன.

பிதாவோடும் அவளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும்” தேவத்துவத்தின் இரு நபர்களையும் யோவான் தனிப்படுத்துகிறார் (மத்தேயு 3:16-17. லுள்ள திரியேகரில் ஒருவர் என்பதன் குறிப்பைப் பார்க்கவும்). நாம் அவர்களில் ஒருவரோடு ஐக்கியப்படுத்துவது, மற்றவரோடும் ஐக்கியப்படுகிறோம் என்பது போல் அவர்கள் ஒருமித்தவர்கள். கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை பிலி 2:6. லும், லூக்கா 2:11. லிலும் கூறப்பட்டுள்ளது. தேவனோடு ஐக்கியப்படுதல் என்பது அவரை அறிந்து கொள்வதே ஆகும் (யோவான் 17:3). அதாவது அவருடைய சந்தோஷம், அவரது சமாதானம், அவரது எண்ணங்கள், உலகத்தில் அவரது வேலை இவற்றை அறிந்து கொள்வதாகும். கிறிஸ்தவ விசுவாசிகள் மாத்திரமே தேவனையும், அவரோடு உள்ள ஐக்கியத்தையும் அறிந்திருக்கிறார்கள். மற்ற ஒருவருக்குமே இந்த உண்மையான வெளிப்பாடோ, ஆவிக்குரிய வாழ்க்கையோ இல்லை (5:11-12).

விரிவான விளக்கம்

ஐக்கியம் 1யோவா 1:3

இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய சந்தோஷம் உண்டு. விசுவாசிகளின் சந்தோஷம் நிறைவாயிருக்கும். அப்போஸ்தலர்கள் பிதாவோடும், அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் ஐக்கியமாகயிருக்கிறார்கள். நாமும் அப்போஸ்தலரோடு ஐக்கியமாயிருக்கிறோம். பிதாவோடும், குமாரனோடும் ஐக்கியமாயிருக்கிறோம். பரலோகத்தின் ஆசீர்வாதங்களுக்கு  பங்காளிகளாகயிருக்கிறோம்

தேவனுடைய ஆசீர்வாதங்களில் சில எல்லா விசுவாசிகளுக்கும் பொதுவாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அப்போஸ்தலர்களாகயிருந்தாலும், பெரிய பரிசுத்தவான்களாகயிருந்தாலும், பெரிய ஊழியக்காரர்களாகயிருந்தாலும், சாதாரண விசுவாசிகளாகயிருந்தாலும், இயேசுகிறிஸ்துவின் பொதுவான ஆசீர்வாதங்கள்  எல்லோருக்கும் கிடைக்கும். அந்தப் பொதுவான ஆசீர்வாதத்தை அப்போஸ்தலர் யோவான் இங்கு தெளிவுபடுத்துகிறார்பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் ஐக்கியமாகயிருப்பதே அந்தப் பொதுவான ஆசீர்வாதம். இந்த ஆசீர்வாதம் அப்போஸ்தலருக்கும் கிடைத்திருக்கிறது. எல்லா விசுவாசிகளுக்கும் கிடைத்திருக்கிறது

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, அவரை நம்முடைய இரட்சகராகவும், ஆண்டவராகவும்  ஏற்றுக்கொள்ளும்போது நாம் இரட்சிக்கப்படுகிறோம். பாவத்திலிருந்து விடுவிக்கப்படுகிறோம். இப்பிரபஞ்சத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுகிறோம்பிதாவாகிய தேவனோடும், அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் நமக்கு ஆசீர்வாதமான ஐக்கியம் உண்டாகிறது. இந்த ஐக்கியமே ஊழியக்காரர்களுக்கும், விசுவாசிகளுக்கும் கிடைத்திருக்கிற பொதுவான ஆசீர்வாதம்

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து  ஜீவவார்த்தையாக இருக்கிறவர்அவர் நித்தியமாயிருக்கிறவர். அவர் தம்முடைய ஜீவனை மாம்சத்திலே  வெளிப்படுத்தினவர்நித்திய ஜீவன் மாம்சமாயிற்று. இதனால்  மனுஷராகிய நமக்கு நித்திய ஜீவனைப்பெற்றுக்கொள்ளும் சிலாக்கியம் கிடைத்திருக்கிறதுநாம் பிதாவோடும், அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் ஐக்கியமாயிருக்கும்போது, நித்திய ஜீவனைப்பெற்றுக்கொள்கிறோம்

நாம் ஐக்கியம் கொள்ளவேண்டியவர்கள்

1. பிதாவாகிய தேவன். (ஏசா 57:15)     

2. குமாரனாகிய இயேசு கிறிஸ்து (மத் 18:20)

3. பரிசுத்த ஆவியானவர். (ரோமர் 8:9)

4. விசுவாசிகள் (அப் 1:14)

நாம் ஐக்கியம் கொள்ள வேண்டாதவர்கள்

1. துன்மார்க்கர்  (சங் 1)

2. பரியாசக்காரர்  (சங் 1)

3. அக்கிரமக்காரர்   (சங் 6:8)

4. வீணர்   (சங் 26:4)

5. பொல்லாதவர்கள்    (சங் 26:5)

6. பாவிகள்  (நீதி 1:1015)

7. புத்தியீனர்  (நீதி 9:6; நீதி 14:17)

8. கோபக்காரன் (நீதி 22:24)

9. சபையிலிருந்து வெளியே அனுப்பப்பட்ட அஞ்ஞானி  (மத் 18:17)

10. பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்கள்   (ரோமர் 16:17)

11. பின்வாங்கிப்போனவர்கள்  (2யோவான் 1:911)

12. வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவர்கள்  (1தீமோ 6:35; 2யோவான் 1:10)

13. ஒழுங்கற்று நடக்கிறவன்   (2தெச 3:6)

14. கீழ்ப்படியாதவன்  (2தெச 3:1415)

15. அவிசுவாசிகள் (2கொரி 6:14)

16. ஒழுக்கக்கேடானவர்கள்  (2கொரி 6:15)

17. விபச்சாரக்காரர் (1கொரி 5:9)

18. பொருளாசைக்காரர்  (1கொரி 5:10)

19. கொள்ளைக்காரர்   (1கொரி 5:10)

20. விக்கிரகாராதனைக்காரர்   (1கொரி 5:10)

21. உதாசினர்  (1கொரி 5:11)

22. வெறியர்  (1கொரி 5:11)

23. தற்பிரியர்  (2தீமோ 3:2)

24. வீம்புக்காரர்   (2தீமோ 3:2)

25. அகந்தையுள்ளவர்கள்   (2தீமோ 3:2)

26. தூஷிக்கிறவர்கள்  (2தீமோ 3:2)

27. தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்கள்   (2தீமோ 3:2)

28. நன்றியறியாதவர்கள்   (2தீமோ 3:2)

29. பரிசுத்தமில்லாதவர்கள்   (2தீமோ 3:2)

30. சுபாவ அன்பில்லாதவர்கள் (2தீமோ 3:3)

31. இணங்காதவர்கள்   (2தீமோ 3:3)

32. அவதூறு செய்கிறவர்கள்  (2தீமோ 3:3)

33. இச்சையடக்கமில்லாதவர்கள் (2தீமோ 3:3)

34. கொடுமையுள்ளவர்கள்  (2தீமோ 3:3)

35. நல்லோரைப் பகைக்கிறவர்கள்  (2தீமோ 3:3)

36. துரோகிகள்   (2தீமோ 3:4)

37. துணிகரமுள்ளவர்கள்  (2தீமோ 3:4)

38. இறுமாப்புள்ளவர்கள்   (2தீமோ 3:4)

39. தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயிருக்கிறவர்கள்            (2தீமோ 3:4)

40. மாய்மாலக்காரர்    தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள் (2தீமோ 3:5)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *