வேதாகம நாடுகள்: இஸ்ரேல் பாகம் 1 

வேதாகம நாடுகள் பாகம் 1 

வேதாகம நாடுகள் பாகம் 1 

I . இஸ்ரேல்

மத்திய தரைக்கடலின் கிழக்குக் கோடியில் இஸ்ரேல் நாடு இருக்கிறது. இஸ்ரேலுக்கு வடக்கே லெபனானும், கிழக்கே சிரியாவும், ஜோர்டானும், தெற்கே சாடி (சவுதி) அரேபியாவும், மேற்கே எகிப்தும், மத்திய தரைக்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன.

இஸ்ரேல் நாட்டின் சரித்திரத்தை சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகிறேன். பின்னணியத்தை விளங்கிக் கொள்ள இது உதவியாயிருக்கும்.

சுமார் கி.மு.1900ல் ஆபிரகாம் மெசப்பத்தோமியாவை (இன்றைய ஈராக்) விட்டு கானானுக்கு வந்து சேர்ந்தான். அந்நாட்களில் ‘HYKSOS’ என்ற ‘மேய்ப்பர் அரசர்கள்’ பாலஸ்தீனாவை ஆண்டு வந்தனர். இந்த அரசர்கள் எகிப்தைச் சேர்ந்தவர்கள். கி.பி.1479 வரை பாலஸ்தீனா எகிப்தியர் வசமிருந்தது. கி.மு.1630ல் யாக்கோபும் அவன் குடும்பமும் யோசேப்புடன் இருக்கும்படி எகிப்திற்கு சென்றனர்.

கி.மு.1250ல் யோசுவா யோர்தானைக் கடந்து பாலஸ்தீனாவை வென்று பன்னிரெண்டு கோத்திரங் களுக்கும் பங்கிட்டான். கி.மு.1200ல் பெலிஸ்தியர் கிரேத்தா தீவிலிருந்து வந்து பாலஸ்தீனாவை தங்கள் வசமாக்கிக் கொள்ள முயற்சித்தனர். கி.மு.1100ல் பெலிஸ்தர் பாலஸ்தீனா முழுவதிலும் குடியேறினர். 

கி.மு.1064 சிம்சோன் கொல்லப்பட்டான். 

கி.மு.1050 சவுல் இஸ்ரவேலின் முதல் ராஜாவாக பட்டம் சூட்டப் பெற்றான். 

கி.மு.1000 – தாவீது எருசலேமைப் பிடித்து அதைத் தலைநகரமாக்கினான்.

கி.மு.970 சாலொமோன் தேவாலயத்தைக் கட்டினான்.

கி.மு.928 எகிப்திய ராஜா சீஷாக் தேவாலய பொக்கிஷத்தை கொள்ளையிட்டான்.

கி.மு.922 இஸ்ரவேல் ராஜ்யம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. (இஸ்ரவேல், யூதா)

பாபிலோனியர் காலம் (கி.மு.605-562)

கி.மு. 586ல் நேபுகாத்நேச்சார் எருசலேமைப் பிடித்து தேவாலயத்தை அழித்தான். அநேகரை பாபிலோனுக்கு சிறைப்பிடித்துச் சென்றான்.

பெர்சியர் காலம் (கி.மு.549-33)

கி.மு.539 – செருபாபேலின் தலைமையில் இஸ்ர வேலர் பாபிலோன் சிறையிருப்பிலிருந்து தாயகம் திரும்ப ஆரம்பிக்கின்றனர்.

கி.மு.515 2வது தேவாலயம் பிரதிஷ்டிக்கப்படல். –

கி.மு.445 – நெகேமியா, எஸ்றா. எருசலேமை திரும்ப எடுப்பித்துக்கட்ட ஆரம்பித்தல்.

கிரேக்கர் காலம் (கி.மு.334-63)

கி.மு.334 மகா அலெக்ஸாண்டர் வெற்றி கண்டான். 

கி.மு.313 – எகிப்திய ராஜா தாலமி எருசலேமை பிடித்தான்.

கி.மு.198 – சிரியா ராஜாவாகிய மூன்றாம் அந்தி யோகஸ் எகிப்தியரை முறியடித்தான் இஸ்ரவேல் அவன் வசமாயிற்று.

கி.மு.169 – -4ம் அந்தியோகஸ் (அந்தியோகஸ். எப்பினஸ்) எகோவா வணக்கத்தை தடை செய்து எருசலேம் தேவாலயத்தில் ஒலிம்பியன் ஜீயஸ் என்ற தேவதையின் சிலையை நிறுத்தி அதை வணங்கும்படி மக்களை வற்புறுத்தினான். பலிபீடத்தில் பன்றியை பலியிட்டான்.

பள்ளிக்கூடத்திலேயே எங்களுக்கு சரித்திரம் வராதே ஏன் எங்களுக்கு இந்த சரித்திரமெல்லாம் என்று சிலர் சலித்துக்கொள்வது காதில் விழுகிறது. ஆனாலும் கொஞ்சம் பொறுமையோடிருங்கள்.

ஹாஸ்மோனியன் காலம் (கி.மு.167-63) 

செலுக்கிய ராஜாக்களுக்கு விரோதமாக யூதர்கள் கலகம் செய்ய ஆரம்பித்தனர். இதற்குத் தலைவனாக இருந்தவன் வயது முதிர்ந்த மத்தியாஸ். இவனுக்கு உதவியாக இவனுடைய குமாரரும் கலகத்திற்கு தலைமை தாங்கி நடத்தினர். இவன் குமாரன் பெயர் யூதாஸ். மக்கபேயஸ், யோனத்தான், சீமோன் (மக்க பேயஸ் என்றால் சம்மட்டி என்று பொருள்).

ரோமர் காலம் (கி.மு.63-330)

கி.மு.63 – ரோமர் இஸ்ரவேலைப் பிடித்தனர். இதற்கு தலைமை ஏற்றவன் பாம்பி (Pompey).

கி.மு.39 – கி.பி.4 – மகா ஏரோது (Herod the Great) ஆட்சி.

கி.பி.30 – இயேசு சிலுவையிலறையப்பட்டார்.

கி.பி.66 – யூதரின் முதல் கலகம், தலைவன் ஜெலட்ஸ்.

கி.பி. 70 – ரோம பேரரசன் வெஸ்பேசியனின் மகன் தீத்துவினால் எருசலேம் அழிக்கப்பட்டது.

கி.பி.132-135 – யூதரின் 2ம் கலகம். தலைவன் பார் ரோக்பா. ஹேட்ரியன் எருசலேமை திரும்ப எடுப்பித்து ரோம பட்டணமாக கட்டினான். யூதேயா என்று இருந்த பெயரை ‘சிரியா பாலஸ்தீனா’ என்று மாற்றினான். ‘பிலிஸ்தியரின் சிரியா’ என்று பொருள். பாலஸ்தீனா என்ற பெயர் இப்படித்தான் உதயமானது.

கி.பி.330-634-பைசாண்டின் காலம் (ரோமர்) ரோம பேரரசன் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவனானபோது பாலஸ்தீனாவில் சபைகள் வளர்ந்து பெருக

இரண்டாம் பெர்சிய காலம் (கி.பி.607-629)

 

கி.பி.614 மே 20ம் தேதி எருசலேம் பிடிபட்டது. 33877 பேர் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவ ஆலயங்கள் அழிக்கப்பட்டன.

அரேபியர் காலம் (கி.பி.634-1099)

கி.பி. 570ல் முகம்மது நபி மெக்காவில் பிறந்தார். மெதினாவில் வளர்ந்தார். இஸ்லாம் மதம் நிறுவப்பட்டு அரேபியாவில் பரவியது. 

கி.பி.636ல் பாலஸ்தீனா அரேபியர் வசமாயிற்று. மெக்கா, மெதினாவிற்கு அடுத்த 3ம் புனித பட்டணமாக எருசலேம் கருதப்பட்டது.

கி.பி.1009ல் பேடிமிட் கலிப் ஹாகிம் என்பவன் பரிசுத்த கல்லறை ஆலயத்தை அழிக்கும்படி கட்டளை யிட்டான். சின்ன ஆசியாவிலுள்ள 30,000 கிறிஸ்தவ கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இந்த தீயசெயல் கிறிஸ்தவர்களை கொதித்தெழ வைத்தது. குருசேடர் என்ற கிறிஸ்தவ சேனை எழும்பிற்று.

குருசேடர் காலம் (கி.பி.1099-1268)

கி.பி.1099 எருசலேம் குருசேடரால் பிடிக்கப் பட்டது.

கி.பி.1263-1516 – சுல்தான் மாமிலக் ஆட்சியில் பாலஸ்தீனா.

கி.பி.1517-1917 – துருக்கியர் வசத்தில் பாலஸ்தீனா 

கி.பி.1917 பிரிட்டிஷ் தளபதி ஜெனரல் ஆலென்பி உலக மகா யுத்தத்தில் எருசலேமை பிடித்தான்.

கி.பி.1948 இஸ்ரவேல் சுதந்திரமடைந்தது.

இஸ்ரவேல் எவ்விதம் சுதந்திரமடைந்தது என்பதை விளக்க விரும்புகின்றேன்:

அத்தி மரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக் கொள் ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும் போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது அவர் (இயேசுகிறிஸ்து) சமீபமாய் வந்திருக்கிறார் என்று அறியுங்கள் (மத்தேயு 24: 32,33).

அத்திமரம் யூத மக்களைக் குறிக்கும் (எரேமியா 24:1-8).

கி.பி.66 மற்றும் கி.பி.132-135 ஆண்டுகளில் ரோம ஆட்சிக்கு விரோதமாக யூதர்கள் கலகம் பண்ணினதாக பார்த்தோம். கி.பி.70ல் எருசலேம் அழிக்கப்பட்டது. யூதர்கள் பல நாடுகளுக்கும் சிதறி ஓடினர். இஸ்ரவேல் (யூதேயா) என்ற பெயர் உலக படத்தில் இல்லாமல் போயிற்று.

இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பு இஸ்ரவேலர் மீண்டும் தங்கள் தேசத்தில் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது. வேதத்தை விசுவாசித்தவர்கள் அவ்விதமாக போதித்து வந்தனர். ஆனால் வேறு அநேகர் இனி இஸ்ரவேலர் கூட்டி சேர்க்கப்பட மாட்டார்கள். இஸ்ரவேல் என்ற நாடு உருவாகாது என்று போதித் தனர். வேதத்தில் கூறப்பட்டுள்ளபடி அத்திமரம் துளிர்விட ஆரம்பித்தது. இஸ்ரவேல் என்ற நாடு உருவானவிதம் அற்புதமானது.

அத்திமரம் துளிர்விட்ட விதம்

கி.பி.1896ல் டாக்டர். தியோடர்ஹெர்ஸ் (Dr. Theodore Herze) என்ற யூத அறிவாளி “யூதரும் பாலஸ்தீனாவும்” (The Jews and Palestine) என்ற புத்தகத்தை எழுதி 72 நாடுகளிலும், சிதறியிருந்த யூதர் களுக்கு அனுப்பினார். யூதர்களுக்குள் அனல் மூண்டது. 

கி.பி.1897 ஆகஸ்ட் 29ல் சுவிட்சர்லாந்து நாட்டி லுள்ள பாஸல் (BASLE) என்ற ஊரில் முதலாவது ஒரு காங்கிரஸ் மாநாட்டை கூட்டினார். இதன் பலனாக இவருடைய தலைமையிலேயே “சீயோன் சங்கம்” நிறுவப்பட்டது (நிறைவேறுதல் எரே.31:6). அவருக்குப் பின் டாக்டர். சேய்ம் வெய்ஸ்மேன் (Dr. Chaim Weizman) தலைவரானார்.

கி.பி.1909ல் இவருடைய முயற்சியால் கலிலேயாக் கடற்கரையின் தெற்குக் கோடியில் முதலாவது யூத சமுதாய குடியிருப்பு ஏற்பட்டது. இதே ஆண்டில் டெல் அவிவ் பட்டணம் உதயமாயிற்று. இந்த சமயம் பாலஸ்தீனா துருக்கியர் வசம் இருந்தது. விலைக் கிரயமாக பாலஸ்தீனாவை தரும்படி யூதர்கள் துருக்கி யரிடம் கேட்டனர். துருக்கி சுல்தான் சொன்னார்: “எகிப்து நைல் நதியின் தண்ணீர் பாலஸ்தீனா நாட் டிற்குள் பாயும் காலம் வருமானால், அப்போது இந்த நாட்டை உங்களுக்கு சொந்தமாக கொடுப்போம்”.

முதல் உலக மகா யுத்தம்

முதலாம் உலகப் போர் 1914ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி ஆரம்பமானது. 1918ம் வருடம் நவம்பர் மாதம் 11ம் தேதி முடிவடைந்தது. பிரிட்ட னுக்கும் ஜெர்மனிக்கும் நடந்த யுத்தமாயினும் 33 நாடுகள் பங்குபெற்றன. எனவே உலக மகா யுத்தம் என அழைக்கப்பட்டது. இப்போரினால் 4 கோடி போர் மாண்டனர். சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

யுத்தம் ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் பிரிட்டனுக்கு வெடி மருந்தின் மூலப் பொருட்கள் கிடைத்த இடங்களை ஜெர்மானியர் பிடித்துக் கொண் டனர். பிரிட்டன் தோற்றுப்போகும் நிலை ஏற்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டிருந்த துருக்கியர் ஜெர்மா னியர் பக்கம் சாய்ந்து கொண்டனர்.

இங்கிலாந்தில் மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் இரசாயன பேராசிரியராக டாக்டர். வெய்ஸ் மேன் பணியாற்றி வந்தார். இவர் ரஷ்ய யூதன், சீயோன் சங்கத் தலைவர். இவரிடம் வெடி மருந்து ஒன்றை கண்டுபிடித்துத் தரும்படி கேட்டனர். இவர் T.N.T. GAS என்னும் நச்சு வாயு மருந்தை கண்டு பிடித்துக் கொடுத்தார். அது கப்பலில் கொண்டு செல்லப்பட்ட போது கெட்டுப்போக கூடியதாயிருந்தது.

யோபு 38:22,23ம் வசனங்களை அவர் வாசித்த போது பனிக்கட்டிகளுக்குள் வைத்துக்கொண்டு போ னால் கெட்டுப்போகாது என்பதை கண்டு அப்படியே செய்யும்படி கூறினார். பிரிட்டன் வெற்றி பெற்றது.

பிரிட்டிஷ் அரசாங்கம் டாக்டர். வெய்ஸ்மேன் செய்த உதவிக்கு பரிசு கொடுக்க விரும்பியது. டாக்டர். வெய்ஸ்மேன் எங்கள் தாய்நாட்டை எங்களுக்குத் தாருங்கள் என்றார். அதன்படி 1917 நவம்பர் 2ல் “பாலஸ்தீனா யூத ஜாதியினருடைய குடியிருப்பு நாடு, அவர்களின் தாய்நாடு” என்று பிரிட்டன் வெளியுறவு காரியதரிசி ஆர்தர் ஜேம்ஸ் பிரகடனம் செய்தார். இதற்கு பால்பர் அறிக்கை (BALFOUR’S DECLARATION என்று பெயர். யூதர்கள் இங்கிலாந்து பிரஜைகளாக பாலஸ்தீனாவில் குடியிருக்கலாம் என்பது பொருள்.

ஜெனரல் ஆலென்பி ஒரு யூத கிறிஸ்தவன். பாலஸ்தீனாவை துருக்கியரிடமிருந்து கைப்பற்ற பிரிட்டிஷ் அரசாங்கம் இவரை அனுப்பிற்று. இவர் முதல் மகா யுத்தத்தில் பிரிட்டனுக்கு வெற்றி தேடி தந்தவர்.

புனித நகரத்தின்மேல் குண்டு போட்டு கைப்பற்ற அவர் விரும்பவில்லை. பிரிட்டிஷ் மன்னருடைய ஆலோசனையைக் கேட்டார். மன்னர் ஜெபம்பண்ணி விட்டு கர்த்தர் உம்மை நடத்துகிறபடி செய்யும் என்று எழுதி அனுப்பினார். ஜெபித்தார். கர்த்தர் ஞானம் கொடுத்தார். அரபி மொழிகளில் துண்டுப் பிரதிகள் அச்சிட்டு விமானங்கள்மூலம் எருசலேமுக்குள் போட் டார்கள்.

அதில் எழுதியிருந்த விவரமாவது:

“முதலாவது உலக மகா யுத்தத்தை நடத்தின ஜெனரல் ஆலென்பி நான். எருசலேம் குடிகளாகிய நீங்கள் துருக்கியருடைய ஆட்சியை நிராகரித்து விட்டு ஆங்கிலேயரிடம் சரணடைந்தால் உங்களுக்கு இன்னின்ன நன்மைகளைச் செய்வோம். இல்லாவிடில் எருசலேம் நகரத்தையும் அதன் குடிகளையும் அழித்து விடுவோம்”. அதுவரை விமானங்களைக் கண்டிராத துருக்கியர்கள் விமானங்கள் நகரத்தின்மேல் பறக்கிறதைக் கண்டு பட்டணத்தைவிட்டு ஓடினர். பட்டணத்திலிருந்த அரபியரும் துருக்கியரும் துண்டுப் பிரதிகளைப் படித்து பயமடைந்தனர்.

ஏனெனில் ‘ஆலென்பி’ என்பது அரபி மொழியில் ‘அல்லாவின் விரோதம்’ அல்லது ‘அல்லாவின் கோபம்’ என்று பொருள்படும். அதுமட்டுமல்ல அல்லா என்பாயி என்றால் ‘அல்லாவின் தீர்க்கத்தரிசி என்றும் பொருள் கொள்ளலாம். அல்லாவே படையெடுத்து வந்துவிட்டதாக பயந்தனர். ‘ஆலென்பி’ என்று கத்திக் கொண்டே ஓடினர். சரண் அடைந்தனர்.

1917 டிசம்பர் 9ம் தேதி எருசலேம் நகர கவர்னரும் சரணடைவதாக கடிதம் எழுதி எருசலேம் மேயரிடம் கொடுத்துவிட்டு வெளியேறினார். மேயரும் நான்கு அராபிய தலைவர்களும் குதிரையில் வந்து ஆலென்பி யிடம் சரணடைகிறோம் என்று யோப்பா வாசல் சாவியை ஒரு கடிதத்தில் வைத்து கொடுத்தனர். மகிழ்ச்சியுடன் ஆலென்பியும், அவரின் சேனையும் பட்டணத்திற்குள் பிரவேசிக்க அணியணியாய் வந்தனர்.

ஆலென்பி தன் ஒரு கையில் வேதத்தையும், மறு கையில் யோப்பா வாசலின் சாவியையும் பிடித்துக் கொண்டு முன்சென்றார். வாசலை அணுகியதும் குதிரையிலிருந்து கீழே இறங்கி தலையிலிருந்த தொப்பியை எடுத்துவிட்டு பரிசுத்த நகரத்தை தலை குனிந்து வணங்கினார். இரத்தம் சிந்தாமல் எருசலேம் பிடிக்கப்பட்டது. போர் விமானங்கள் பாதுகாப்பிற்காக பறந்துகொண்டிருந்தன (ஏசாயா 31:5).

எருசலேமை பிடித்த தேதி யூத கணக்குப்படி 1917ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ந் தேதி. இந்த நாள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

1.ஆலயத்தில் அஸ்திபாரம் போடப்பட்டது 9ம் மாதம் 24ந் தேதி. (ஆகாய் 2:18,19)

  1. கி.மு.170ல் சிரியா தேசத்து ராஜா அந்தியோகஸ் எப்பிபினஸ் எருசலேம் தேவாலயத்தை தீட்டுப் படுத்தினான். கி.மு.165ல் யூதாஸ் மக்கபீஸ் என்று பிரதான ஆசாரியன் தீட்டுப்பட்ட ஆலயத்தை சுத்திகரித்து பிரதிஷ்டை செய்தான். பலி செலுத்த ஆரம்பித்தான். இதுவும் 9ம் மாதம் 24ந் தேதி. யோ. 10:22ல் கூறப்பட்டுள்ள பிரதிஷ்டை பண்டிகை இதுவே.

முதல் உலக மகாயுத்தம் முடிந்த நாள் 1918 நவம்பர் 11ம் தேதி 11 மணி. சிறிது நேரத்திற்குள் “சர்வதேச சங்கம்” (League of Nations) ஸ்தாபிக்கப் பட்டது. பாலஸ்தீனா ஆங்கிலேயருக்கும், சிரியா பிரெஞ்சுக்காரருக்கும் கொடுக்கப்பட்டது. இவை இரண்டும் அதுவரை துருக்கியரிடமிருந்து.

இஸ்ரவேலர் கூட்டி சேர்க்கப்பட்டனர்

1920ல் யூதர்கள் முதலாவது பிரிட்டிஷ் கப்பல் களில் வந்தனர். இங்கிலாந்து, ஐரோப்பா, அமெரிக்கா முதலிய நாடுகளிலிருந்து வந்து குடியேற ஆரம்பித்தனர்.

விமானங்களில் வந்தனர் (ஏசாயா 60:8). குதிரை இரதங்கள் வண்டிகள் மூலமாக வருவார்கள் என்று ஏசாயா 66:20ல் கூறப்பட்டது நிறைவேறிற்று. (ஏசாயா 11:11,12; எசேக்.36:24; எரே.31:8; ஏசாயா 43:6,8; உபா. 30:1-5; ஆ மோஸ் 9:9; ஏசாயா 66:20).

இரண்டாம் உலக மகா யுத்தம்

1939ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி இரண்டாம் உலகப் போர் துவங்கியது. 1945ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி முடிவடைந்தது.

ஐக்கிய நாட்டு ஸ்தாபனம் 1945 அக்டோபர் 24ம் தேதி ஸ்தாபிக்கப்பட்டது. 1947 நவம்பர் 29ம் தேதி ஐ.நா. பாலஸ்தீனாவை பங்கிட ஓட்டளித்தது. 3 பங்கு யூதருக்கு, 3 பங்கு அரபியருக்கு, 1 பங்கு சர்வ தேச சொத்து என்று பங்கிட்டது.

1948 மே 14ம் தேதி காலை 9 மணிக்கு டெல் அவிவ் பட்டணத்தில் பிரிட்டிஷ் கொடி இறக்கப் பட்டது. மாலை 4 மணிக்கு பிரதம மந்திரியாக இருந்த டேவிட் பென்குரியன் இஸ்ரவேல் என்ற யூத நாட்டை பிரகடனப்படுத்தினார். இரவில் தாவீதின் கொடி உயர்த்தப்பட்டது.

இஸ்ரவேல் நாட்டைக் குறித்த பின்னணியத்தை சுருக்கமாக விளக்கினேன். இப்போது நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பயணத்தை ஆரம்பிக்கப் போகிறோம்.

எக்ளிசியா பிளைட் 777ஐ எடுப்போம். இதற்கு பாஸ்போர்ட், விசா, பயணக்கட்டணம் ஒன்றும் வேண்டாம். முற்றிலும் இலவசம். இந்தியாவிலிருந்து சுமார் 3500 மைல் தூரத்தில் இஸ்ரவேல் நாடு இருக்கிறது. இண்டர்நேஷனல் விமான நிலையம் டெல் அவிவ் பட்டணத்தில் இருக்கிறது எனவே மும்பை அல்லது டெல்லியிலிருந்து சுமார் 5 மணி நேரத்தில் நாம் டெல் அவிவ் பென்சூரியன் விமான நிலையத்திற்கு வந்து சேருகிறோம். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *