வேதாகம நாடுகள்
IV . சிரியா
இஸ்ரவேல் நாட்டிற்கு வடகிழக்கில் இருப்பது சிரியா. சிரியாவிற்கு வடக்கே துருக்கியும், மேற்கே லெபனோனும், மத்திய தரைக்கடலும், தெற்கே ஜோர்டானும், கிழக்கிலும் தென்கிழக்கிலும் ஈராக்கும் எல்லைகளாய் அமைந்துள்ளன.
சிரியாவைப் பற்றிய சில புள்ளி விபரங்கள்:
பரப்பளவு : சுமார் 1,85,000 ச.கி.மீ.
மக்கள் தொகை :
சுமார் 1 கோடியே 49 லட்சம். (இதில் 85 சதவிகிதம் அரேபியர். பலதரப்பட்ட சிறுபான்மையினரும் வாழ்கின்றனர்).
முஸ்லீம்கள் : 90.5%,
கிறிஸ்தவர்கள் : 8%,
கல்வி கற்றோர் : 65%,
தேசிய மொழி ; அரபி
வருட வருமானம் : 1000 டாலர் (சுமார் ரூ.40,000).
தலைநகர் : தமஸ்கு
தமஸ்கு
மக்கள் தொகை 18,50,000. உலகிலேயே மிக பழைய பட்டணம். சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கே மக்கள் வாழ்ந்து வந்ததாக கூறப் பட்டுள்ளது. இந்தப் பட்டணம் தெக்கப்போலி என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. பண்டை காலத்தில் இந்த வட்டாரத்தில் சுதந்திரமாக இருந்த 10 பட்டணங் களைக் குறிக்கும் அந்த 10 பட்டணங்கள் 1.பெத்ஷான் 2.பெல்லா 3.டையான் 4.கனத்தா 4.கனத்தா 5.ராப்பனா 6.ஹைப்போஸ் 7.கடாரா 8.பிலதெல்பியா (அம்மான்) 9.தமஸ்கு 10.கெரஸா (ஜெராஸ்). பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் தமஸ்கு குறிப்பிடப்பட்டுள்ளது (ஆதி. 14:15).
ஆபிரகாமின் வீட்டு விசாரணைக்காரனாயிருந்த எலியேசர் தமஸ்கு ஊரைச் சேர்ந்தவன் எனக் கூறப் பட்டுள்ளது (ஆதி.15:2). தமஸ்கு அரசர்களைப் பற்றி பல இடங்களில் காண்கிறோம் (2 சாமு.8:5, 1 இரா. 11:23-25, 15:16-20, 16:5-9).
பவுல் கிறிஸ்தவர்களை சிறைபிடித்துவர எருசலே மிலிருந்து தமஸ்குவிற்குப் பயணமானதையும், போகும் வழியில் பவுல் இயேசுவை சந்தித்து கிறிஸ்தவனான தையும் அப்.9:1-19ல் காண்கிறோம். இந்தப் பயணம் சுமார் 6 நாட்கள் எடுத்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
அனனியா தமஸ்குவில் வாழ்ந்து வந்தான். ஆதி முதல் கிறிஸ்தவர்கள் இங்கே இருந்தார்கள். பவுல் தமஸ்குவில்தான் ஞானஸ்நானம் பெற்றார். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் பெற்றார். பவுல் தன் மனமாற்றத்திற்குப் பின் 3 ஆண்டுகள் அரேபியாவில் கழித்தபின் திரும்பி வந்தார் (கலா. 1:17,18). அவரைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தபோது மதிலுக்கு வெளியே கூடையில் வைத்து வெளியேற்றப் பட்டார் (அப்.9:22-25: 2 கொரி.11:32,33). வேதத்தில் கூறப்பட்டுள்ள நேர்த்தெரு இன்றும் இருக்கிறது (அப். 9:11). இந்தத் தெரு தமஸ்குவின் மையத்தில் இருக் கிறது. பட்டணம் இந்த தெருவிற்கு மேற்கேயும் கிழக்கேயும் இருக்கிறது.
ஆப்னா, பர்பார் நதிகள்
நாகமான் எலிசாவை நோக்கி, “நான் ஸ்நானம் பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப் பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளான ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொன் னான்” (2 இரா.5:12). இந்த ஆப்னா நதி தமஸ்கு பட்டணத்தில் இருக்கிறது. பர்பார் என்ற நதி தமஸ்கு விலிருந்து சில மைல்கள் தெற்கே இருக்கிறது.
தத்மோர்; பல்மைரா வேதத்தில் தத்மோர் என்று கூறப்பட்டுள்ள பட்டணம் தற்போது பல்மைரா என்று அழைக்கப் படுகிறது (2 நாளா.8:3,4). இது தமஸ்குவிலிருந்து வட கிழக்கில் சுமார் 150 மைல் தூரத்தில் இருக்கிறது. சாலொமோன் பொருட்களை சேர்த்து வைக்கும் பண்டகசாலை பட்டணமாக இதைக் கட்டினான். சாலொமோன் காலத்தில் இந்த ஊர் வியாபாரத்தில் சிறந்து விளங்கிற்று. வியாபார தேசிய நெடுஞ்சாலை இதன் வழியாக சென்றது.
சிரியாவிற்கு அருகிலுள்ள லெனோனுக்கு போகப் போகிறோம். ஆகாய விமானம் தேவையில் லை. பக்கத்து நாடுதான், பஸ்ஸில் போய் விடுவோம்.