வேதாகம நாடுகள் VII . ஈரான்
கி.பி.1935க்கு முன்வரை இது பெர்சியா என்று அழைக்கப்பட்டது. உலக வல்லரசுகளில் பழமையான ஒன்று.
ஈரானைப் பற்றிய சில புள்ளி விபரங்கள்: ஈரானின் எல்லைகளாக வடக்கே ரஷ்யாவும்.
கேஸ்பியன் கடலும், கிழக்கே ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும், தெற்கே பெர்சியா வளைகுடாவும். மேற்கே ஈராக்கும் உள்ளன.
பரப்பளவு :16,48,000 ச.கி.மீ.
மக்கள் தொகை : 6,55,25,000
தலைநகர் :டெஹ்ரான்
கல்வி கற்றோர் : 52%
தேசிய மொழி : பெர்சியா
முஸ்லீம் : 99%
கிறிஸ்தவர் : 0.4%
முக்கிய நகரங்கள் : மாசாத், இஸ்பஹான், ராய், டாப்ரிஸ்
வருட வருமானம் : 1,800 டாலர் (சுமார் ரூ.72,000)
‘ஈரான்’ என்றால் ‘ஆரியருடையது’ என்று பொருள். மேதிய பெர்சியர் இந்த ஆரிய வம்சத்தை சேர்ந்தவர்களே. மேதிய பெர்சியர்களைக் குறித்த குறிப்புகளை கீழ்க்காணும் வசனங்களில் காணலாம். 2 நாளா.36:21-23, எஸ்றா 1:1-4, எஸ்தர் 1:3,14,18; 10:2, 5.8:20; 10:1,13,20; 11:12).
டெஹ்ரானில் நடந்த முக்கிய நிகழ்ச்சி
1943ம் வருடம் நவம்பர் மாதம் 28 முதல் டிசம்பர் 1வரை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் ஒன்று நடந்தது. அமெரிக்க ஜனாதிபதி பிராங்களின் ரூஸ்வெல்ட், பிரிட்டனின் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகிய முக்கிய தலைவர்கள் கூடி, ஹிட்லரின் முயற்சியை முறியடிக்க கலந்து ஆலோசித்து முடிவெடுத்தனர். இந்தக் கூட்டத்தின் பலனாக இரண்டாம் உலக மகா யுத்தம் வந்தது.
பெஹிஸ்டன்
இன்று பெசிடன் என்று அழைக்கப்படுகிற இது ஒரு கிராமம். 1700 அடி உயர மலைகளில் இருக்கிறது. பாபிலோனுக்குச் சென்ற பாதை இந்த வழியாக சென்றது. தரியு அரசன் தன் வெற்றிகளை விவரித் துள்ள கல்வெட்டு இங்கே காணப்படுகிறது. மூன்று மொழிகளில் இந்த கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.
1.பண்டைகால பெர்சிய மொழி
- இலாமேயம்
- அக்காடியன்
ஹமதான்
வேதத்தில் இது அக்மேதா பட்டணம் என்று அழைக்கப்படுகிறது (எஸ்றா 6:2). எருசலேம் தேவா லயத்தை திரும்பக் கட்டுவதற்கான கட்டளையை கோரேஸ் பிரகடனப்படுத்திய சுருள், இந்த ஊரில் தான் தரியுவினால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பட்டணத் தின் மற்றொரு பெயர் எக்பட்டனா என்பதாகும். இது வடக்கு மேதியாவிற்கு தலைநகராக விளங்கிற்று. கோரேஸ் வழக்கு மன்றத்தை இங்கே நிறுவியிருந்தான்.
பாஸர்கடே
இந்த நகர் கோரேஸினால் கட்டப்பட்டது. தான் மேதிய பெர்சிய ராஜ்யத்தின் அதிபதியானதைக் குறிக்கும் வெற்றி சின்னமாக இதைக் கட்டினார். இங்கே கோரேஸின் அரண்மனை இருந்தது. கோரேஸின் கல்லறையும் இங்கேதான் இருக்கிறது.
பெர்ஸிபோலிஸ்
பெர்சியாவின் பண்டைகால தலைநகராக இருந்தது. இதைக் கட்டியது முதலாம் தரியு. இந்த பட்டணத்தை மகா அலெக்ஸாண்டர் பிடித்து இதன் ஒரு பகுதியை அழித்தான். இங்கே அநேக கல் தூண்கள் மேடான இடத்தில் இருக்கின்றன. இந்த இடத் திற்கு டக்டி ஜம்ஷீட் என்று பெயர். இந்த இடத்தில் தான் 2ம், 3ம் அர்தசஷ்டா அரசர்களின் கல்லறைகள் இருக்கின்றன. நக்க்ஷிரஷ்டாம் என்ற இடம் இதன் அருகில் உள்ளது. இங்கே தரியு. 1ம் அர்தசஷ்ட்ரம், 2ம் தரியு அரசர்களின் கல்லறைகள் இருக்கின்றன.
சூசான்
இன்றைய பெயர் சூசா. ஏலாமின் தலைநகராக இருந்தது. சூசான் பாபிலோனுக்கு கிழக்கே கர்கே நதிக்கரையில் கட்டப்பட்டுள்ளது. பெர்சிய வளைகுடா விலிருந்து வடக்கே 150 மைல் தூரத்திலிருக்கிறது. ஏலாமின் ராஜாவான கெதர்லா கோமேர் மற்ற அரசர் களுடன், சோதோமின் ராஜாவுடன் யுத்தம் செய்தான் என ஆதியாகமத்தில் வாசிக்கிறோம் (ஆதி.14:1-10)
பெந்தெகொஸ்தே நாளில் எருசலேமில் கூடின யூதர்களிலே ஏலாமிலிருந்து வந்தவர்களும் இருந் தனர். எலாமீத்தர் என்று வருகிறது (அப்.2:9) இன்றுள்ள சூசா வேதாகம நாட்களில் சூசான் என்று அழைக்கப்பட்டது (நெகே.1:1; எஸ்தர் 1:2). மகா தரியுவின் குளிர்கால அரண்மனை இங்கே இருந்தது. இந்த அரண்மனை சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு இருந்தது. எஸ்தர் புஸ்தக நிகழ்ச்சிகள் இங்கேதான் நிகழ்ந்தன.
அகாஸ்வேரு என்ற பெர்சிய அரசன் இங்கே சூசா என்ற இந்த பட்டணத்தில் பாபி லோன் அரசன் ஹம்முரபியின் சட்டப் பிரமாணங்கள் எழுதிய தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. சூசாவின் அருகிலுள்ள கர்கே நதிக்கரையில்தான் தானியேலின் கல்லறை இருப்பதாக முஸ்லீம் பாரம்பரியம் கூறுகிறது. இந்த இடத்திற்கு எதிரே ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது.