வேதாகம குடுபங்கள் : I . ஆதாம் – ஏவாள்

 

வேதாகம குடுபங்கள் : I . ஆதாம் – ஏவாள்

பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள முதல் குடும்பம் ஆதாம், ஏவாள் குடும்பம். உலகில் வாழ்ந்த, இன்றும் வாழ்கின்ற கோடிக்கணக்கான மக்கள் யாவரும் இந்த ஆதி பெற்றோரின் சந்ததியே. இன்று மனிதன் ஜாதியால், இனத்தால், கலாச்சாரத் தால், நிறத்தால், மொழியால், நாட்டால் பிரிக்கப் பட்டிருக்கின்றான். ஆனால் யாவருமே ஒரு குடும் பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வைத் தருவது வேதாகம சரித்திரம்.

ஆதாம் தேவனால் உருவாக்கப்பட்டவன். தேவ சாயலில் படைக்கப்பட்டான். அவனுடைய எலும்பிலிருந்து ஏவாள் உருவாக்கப்பட்டாள். இரு வருக்கும் குழந்தைப் பருவம் கிடையாது. ஆதா முக்கும் ஏவாளுக்கும் உலகப்பிரகாரமான பெற்றோர் கிடையாது. தேவனே அவர்களுக்கு பெற் றோராய் இருந்தார்.

தேவன் ஏற்படுத்திய குடும்பம்

ஆதாமை உருவாக்கினவர் கர்த்தர். அவன் தேவனோடு எப்போதும் உறவாடுகிற பரிசுத்த னாக இருந்தபோதிலும் அவன் தனிமையாக இருப் பதாகக் கர்த்தர் கண்டார். அவனுக்கு ஏற்ற துணை யை உண்டாக்கத் திட்டமிட்டார் (ஆதி.2:18). மனைவியே ஏற்ற துணை என்று கர்த்தர் கண்டார்.

ஒரு சகோதரனையோ, சகோதரியையோ, நண்பனையோ படைக்காமல், ஒரு மனைவியைப் படைத்தார். கணவன் மனைவியாக இணைத்தார். அவர்களை ஆசீர்வதித்தார். சில பொறுப்புகளைக் கொடுத்தார். புருஷன் தன் பெற்றோரைவிட்டு தன் மனைவியுடன் இசைந்திருக்கக் கட்டளையிட்டார்.

ஏவாள் தம்பதி

வாலிபராக படைக்கப்பட்டு கணவன் மனைவி யாக இணைக்கப்பட்ட அவர்கள் தேவ ஆசீர்வா தத்தால் நிரப்பப்பட்டிருந்தனர். நிர்வாணிகளா யிருந்தும் வெட்கப்படாதிருந்தனர். தேவ மகிமை யால் மூடப்பட்டிருந்த அவர்கள் தங்களை நிர்வா ணிகள் என்று எண்ணவில்லை. அவர்களுக்குள் ஒளிவுமறைவு ஒன்றுமில்லை (ஆதி.2:25).

தேவனுடைய சத்தத்தை அனுதினமும் கேட்டனர். அவருடன் தோட்டத்தில் உலாவினர் (ஆதி.3:8), அருமையான சகோதர சகோதரிகளே! உங் களை கணவன் மனைவியாக இணைத்தது கர்த்தர் என்று உறுதியாக நம்புகிறீர்களா? உங்களுக்குள் ஒளிவுமறைவின்றி நெருக்கமாய் பழகுகிறீர்களா? அனுதினமும் தேவ்னுடன் பழகுகிறீர்களா? அவரு டைய சத்தம் கேட்கிறீர்களா? உங்கள் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட இது அவசியம். தேவனோடு நெருங்கிய தொடர்பில்லாத குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமில்லை, சமாதானமில்லை, நிம்மதி இல்லை.

தோட்டத்திலுள்ள சகல கனி வர்க்கங்களையும் புசிக்கும் சிலாக்கியத்தைக் கொடுத்தார். இந்தக் கனிகள் பார்வைக்கு அழகும் புசிப்பதற்கு நலமான வைகளாகவும் இருந்தன (ஆதி.2:9,16).

நம் வாழ்க்கைக்கு அவசியமான, தேவையான யாவற்றையும் அனுபவிக்க தேவன் நமக்கு அதி காரம் கொடுத்துள்ளார்.

“தீமையானதை புசிக்க வேண்டாம்” என்று கட்டளையிட்டார். நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனி என்றால் என்ன என்ற வேத ஆராய்ச்சி இப்போது தேவையில்லை. நமக்குத் தீமையை உண்டுபண்ணும் என்று அவர் ஒன்றை விலக்கும் போது அதற்கு நாம் விலகியிருப்பதே குடும்ப வாழ்க்கைக்கு நன்மை பயக்கும். இதற்குக் கீழ்ப்படி யாவிட்டால் தண்டனை உண்டு என்றும் எச்சரித்தார்.

நமக்கு நன்மை தரும் ஒன்றையும் நாம் அனுப விக்கக்கூடாது என்று கர்த்தர் விலக்கவே இல்லை. இது உன் வாழ்க்கைக்கு உன் குடும்பத்திற்கு நல்ல தல்ல என்று அவர் கட்டளையிட்டால் நிச்சயம் அதற்கு விலகி இருப்பதே நமக்கு நல்லது.

ஆதாமுக்கு வேலை கொடுத்தார் ஏதேன் தோட்டத்தை பண்படுத்துவதும் காப் பதும் ஆதாமின் வேலை (ஆதி.2:15).எவ்வளவு பரிசுத்தனாக கணவன் இருந்தாலும், எவ்வளவு ஆசீர்வாதங்களைப் பெற்றிருந்தாலும் அவன் பொறுப்புள்ளவனாய், சுறுசுறுப்புள்ளவனாய் வேலை செய்ய கர்த்தர் எதிர்பார்த்தார்.

கணவன்மாரே! இதே நிலையில் நீங்கள் நடந்துகொள்ளுகிறீர்களா? எவ்வளவு பணம் இருந் தாலும் சோம்பேறிகளாய் இராமல் சுறுசுறுப்போடு அல்லது பாடுபடும் ஆண்களாயிருங்கள். உங்கள் குடும்பமாகிய தோட்டத்தில் தினமும் தேவனோடு உறவாடுங்கள். உங்கள் குடும்பத்தை பண்படுத் துங்கள். உங்கள் குடும்பத்தை சாத்தானின் சூழ்ச்சி களுக்கு விலக்கிக் காத்திட கவனம் செலுத்துங்கள்.

சோதனைக்கு இடமளித்த ஏவாள்

பெண்கள் மென்மையானவர்கள். இந்த மென் மை சில சமயங்களில் ஏமாற வழி செய்துவிடுகிறது. ஏவாள் தனிமையாக இருந்தபோது சாத்தான் இவளுடன் பேச்சுக் கொடுக்கிறான். விலக்கின கனியை புசி என்று அவன் நேரடியாக சொல்ல வில்லை. ஆனால் தேவன் ஒரு பெரிய ஆசீர்வா தத்தை உங்களுக்கு கொடுக்கத் தவறிவிட்டார். அவர் ஆ லோசனை, கட்டளை உண்மையான தல்ல என்று, பொய்யை மெய்போல பேசினான்.

ஏவாள் தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப் படியாமல் சாத்தானின் ஆலோசனைக்கு செவி சாய்த்தாள். விலக்கின கனியை இன்பமானதாகக் கண்டாள், பறித்தாள், புசித்தாள், தன் கணவனுக்கும் கொடுத்தாள். சிறுகாரியம்போல தோன்றின இது பெரிய சாபத்தைக் கொண்டுவந்தது. அருமையான சகோதரரிகளே! சிறிய தவறுபோலத் தெரியும் காரியம் குடும்பத்தில் பெரிய சாபத்தைக் கொண்டு வந்துவிடும். எச்சரிக்கை, விழிப்புணர்வு தேவை.

பாவம் நுழைந்த குடும்பத்தின் நிலை தேவ மகிமை குடும்பத்தைவிட்டு எடுபட்டது.

செய்த தவறுகளை மறைக்க அத்தி இலைகளை சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது. தவறு செய்தபின் அதை மூடி மறைக்க முயற்சித்தார்கள். கர்த்தரின் சத்தத்திற்கு விலகி ஓடினார்கள். தேவனை நேரடி யாக சந்திக்க தைரியமில்லை.

பாவம் குடும்பத்தில் நுழைந்துவிட்டால் தேவ சத்தத்திற்கு கீழ்ப்படியாத நிலை உருவாகும். கர்த்தர் பேசினாலும் அதைக் கேட்கும் தைரியம் போய்விடும்.

ஏன் இந்த பாவத்தை செய்தாய்? என்று ஆதாமிடம் கேட்டபோது கர்த்தர் மீதும், மனைவி மீதும் பழி போட்டான். இந்தப் பாவத்தை நான் செய்யக் காரணம் நீர் தந்த பெண் என்றான். அதாவது சும்மா இருந்த எனக்கு மனைவியைத் தந்தது நீர், எனவே இதற்குக் காரணம் முதலாவது நீர் என்ற கருத்தில் பேசினான். மனைவி தந்தாள், நான் புசித்தேன் என்று விபரம் தெரியாத சிறுபிள்ளை போல பேசினான்.

பாவம் நுழைந்த குடும்பத்தில் புருஷன் மனைவிமீது பழி போடுவது வழக்கம். ஏவாளைப் பார்த்து ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்ட போது பிசாசு வஞ்சித்துவிட்டான். நான் ஏமாற்றப் பட்டேன் என்று பிசாசுமீது பழி போட்டாள்.

ஆண்டவரே, நாங்கள் பாவம் செய்துவிட் டோம். உம்முடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் நடந்துவிட்டோம் என்று பாவ அறிக்கை செய்ய வில்லை. செய்த பாவத்திற்கு மன்னிப்புக் கேட்பதே சரியானது. சாக்குப்போக்கு சொல்வதும், பிறர்மீது பழிபோடுவதும் ஏற்புடையதல்ல.

ஒருவர்மீது ஒருவர் பழி போட்டாலும், பாவத் திற்குத் தண்டனை பெற்றாலும் ஒருவரையொருவர் விட்டுப்பிரியவில்லை என்பது நல்ல காரியம். கூடி வாழ்ந்தார்கள், குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். அவர்கள்மூலம் பூமியில் சந்ததிகள் உருவாயிற்று.

ஆதாம்-ஏவாள் குடும்ப வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளும் காரியங்கள்:

  • குடும்ப உறவை உருவாக்கியது கர்த்தர்.
  • தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தால் குடும்பத்தில் ஆசீர்வாதம் உண்டு.
  • சாத்தானுக்குக் கீழ்ப்படிந்தால் சாபம் வரும்.
  • அனுதினமும் தேவனோடு நடந்து உறவாட வேண்டும்.
  • பாவம் செய்துவிட்டால் தேவனைவிட்டு ஓடக் கூடாது.
  • தேவமகிமையை இழந்துவிட்டால் ஓடி ஒழியும் நிலை வரும்.
  • நம் பாவங்களை ஒத்துக்கொள்ள வேண்டும்.
  • ஒருவர்மீது ஒருவர் பழிசுமத்தி சாக்குப்போக்கு சொல்லக்கூடாது.
  • ஒரு மிருகம் கொல்லப்பட்டு தோலுடை மூடினது போல் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட வேண்டும்.
  • எந்தப் பிரச்சனையிலும் கணவன்-மனைவி பிரிந்து செல்லக்கூடாது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *