வேதாகம குடும்பங்கள் : III . ஆபிரகாம் – சாராள்
முற்பிதாக்களின் அட்டவணையில் முன்னணி யில் நிற்பவர் ஆபிரகாம். முதலில் அவர் பெயர் ஆபிராம்; மனைவி பெயர் சாராய். இவர்களிட மிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமுண்டு. வேதாகமம் எழுதப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள். இவர்கள் பெயர்களை ஆபிரகாம், சாராள் என்று கர்த்தர் மாற்றினார் (ஆதி.17:5,15).
ஒரு நாள் கர்த்தர் ஆபிரகாமைச் சந்தித்து நீ இந்த இடத்தைவிட்டு நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்கு போ என்றார். அப்போது ஆபிர காமுக்கு 75 வயது (ஆதி.12:4). அப்படியானால் சாராளுக்கு 65 வயது (ஆதி.17:17). ஆபிரகாம் தான் போகுமிடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப் போனார் (எபி.11:8). சாராளும்கூடச் சென்றாள்.
ஆபிரகாமிடமிருந்து கற்றுக்கொள்ளும் நல்ல பாடங்கள்:
- ஆபிரகாம் தேவ அழைப்பைப் பெற்றபோது தான் எங்கே போகிறோம் என்று தெரியாத போ திலும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து புறப்பட்டுப் போ னார். • ஆபிரகாமின் விசுவாசம் ஆச்சரியமானது.
2.ஆபிரகாம் தன் மனைவியை தன்னுடன் கூட்டிச் சென்றார். பிள்ளை இல்லாத மலடிதானே என்று அலட்சியப்படுத்தவில்லை. இன்று பிள்ளையில் லாத கணவன் மனைவிக்குள் சண்டைகளைப் பார்க்கிறோம். ஆபிரகாம் தன் மனைவியை குறை கூறவில்லை. அவளை அலட்சியப்படுத்த வில்லை. அவளை மிக பட்சமாய் நடத்தினார்.
- ஆபிரகாம் கர்த்தருக்கு பலிபீடம் கட்டி கர்த் தரை தொழுதுகொண்டார். தனக்கு கர்த்தர் ஒரு பிள்ளையைத் தரவில்லையே என்று குறை கூறவில்லை. ஆண்டவரைத் தேடுவதில் கவனம் செலுத்தினார்.
4. கர்த்தர் தனக்கு வாக்குப் பண்ணினது உடனே கிடைக்காவிட்டாலும் ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்தார்.
விசுவாசத்தில் பலவீனமாக இருக்கவில் லை, சோர்ந்து போகவில்லை (ரோமர் 4:18-22)
5.சாராள் சொல்லுக்கு ஆபிரகாம் கீழ்ப்படிந்தார் (ஆதி.16:2)
தனக்கு இனி குழந்தை பெற வாய்ப்பில்லை என்று எண்ணியதால் சாராள் தன் கணவருக்கு தன் வீட்டு வேலைக்காரியை மறுமனையாட்டி யாகக் கொடுத்தாள். மேலான வெளிப்பாடும் வசன முமுள்ள இக்காலத்திலே இது தவறானதுதான். ஆனால் அக்காலத்திலே இப்படிப்பட்ட பழக் கங்கள் நடைமுறையில் இருந்தன. ஆபிரகாம் தன் மனைவி சொல்லுக்குக் கீழ்ப்படிந்தார்.
ஆகார் கர்ப்பவதியாகி தன் எஜமாட்டியை அலட்சியமாக நடத்தினபோது சாராள் வேதனைப் பட்டாள். ஆபிரகாம் சாராளைப் பார்த்து… உன் விருப்பம் எதுவோ அதைச் செய் என்றார். சாராள் அவளை கடினமாக நடத்தினபோது, ஆகார் ஊரை விட்டு பின் கர்த்தர் சொன்னபடி திரும்ப வந்தாள்.
இந்த விஷயத்தில் ஆபிரகாம் தன் மனைவி சாராளுக்கு மதிப்புக்கொடுத்து நடந்துகொண்டது பாராட்டுக்குரியது. இந்த சந்தர்ப்பத்தில் ஆபிர காமின் வயது 85, சாராளின் வயது 75. இந்த கிழவி சொல்வதைக் கேட்டு வாலிபப் பெண்ணான ஆகாரை விட்டுவிடுவதா என்று ஆபிரகாம் நடந்து கொள்ளவில்லை.
6. ஆபிரகாமின் பக்தி பாராட்டுக்குரியது
99 வயதிலும் கர்த்தரை முகங்குப்புற விழுந்து வணங்கினார் ஆபிரகாம் (ஆதி.17:3,17).
7. ஆபிரகாமின் விருந்தோம்பல் ஆச்சரியமானது
வனாந்தரத்தில் வாழ்ந்துவந்த காலத்தில் தன்னி டத்தில் வந்த மூன்று புருஷர்களையும் கண்ட போது 99 வயதான ஆபிரகாம் அவர்களை வரவேற்க எதிர்கொண்டு ஓடி தரைமட்டும் குனிந்து அன்புடன் வரவேற்றார். வேகமாய்ப் போய் சாரா ளை உணவு தயாரிக்கச் சொல்கிறார். 99 வயதிலும் மாட்டு மந்தைக்கு ஓடுகிறார். நல்ல கன்றைப் பிடித்து வேலைக்காரனிடம் கொடுத்து சமையல் பண்ணச் சொல்கிறார்.
ஏராளமான வேலைக்காரர்கள் இருந்தபோ திலும் தானே ஓடி ஒரு இளங்கன்றை பிடித்துக் கொடுத்தார். வேலைக்காரர்கள் சரியில்லாத மாட்டை சமைத்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தினார். ஆயத்தப்படுத்தின விருந்தை விருந் தாளிகள் சாப்பிட்டபோது இவர் பணிவிடை செய்யும் ஆர்வத்தில் மரத்தடியில் நின்றுகொண்டி ருந்தார் (ஆதி.18:2-8).
குடும்பத் தலைவர்கள் என்ற முறையில் கணவன்மாரே 4,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆபிரகாமிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமுண்டு.
8. ஆபிரகாம் தன் சொந்தக்காரர்களுக்காக எடுத்த பிரயாசங்கள் பெருந்தன்மையானது
தன் சகோதரன் மகன் லோத்தை தன்னோடு கூட்டிவந்து பராமரித்தார். இரு மேய்ப்பர்களுக் குள்ளும் பிரச்சனை உண்டானபோது லோத்திடம் மனவருத்தத்துடன் நடந்துகொள்ளாமல் நீ உனக்கு விருப்பமான இடத்தைத் தெரிந்துகொள் என்று விட்டுக்கொடுத்தார். லோத்தையும் அவனுக்குண் டான யாவற்றையும் அந்நிய ராஜாக்கள் சிறைப் பிடித்துச் சென்றபோது அந்த ராஜாக்களை எதிர்த்து போரிட்டு லோத்தை மீட்டுக்கொண்டு வந்தார். லோத்து நம்மைவிட்டுப் பிரிந்துபோனவன் தானே போய் அழியட்டும் என்று எண்ணவில்லை.
தேவன் சோதோமை அழிக்க திட்டமிட்ட போது தன் சொந்தக்காரன் லோத்து அங்கே இருப் பதை மனதில்கொண்டு தேவனிடம் பரிந்து பேசி அவனைக் காப்பாற்ற முயற்சி பண்ணினது ஆபிர காமின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
9. தன் மனைவியை கெடுக்க முயற்சித்தவனுக் காக பரிந்துபேசி ஜெபித்த ஆபிரகாம்
சாராளைத் தன் சகோதரி என்று சொன்ன தினாலே அபிமெலேக்கு என்ற அரசன் அவளை தனக்கு மனைவியாக்க விரும்பி அரண்மனைக்கு கூட்டிச் சென்றான். கர்த்தர் அவனுக்குத் தரிசன மாகி உண்மையை வெளிப்படுத்தினார். உண்மையை மறைத்த ஆபிரகாமையும் சாராளையும் அபிமெலேக்கு கடிந்து கொண்டான். கர்த்தர் அவன் வீட்டாருடைய கர்ப்பத்தை அடைத்திருந்தார். ஆபிரகாம் எந்த மனக் கசப்புமில்லாமல் அபிமெ லேக்கு வீட்டாருக்காக பரிந்து பேசி ஜெபித்தான். கர்த்தர் ஆபிரகாமின் ஜெபத்தைக் கேட்டு அவர் களைக் குணமாக்கினார்.
10.ஆபிரகாமின் விசுவாசத்தின் உச்ச நிலை
தன் முதிர்வயதிலே தன் ஒரே மகனான ஈசாக்கை பலியிடும்படி கர்த்தர் சொன்னபோது ஆபிரகாமுக்கு ஏன் என்று விளங்காவிட்டாலும் கர்த்தருக்கு கீழ்ப்படிந்தார். இச்செயலிலிருந்து ஆபிரகாமின் விசுவாசத்தின் உச்ச நிலையைக் காண்கிறோம். எந்த பெரிய பரிசுத்தவானும் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டியிருப்பான்.
அதிகாலையில் ஆபிரகாம் கர்த்தர் சொன் னதை நிறைவேற்ற புறப்பட்டார். மோரியா மலை யில் பலிபீடம் கட்டி தன் மகனை அதிலே கிடத்தி பலியிட ஆயத்தமானபோது கர்த்தர் அதைத் தடுத்து ஆபிரகாமின் கீழ்ப்படிதலையும், விசுவாசத் தையும் பாராட்டினார். ஆபிரகாமின் தேவன் என்று அவர் தன்னை அழைக்க வெட்கப்பட வில்லை. தேவனுடைய மிகச்சிறந்த தளபதியாக ஆபிரகாம் பிரகாசித்தார்.
11. தன் மனைவி சாராள் 127 வயதில் மரித்தபோது ஆபிரகாம் அவளுக்காக புலம்பி அழுதார்
இப்போது ஆபிரகாமுக்கு வயது 137. இந்த வயதிலும் தன் மனைவி 127 வயதில் மரித்தபோது புலம்பினார். கண்ணீர்விட்டு அழுதார் என்பது மனைவியின் மேலுள்ள அன்பையும், பாசத்தை யும் வெளிப்படுத்துகிறது. பாட்டிதானே போய்ச் சேர்ந்துவிட்டாள் என்று தாத்தா ஆபிரகாம் எண்ண வில்லை.
வாலிப வயதில் மரித்தால்கூட தன் மனைவிக் காக அழாத சில கல் நெஞ்சக்காரர்கள் இன்றும் இருக்கிறார்கள். இவள் போனால் இன்னொருத்தி என்ற மனப்பான்மையில் நடந்துகொள்ளும் அன் பற்ற ஆண்கள் பலருண்டு.
12. தன் மகன் ஈசாக்கை பக்தியுள்ளவனாக வளர்த் திருந்தார்
100 வயதில் பெற்றெடுத்த மகன் ஈசாக்கு பல கோடி சொத்துக்குச் சொந்தக்காரன். இப்படிப்பட்ட செல்லப் பிள்ளையை ஒழுக்கமாக, நீதிமானாக, நேர்மையுள்ளவனாக ஆளாக்கினது, ஆபிரகாம் ஒரு நல்ல தகப்பன் என்பதை வெளிப்படுத்துகிறது. செல்லப் பிள்ளைகள் என்று பாராட்டி கெட்டு குட்டிச் சுவரான பிள்ளைகளை ஏராளம் பார்க்கலாம். கேட் டதை எல்லாம் கொடுத்து ஊதாரித்தனமான நிலை யில் வளர்ந்து நிற்கும் வாலிபர்கள் பலருண்டு.
13. தன் மகன் கர்த்தருக்குப் பயந்த பெண்ணை மணமுடிக்க கர்த்தரின் வழிநடத்துதலை நாடினார்
விக்கிரக ஆராதனை நிறைந்த கானானியரில் தன் மகனுக்கு பெண் பார்க்க விரும்பவில்லை. அழகு, பணம் அந்தஸ்திற்கு மதிப்புக் கொடுக்க வில்லை. கர்த்தருக்குப் பயந்த பெண் மருமகளாக வரவேண்டும் என்பதே ஆபிரகாமின் ஜெபம். ஆபிரகாமின் ஜெபத்தின்படி, வாஞ்சையின்படி ஏற்ற மருமகளை கர்த்தர் ஈசாக்கிற்குக் கொடுத்த தைப் பார்த்து மனநிறைவு பெற்றார் ஆபிரகாம்.
ஆபிரகாம் ஓர் நல்ல குடும்பத் தலைவன். இதை வாசிக்கும் சகோதரர்களே! விசுவாசிகளின் தகப்பனான ஆபிரகாமின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்களை நாமும் பின்பற்று வோமாக.
சாராள்
ஆபிரகாமின் மனைவியாகிய சாராளிடமிருந்து நல்ல காரியங்கள் பலவற்றை நாம் கற்றுக்கொள்ள முடியும்.
1. குடும்பத்தில் தேவசித்தம் நிறைவேற தியாகம் செய்தாள்
கர்த்தர் ஆபிரகாமை அழைத்தபோது ஆபிர காமுக்கு வயது 75. சாராளுக்கு வயது 65. ஊர் என்ற பட்டணத்தைவிட்டு புறப்பட்டுப்போக ஆபிர காமுக்கு அழைப்பு வந்தபோது சாராள் எதிர்ப்போ. மறுப்போ ஒன்றும் சொல்லாமல் கணவனுடன் சென் றாள். நல்ல வசதியாக வாழ்ந்த குடும்பம் அந்த வசதிகளையெல்லாம்விட்டு நாடோடிகள்போல அலைந்து திரிய ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கஷ்டமாயிருந்திருக்கும் சிந்தித்துப் பாருங்கள். கர்த்தர் சித்தம் செய்யத் தன்னை முற்றிலும் அர்ப் பணித்த சிறந்த பெண்மணி சாராள்.
தேவ அழைப்பிற்கு தன் கணவனை கீழ்ப் படியவிடாமல் தடுக்கும் மனைவிகள் பலருண்டு. அருமை சகோதரிகளே! தேவசித்தம் உங்கள் குடும்பத்தில் நிறைவேற எந்தத் தியாகத்தையும் செய்ய நீங்கள் ஆயத்தமா?
தான் போகும்இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப் போனான் ஆபிரகாம் (எபி.11:8). ஆனாலும் சாராளும் தைரியமாய்க் கூட சென்றாள். இந்த சூழ்நிலையில் இந்தக் காலத்தில் பல பெண் கள் என்ன செய்திருப்பார்கள்? அத்தான், நீங்கள் வேண்டுமானால் போய் வாருங்கள். வனாந்திரத்தில் அலைந்து திரிய என்னால் முடியாது என்று சொல் லியிருப்பார்கள். எந்த ஊருக்குப் போகிறோம் என்றுகூட தெரியாமல் புறப்பட்டாள்.
2. தன் கணவனின் உயிரைக் காப்பாற்ற எதை யும் செய்ய ஆயத்தமாயிருந்தாள்
சாராள் 65 வயதிலும் மிக அழகாக இருந் தாள். தன்னைவிட பலவான்கள் தன்னைக் கொன்று விட்டு சாராளை மனைவியாக்கிக் கொள்ளக்கூடாது என்ற பயம் ஆபிரகாமுக்கு இருந்தது. எகிப்திற்குப் போனபோது பார்வோனிடம் தான் ஆபிரகாமின் சகோதரி என்று பொய் சொல்லும்படி சாராளிடம் கூறினான். பின்பு அபிமெலேக்கிடமும் அவ்வித மே கூறும்படி சொன்னான் (ஆதி.12:10-20, 20:1-7).
சாராள் பொய் சொன்னாள் என்று வேதம் கூற வில்லை. ஆனால் பார்வோன் அரண்மனைக்கு அவள் அழைத்துக்கொண்டு போகப்பட்டபோதும், அபிமெலேக்கிடம் அவள் சென்றபோதும் கற்பிற்கு களங்கம் ஏற்படும் என்று தெரிந்தும் தன் கணவ னைப் பாதுகாக்க அவள் அமைதியாயிருந்தது ஆச்சரியமானது. தன் கணவன்மேல் அவள் எவ்வளவு அன்பும், பாசமும் வைத்திருந்தாள் என்பதை இது காட்டுகிறது.
3. ஆகாரை மறுமனையாட்டியாகக் கொடுத்த சாராளின் பெருந்தன்மை
இந்தக் காலத்தில் நமக்குக் கொடுக்கப்பட் டுள்ள வேத வெளிச்சம் அதிக பிரகாசமானது, உன்னதமானது. வேதாகமம் எழுதப்பட்டதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இவர்கள் காலத்தில் ஒருவருக்கு பல மனைவிகள் என்ற பழக்கம் சாதாரணமானது. தனக்கு இனி குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில்லாத நிலையில் தன் அடிமைப் பெண்ணாகிய ஆகாரை ஆபிரகாமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள் சாராள். இக் காலத்தில் இது தவறுதான். ஆனால் சாராளே இதை மனப்பூர்வமாகச் செய்தது அவளுடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. தன்னைத் திருமணம் செய்ததால் ஆபிரகாமுக்கு சந்ததி இல்லாமல் போ கிறதே என்ற ஆதங்கம் அவள் உள்ளத்தில் இருந் திருக்க வேண்டும்.
4. கர்த்தருக்கும் தூதருக்கும் விருந்து படைத்த சாராள்
தன் வீட்டிற்கு வந்தது கர்த்தரும் தூதர்களும் என்று அறியாமலேயே அவர்களை மிக அன்பு டன் உபசரித்தாள் சாராள். கிட்டத்தட்ட இப்போது சாராளுக்கு 90 வயது. ஆனாலும் வேலைக்காரர் களை சார்ந்திராமல் சாராளே 3 படி மாவு எடுத்து பிசைந்து அப்பம் சுட்டாள். கர்த்தருக்கும், தூதர் களுக்கும் விருந்து கொடுத்த பெரிய சிலாக்கியத் தைப் பெற்றாள் சாராள்.
5.90 வயதிலும் குழந்தையைப் பெற்றெடுக்க தன்னை ஒப்புக் கொடுத்த சாராள்
இந்த வயதில் எனக்கு இனி இன்பம் உண்டா யிருக்குமோ என்று சொன்னாலும், கர்த்தரின் சித்தம் தன்னில் நிறைவேற சாராள் தன்னை பூரணமாய் ஒப்புக்கொடுத்தாள். பிள்ளைப்பேறு நின்றுபோன காலத்திலும் கர்த்தர் அவளுக்கு அற்புதம் செய்தார். கர்த்தர் வாக்குப் பண்ணின படியே ஈசாக்கைப் பெற்றெடுத்தாள்.
சாராளின் சந்ததி இன்றுவரை 4000 ஆண்டு களாக வாழ்ந்து வருகிறது. இதை வாசிக்கும் சகோ தரிகளே! சாராளிடமிருந்து கற்றுக்கொண்ட நல்ல பண்பாடுகளை நீங்களும் பின்பற்றுங்கள். இந்த தம்பதிகளிடம் காணப்பட்ட குறைகளை வேதம் மூடி மறைக்கவில்லை, அப்படிப்பட்ட குறைகள் உங்களிடம் காணப்பட்டால் அதை மூடி மறைக் காமல் அறிக்கை செய்து விட்டுவிடுங்கள்.
ஆபிரகாம் சாராள் குடும்பத்திலிருந்து கற்றுக் கொள்ளும் காரியங்கள்:
- போகுமிடம் இன்னதென்று அறியாதிருந்தும் புறப்பட்டுச் சென்ற ஆபிரகாமின் விசுவாசம் ஆச்சரியமானது.
- வசதியான ஊரையும் வாழ்க்கை முறையையும் விட்டு வனாந்தர வாழ்க்கைக்கு செல்ல கர்த்த ருக்குக் கீழ்ப்படிந்த குடும்பம்.
- பரிசுத்தக் குடும்பமாயிருந்தபோதிலும் ஆபிரகாம் தன் குறைகளை மறைக்காமல் வாழ்ந்த வெளிப் படையான வாழ்க்கை.
- தன் மனைவியை பறிக்க முயற்சித்தவனுக் காகவும் கசப்பில்லாமல் பரிந்துபேசி ஜெபித்த பெருந்தன்மை.
- கர்த்தர் வாக்குப் பண்ணினதை உடனே கொடா விட்டாலும் சோர்ந்து போகாமல் கர்த்தரைப் பின்பற்றின வாழ்க்கை.
- 127 வயதான மனைவி இறந்தபோதும் புலம்பி அழுத ஆபிரகாமின் அன்பு.
- கர்த்தருக்குக் கீழ்ப்படிய தன் ஒரே மகனையும் பலிசெலுத்த ஆயத்தமான ஆபிரகாமின் அர்ப்பணிப்பு.
- தன் மகன் ஈசாக்கிற்கு திருமணம் செய்ய தேவ சித்தத்தை நாடினது.
- தன் கணவன் உயிரைக் காப்பாற்ற எதையும் செய்ய ஆயத்தமான சாராளின் உத்தமம்.
- தள்ளாத வயதிலும் அந்நியரை உபசரிக்க ஓடி ஓடி வேலைசெய்த முறை.