வேதாகம நாடுகள் :  IX . கிரேக்க நாடு

கிரேக்க நாடு

வேதாகம நாடுகள் :  IX . கிரேக்க நாடு

ஒரு காலத்தில் கிரேக்க நாடு உலகப் புகழ்பெற்ற நாடாக விளங்கிற்று. கிரேக்கக் கலாச்சாரம் உலக சரித்திரத்தில் முக்கிய இடம் வகித்தது. புதிய ஏற்பாட்டுக் காலத்தில் கிரேக்க மொழி உலக மொழி யாக மதிக்கப்பட்டது. கல்வி கற்றவர் என்றால் கிரேக்க மொழி அறிந்தவர் என்ற நிலை இருந்தது. எனவே தான் அரமேய எபிரேய மொழி பேசினவர்கள் புதிய ஏற்பாட்டை கிரேக்க மொழியில் எழுதினர். கிரேக்க நாட்டைப்பற்றி சிந்திக்கும்போது, மகா அலெக்ஸா ண்டர் நமது நினைவிற்கு வருகின்றார். பவுலின் அதிக மான ஊழியம் இந்த நாட்டில் நடைபெற்றது.

பவுல் எழுதிய 1 கொரிந்தியர், 2 கொரிந்தியர், பிலிப்பியர், 1 தெசலோனிக்கேயர். 2 தெசலோனிக் கேயர் ஆகிய ஐந்து நிருபங்களும் கிரேக்கநாட்டிலி ருந்த கொரிந்து, பிலிப்பி, தெசலோனிக்கே ஆகிய பட்டணங்களிலிருந்த சபைகளுக்கு எழுதப்பட்டன.

கிரேக்க நாட்டைப் பற்றி சில குறிப்புகள்:

  • மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த நாடு, பால்கன் பெனின்சுலாவின் தென்கோடியிலிருக்கிறது.
  • இதன் பரப்பளவு : 1,33,000 ச.கி.மீ.
  • மக்கள் தொகை : 1.01,24,000.
  • கல்வி கற்றோர் : 94%
  • அரசாங்க மொழி : கிரேக்கம்
  • தலைநகர்: ஏதன்ஸ் (அத்தேனே)
  • கிறிஸ்தவர்கள் : 98% (இதில் 97 சதவிகிதம் கிரேக்க ஆர்தடாக்ஸ் சபை யைச் சேர்ந்தவர்கள்).

எல்லைகள்

வடக்கே அல்பேனியா, யுகோஸ்லேவோக்கியா, பல்கேரியா, கிழக்கே அகாயாக் கடல், துருக்கி. மேற்கே அயோனியன் கடல், தெற்கே மத்தியதரைக்கடல். ரோமர் காலத்தில் கிரேக்க நாட்டின் ஒரு பகுதி அகாயா என்று அழைக்கப்பட்டது.

ஏதன்ஸ் (அத்தேனே)

கிரேக்க நாட்டின் தலைநகர். ஏதன்ஸின் மக்கள் தொகை சுமார் 30 லட்சம். கிரேக்க கலாச்சாரத்தின் மையமாக இந்தப் பட்டணம் இருந்தது. புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இந்த பட்டணத்தில் வசித்த மக்க ளின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக விக்கிர கங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதில் ஒன்று அறியப்படாத தேவனுக்கு என்று இருந்தது (அப்.17: 16-34).

அத்தேனே என்ற தேவதையின் பெயரை அடிப்படையாகக் கொண்டு இது ஏதன்ஸ் (அத்தேனே) என்று அழைக்கப்பட்டது. அக்ரோபோலிஸ் என்ற குன்று இந்த பட்டணத்தின் மையத்திலுள்ளது. இந்தக் குன்றில் பல கோவில்கள் கட்டப்பட்டிருந்தன. இந்தக் குன்றின் ஒரு பகுதியில் மார்ஸ்மேடை என்ற இடம் இருக்கிறது. இந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தி, தத்துவங்களைக் குறித்து வாதிடுவது வழக்கம். இந்தக் குன்றுக்கு வடக்கே சந்தைவெளி இருந்தது. இந்த இடத்தில் புகழ்பெற்ற கிரேக்க மேதை சாக்ரடிஸ், தன் தத்துவங்களை போதித்து வந்தான். பின்பு இதே இடத் தில்தான் ஹெம்லாக் என்ற விஷத்தைக் குடிக்க கட்டளை பெற்று மரித்தான். அவனுடைய போதனை களைப் பின்பற்றின முக்கிய தத்துவ ஞானிகள் பிளேட்டோ, அரிஸ்டாட்டில்.

பெரோயா

தெசலோனிக்கே பட்டணத்திலிருந்து தென் மேற்கில் சுமார் 80 கி.மீ. தூரத்திலிருக்கிறது. இதன் தற்காலப் பெயர் பெரியா. இந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் பவுல்மூலம் பேசப்பட்ட தேவ வாக்கியங்களை ஏற்றுக்கொண்டு வேதவசனத்தை ஆராய்ந்து பார்க்கிறவர்களாயிருந்தார்கள். எனவே இவர்கள் தெசலோனிக்கேய சபையாரைவிட நற் குணசாலிகளாக இருந்தார்கள் என்று வேதம் சாட்சி கூறுகிறது (அப்.17:10,11).

உலகில் பல இடங்களில் நடக்கும் வேதபாட திட்டத்திற்கு ‘பெரியன்’ என்று பெயர் வைப்பது இந்த ஊர் பெயரை அடிப்படையாகக் கொண்டுதான் என்பதை மனதில் கொள்ளவும் (எக்ளிசியாவிலும் உபதேசங்களை விளக்கும் பகுதிக்கு பெரோயர் பகுதி என்று வைத்துள்ளோம்). பவுல் மறுபடியும் இந்த பட்டணத்தை சந்தித்தார் என எண்ண இடமுண்டு (அப்.20:1-5).

கொரிந்து

ஏதன்ஸிலிருந்து சுமார் 60 கி.மீ. மேற்கே கொரிந்து இருந்தது. அகாயா கடலுக்கும் அயோனியா கடலுக்கும் இடையிலிருந்த ஓர் குறுகிய நிலப்பரப்பில் கொரிந்து இருந்தது. இதற்கு ஆங்கிலத்தில் ISTHMAS என்று பெயர். ஆசியாவிலிருந்து இத்தாலிக்குச் செல்லும் கப்பல்கள் இந்த நிலப்பரப்பைச் சுற்றிச்செல்ல சுமார் 300 கி.மீ. பயணம் செய்ய வேண்டும். இந்த கடல் வழியில் பாறைகள் அதிகம். மேலும் எப்போதும் புயல் வீசும் ஆபத்து உண்டு. எனவே கப்பல்கள் தங்கள் சரக்குகளை ஒரு கடற்கரையில் இறக்கி தரைமார்க்க மாக 6 கி.மீ. கடந்தால் அடுத்த கடலுக்கு சென்று அடுத்த கப்பலில் சரக்குகளை ஏற்றிவிடலாம்.

இப்படி இரண்டு கடலையும் பிரிக்கின்ற பகுதி யில் கொரிந்து இருந்ததால் எப்போதும் பல நாட்டு பயணிகள் இங்கே வந்து தங்கிப்போவது வழக்கம். இந்த இரண்டு கடல்களையும் இணைக்கும் கால்வாயை வெட்டும் வேலையை ரோம மன்னன் நீரோ, கி.பி. 66ல் பொன் மண்வெட்டியால் ஆரம்பித்து வைத்தான். ஆனால் வேலை தொடர்ந்து நடைபெறவில்லை. கி.பி.1881-1893 ஆண்டுகளில் இந்த கால்வாய் வெட்டி முடிக்கப்பட்டது.

கொரிந்து பட்டணத்திற்கு அருகில் கெங்கிரேயா என்ற ஊர் இருந்தது (அப்.18:18; ரோமர் 16:1). கொரிந்து பட்டணத்திற்கு தெற்கே 1500 அடி உயர குன்றில் அப்ரோடைட் என்ற “அன்புத் தேவதையின்” கோவில் இருந்தது. இதைச் சுற்றிலும் 1000 தாசிகள் ஆடம்பர வீடுகளில் குடியிருந்தனர். ஒழுக்கக்கேடான காரியங் களுக்கு கொரிந்து முக்கிய இடமாக அமைந்தது.

பவுல் காலத்திலிருந்த கொரிந்து இப்போது இல்லை. தற்காலத்தில் ஓர் கொரிந்து பட்டணம் இருக்கிறது. பண்டைகால கொரிந்துவிலிருந்து வடகிழக்கில் 6 கி.மீ. தூரத்தில் நவீன கால கொரிந்து இருக்கிறது.

பவுல் கொரிந்து பட்டணத்தில் 11/2 ஆண்டுகள் தங்கி ஊழியம் செய்தார். இங்கே குடியிருந்த ஆக்கில்லா பிரிஸ்கில்லா தம்பதிகளுடன் தங்கி அவர் களுடன் கூடார வேலை செய்துகொண்டே நற்செய்தி யைப் பரப்பி இங்கே சபையை நிறுவினார் (அப்.18: 1-11). இந்த சபைக்கு இரண்டு நிருபங்களை எழுதி னார். தெசலோனியருக்கு எழுதின முதலாம் நிருபமும் இங்கிருந்துதான் எழுதினார் என்று நம்பப்படுகிறது.

பத்மு தீவு

பத்மு தீவு தற்போதுள்ள துருக்கி நாட்டிலிருந்து எபேசு பட்டணத்திற்கு தென்மேற்கில் அகாயா கடலில் சுமார் 110 கி.மீ. தூரத்திலிருக்கிறது. மிலேத்து விலிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்திலிருக்கிறது. இது சுமார் 12 கி.மீ. நீளமும், சுமார் 9 கி.மீ. அகலமுள்ள சிறிய தீவு. ரோமர் காலத்தில் குற்றவாளிகளை நாடு கடத்தும் இடமாக இந்த தீவு பயன்படுத்தப்பட்டது. இந்தக் குற்றவாளிகள் இங்கிருந்த சுரங்கங்களில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர்.

கி.பி.95ல் அப்போஸ்தலனாகிய யோவான் டொ மீஷியன் என்ற ரோம பேரரசனால் இங்கே நாடு கடத்தப்பட்டார். யோவான் இங்கு இருக்கும் போது தான் தேவ வெளிப்பாடுகளைப் பெற்று வெளிப்படு த்தின விசேஷத்தை எழுதினார் (வெளி.1:9,10), இங்கே யோவான் பெயரில் மடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. பத்மு துருக்கி நாட்டிற்கு பக்கத்திலிருந் தாலும் கிரேக்க நாட்டிற்குத்தான் சொந்தமானது.

பிலிப்பி

அகாயா கடலின் கடற்கரை பட்டணமாக இருந்த நெயாப்போலியிருந்து சுமார் 16 கி.மீ. தூரத்திலிருந் தது பிலிப்பி (அப்.16:11). கிரேக்க நாட்டின் வடபகுதி மாசிடோனியா என்று அழைக்கப்படுகிறது (மக்கதோ னியா). அந்தப் பகுதியில் பிலிப்பி பட்டணமிருந்தது. மக்கதோனியா மகா அலெக்ஸாண்டர் பிறந்து வளர்ந்த இடம். அலெக்ஸாண்டரின் தகப்பன் பெயர் பிலிப்பி. அவன் பெயரில்தான் பிலிப்பி பட்டணம் கி.மு.356ல் கட்டப்பட்டது. அகஸ்துராயன் என்பவன் (அவரின் மற்றொரு பெயர் ஆக்டோவியஸ்) வெற்றியடைந்த பின் பிலிப்பி பட்டணத்தை ரோமர் குடியிருப்பு பகுதி யாக மாற்றினான்.

பவுலும் சீலாவும் ஐரோப்பா கண்டத்திற்குள் கால் எடுத்து வைத்தது இந்த பிலிப்பி பட்டணத்திற்கு வந்ததின்மூலம்தான். இங்கே லீதியாளை கிறிஸ்து வுக்குள் நடத்தி அவள் வீட்டில் தங்கி ஊழியம் செய் தனர் (அப்.16:12-15). ஐரோப்பாவில் நிறுவப்பட்ட முதல் சபை பிலிப்பி சபைதான்.

பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் அடைக்கப் பட்டதும், பின்பு அற்புதமாய் சிறைச்சாலை கதவுகள் திறக்கப்பட்டதும், சிறைச்சாலை அதிகாரி குடும்பமாக இயேசுவை ஏற்றுக்கொண்டதும் தெளிவாக அப்.16ல் விவரிக்கப்பட்டுள்ளது. இங்கு நிறுவப்பட்ட சபைக்கு பிலிப்பியர் நிருபம் எழுதப்பட்டது. பிலிப்பி பட்டணம் இருந்த இடத்தின் நவீனகாலப் பெயர் பெலிபெடஜிக்.

தெசலோனிக்கா இதன் தற்காலப் பெயர் சலோனிக்கா. மாசிடோ னியா பகுதிக்கு தலைநகர். பிலிப்பி பட்டணமிருந்த இடத்திலிருந்து சுமார் 160 கி.மீ. தென்மேற்கில் இருக் கிறது. இதன் மக்கள் தொகை சுமார் ஏழு லட்சம். அலெக்ஸாண்டரின் சகோதரியின் பெயர் தெசலோ னிக்கி. அவள் பெயரால் இந்த பட்டணம் கி.மு.316ல் கட்டப்பட்டது.

பவுல் இந்த பட்டணத்திற்கு வந்து பிரசங்கித்து சபையை நிறுவினார் (அப்.17:1-9). உலகத்தை கலக்கு கிறவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள் என்ற பெயர் இங்கேதான் பெற்றார்கள். இங்கே நிறுவப்பட்ட சபைக்கு பவுல் இரண்டு நிருபங்களை எழுதினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *