வேதாகம நாடுகள் VIII . துருக்கி 

துருக்கி 

வேதாகம நாடுகள் VIII . துருக்கி 

ஐரோப்பாவிற்கு மிக அருகாமையிலுள்ள ஆசிய நாடு துருக்கி. மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்த நாடு. மேற்கே அகாயா கடல், வடக்கே கருங்கடல், தெற்கே மத்தியதரைக்கடல், கிழக்கே மலைத் தொடர்ச்சி அதைத் தாண்டி ரஷ்யா, ஈரான், ஈராக், சிரியா எல்லைகள் இருக்கின்றன.

துருக்கியைப் பற்றிய சில புள்ளி விபரங்கள்:

  • பரப்பளவு :7,80,000 சதுர கி.மீட்டர் (சுமார் 1400 கி.மீ நீளமும், 600 கி.மீ. அகலமும் உள்ள நாடு).
  • மக்கள் தொகை : 6,11,51,000 (6 கோடி)
  • கல்வி கற்றோர் : 76%
  • தேசிய மொழி : துருக்கி
  •  தலைநகர் : அங்காரா
  • மக்கள் தொகை : 25,60,000
  • முக்கிய நகரங்கள் : இஸ்தான்புல்
  • முஸ்லீம் : 99.8%
  • கிறிஸ்தவர் : 0.2%, 
  • (வெகு சில கிறிஸ்தவர்களே உள்ளனர். இவர்களும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களே).
  • வருட வருமானம் : 1360 டாலர் (சுமார் ரூ.54,400)
  • துருக்கியின் பழைய பெயர் கான்ஸ்டான்டி நோபிள். அதற்கு முன்பிருந்த பெயர் பைசாண்டியம்.

இந்தப் பட்டணத்தில் மட்டும் சுமார் 600 மசூதிகள் இருக்கின்றன. இவைகளில் பல முற்காலத்தில் கிறிஸ்தவ ஆலயங்களாயிருந்தவை. இஸ்மிர் (பழைய சிமிர்னா) அடானா பர்ஸா ஆகியவை. ஒரு காலத்தில் கிறிஸ்து மார்க்கம் வேகமாய் பரவி வந்த இந்த நாடு இன்று ஒரு முஸ்லீம் நாடாக மாறிவிட்டது. வேதாகம நிகழ்ச்சிகளோடு அதிக தொடர்புள்ள நாடு இது.

அந்தியோகியா (சிரியா)

இன்று இதன் பெயர் அன்டாக்கியா. இந்த பட்டணம் முந்திய நாட்களில் சிரியாவிலிருந்தது. தற்போது இது துருக்கியில் உள்ளது. எருசலேமிலி ருந்து வடக்கே சுமார் 500 கி.மீ. தூரத்திலிருக்கிறது. கி.பி. 526ல் ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டு, இப் பட்டணத்தில் சுமார் 2,50,000 பேர் மரித்தனர். இந்த பட்டணத்தில் சபை உருவானதையும், பர்னபா இங்கே சென்று ஊழியம் செய்ததையும், பின்பு பவுலை அழைத்து வந்து உபயோகித்ததையும் அப்.11ம் அதிகாரத்தில் பார்க்கிறோம்.

இயேசுவின் சீஷர்கள் முதன்முதலாக கிறிஸ்த வர்கள் என்று அழைக்கப்பட்டது இங்கேதான் (அப். 1:26). பவுலின் மூன்று மிஷனரி பயணங்களும் இங்கிருந்துதான் ஆரம்பமானது (அப்.13:1-3; 15:36-41; 18:22,23). எருசலேமுக்குப் பதில் அந்தியோகியாவே கிறிஸ்தவத்தைப் பரப்புவதிலும் மிஷனரிகளை அனுப்புவதிலும் முக்கியப் பங்கு வகித்தது. ஆதி சபைப் பிதா, கிறிசொஸ்தம், இந்த ஊரில் கி.பி.347ல் பிறந்தார்.

அந்தியோகியா (பிசீதியா)

பவுலும் அவன் நண்பர்களும் தங்கள் முதல் மிஷனரி பயணத்திலே, சீப்புரு தீவிலிருந்து பாப்போ பட்டணத்தைவிட்டு, பம்பிலியாவிலிருக்கும் பெர்கேக்கு வந்து, அங்கிருந்து இந்த அந்தியோகியாவிற்கு வந்த தாக வாசிக்கிறோம் (அப்.13:13,14). இங்கேயிருந்த யூத ஜெப ஆலயத்தில் பவுல் பிரங்கித்தார் (அப்.12 14-43).

அத்தலியா

இன்று இதன் பெயர் அன்றலியா. இது பம்பிலி யாவின் துறைமுகப்பட்டினம். இங்கிருந்து பயண மாகித் தான், பெர்கே, அந்தியோகியா, இக்கோனியம், லீஸ்திரா ஆகிய இடங்களுக்குச் சென்றனர் (அப்.14: 25,26).

தெர்பை (அப்.14:6)

இது லிக்கவோனியாவிலிருந்து லீஸ்திராவுக்கு தென்கிழக்கில் சுமார் 25 கி.மீ.தூரத்திலிருந்ததாக நம்பப்படுகிறது. இந்த ஊர் இருந்த இடத்தின் தற்போதைய பெயர் கெர்டிகுடியூக். இந்த ஊரில் இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒருவர்தான் காயு (அப். 20:4; ரோ.16:23), பவுல் தனது இரண்டாவது மிஷனரி பயணத்தில் இந்த ஊருக்கு வந்தார் (அப்.16:1). எபேசு

இதன் நவீன காலப் பெயர் செலகக். பண்டை கால ரோம வல்லரசின் ஆசிய பகுதிக்கு எபேசு தலைநகராக விளங்கிற்று. சிமிர்னாவுக்கும் மிலேத்து வுக்கும் இடையிலிருந்தது. சிமிர்னாவிலிருந்து சுமார் 60 கி.மீ. தென்கிழக்கிலிருந்தது. கேய்ஸ்டர் என்ற நதிக் கரையில் கட்டப்பட்டிருந்தது. பண்டைகால உலக அதிசயங்களில் ஒன்றான தியானாளின் கோவில் இங்கே இருந்தது. ரோமர் தியானாள்’ என்றும், கிரேக்கர் ‘ஆர்டிமிஸ்’ என்றும் அழைத்தனர். பேய்க்கு எத்தனை விதவிதமான பெயர்கள்!

தியானாள் சிலை வானத்திலிருந்து விழுந்ததாக நம்பப்பட்டது. இதன் கோவில் 425 அடி நீளம், 240 அடி அகலமுள்ள ஒரு பெரிய மேடையில் கட்டப்பட் டிருந்தது. இந்த கோவிலின் நீளம் 377 அடி. அகலம் 180 அடி. உயரம் 60 அடி. இதற்குள்ளே 56 அடி உயரமும் 6 அடி விட்டமுள்ள தூண்கள் 127 இருந்தன. இந்த ஆலயம் தங்கம், பளிங்குக்கல், விலையேறப் பெற்ற மரம் ஆகியவற்றால் கட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு நாட்டு அரசனால் வெகுமதியாகக் கொடுக்கப்பட்டது. இந்த கோவில் வளாகத்திற்குள்ளிருக்கும் குற்றவாளிகளை பிடிக்கக் கூடாது என சட்டம் இருந்தது. எனவே இது குற்ற வாளிகள் நிரம்பியிருந்த இடமாயிருந்தது. ஒழுக்கக் கேடான காரியங்கள் அனுதினமும் இங்கே நடை பெற்றன.

பவுல் தனது இரண்டாம் மூன்றாம் மிஷனரிப் பயணங்களில் இங்கே வந்து ஊழியம் செய்தார் (அப். 18:19-21; 19:1-7). மந்திரவாதிகளும் இயேசுவை ஏற்றுக்கொண்டு தங்கள் புத்தகங்களை சுட்டெரித்தனர் (அப்.19:19,20).இங்கே ஆரம்பிக்கப்பட்ட சபைக்குத் தான் எபேசியருக்கு எழுதின நிருபம் எழுதப்பட்டது. இந்த பட்டணத்திற்கு அப்போஸ்தலனாகிய யோவான் இயேசுவின் தாயைக்கூட்டி வந்து செலுமிஸஸ் என்ற மலையிலிருந்த வீட்டில் தங்கி பராமரித்தான் என்று கூறப்படுகிறது. 14ம் நூற்றாண்டில் இந்தப் பட்டணத்தை துருக்கியரும், மங்கோலியரும் தொடர்ந்து தாக்கினர். தியானாள் கோவில் இருந்த இடம் தெரியாமல் அழிந்தது.

ஆரான்

தேவன் ஆபிரகாமை அழைத்தபோது அவன் தன் தகப்பனாகிய தேராகுடன் புறப்பட்டு ஆரான் மட்டும் வந்து அங்கே தங்கினார்கள் (ஆதி.11:21). தேராகு இங்கே தான் மரித்தான் (ஆதி.11:32). இந்த இடம் ஆபிரகாம் வாழ்ந்து வந்த ஊர் என்ற பட்டணத் திலிருந்து சுமார் 1000 கி.மீ. வடக்கே இருந்தது. ஈசாக் கிற்கு பெண் பார்க்க தன் வேலைக்காரனை அனுப் பினது இந்த ஆரானுக்குத்தான் (ஆதி.24:10). பின்பு யாக்கோபு வந்து சேர்ந்து 20 ஆண்டுகள் தங்கியிருந் ததும் லேயாள், ராகேலை திருமணம் செய்ததும், பென்யமீனைத்தவிர அவன் பிள்ளைகள் யாவரும் பிறந்த ஊரும் இதுவே (ஆதி.28:10, 29:4, 35:16-19).

இக்கோனியா

தற்போதைய பெயர் கொன்யா. அந்தியோகியா (பிசிதியா)விலிருந்து தென்கிழக்கே சுமார் 120 கி.மீ. தூரத்திலிருக்கிறது. இந்தப் பட்டணம் வழியாக அகஸ்துராயன் அமைத்திருந்த ராஜபாதை சென்றது. ரோமர் காலத்திலிருந்த கலாத்தியா பகுதியிலிருந்த முக்கிய பட்டணங்களில் ஒன்று இது. பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலிருந்து (பிசிதியா) துரத்திவிடப்பட்டபோது, அவர்கள் இந்த பட்டணத் திற்கு வந்தார்கள். பவுல் மறுபடியும் இந்தப் பட்டணத் தை சந்தித்தார் (அப்.15:36, 41, 16:12, 18:22).

லவோதிக்கேயா

பிரிகியாவின் தலைநகராக இருந்தது. எபேசுவி லிருந்து சுமார் 160 கி.மீ. தூரத்திலிருந்தது. கி.மு.261 246 ஆண்டுகளில் வாழ்ந்த இரண்டாம் அந்தியோ கசின் மனைவியின் பெயர் லவோதிக்கே. அவள் ஞாபகர்த்தமாக கட்டப்பட்டது இந்த ஊர். இங்கே ஒரு சபை இருந்தது. வெளி. 3:14-22 வசனங்களில் ஆவியானவர் இந்த சபையை எச்சரித்துப் பேசின செய்தியை காண்கிறோம். இன்று இந்த ஊர் இருந்த இடம் ஒரு பாழடைந்த நிலையிலும் கற்குவியலுள்ள பகுதியாகவும் இருக்கிறது. இந்த இடத்தின் நவீன காலப் பெயர் ‘டர்க்ஸ் எஸ்கிஹிசன்’. இதன் பொருள் ‘பழைய அரண்மனை’.

லீஸ்திரா

லிக்கவோனியா (LYCAONIA) பகுதியிலிருந்த பட்டணம் (அப்.14:6). இக்கவோனியாவிற்கு தென் மேற்கில் சுமார் 28 கி.மீ. தூரத்தில் அந்தியோகியா (பிசீதியா)விற்கு போகும் முக்கிய நெடுஞ்சாலையிலி ருந்தது. கலாத்தியாவின் பகுதியாகவுமிருந்தது. இக் கோனியா பட்டணத்தில் ஏற்பட்ட உபத்திரவத்திலி ருந்து தப்பி பவுலும் பர்னபாவும் லீஸ்திராவிற்கு வந்தனர். இங்கேதான் பவுலின் செய்தியை கேட்டுக் கொண்டிருந்த முடவன் அற்புத சுகம் பெற்றான்.

பர்னபாவை ‘யூப்பித்தர்’ என்றும் பவுலை ‘மெர்க்குரி’ என்றும் அழைத்தனர், ஜூப்பிட்டர் என்ற ரோம கடவுளுக்கு இணையானது ஜீயஸ் என்ற கிரேக்கக் கடவுள். மெர்க்குரி என்ற ரோம கடவுளுக்கு இணையானது ஹெர்மஸ் என்ற கிரேக்க கடவுள். பவுலையும் பானபாவையும் கடவுள் அவதாரம் என்று எண்ணி வணங்க முயற்சித்தனர். யூதர்கள் அவர்கள் மனதை மாற்றினபோது கல்லெறிய ஆரம்பித்தனர் (அப்.14:8-19). பவுல் மறுபடியும் லீஸ்திராவிற்கு வந்தார் (அப்.14:21; 18:23). லீஸ்திரா இருந்த இடத்தில் தற்போது சில தூண்களை மட்டுமே பார்க்க முடிகிறது.

மிலேத்து

எபேசு பட்டணத்திலிருந்து தெற்கே சுமார் 58 கி.மீ. தூரத்திலிருந்தது மிலேத்து. இது அகாயா பகுதிக்கு முக்கிய துறைமுகப்பட்டணமாக திகழ்ந்தது. பவுல் தன்னுடைய கடைசி பயணத்தில் எருசலேமுக்கு சென்றபோது இங்கே தங்கி எபேசு சபை மூப்பர்களை வரவழைத்தார். அவர்களுடன் உணர்ச்சிவசப்பட்டு பேசின செய்தியை அப்போஸ்தல நடபடிகளில் வாசிக் கிறோம் (அப்.20:17-38). மிலேத்து இருந்த இடத்தில் தற்போது பாலட் என்ற கிராமம் இருக்கிறது. பெர்கே

பம்பிலியாவின் தலைநகராக விளங்கிற்று பெர்கே. தற்போது இதன் பெயர் முர்டானா. அத்தலியாவிற்கு கிழக்கே சுமார் 18 கி.மீ. தூரத்தில், கெஸ்ட்ரோஸ் என்ற ஆற்றுக்கரையில் அமைந்திருந்தது. பவுலும் பர்ன பாவும் சிறிய ஆசியாவில் முதலாவது சந்தித்த ஊர் பெர்கே (அப்.13:13). இங்கிருந்து யோவான் மாற்கு எருசலேமிற்கு திரும்பிப் போனான். பவுலும் பர்ன பாவும் தெர்பையிலிருந்து இங்கு வந்து பிரசங்கித் தார்கள் (அப்.14:24,25).

பெர்கமு

தற்போது இதன் பெயர் பெர்கமா. சிமிர்னாவுக்கு வடக்கே சுமார் 110 கி.மீ. தூரத்தில் உள்நாட்டில் இருக் கிறது. இந்த பட்டணத்தின் பொது மண்டபம் சுமார் 1100 அடி உயரத்தில் மலையின் மேலிருக்கிறது. ரோமர் ஆட்சி செய்தபோது ஆசியா பகுதிக்கு பெர்கமு தலைநகராயிருந்தது. இந்த பட்டணத்தில் சாத்தானின் சிங்காசனம் இருந்ததாக வெளி.2:13ல் பார்க்கிறோம். பெர்கமு விக்கிரக வணக்கத்திற்கு மையமாக இருந்தது. ஜீயஸ் என்ற கடவுளுக்கு கட்டப் பட்ட பிரமாண்டமான பலிபீடம் இங்கே இருந்தது. அதன் நீளம் 125 அடி, அகலம் 115 அடி. இது 4C அடி உயர தூண்களில் நிறுத்தப்பட்டிருந்தது. பண்டை கால உலக அதிசயங்களில் ஒன்றாக இது விளங்கிற்று.

ஜெர்மனியிலுள்ள பெர்லின் அருங்காட்சி யகத்தை சேர்ந்தவர்கள் இங்கு வந்து பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து இந்த உலக புகழ்பெற்ற ஜீயஸ் தேவதையின் பலிபீடத்தை கண்டுபிடித்து அதை ஜெர்மனிக்கே கொண்டுபோய்விட்டனர். சுமார் இரண்டு இலட்சம் நூல்களிலிருந்த ஒரு பிரமாண்டமான இங்கே இருந்தது. அந்நாட்களின் நூலகமும் இங்கே வழக்கப்படி பெரும்பான்மையான புத்தகங்கள் தோல் சுருள்களில் எழுதப்பட்டிருந்தன. மார்க் அந்தோணி என்பவன் இந்த நூல்களை இங்கிருந்து எடுத்து கிளியோபாட்ராவுக்கு அன்பளிப்பாக கொடுத்ததாக கூறப்படுகிறது. பெர்கமுவில் அரண்மனை இருந்தது. ஏராளமான விக்கிரக கோவில்கள் இருந்தன. இங்கே தான் ரோம அரசாங்கத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு முதன்முதலாக அந்திப்பா என்பவன் இரத்த சாட்சி யாக மரித்தான். ரோம பேரரசனுக்கு சிலை வைத்து வணங்கினார்கள். இந்த ஊர்மக்கள். ‘அஸ்குலபியஸ்’ என்ற சிலையையும் வணங்கினர். இது ‘மருந்துகளின் கடவுள்’ என நம்பினர்.

பிலதெல்பியா

துருக்கியிலிருந்த அடுத்த முக்கிய ஊர் பிலதெல் பியா. இதன் நவீன காலப்பெயர் அலஷேகிர். சர்தை யிலிருந்து தென்கிழக்கில் சுமார் 40 கி.மீ. தூரத்தில் ஒரு பள்ளத்தாக்கில் இருந்தது இந்த ஊர். ‘பிலதெல் பியா’ என்றால் ‘சகோதர சிநேகம்’ என்று பொருள். கடல் மட்டத்திலிருந்து சுமார் 650 அடி உயரத்தில் இந்த பட்டணம் உயரிய மேட்டில் கட்டப்பட்டிருந்தது. பல ரோம பேரரசர்களின் கோவில்கள் இங்கே கட்டப் பட்டிருந்தன. மற்ற இடங்களைவிட கிறிஸ்தவம் இந்த பட்டணத்தில் அதிகமாக வேரூன்றியிருந்தது. இங்கே இருந்த கிறிஸ்தவர்களில் அநேகர் இரத்த சாட்சியாய் மரித்தனர். பழைய பிலதெல்பியா இன்று இல்லை.

சர்தை

சிமிர்னாவுக்கு வடகிழக்கில் சுமார் 95 கி.மீ. தூரத்திலிருந்து சார்ட் என்ற கிராமம். இதன் அருகில் தான் சர்தை என்ற பட்டணமிருந்தது. தியத்தீராவிற்கு தெற்கே சுமார் 45 கி.மீ. தூரத்திலிருந்தது. இங்கே அரண்மனை இருந்தது. இதில் லிதியாவின் அரசன் வாழ்ந்து வந்தான். முதன்முதலாக நாணயத்தை உருவாக்கினவன் இவன் என்று கூறப்படுகிறது. தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் இங்கு ஆராய்ந்து ஆர்ட்டிமிஸ் தேவதையின் கோவிலை கண்டுபிடித்த னர். இந்த கோவில் 300 அடி நீளம், 148 அடி அகல மாயிருந்தது.

செலுக்கியா

சிரியாவிலிருந்த அந்தியோகியாவிற்கு துறைமுகப் பட்டணமாக விளங்கிற்று. மத்திய தரைக்கடலின் கிழக்கு துறைமுகப் பட்டணங்களில் சிறந்த பட்டண மாக விளங்கிற்று. முதல் மிஷனரி பயணத்தில் பவுலும் பர்னபாவும் இந்த பட்டணத்தை கடந்துசென்றனர் (அப்.14:26). இதன் நவீன காலப்பெயர் சமன்டாக்.

சிமிர்னா

இதன் நவீன காலப்பெயர் இஸ்மிர். எபேசு பட்ட ணத்திலிருந்து வடக்கே சுமார் 65 கி.மீ. தூரத்தில் இஸ்மிர் வளைகுடாவிலிருந்தது. சின்ன ஆசியாவின் முக்கிய துறைமுகப்பட்டணமாக அகாயா கடல் ஓரத்தில் அமைந்திருந்தது. ஆசியாவின் அலங்காரம், மகுடம், அழகிய பட்டணம் என்று பல்வேறு விதங் களில் புகழப்பட்டது.

சிமிர்னா சபையின் புகழ்வாய்ந்த பிஷப்பாக இருந்தவர் போலிகார்ப். இவர் கி.பி.155ல் தமது 86வது வயதில் இங்கே இரத்த சாட்சியாக மரித்தார். ரோமர் ஆட்சிக் காலத்திலிருந்த சந்தைவெளியின் சிதைவுகளை இப்போதும் காணலாம். மகா அலெக் ஸாண்டர் காலத்தில் பாகோஸ் மலையில் சுமார் 525 அடி உயரத்தில் கட்டப்பட்ட அழகிய மாளிகை இப்போதும் இருக்கின்றது.

தர்சு

சிறிய ஆசியாவின் தென் பகுதியான சிலிசியா விற்கு தலைநகராக தர்சு விளங்கிற்று. சிட்னஸ் என்ற நதியின் இரு கரையிலும் கட்டப்பட்டிருந்தது. மத்திய தரைக்கடலிலிருந்து 16 கி.மீ. தூரத்திலிருந்தது. தர்சு விலிருந்து 50 கி.மீ. தூரத்தில் வடக்கே தாரஸ் என்ற மலை இருக்கிறது. தர்சு அந்நாட்களில் துறைமுகப் பட்டணமாக விளங்கிற்று. அதனால் இங்கே வியாபாரம் சிறப்பாய் நடந்தது. ஐபிராத்து பள்ளத்தாக்கையும் சிறிய ஆசியாவையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை தர்சு வழியாக சென்றது.

புதிய ஏற்பாட்டுக் காலத்தில் மூன்று முக்கிய பல்கலைக்கழகங்கள் இருந்தன. அவை (அத்தேனே ) ஏதன்ஸ், அலக்ஸாண்டிரியா, தர்சு ஆகிய பட்டணங் களிலிருந்தன. இவைகளில் தர்சுவிலிருந்த பல்கலைக் கழகம் மற்றவைகளைவிட கல்வியில் சிறந்து விளங் கிற்று என்று கூறப்படுகிறது.

அந்தோணி, கிளியோபாட்ராவை கி.மு.38ல் சந்தித்தது இந்த தர்சு பட்டணத்தில் என்பது குறிப்பி டத்தக்கது. அப்போஸ்தலனாகிய பவுல் பிறந்த ஊரும் இதுவே (அப்.22:3; 21:39). பவுல் முதலாவது எருச் லேமுக்கு போய், பின்பு இயேசுவை ஏற்றுக்கொண்ட பின் தர்சுவிற்கு திரும்பி வந்து பல ஆண்டுகள் இங்கேயே தங்கியிருந்ததாக பார்க்கிறோம் (அப். 9:30).

சிரியாவிலிருந்து அந்தியோகியா சபையின் அசாதாரண வளர்ச்சியை கண்டு, பர்னபா பவுலைத் தேடி தர்சுவுக்குப் போய் அவனைக் கூட்டிக்கொண்டு வந்தார் (அப்.11:25). இந்த பட்டணம் வழியாக பல தடவை பவுல் பயணம் செய்தார் (அப்.15:41; 12:23).

தியத்தீரா

இதன் தற்காலப் பெயர் அக்கிசார். பெர்கமு பட்டணத்திலிருந்து சர்தைக்கு போகும் வழியில் தியத் தீரா இருந்தது. தியத்தீரா பெர்கமுவிலிருந்து தென் கிழக்கில் சுமார் 70 கி.மீ. தூரத்திலிருக்கிறது. சாயத் தொழில் இங்கே சிறப்பாய் நடைபெற்றது. இரத்தாம் பரங்களில் சாயம்பூசும் தொழில் இந்த ஊரின் சிறப்பு.

பிலிப்பு பட்டணத்தில், முதன்முதலாக பவுலின் ஊழியத்தில் இயேசுவை ஏற்றுக்கொண்ட பெண் லீதியாள் என்பது நமக்குத் தெரியும், அவள் தியத்தீரா ஊரைச் சேர்ந்தவள் (அப்.16:14). குறி சொல்லுகிற ஆவியையுடைய ஒரு கள்ளத் தீர்க்கதரிசி இந்த ஊர் சபையிலிருந்ததாக வெளிப்படுத்தல் 2:18 வசனங்களில் வாசிக்கின்றோம்.

துரோவா

எஸ்கிஸ்தான்புல் என்பது இதன் நவீன காலப் பெயர். இதுவும் ஒரு துறைமுகப்பட்டணம். இந்த ஊரிலிருக்கும்போதுதான், பவுல் மக்கதோனியா நாட் டான் ஒருவன் வந்து தங்கள் ஊருக்கு வந்து நற்செய்தி அறிவிக்கும்படி வேண்டிக்கொண்டதாக தரிசனம் கண்டார். பவுல் மறுபடியும் துரோவாவிற்கு வந்து அங்கிருந்த சபையை ஒருவாரம் சந்தித்தாக காண் கிறோம்.

இந்த ஊரில் பவுல் நடு இரவிற்கு பின்பும் பிரசங் கித்துக்கொண்டிருந்தபோது, மாடியிலிருந்த ஜன்னல் ஓரத்திலிருந்து பிரசங்கம் கேட்டுக்கொண்டிருந்தவ ஐத்திகு என்பவன் தூங்கி கீழே விழுந்து மரித்தான். பவுல் அவனை மறுபடியும் உயிருடன் எழுப்பினான் (அப்.20:6-12; 2 கொரி.2:12; 2 தீமோ. 4:13).

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *