வேதாகம குடும்பம்: II . நோவா – ஷைலா

 

வேதாகம குடும்பம்: II . நோவா – ஷைலா

நோவாவின் மனைவியின் பெயர் வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. சமீபத்தில் நோவா மற்றும் அவரது மனைவியின் கல்லறைகள் கண்டுபிடிக்கப் பட்டன. அதில் நோவாவின் மனைவியின் பெயர் ஷைலா என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதியாகமம் 6 முதல் 9 அதிகாரங்களில் நோவாவின் குடும்பத் தைப் பற்றியும், பூமி மீதெங்கும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தைப் பற்றியும் பார்க்கிறோம்.

நோவாவைப் பற்றி வேதம் கூறுவதென்ன? 

நியாயப்பிரமாணம் கொடுக்கப்படாத காலத் தில் வாழ்ந்தவர் நோவா. தன் காலத்தில் இருந்தவர் களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தார் (ஆதி.6:9). முழு உலகமும் கெட்டுப் போயிருந்தது. மனிதனை உண்டாக்கினதற்காக தேவன் வேதனைப்பட்டார். மிருகங்கள் பறவைகளை உண்டாக்கினதற் காக அவர் வருத்தப்படவில்லை. தமது சாயலில் படைத்த மனிதனை நினைத்து வேதனைப்பட்டார். மனுக்குலத்தை அழிக்க திட்டமிட்டார். அந்த அள விற்கு பூமி முழுவதும் சீர்கேடு அடைந்திருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நோவாவின் குடும்பம் கர்த்தருக்குப் பிரியமாக வாழ முடிந்தது.

நோவா தேவனுடைய கிருபை பெற்றார் நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது (ஆதி.6:8)

முழு உலகிலும் ஒரு குடும்பம் மட்டுமே கர்த்த ருக்குப் பிரியமாக நடந்தாலும் அந்தக் குடும்பத் தைக் கர்த்தர் அழிக்க மாட்டார் என்பதற்கு நோவாவின் குடும்பம் ஓர் நல்ல உதாரணம்.

நோவா தேவனோடு நடந்தார் (ஆதி.6:9) உலகம் பாவத்தில் மூழ்கிக் கிடந்தது. மக்கள் சீர்கெட்டவர்களாக இருந்தனர். ஆனாலும் நோவா தேவனோடு நடந்தார். தேவனோடு நெருங்கிய ஐக்கியம் கொண்டிருந்தார். கர்த்தருடைய ஆலோ சனைகளைக் கேட்டு அதன்படி செய்ய தன்னை ஆயத்தம் செய்திருந்தார்.

நோவா தேவனுடைய கட்டளைப்படி பேழை யை கட்டினார் வரப்போகும் வெள்ளப் பெருக்கத்தினால் ஏற்படும் அழிவினின்று பாதுகாக்கப்பட பேழை யைக் கட்டும்படி தேவன் கட்டளையிட்டார். அது வரையிலும் அப்படிப்பட்ட ஒரு வெள்ளப் பெருக் கத்தை நோவா பார்த்திராவிட்டாலும், கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து பேழையைக் கட்டினார்.

விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக் குறித்துத் தேவ எச்சரிப்புப் பெற்று பயபக்தியுள்ளவனாகி…. பேழையை உண்டுபண்ணினான் (எபி.11:7).

நோவா முழு உலகத்திற்கும் நீதியை பிரசங் கித்தான்

பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல் நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா (2 பேதுரு 2:15).

இன்றுள்ள நவீனக் கருவிகள் எதுவும் இல்லாத காலத்திலே முழு உலகத்திற்கும் வரப்போகிற அழிவினின்று தப்பித்துக்கொள்ள ஆயத்தமாகும் படி மக்களுக்கு எச்சரிப்பின் செய்தியைக் கொ டுத்த நோவாவின் பணி ஆச்சரியமானது.

நோவா தன் குடும்பத்தை இரட்சிப்பதற்கு பேழையைச் செய்தான்

எச்சரிப்பின் செய்தியை முழு உலகமும் அலட்சியப்படுத்தினாலும் நோவாவின் குடும்பம் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. நோவா தன் குடும்பத்தை, கர்த்தருக்குப் பிரியமான குடும்ப மாயிருக்க கவனம் செலுத்தினார்.

நோவாவின் மனைவியின் (ஷைலா) பங்கு

இந்த தாயாரின் செயல்பாடுகள் வெளிப்படை யாக சொல்லப்படாவிட்டாலும் மறக்க இயலாத பல அரிய காரியங்களை சாதித்தார்கள் என்பது நிச்சயம்.

1.சேம், காம், யாப்பேத் ஆகிய பிள்ளைகளைப் பெற்றார்கள்

நோவா ஐந்நூறு வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றான் (ஆதி.5:32, 6:10).

950 வருடம் வாழ்ந்த நோவாவிற்கு 500 வயது நடுத்தர வயதாக இருந்திருக்க வேண்டும் (ஆதி. 9:29). மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்த தாய் ஷைலா இந்த வயதில் பிள்ளை வேண்டாம் என்று கணவனுடன் இல்லற வாழ்க்கை யில் ஈடுபட்டதால்தான் இது சாத்தியமாயிற்று.

  1. பிள்ளைகளை பரிசுத்தமாக வளர்த்தார்கள் முழு உலகமும் கெட்டுப் போயிருந்த அந்த நாட்களில் இந்த மூன்று பிள்ளைகளும் எளிதில் கெட்டுவிடும் ஆபத்துகள் இருந்தது. தங்கள் வீட்டைவிட்டு வெளியே போனால் ஒழுக்கமுள்ள ஒருவரையும் பார்க்க இயலாது. அப்படிப்பட்ட பயங்கர சூழ்நிலையிலும் பிள்ளைகளை பரிசுத்த மாக வளர்த்த பெருமை இந்தத் தாயாரைச் சாரும் என்று நிச்சயம் கூறலாம்.

3.கணவன் தன் மகத்தான பணிகளைச் செய்ய பெரும் உதவி செய்த தாய்

முழு உலகத்திற்குத் தனி மனிதனாகச் சென்று பிரசங்கிக்க வேண்டிய மிகப்பெரிய ஊழியமும், பேழையைக் கட்ட வேண்டிய பிரமாண்டமான பணியும் நோவாவிற்கு இருந்தது. எனவே பிள்ளை களை கர்த்தருக்குப் பிரியமானவர்களாக உருவாக் கியது இந்த தாயே.

4.தன் கணவன் சோர்ந்து போகாமலிருக்க உற்சாகப் படுத்திய மனைவி

நோவா உலகமெங்கும் சென்று பிரசங்கித்த போதிலும் ஒருவரும் இவருடைய செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. சோர்வோடு வீட்டிற்குத் திரும்பும்போதெல்லாம் அவருடைய மனைவி அவரை உற்சாகப்படுத்தியிருக்க வேண்டும்.

பேழை கட்டுவதைப் பார்த்து மக்கள் பரிகாசம் செய்திருப்பார்கள். அதையெல்லாம் தாங்கிக் கொள்ளக்கூடிய மனிதனாக இருக்க அவருடைய மனைவி அவருக்கு ஆறுதலாக இருந்திருக்க வேண்டும்.

இந்த செய்தியை வாசிக்கும் சகோதர சகோதரி களே! உங்கள் குடும்ப நிலை என்ன? உங்கள் பிள்ளைகள் நிலை என்ன? உங்கள் பிள்ளைகள் மற்றவர்களுடன் சேர்ந்து கெட்டுப் போயிருக்கிறார்களா? அல்லது உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து பழகின பிள்ளைகள் கர்த்தருக்குப் பிரிய மான பிள்ளைகளாக மாறியிருக்கிறார்களா? மற்ற வர்கள்மேல் பழிபோட்டு நமது பிள்ளைகளை பாதுகாக்க முயற்சிக்கிறீர்களா?

அன்றைய சூழ்நிலையில் நோவாவின் பிள்ளை கள் கர்த்தருக்குப் பயந்து வாழ முடிந்ததென்றால் நிச்சயமாக எந்த சூழ்நிலையிலும் உங்கள் பிள்ளைகள் பரிசுத்தமாக வாழ முடியும். நீங்கள் எப்படிப்பட்ட அஸ்திபாரம் உங்கள் பிள்ளை களுக்குப் போட்டிருக்கின்றீர்கள் என்பதைப் பொ றுத்து இது அமையும்.

சகோதரரே!

நோவாவைப்போல முழு உலகமும் சென்று ஊழியம் செய்தாலும், பேழை கட்டும் பணியைப் போன்ற பிரமாண்டமான தொழில் செய்தாலும் உங்கள் குடும்பத்தைக் கட்டி எழுப்பும் குடும்பத் தலைவனாக இருக்கின்றீர்களா? உங்கள் குடும்பம் சரியில்லை என்றால், ஊழியம் செய்து என்ன பயன்? என்ன வேலை செய்து சம்பாதித்து என்ன லாபம்? மனைவியும் பிள்ளைகளும் சரியில்லை யென்றால் அதற்கு சாக்குப்போக்குச் சொல்ல முயற்சிக்க வேண்டாம். குடும்பத்தைப் பாதுகாக்க பேழை கட்டுவதில் கவனம் செலுத்துங்கள்.

சகோதரரிகளே!

பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாய்மார்களே, உங்கள் பிள்ளைகளைக் கர்த்தருக்குப் பிரியமாக வளர்த்திருக்கின்றீர்களா? உங்கள் பிள்ளைகள் என்ன படித்திருக்கிறார்கள், எவ்வளவு சம்பாதித் திருக்கின்றார்கள் என்பதல்ல முக்கியம். உள்நாடா? வெளிநாடா? என்பதல்ல கேள்வி. இரட்சிக்கப்பட்டு கர்த்தருக்குப் பிரியமான பரிசுத்த வாழ்க்கை வாழ்கிறார்களா? உங்கள் கணவர் சோர்ந்து வரும் போது தைரியமூட்டுகிறீர்களா? வேதனையுடன் வரும்போது ஆறுதலான வார்த்தைகளைப் பேசு கிறீர்களா?

நோவாவின் மருமக்கள் அந்த பொல்லாத உலகத்தில் நோவாவின் மகன்களுக்கு ஏற்ற பெண்ணை எப்படி கண்டுபிடித் தார்கள் என்பது ஆச்சரியம். ஆனாலும் நோவா வின் மருமக்களும் பேழைக்குள் பிரவேசிக்கும் தகுதி பெற்றிருந்தார்கள்.

மாமனார், மாமியார்களே!

உங்கள் மருமக்களை எப்படித் தேர்வு செய் தீர்கள்? அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையைக் கண்டு தேர்வு செய்தீர்களா? அல்லது எவ்வளவு பணம் கிடைக்கும் என்று பணத்தை முன்வைத்து தெரிந்தெடுத்தீர்களா? இன்று உங்கள் குடும்பம் ஆவிக்குரிய நிலையில் எப்படி இருக்கிறது?

நோவா குடும்பத்தினர் முழுவதும் பேழைக்குள் பாதுகாக்கப்பட்டனர் கர்த்தர் நோவாவை நோக்கி, நீயும் உன் வீட்டார்

அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள், இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமா னாகக் கண்டேன் (ஆதி.7:1).

நீயும் உன்னோடகூட உன் மனைவியும் உன் குமாரரும் உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள் (ஆதி.8:16).

பின்பு தேவன் நோவாவையும் அவன் குமாரரை யும் ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்றார் (ஆதி.9:1).

இதை வாசிக்கும் நண்பர்களே!

உங்கள் குடும்பம் முழுவதும் கிறிஸ்துவாகிய பேழைக்குள் பிரவேசித்து விட்டீர்களா? இது ஒன்றே நிலைத்து நிற்கும் ஆசீர்வாதம். பேழைக்கு வெளியே நிற்கும் கணவனை, மனைவியை, பிள்ளைகளை உள்ளே கொண்டுவர ஆவன செய் யுங்கள். உலகம் அழிவிற்கு என்று நியமிக்கப்பட் டுள்ளது. கிறிஸ்துவுக்கு வெளியே நிற்கும் குடும் பங்கள் நித்திய ஆக்கினை அடைவார்கள். உங்கள் குடும்பத்திலுள்ள எந்த நபரும் கிறிஸ்துவுக்குள் வரா மலிருந்தால், உங்கள் பிரதான வேலை அவர் களை இரட்சிப்பிற்குள் கொண்டு வருவதாயிருக் கட்டும்.

நோவா ஷைலா குடும்ப வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளும் காரியங்கள்:

  •  நம் குடும்பம் தேவ கிருபை பெற்றதாக இருக்க வேண்டும்.
  • குடும்பத் தலைவன் தேவனோடு நடக்கும் பரிசுத்தவானாக இருக்க வேண்டும்.
  • முழு உலகமும் கெட்டுப்போனாலும் நம் குடும்பம் பரிசுத்தமாய் வாழ வழிசெய்ய வேண்டும்.
  • முழுக் குடும்பமும் சபையாகிய பேழைக்குள் இருக்க வேண்டும்.
  • தேவ செய்தியை பிறருக்குக் கொடுக்கும் குடும்பமாயிருக்க வேண்டும். 
  • யாரும் கீழ்ப்படியாவிட்டாலும் சோர்வில்லாமல் ஊழியம் செய்ய வேண்டும்.
  • பிள்ளைகளை கர்த்தருக்குப் பிரியமாய் வளர்க்க வேண்டும்.
  • தன் கணவனுக்கு தைரியமூட்டின ஷைலா.
  • கர்த்தருக்குப் பிரியமான மருக்களை கண்டு பிடிக்க வேண்டும்.
  • முழுக்குடும்பமும் அழிவினின்று பாதுகாக்கப் பட வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *