வேதாகம குடும்பம்: IV . ஈசாக்கு – ரெபெக்காள்

 

வேதாகம குடும்பம்: IV . ஈசாக்கு – ரெபெக்காள்

பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களின் குடும் பங்களில் முன்னணியில் நிற்பது ஈசாக்கு குடும்பம். ஆபிரகாமுக்கு 100 வயதானபோது ஈசாக்கு பிறந்தான். எனவே மிகுந்த செல்லமாக வளர்க்கப் பட்டிருப்பான். ஒரு பெரிய செல்வந்தர் குடும் பத்தில் பிறந்தவனாக இருந்தபோதிலும் பரிசுத்த வானாக திகழ்ந்தான்.

தன்னையே பலியிடப் போகிறார் தகப்பன் என்று அறிந்தபின்பும், பலிபீடத்தில் படுத்திருந்தது ஈசாக்கின் அர்ப்பணிப்பை காண்பிக்கிறது. திருமண வாழ்விற்கு முன்பே நல்ல பண்புகளுடன் வளர்க் கப்பட்டவர்கள் திருமண வாழ்வில் மகிழ்ச்சியுடன் நிறைவுடன் இருப்பார்கள்.

ஈசாக்கிடம் காணப்பட்ட நல்ல பண்புகள்:

  1. ஜெபிக்கிற வாலிபனாக இருந்தான்

கோடிக்கணக்கான செல்வத்திற்கு ஒரே வாரி சாக வளர்ந்து வந்தபோதிலும் ஜெபிக்கிற வாலி பனாக இருந்தான்.

ஈசாக்கு சாயங்கால வேளையிலே தியானம் பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63).

உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள் ஏராளம் இருந்தாலும் தேவனுடைய ஒத்தாசை தேவை என்று உணருகின்ற கணவன்மார் நிச்சயம் ஊக்க மாய் ஜெபிக்கிறவர்களாயிருப்பார்கள். இதை வாசிக்கும் சகோதரர்களே! உங்கள் ஜெப வாழ்க்கை எப்படி இருக்கிறது? ஏதாவது தேவை இருந்தால் மட்டுமே கர்த்தரைத் தேடுகிறவர்களாக இருக்கின் றீர்களா? வியாதி வரும்போது மட்டுமே டாக்டரைத் தேடுகிற நிலையில் உங்கள் ஜெபம் இருக்கிறதா?

தன் வாழ்க்கைத் துணையைத் தெரிந்துகொள்ள தேவனை முற்றிலும் சார்ந்திருந்தான். அந்த விஷயத்தில் பக்தியுள்ள தன் தகப்பன் ஆபிரகா மையும் தன் வீட்டு விசாரணைக்காரனாக இருந்த எலியேசரையும் சார்ந்திருந்தான். தன் கண்ணுக்குப் பிரியமானவளாக இருக்க வேண்டும் என்று பெண் பார்க்க ஊர் ஊராய் சுற்றி அலையவில்லை. கர்த்தர் ஏற்றத் துணையைத் தருவார் என்று முழு நிச்சய மாய் நம்பி ஜெபித்தான்.

  1. ஈசாக்கு தன் மனைவிக்கு ஏற்ற கணவனாக நடந்துகொண்டான். 

ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளுடன் எப்போதும் ஜாலியாக இருந்தான். ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக் கொண்டிருந்தான் (ஆதி.26:8).

ஜெப வீரனாக இருந்தவன் மனைவியை எப்போதும் சந்தோஷப்படுத்துகிறவனாகவும் இருந் தான். ஜெப வீரர்கள் என்று சொல்லுகிற சில ஆண்கள் வீட்டில் மனைவியுடன் தாராளமாக சிரித்துப்பேச மாட்டார்கள். மௌனச்சாமிகள்போல நடந்து கொள்ளுவார்கள்.

ஈசாக்கு அவளை (ரெபெக்காளை) மனைவியாக்கிக் கொண்டு அவளை நேசித்தான் (ஆதி.24:67).

தன் மனைவியினிடத்தில் உண்மையான அன்பு கொண்டு அவளை பட்சமாய் நடத்தின கணவ னாக இருந்தான்.

  1. ஈசாக்கு கடினமாய் உழைத்து தன் குடும்பத் தை நடத்தினான்

ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான், கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான் (ஆதி.26:12).

ஈசாக்கு சோம்பேறியல்ல. கர்த்தருடைய ஆசீர்வாதம் அவன் கையிட்டு செய்த எல்லா வேலையிலும்கூட இருந்ததால் 100 மடங்கு ஆசீர்வதிக்கப்பட்டான்.

குடும்பத் தலைவர்களே! நீங்கள் கடினமாய் உழைக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். தேவன் உங்களை ஆசீர்வதிக்கக்கூடிய விதத்தில் அவரை அனுதினமும் தேடி அவருக்கு உண்மை யுள்ளவர்களாகவும் நடந்துகொள்ள வேண்டும்.

ஈசாக்கு பலிபீடம் கட்டி கர்த்தரைத் தொழுது கொண்டான் (ஆதி.21:25).

கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி பல ஆசீர் வாதங்களை அவனுக்கு வாக்குப் பண்ணினார் (ஆதி.26:2-5,24,25). கர்த்தர் ஈசாக்குடன் இருப்பதை அவனைச் சுற்றியிருந்தவர்கள் கண்டு அவனுடன் சமாதான உடன்படிக்கை பண்ண வந்தார்கள் (ஆதி. 26:28,29).

ஈசாக்கிடம் காணப்பட்ட சில குறைகள் 

தன் பிள்ளைகளிடம் சற்று பாரபட்சம் காட்டினான். யாக்கோபைவிட ஏசாவிடம் அதிக பட்சமா யிருந்தான். அதற்கு சொல்லப்பட்ட காரணம் வேடிக்கையானது. ஏசா வேட்டையில் வல்லவன். சமையலிலும் கெட்டிக்காரன். தான் வேட்டையாடி யதை ருசியாக சமைத்து தகப்பனுக்குக் கொடுப் பான். அந்த ருசியான சாப்பட்டினிமித்தம் ஏசாவை அதிகம் நேசித்தான் (ஆதி.25:27,28). ஈசாக்கு சாப்பாட்டுப் பிரியன் என்று தெரிகிறது.

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பாரபட்சமாய் நடந்துகொள்ளக்கூடாது. ஒரு பிள்ளையைவிட மற்றப் பிள்ளையிடத்தில் மேலான சில காரியங் களைக் கண்டு அவர்கள்மேல் சற்று அதிக பாசம் கொள்ளும் சந்தர்ப்பங்கள் வரலாம். ஆனாலும் இது எல்லாப் பிள்ளைகளுக்கும் தெரியக்கூடிய அளவில் நடந்துகொள்வது நல்லதல்ல. பிள்ளை களுக்குள் இதனால் பிரச்சனைகள் உருவாக வழி ஏற்படும்.

தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனப் பயந்து ரெபெக்காளை தன் மனைவி என்று சொல் லாமல் சகோதரி என்று பொய் சொன்னான். மனைவி என்று சொன்னால் தன்னைக் கொன்று விட்டு அவளை தூக்கிக்கொண்டு போய்விடு வார்கள் என்று எண்ணினான். சகோதரி என்று சொன்னால் இவனைக் கொல்லாமல் அவளை கூட்டிக்கொண்டு போய் விடுவார்கள்.

தன் மனைவிக்கு வரும் பிரச்சனையைப் பற்றி கவலைப்படாமல் தன் உயிரைப்பற்றி அதிக அக்கரை காட்டினது சரியான செயலல்ல. நல்ல மனிதர்களிடமும் விரும்பத்தகாத காரியங்கள் சில இருக்கலாம் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

ரெபெக்காளிடம் காணப்பட்ட நல்ல பண்புகள்: 

மிக சிறந்த பெண் ரெபெக்காள். வாலிப வயதிலேயே சிறந்த நற்குணங்கள் பல அவளிடம் இருந் தன. தோற்றத்தில் மிக அழகானவளாக இருந்தாள். அழகான பெண்கள் எல்லாம் குணத்தில் சிறந்தவர் களல்ல. இவள் அழகாயிருந்தாள், பண்பானவளாக இருந்தாள்.

குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தா என்ற முதிய வருக்கு தண்ணீர் கொடுத்ததோடு உமது ஒட்டகங் களுக்கும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் தண்ணீர் கொடுப்பேன் என்று கூறினாள். குழா யைத் திறந்துவிட்டு தண்ணீர் கொடுக்கும் கால மல்ல அது. தண்ணீர் துரவிற்குள் இறங்கி ஏற வேண்டி இருந்தது. 10 ஒட்டகங்களுக்கும் தண்ணீர் ஊற்றுவது பெரிய வேலை.

இதை வாசிக்கும் சகோதரிகளே! அந்நியரை உபசரிக்கும் பண்பு, கடின உழைப்பு அவளிடம் இருந்தது. அந்நியரை உபசரிப்பதில் எப்படி இருக் கின்றீர்கள்? குடும்பத்தாரையும் நண்பர்களையும் உபசரிப்பதிலே சலிப்படைகிறீர்களா? கடினமாய் உழைக்கிறீர்களா?

ரெபெக்காளுக்கு சில மணி நேரத்தில் திருமணம் நிச்சயமாகி விட்டது. மணமகனை இன்னும் நேரில் பார்க்கவில்லை. யாருக்கு தண்ணீர் கொடுத்தாளோ அவருடன் இப்போது புறப்பட வேண்டும். இவரு டன் போகிறாயா என்று அவளிடம் கேட்டபோது போகிறேன் என்று பதிலளித்தாள் (ஆதி.24:58).

ரெபெக்காளின் விசுவாசம், துணிவு, பாராட்டுக் குரியது. முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் நீண்ட பயணத்திற்கு ஆயத்தமாகி விட்டாள். தன் உள்ளத்தில் இது கர்த்தரின் வழிநடத்துதல் என்று திட்டமாக உணர்ந்திருந்தாள்.

ஈசாக்கு தூரத்தில் நடந்து வருவதைப் பார்த்த போது ஒட்டகத்தைவிட்டு இறங்கினாள். இது அவள் ஈசாக்குமீது கொண்டிருந்த மரியாதையைக் காட்டுகிறது (ஆதி.24:65). ரெபெக்காளை திருமணம் செய்த உடன் ஈசாக்கு தன் தாய் இறந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான் (ஆதி.24:67). ரெபெக் காள் தன் கணவனின் துயரத்தை துடைத்து ஆறுதலளிக்கும் மனைவியாயிருந்தாள். கனிவான வார்த்தைகளாலும், அன்பின் செயல்களாலும், கணவனின் துக்கத்தை நீக்கிவிட்டாள். நற்பண்புள்ள எந்த மனைவியும் இதையே செய்வாள்.

ரெபெக்காளிடம் காணப்பட்ட சில குறைகள்: 

ஏசாவைவிட யாக்கோபை அதிகம் நேசித் தாள். இந்த பாசத்தால் யாக்கோபு ஈசாக்கை ஏமாற்றி ஆசீர்வாதத்தைப் பெற வழியும் சொல் லிக் கொடுத்தாள். ஈசாக்கு வேட்டைக்குச் சென்று மிருகங்களை அடித்து சமையல்பண்ணும் முன்பாக, வீட்டிலிருந்த ஆட்டை அடித்து சமையல் பண்ணி இது வேட்டையாடினது என்றும், நான் ஏசா என்றும், யாக்கோபு பொய் சொல்ல ஆலோசனை கூறினாள். தன் கணவனை ஏமாற்ற வழி முறை களை சொல்லிக் கொடுத்தாள்.

யாக்கோபு தன் தகப்பனுடைய ஆசீர்வாதத் தைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் செய்த தவறுகள் இவை. யாக்கோபு தாயின் சொல் கேட்டு தகப்பனின் ஆசீர்வாதத்தை தவறான வழியில் பெற்றாலும் வீட்டைவிட்டு ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது.

வேதத்தின் மகத்துவத்தில் ஒன்று பரிசுத்தவான் களின் குறைகளையும் மறைக்காமல் வெளிப்படுத் தியது. அவர்களின் நல்ல பண்புகளை எழுதியுள்ள வேளையில் அவர்களிடம் காணப்பட்ட குறைகளை மறைக்க முயற்சிக்கவில்லை.

இதை வாசிக்கும் கணவன்மாரே! சகோதரி களே! உங்களிடம் நல்ல பண்புகள் பல இருக்கின் றன. உங்களிடமுள்ள குறைகளை மறைக்க முயற்சிக் காமல், திருந்த ஆவன செய்யுங்கள்.

ஈசாக்கு – ரெபெக்காள் குடும்பத்திலிருந்து கற்றுக் கொள்ளும் காரியங்கள்:

  • பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த ஒரே மகனாக இருந்தபோதிலும், பரிசுத்தமாய் வாழ்ந்த ஈசாக்கு. 
  • தகப்பன் தன்னைப் பலியிடப்போவதாக அறிந்தும், தன்னை தகப்பனுக்குக் கீழ்ப்படித்திய பண்பு. 
  • வாலிப வயதிலும் தனித்துப்போய் ஜெபித்த ஈசாக்கு.
  • தன் வாழ்க்கைத் துணையை தானே தேட முயற்சி யாமல் தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தது.
  • ஈசாக்கு மனைவியுடன் விளையாடி மகிழ்ச்சி யாயிருந்தது.
  • ஈசாக்கு கடினமாய் உழைத்தான் – கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டான்.
  • பிள்ளைகளிடம் பட்சபாதம் காட்டியது நமக்கு ஓர் எச்சரிப்பு.
  •  குடிக்க தண்ணீர் கேட்டவனுக்கு, அவன் ஒட்ட கங்களுக்கும் தண்ணீர் ஊற்றிய தாராள உள்ளம் கொண்ட ரெபெக்காள்.
  • கர்த்தரின் சித்தம் அறிந்து முன்பின் தெரியாத எலியேசருடன் புறப்பட ஆயத்தமான அவளின் கீழ்ப்படிதல்.
  • வயதான கணவனுடைய பெலவீனத்தைப் பயன்படுத்தி யாக்கோபை ஏசாவாக நடிக்கச் சொன்னது நமக்கு எச்சரிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *