You are currently viewing வேதாகம குடும்பம்: V . யாக்கோபு – ராகேல்

வேதாகம குடும்பம்: V . யாக்கோபு – ராகேல்

 

வேதாகம குடும்பம்: V . யாக்கோபு – ராகேல்

யாக்கோபு என்ற பெயர் பின்பு ‘இஸ்ரவேல்’ என்று மாற்றப்பட்டது. ஆபிரகாமின், ஈசாக்கின் சந்ததியார் இன்று இஸ்ரவேலர் என்றே அழைக் கப்படுகின்றனர். இது யாக்கோபின் சிறப்பு. யாக் கோபு வாலிப வயதில் சில தவறுகளைச் செய் தான். அதனால் பாடுகளையும் அனுபவித்தான்.

பசியுடன் வந்த தன் சகோதரனுக்கு அப்பத் தையும், பயற்றங் கூழையும் கொடுத்து சேஷ்ட புத்திர பாகத்தை அபகரித்தான். மூத்த மகனுக்கு சொத்தில் இரட்டிப்பான பங்கு கொடுக்கப்பட்டு வந்தது. இதற்கு “சேஷ்ட புத்திர பாகம்” (மூத்த மகன் பாகம்) என்று பெயர்.

ஈசாக்கிற்கு இருந்த சொத்துகள் ஏராளம். ஏசா மூத்தவன். எனவே அவனுக்கு இரட்டிப்பான பங்கு உண்டு. அதை ஏமாற்றி வாங்கினான் யாக்கோபு. தகப்பனிடம் ஏசாபோல நடித்து தகப்பனின் ஆசீர் வாதத்தையும் ஏமாற்றி வாங்கிக்கொண்டான்.

எப்படியாவது சம்பாதிக்க வேண்டும். எந்த வழியிலாவது பணத்தை சேகரிக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக இருக்கும் வாலி பர்கள் பிற்காலத்தில் அதற்கான தண்டனையை அனுபவியர்மல் போகமாட்டார்கள்.

யாக்கோபு அனுபவித்த பாடுகள்

1) தன் சகோதரன் தன்னைப் பழிவாங்கி விடுவான் என்று பயந்து பெற்றோரையும் பிறந்த வீட்டை யும் விட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது.

2) மாமன் வீட்டில் மாட்டிக்கொண்டான். அக்கால வழக்கப்படி பெண்ணுக்கு ஏராளமான பரிசு களைக் கொடுத்துத் திருமணம் செய்ய யாக்கோ பிடம் பணமில்லை. எனவே ராகேலுக்காக 7 வருடம் மாமன் வீட்டில் வேலைக்காரனாயிருக்க ஒப்புக்கொண்டான். வேலைக்கார மருமகனுக்கு மரியாதை கிடைக்குமா?

3) ஏழு வருட கடின உழைப்பிற்குப் பின்பு ராகே லுக்குப் பதில் லேயாளைக் கொடுத்து யாக் கோபை ஏமாற்றினான் லாபான். தாய் தகப்பனை ஏமாற்றும் வாலிபரெல்லாம் ஏமாற்றப்படுவது பெண் கொண்ட மாமனார் வீட்டில்தான்.

வாலிபரே! பெற்றோரையும், உடன் பிறந்தவர் களையும் ஏமாற்றி முன்னேற நினைக்கிறீர்களா? தகப்பனை அடிக்கிறவன், மாமனாரால் அடிபடு வான். தாயை அவமதிக்கிறவன், மாமியாரால் அவமதிக்கப்படுவான். இது சாபமல்ல, உண்மை. மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப் பான். யாக்கோபுக்கு லாபான் வஞ்சனை செய்து பத்துமுறை அவன் சம்பளத்தை குறைத்தான் (ஆதி.31:7,41).

யாக்கோபு தேவன்மேல் பற்றுதலான வாலிபன் 

முன்னேறத் துடித்து சில தவறுகளைச் செய்தபோதிலும், அவன் தேவன்மேல் அதிக பற்றுத லாக இருந்தான். கர்த்தர் அவனுக்கு பல முறை தரிசனமானார். யாக்கோபு பிரயாணம் பண்ணி ஓரிடத்தில் படுத்தபோது கர்த்தர் தரிசனமாகி அவனுக்கு பல வாக்குத்தத்தங்களைக் கொடுத் தார். காலையில் யாக்கோபு எழும்பி கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணினான் (ஆதி.28:11-22).

யாக்கோபு ராகேல் திருமணம் 

யாக்கோபு மாமன் வீட்டிற்குப் போகுமுன்பே வழியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ராகேலை சந்தித்தான். ராகேலை நேசித்தான். ஈசாக்கு ரெபெக்காள் திருமணம் பெரியோர்களால் நிச்ச யிக்கப்பட்டது. யாக்கோபு ராகேல் ஒருவரையொ ருவர் நேசித்து திருமணம் செய்து கொண்டனர்.

ராகேலுக்காக லாபானிடம் மொத்தம் 14 வருடம் வேலை செய்தான். அவள் பேரில் இருந்த பிரியத் தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குத் கொஞ்ச நாளாகத் தோன்றினது (ஆதி.29:20).

இந்த அன்பு கடைசிவரை இருந்தது. இடை யில் லேயாள் வந்தாள், பில்காள் வந்தாள், சில்பாள் வந்தாள். கோத்திரப் பிதாக்கள் பிறந்தார்கள். குடும்பம் பெருகிவிட்டது. அக்கால வழக்கப்படி பல திருமணங்களை செய்துகொண்டான். பலதார மணங்களுக்குத் தேவன் காரணரல்ல. ஆதாமுக்கு ஏவாளை மட்டுமே மனைவியாகக் கொடுத்தார். பலதார மணம் பிற்காலத்தில் வந்த பழக்கம்.

யாக்கோபு கடின உழைப்பாளி 

குடும்பம் பெரிதான போதிலும் தன் குடும்பத் தை நடத்த கடின உழைப்பு உழைத்தான். தனக்கு இருந்த மனைவிகளை வேலைக்குப் போகச் சொல்லி குடும்பம் நடத்தவில்லை. அவனே பாடுபட்டான். பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது. நித்திரை என் கண்களுக்குத் தூரமா யிருந்தது. இவ்விதமாய் பாடுபட்டேன் (ஆதி.31:40).

இதுவே யாக்கோபின் சாட்சி. குடும்பத்தின் தேவைகள் பெருகும்போது கடின உழைப்பு உழைத்து குடும்பத்தை நடத்த வேண்டியது கண வனின் கடமை.

யாக்கோபு ஜெப வீரன்

தன் குடும்பத்துடன் யாக்கோபு பிரயாணப் பட்டு வரும்போது யாப்போக்கு நதிக்கரையில் இரவு முழுவதும் போராடி ஜெபித்தான். தேவ ஆசீர்வாதத்தை நாடி ஜெபித்தான். தேவன் அவன் பெயரை இஸ்ரவேல் என்று மாற்றினார். எத்தனா யிருந்த அவன் தேவனுடைய பிரபு என்று உயர்த் தப்பட்டான். இதை உறுதிசெய்து மறுபடியும் தேவன் அவனுக்குத் தரிசனமாகி அவர் பெயரை இஸ்ரவேல் என்று உறுதிப்படுத்தினார் (ஆதி.35:9,10).

ராகேல்: வாலிப வயதில் கடினமாய் உழைத் தாள்

11 வாலிப வயதிலே தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கும் வேலையைச் செய்து வந்தாள் ராகேல் (ஆதி.29:9).

திருமண வயதிற்கு வந்துள்ள பெண்கள் எத் தனைபேர் இன்று இப்படி கடின உழைப்புக்கு ஆயத்தமாயிருக்கிறார்கள்? ராகேல் தகப்பனுக்குக் கீழ்ப்படிகிறவளாக இருந்தாள். ஆடு மேய்க்கும் கடின வேலையை மனமுவந்து செய்து வந்தாள். இது அவள் பிற்கால வாழ்விற்கு மிகவும் உதவி செய்தது.

தன் பரிசுத்தத்தை பாதுகாத்துக் கொண்டாள்: 

யாக்கோபு தன்மேல் உயிரையே வைத்திருந்த போதிலும் ஏழு வருடமும் தவறு செய்யாமல் தன்னை பாதுகாத்துக் கொண்டாள். தன்னை விரும்பும் ஆண் தன் வீட்டிலேயே தங்கி இருந்தபோதிலும் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்தாள்.

ராகேல் நல்ல தாய்

யோசேப்பையும் பென்யமீனையும் பெற்றாள். யோசேப்பு மிக முன்மாதிரியான மகனாக வளர ராகேல் பெரிதும் உதவி செய்திருக்க வேண்டும். பார்வோனுக்கு அடுத்த ஸ்தானத்தில் ஒரு பிரதம மந்திரி நிலைக்கு உயர்த்தப்பட்டான். ஆரம்ப நாட் களில் தாயின் பக்தியுள்ள வாழ்க்கை அவனுக்கு நல்ல வித்திட்டது என்பது கவனத்திற்குரியது.

குடும்பப் பிரச்சனை வந்தபோது கணவ னுக்கு உறுதுணையாய் நின்றாள்

தன் தகப்பன் லாபான் தன் கணவனை சம்ப ளத்தில் வஞ்சிப்பதைப் பார்த்து வேதனைப்பட் டாள். 20 வருடமாய் தகப்பனுடன் இருந்த அவள் தன் கணவன் அங்கிருந்து புறப்படத் திட்டமிட்ட போது அவளும் அவனுடன் புறப்பட ஆயத்தமா னாள். எங்களுடைய அப்பா வீட்டிலேயே இருப் பேன். நீர் வேண்டுமானால் போய்வாரும் என்று சொல்லவில்லை (ஆதி.31:14-16).

ராகேலிடத்தில் காணப்பட்ட சில குறைகள்: 

ராகேல் தனக்குக் குழந்தை பிறக்கவில்லை என்று கண்டபோது கர்த்தரை நோக்கி ஜெபிக்காமல் தன் சகோதரிமேல் பொறாமை கொண்டாள். எனக்குப் பிள்ளை கொடும் இல்லாவிட்டால் சாகி றேன் என்று புருஷனிடம் சண்டையிட்டாள் (ஆதி. 30:1). தகப்பன் வீட்டைவிட்டு புறப்பட்டபோது, தன் தகப்பனுடைய சிலைகளைத் திருடிக் கொண் டாள் (ஆதி.31:19).

திருடினதும் தப்பு. கர்த்தர்மேல் நம்பிக்கை வைக்காமல் சிலையின்மேல் நம்பிக்கை வைத் ததும் தப்பு. தகப்பன் அந்த சிலைகளைத் தேடின போது ஒட்டகச் சேனத்தின்கீழ் மறைத்து வைத்து அதின்மேல் உட்கார்ந்துகொண்டாள். பெண்களுக் சூரிய வழிபாடு எனக்கு உண்டாகி இருக்கிறது. அதினால் எழுந்திருக்கவில்லை என்று தகப்ப னிடம் பொய் சொன்னாள்.

அருமை சகோதரிகளே! தகப்பன் வீட்டுப் பொருளானாலும் அவரிடம் சொல்லாமல் ஒரு பொருளை எடுப்பது திருட்டுதான். அந்த திருட் டை மறைத்து பொய் சொல்வதும் சரியல்ல.

ராகேல் குறுகின காலம் வாழ்ந்து மரித்தாள். அவள் கல்லறையை இன்றும் காணலாம். எருசலே முக்கும் பெத்லகேமுக்கும் இடையில் ராகேலின் கல்லறை இருக்கிறது.

யாக்கோபு ராகேல் குடும்ப வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளும் காரியங்கள்:

  • முன்னேற வேண்டும் என்ற வாஞ்சையுள்ள வனாயிருந்தான் யாக்கோபு.
  •  தன் சகோதரனையும் தன் தகப்பனையும் ஏமாற்றினது நமக்கு எச்சரிப்பு.
  • தகப்பனை, சகோதரனை ஏமாற்றினவன் மாம னால் ஏமாற்றப்பட்டது ஒரு பாடம்.
  •  தன் அன்புக்குரிய ராகேலுக்காக 14 வருடம் வேலை செய்தான்.
  • பகல் இரவு பாராமல் கடினமாய் உழைத்தான்.
  • தேவனோடு பொருத்தனை பண்ணினான் யாக்கோபு.
  • யாக்கோபு நல்ல ஜெப வீரன். தேவனோடு போராடி ஜெபித்தான்.
  • வாலிப வயதில் ஆடு மேய்த்து கடின உழைப் பினால் முன்னேறினாள் ராகேல்.
  • குடும்பப் பிரச்சனை வந்தபோது தன் கணவனுக்கு உறுதுணையாய் நின்றாள் ராகேல்.
  • ராகேல் தகப்பனுடைய சிலைகளை எடுத்ததும், அவனிடம் பொய் சொன்னதும் நமக்கு எச்சரிப்பு.

Leave a Reply