வேதாகம குடும்பம்: VI . யோசேப்பு
யோசேப்பின் குடும்ப வாழ்க்கையைக் குறித்து வேதாகமத்தில் அதிக விளக்கமில்லை. அவனுக்கு பார்வோன் ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகளான ஆஸ்நாத்தை மனைவி யாகக் கொடுத்தான் என்று கூறப்பட்டுள்ளது (ஆதி. 41:45). ஆஸ்நாத்தைக் குறித்து அதிகம் கூறப்பட வில்லை. ஆனால் யோசேப்பு திருமணத்திற்கு முன்பும் பின்பும் எப்படி வாழ்ந்தான் என்று தெளி வாகக் கூறப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு முன் யோசேப்பு யாக்கோபுக்கும் ராகேலுக்கும் பிறந்த யோ சேப்பு தன் சிறுவயதிலேயே தாயை இழந்துவிட் டான். தன் தம்பி பென்யமீன் பிறந்தவுடனே ராகேல் இறந்துவிட்டாள். தாயில்லாத நிலையில் தகப்பனின் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய மகனாக யோசேப்பு வளர்ந்து வந்தான். யாக்கோபு தன் பிள்ளைகள் யாவரையும்விட யோசேப்பை அதிகம் நேசித்தான். அவனுக்கு பல வருணமான ஆடைகளை உடுத்தி மகிழ்ந்தான் (ஆதி.37:3).
யோசேப்பு சிறு வயதிலேயே கர்த்தருக்குப் பிரியமாக வாழ்ந்து வந்தான். தன் சகோதரர்கள் செய்யும் தவறுகளை தகப்பனுக்கு எடுத்துக் கூறி னான். யாக்கோபு இவனை அதிகமாய் நேசித்த தாலும் சகோதரர்கள் செய்யும் தவறுகளை யோசேப்பு தன் தகப்பனுக்கு சொல்லி வந்ததாலும் அவர்கள் இவனை பகைத்தார்கள். ஏற்கெனவே தாயின் அன்பை இழந்த அவனுக்கு சகோதரர் களின் அன்பும் இல்லாமல் போயிற்று.
யோசேப்பு வாலிப வயதிலும் அதிகம் ஜெபிக் கிறவனாய் இருந்திருக்க வேண்டும். கர்த்தர் அவனுக்கு பல தரிசனங்களைக் கொடுத்தார்.
தேவ தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் பெற முதிர்வயதடைய வேண்டும் என்று சொல் வதற்கில்லை என்பதற்கு அடையாளமாக யோசேப்பின் அனுபவம் இருந்தது. அவனுக்கு 17 வயதுதான். ஆனாலும் இனி நடக்கப்போகும் காரியங்களை கர்த்தர் அவனுக்கு தரிசனங்களிலே வெளிப் படுத்தினார்.
இரண்டு சொப்பனங்கள்
1) தன் சகோதரனின் அரிக்கட்டுகள் தன் அரிக் கட்டை வணங்கினது.
2) சூரியன், சந்திரன் பதினொரு நட்சத்திரங்கள் தன்னை வணங்கியது. அதாவது அவன் சகோ தரர்களும், பெற்றோரும் அவனை வணங்கும் நிலையில் கர்த்தர் அவனை உயர்த்துவார் என்ற பொருள் கொண்ட சொப்பனங்களைக் கண்டான்.
எல்லா சொப்பனங்களையும் எல்லாரிடமும் உடனே சொல்லிவிடக் கூடாது என்பதற்கு எச்சரிப் பாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். கர்த்தர் தனக்குக் காட்டின சொப்பனங்களை சகோதரர்களி டம் பகிர்ந்து கொண்டதினால் அவர்கள் அவன் மேல் பொறாமைப்பட்டார்கள். வாலிபனாக இருந்த படியால் மனந்திறந்து ஒளிவுமறைவின்றி உள்ளதை சொன்னதினால் அநேகருடைய பகையை சம்பா தித்துக் கொண்டான்.
ஆடுகளை மேய்க்கும் சகோதரர்களைப் பார்த்துவர தகப்பன் அவனை அனுப்பினார். அவன் சகோதரர்கள் அவனை கொலை செய்ய திட்டமிட்டனர். அவனை ஒரு குழியிலே போட் டார்கள். பின்பு மீதியானியரிடம் 20 வெள்ளிக் காசுக்கு விற்றுப்போட்டார்கள். மீதியானியர் எகிப்து அரசன் பார்வோனின் உயர் அதிகாரியான போத்தி பாரிடம் அவனை விற்றார்கள். வாலிப வயதிலேயே அவன் இரண்டு பேர்களிடம் அடிமையாய் விற்கப் பட்டான். அடிமையைக் கொன்றாலும் கேள்வி யில்லை என்ற நிலை இருந்தது.
போத்திபாரின் மனைவி பாவம் பாவம் செய்ய அவனைக் கட்டாயப்படுத்தினபோதிலும் அவன் சம்மதியாமல் ஓடிப்போனான். அவள் அவன்மீது வீண்பழி சுமத்தியதால் யோசேப்பு சிறைச்சாலை யில் அடைக்கப்பட்டான். 17 வயதில் அடிமையாய் விற்கப்பட்ட அவனுக்கு 30 வயது வரையிலும் சிறைச்சாலை வாழ்க்கை (ஆதி.41:46). தான் தவறு செய்திருந்தால் போத்திபார் வீட்டில் நல்ல சம்பளத் துடன் பதவி உயர்வு பெற்று வாழ்ந்திருப்பான். தான் செய்யாத தவறுக்காக சுமார் 13 ஆண்டுகள் ஜெயிலில் இருந்தான்.
ஆயிரம் எண்ணங்கள் அவன் மனதில் ஓடி யிருக்கும். கர்த்தர் என்னை மறந்து விட்டாரா, உண்மையாயிருக்கும் எனக்கு ஏன் இந்த வாழ்க்கை என்று அங்கலாய்த்திருக்கலாம். சிறைச்சாலையிலும் கர்த்தர் யோசேப்போடே இருந்தார் (ஆதி.39:21 23). ஆனாலும், ஒரு மாதத்திலோ, ஒரு வருடத்தி லோ அவனை வெளியே கொண்டுவந்து விட வில்லை. எல்லாவற்றிற்கும் கர்த்தர் ஒரு நேரம் வைத்திருப்பார். அவருடைய பலத்த கைக்குள் அடங்கி இருப்பவர்களை கர்த்தர் ஏற்ற காலத்திலே உயர்த்துவார். கர்த்தர் ஏற்ற வேளையில் எல்லா வற்றையும் நேர்த்தியாய்ச் செய்வார்.
அந்த சிறைச்சாலையிலும் யோசேப்பு இரண்டு கைதிகளின் சொப்பனங்களுக்கு விளக்கங்களைக் கொடுத்தான். பார்வோனுக்கு கர்த்தர் இரண்டு சொப்பனங்களைக் கொடுத்து, அதற்கு யாராலும் விளக்கமளிக்க முடியாதபோது, யோசேப்பிற்கு அவைகளின் வெளிப்பாட்டைக் கொடுத்தார்.
யோசேப்பு பார்வோனின் சொப்பனத்திற்கு விளக்கமளித்தது மட்டுமல்ல, மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்ற தேவ ஆலோசனை யையும் கூறினான் (ஆதி.41:25-37). ஒரு சில மணி நேரத்தில் அடிமையாய், சுமார் 13 ஆண்டுகள் சிறைச்சாலையிலிருந்த ஒரு கைதி எகிப்து பேரரச னான பார்வோனுக்கு அடுத்த ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டான். போத்திபாரைப் போன்ற ஆயிரக்கணக்கான அதிகாரிகளுக்கு மேலாக உயர்த்தப்பட்டான்.
அருமையான வாலிப தம்பி, தங்கைகளே! கர்த்தர் உங்களை உயர்த்தும்படி அவருடைய பலத்த கரத்திற்குள் அடங்கி இருங்கள். அவருக்குப் பிரியமாய் வாழுங்கள். அதற்காக என்ன பாடு களையும் அனுபவிக்கவும் ஆயத்தமாகுங்கள். யாரும் கற்பனையிலும் எதிர்பார்க்காத உயர்வை கர்த்தர் உங்களுக்குத் தருவார்.
எகிப்து பேரரசு முழுமைக்கும் யோசேப்பு அதிகாரியானான் (ஆதி.41:43),
யோசேப்பிற்கு திருமணம் நடந்தது. அரசனே அவனுக்குப் பெண் பார்த்து ஒழுங்கு செய்தான். அவன் மனைவி ஆஸ்நாத் ஆசீர்வதிக்கப்பட்ட பெண்ணாக இருந்திருக்க வேண்டும். யோசேப் பைக் கணவனாகப் பெற்றது அவள் பாக்கியம். மனைவிகள் ஒவ்வொருவரும் தன் கணவனைக் குறித்து இவ்விதம் எண்ணக்கூடிய விதத்தில் கணவன்மார் நடந்துகொள்ள வேண்டும்.
திருமணத்திற்கு பின் யோசேப்பு யோசேப்பு தன் குடும்பத்தை எப்படி நடத்தி னான் என்று விளக்கமாகக் கூறப்படவில்லை. அவனுக்குப் பிறந்த மனாசே, எப்பிராயீம் இரு வரையும் கர்த்தருக்குப் பிரியமாக வளர்த்தான். அவர்கள் இருவரும் கோத்திரப் பிதாக்களாக யாக்கோபினால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.
யோசேப்பு தன் தகப்பனான யாக்கோபின் ஆசீர்வாதத்தைப் பெற்றான்
எகிப்தின் உயர்ந்த பதவிக்கு வந்தபின்பும் தன் தகப்பனை மறந்து விடவில்லை. தன் தகப்பனை அழைத்துவர வாகனங்களையும் ஆட்களையும் அனுப்பி யாக்கோபை எகிப்திற்குக் கூட்டி வந்தான். தன் இரதத்தில் ஏறிச்சென்று தகப்பனை சந்தித்து அவன் கழுத்தை கட்டிக்கொண்டு வெகுநேரம் அவன் கழுத்தைவிடாமல் அழுதான் (ஆதி.46:29) என்று கூறப்பட்டுள்ளது. யோசேப்பு தன் தகப்பனை எவ்வளவாய் நேசித்தான் என்பதை இது காட்டுகிறது.
திருமணமான சகோதரரே!
உங்கள் அப்பா அம்மாவை இப்படி பாசத் துடன் நடத்துகிறீர்களா? திருமணத்திற்குப் பின் தன் பெற்றோரைப்பற்றி அக்கரையில்லாத ஆண்கள் அநேகர் உண்டு. திருமணத்திற்குப் பின்பும் பெற் றோரை நேசிக்கவேண்டும், பராமரிக்க வேண்டும். செய்யவேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும்.
யாக்கோபு யோசேப்பையும், அவன் பிள்ளை களையும் ஆசீர்வதித்தான். இந்த ஆசீர்வாதமும் நமக்குத் தேவை. தகப்பனை, தாயை நோகப் பண்ணி அவர்களை கண்ணீர்விட வைக்கும் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட மாட்டார்கள். பெற் றோரிடம் சில குறைகள் காணப்பட்டாலும் அதை பெரிதுபடுத்தாதப்படி அவர்களுக்கு உகந்த பிள்ளை களாக நடந்து அவர்களுடைய ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.
யோசேப்பு தனக்கு தீமை செய்த சகோதரருக்கும் நன்மை செய்தான்
யோசேப்பு கண்ட சொப்பனத்தின்படியே அவன் சகோதரர்கள் அவனுக்கு முன் விழுந்து அவனை வணங்கினார்கள். தன்னை கொலை செய்ய முயற்சித்தவர்கள்தான் இவர்கள். தன்னை 20 வெள்ளிக்காசுக்கு விற்றவர்கள்தான் இந்த சகோதரர்கள். ஆனாலும் அவர்களை பழிவாங்க விரும்பவில்லை. கொலை செய்ய நினைத்தவர்கள் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடக்கிறார்கள். அடிமையாய் விற்கப்பட்டவன் இன்று அரச அரண்மனையில் வாழ்கின்றான். இந்தத் தண்ட னையே போதும்.
யோசேப்பு உள்ளத்தில் கசப்பு, வெறுப்பு, பகை உணர்வு இல்லை. நீங்களல்ல, கர்த்தரே என்னை இங்கே கொண்டு வந்தார். எல்லாம் நன்மைக்கு ஏதுவாக நடந்துள்ளது என்று அதை நன்மையாக எடுத்துக் கொண்டான் யோசேப்பு.
சகோதரர்களே! திருமணமான பின்பும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு நன்மை செய்யுங்கள். அவர்கள் உங்களுக்குத் தீமை செய்தவர்களாக இருந்திருந்தாலும் அதையெல்லாம் மறந்து அவர் களுக்கு நன்மை செய்யுங்கள். இன்று நீங்கள் கர்த்தரால் உயர்த்தப்பட்டு நல்ல நிலையில் இருக் கிறீர்கள். உங்கள் சகோதர சகோதரிகளுக்கும் நன்மை செய்ய மறவாதிருங்கள்.
யோசேப்பின் குடும்ப வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளும் காரியங்கள்:
- சிறுவயதிலேயே கர்த்தருக்குப் பிரியமான வாலிபனாய் விளங்கினான்.
- தேவ தரிசனங்களைப் பெற்ற வாலிபனாய் திகழ்ந்தான்.
- வாலிப வயதில் வந்த சோதனைகளை மேற் கொண்டான்.
- செய்யாத தவறுக்காக பல ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றபோதும் சோர்ந்து போகவில்லை.
- தேசத்தைப் பாதுகாக்க அரசனுக்கு தேவ ஆலோசனை கூறும் கிருபை பெற்றான்.
- தீமை செய்த சகோதரர்களுக்கு நன்மை செய்தான்.
- சகோதரர்களுக்கு பாடம் புகட்ட சிறந்த
- நிகழ்ச்சிகளை உருவாக்கினான்.
- தகப்பனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றான்.
- யோசபேபு முழுக் குடும்பத்தையும் பாதுகாக்க வழி செய்தான்.
- தீமை செய்தவர்கள்மேல் கசப்பு, பகை கொள்ள வில்லை.