You are currently viewing வேதாகம குடும்பம்: VII. மனோவா, சிம்சோன்

வேதாகம குடும்பம்: VII. மனோவா, சிம்சோன்

வேதாகம குடும்பம்: VII. மனோவா, சிம்சோன்

மனோவா என்ற தேவ மனுஷனுக்கும் அவன் மனைவிக்கும் பிள்ளையில்லாமலிருந்தது. கர்த்தர் அவர்களுக்குக் குழந்தை பாக்கியத்தைத் தர திட்ட மிட்டு, அதை அவர்களுக்கு வெளிப்படுத்தின விபரம் விசேஷமானது. இதை நியாதிபதிகளின் புத்தகத்தில் 13ம் அதிகாரத்தில் வாசிக்கின்றோம் (நியா.13-16 அதிகாரங்கள்)

மனோவாவின் மனைவிக்கு தேவ தரிசனம் அவள் குழந்தையில்லாமலிருந்தபோதிலும் நன்கு ஜெபித்து வந்திருக்க வேண்டும். ஏனெனில் கர்த்தருடைய தூதனானவர் முதலாவது அவ ளுக்குத்தான் தரிசனமானார். அவளுக்குச் சில கட்டளைகளை, ஆலோசனைகளைக் கொடுத்தார்.

1. அவளுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் 

இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந் தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய் (நியா. 13:3).

இனி குழந்தை பிறக்காது என்ற நிலையிலி ருந்த அவளுக்குக் கர்த்தர் ஒரு அற்புதம் நடக்கும் என்று வாக்குப் பண்ணினார். ஒரு குமாரனைப் பெறுவாள் என்று திட்டமாக முன்னுரைத்தார். மனோவாவின் மனைவி ஊக்கமாக ஜெபித்திருக்க வேண்டும். அந்த ஜெபத்திற்குப் பலனாக கர்த்தர் ஒரு குமாரனை வாக்குப் பண்ணினார்.

2. அவளைக் குறித்து கொடுக்கப்பட்ட கட்டளை 

நீ திராட்ச ரசம் குடிக்கக்கூடாது. மதுபானம் குடிக்கக்கூடாது. தீட்டான ஒன்றையும் புசிக்கக் கூடாது (நியா.13:4).

ஒரு தாயானவள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற கட்டளை இது. தாயானவள் நல்ல பழக்கவழக்கமுடையவளாக இருந்தால் பிள்ளை களும் அந்த பழக்கத்தில் வளருவதற்கு உதவிசெய்யும். “தாயைப்போல பிள்ளை” என்பது வழக்குச் சொல்.

3. பிள்ளையை வளர்க்கும் விதத்தைக் குறித்து கொடுத்த கட்டளை

அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலா காது. அந்தப் பிறந்ததுமுதல் தேவனுக் கென்று நசரேயனாயிருப்பான்.

கர்த்தருக்கென்று நசரேயப் பொருத்தனை பண்ணுவதைக் குறித்து எண்ணாகமம் 6ம் அதிகா ரத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது (எண்.6:1-21). குறிப்பாக நசரேய விரதத்தைக் குறித்து 3 கட்ட ளைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 • 1) திராட்ச ரசம், மதுபானம் பண்ணக்கூடாது. திராட் சப் பழத்தில் செய்த எந்தப் பொருட்களையும் புசிக்கக்கூடாது.
 • 2) தலைமயிரை கத்தரிக்காமல் வளரவிடவேண்டும்.
 •  3) தன் பெற்றோர், இனத்தாருடைய பிரேதத்தைத் தொட்டு தன்னை தீட்டுப்படுத்தக்கூடாது. அதாவது செத்ததொன்றையும் தொடக்கூடாது.

இவை ஆவிக்குரிய அர்த்தமுள்ளவை. அவை களைப் பற்றிப் பின்பு பார்ப்போம். இவை மூன்றை யும் நசரேய விரதமிருந்த சிம்சோன் மீறினான் என்பதை அறிவோம்.

பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் பெற்றோர் அந்தப் பிள்ளைகளை எவ்விதம் கர்த்தருக்குப் பிரியமாய் வளர்க்க வேண்டுமென்ற கட்டளை களை வேதத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அன்று கர்த்தரே நேரில் வந்து கூறவேண்டிய அவ சியம் ஏற்பட்டது. இன்றைக்கு நமது கைகளில் கொ டுக்கப்பட்டுள்ள பரிசுத்த வேதாகமத்தில் தெளி வான போதனைகளைக் காண்கிறோம். பெற்றோர் இதில் கவனம் செலுத்தினால் பிள்ளைகள் ஆசீர்வாதமான நிலையில் வளருவார்கள்.

4. பிள்ளைகளின் எதிர்காலத்தைக் குறித்த வெளிப்பாடு

அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் (நியா. 13:5).

அடிமைத்தனத்திலுள்ள மக்களை விடுதலை யாக்கும் இரட்சகனாவான். அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து ஆளுகை செய்வான் என்ற செய்தி கொடுக்கப்பட்டது. தேசத்தை நடத்திச் செல்லும் தலைவர்கள் உருவாவது குடும்பங்களில் தான் என்பதை மறந்துவிடக்கூடாது.

அருமைத் தாய்மார்களே! உங்களுக்கு கர்த்தர் தரும் பிள்ளைகள் பெரிய தலைவர்களாய் மாற லாம். எழுப்புதல் பிரசங்கியார்களாய் உருவாகி சபைகளில் பெரிய அசைவை உண்டாக்கலாம். உங்கள் பிள்ளைகளைக் குறித்து கர்த்தர் வைத்துள்ள திட்டம் பெரிது.

தான் கண்ட தரிசனத்தைத் தன் கணவன் மனோவாவிடம் அவள் பகிர்ந்து கொண்டபோது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி னான். தனக்கும் அந்தத் தரிசனம் வேண்டும் என்று வேண்டினான். கர்த்தர் அவன் ஜெபத்தைக் கேட்டு மறுபடியும் தரிசனம் கொடுத்து காரியங்களை விளக்கிக் கூறினார். கர்த்தர் உரைத்தபடியே சிம்சோன் பிறந்தான்.

சிம்சோனின் ஆரம்ப காலம் மனோவாவும் அவன் மனைவியும் சிம்சோ னை தங்களுக்குக் கிடைத்த பெரிய பொக்கிஷமாக எண்ணி வளர்த்து வந்தனர்.

அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார் (நியா.13:24). கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத் துவக்கினார் (நியா.13:25).

சிம்சோனின் ஆரம்பம் நன்றாகவே இருந்தது. கர்த்தர் வாலிப வயதிலே அவனை ஆசீர்வதித்தார். கர்த்தருடைய ஆவியானவருடைய நடத்துதல் அவனுக்கு இருந்தது. மிகச் சிறந்த பராக்கிரமசாலி யாக விளங்கினான். தேசத்திற்கு உகந்த தலை வனாவதற்கான சகல தகுதிகளும் அவனுக்கு இருந் தன. தேசத்தை முன்னின்று நடத்த கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட சிம்சோன் பெண்கள் விஷயத்தில் பெலவீனனாகக் காணப்பட்டான்.

பெலிஸ்திய பெண்ணை திருமணம் செய்ய விரும்பினான்

தங்களை ஆளுகை செய்யும் புறஜாதிய பெண் ணொருத்தியிடம் பழக ஆரம்பித்தான். அவளை நேசித்தான். அவளுடன் தொடர்பு கொண்டான். அவளையே திருமணம் செய்ய தீர்மானித்தான்.

பெற்றோர் அதை விரும்பவில்லை. புறஜாதிப் பெண் வேண்டாம் என்று தடுத்தனர். ஆனால் அவன் பெற்றோருக்குக் கீழ்ப்படியவில்லை.

அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளை யே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான் (நியா. 14:3).

ஒரு வாலிபன் ஒரு வாலிபப் பெண்ணை விரும்புவது தவறு அல்ல. ஆனால் அவள் விக்கிரக வணக்கம் செய்யும் புறஜாதிப் பெண் என்று தெரிந் தும் அவளைத் திருமணம் செய்ய விரும்பியதற்குக் காரணம் கண்களின் இச்சை, கர்த்தருக்குப் பிரிய மில்லாத ஒன்றில் கவர்ச்சியைக் காண ஆரம் பிக்கும்போதுதான் வழி தவறுகிறது. வாழ்க்கை கெடுகிறது.

கீழ்ப்படியாத மகனுடைய தவறான தீர்மானத் திற்கு பெற்றோரும் ஒத்துப்போனது பெரிய தவறு. முரண்டு பிடித்த சிம்சோனுடன் மனோவாவும் அவன் மனைவியும் பெண் பார்க்க திம்னாத்திற்குப் புறப்பட்டனர். செல்லம் கொடுத்து வளர்த்த அவர் களால் அவனை திருத்த இயலவில்லை.

நசரேய விரதத்தை ஒரு குறிப்பிட்ட வருடங் களுக்கு கடைப்பிடித்து நடக்கும்போது தேவனு டைய விசேஷித்த வல்லமை அவன்மூலம் வெளிப் படும். இந்த மூன்று பிரமாணங்களையும் கடைப் பிடித்துவந்த சிம்சோன் சிறிது காலம் கழித்து இவைகள் யாவற்றையும் மீறினான்.

திம்னாத்து என்றாலே “திராட்சத் தோட்டங்கள் நிறைந்த ஊர்” என்று பொருள் (நியா.14:5). பெலி ஸ்தரின் வீட்டிற்குச் சென்று புறஜாதிப் பெண்மேல் ஆசை வைத்தான். திராட்ச ரசத்தையும், மதுவையும் விலக்க வேண்டியவன் அவைகளை விரும்பிக் குடிக்கும் பெலிஸ்தியருடன் விருந்து உண்டான். யாதொரு பிரேதத்தண்டை போகக்கூடாதவன் சிங்கத்தைக் கொன்று சில நாட்களுக்குப் பின்பு அதன் உடலில் இருந்த தேன் கூட்டிலிருந்து தேனை எடுத்துச் சாப்பிட்டான் (நியா.14:8,9).

தலைமுடியை சவரம் பண்ணக்கூடாது. ஆனால் தெலீலாளின் மடியில் தூங்கின அவன் மொட்டை யடிக்கப்பட்டான். தேவனின் சிறப்பான பெலன் அவனைவிட்டு நீங்கிற்று.

தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்ட வாலி பர்கள் தங்கள் பிரதிஷ்டையை காத்துக்கொள்ளும் போதுதான் தேவ பெலனில் கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் சாதிக்க முடியும்.

இந்த செய்தியை வாசிக்கும் வாலிபர்களே! கர்த்தர் கிருபையாய் உங்கள் பெற்றோருக்கு உங் களை பிள்ளையாகக் கொடுத்தார். விசுவாசக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கர்த்தருக்காக அரிய பெரிய காரியங்களைச் சாதிக்க வேண்டிய நீங்கள் பெலன் குன்றிப் போயிருக்கக் காரணமென்ன? உங்களுக்கு தேவபெலன் இல்லையே! உங்களுக்குக் கர்த்தர் கொடுத்த தேவ வல்லமை எடுபட்டுப்போயிற்றே! ஏன்?

நசரேய பிரதிஷ்டைப் பிரமாணங்களின் ஆவிக்குரிய கருத்துக்கள் என்ன?

1. நீ திராட்ச ரசம் குடிக்கக் கூடாது. திராட்சப் பழ சம்பந்தமான எதையும் புசிக்கக்கூடாது.

உலக மனிதர்கள் இன்பம், இனிமை என்று எண்ணும் பாவங்களைச் செய்து அதனால் கிடைக் கும் அற்ப சந்தோஷத்தை நாடிச் செல்லக்கூடாது. வாலிபர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் கர்த்தர் எதிர்ப்பானவரல்ல. உலக வாலிபர்களைவிட விசுவாச வாலிபர்கள் அதிக மகிழ்ச்சியோடு இருக் கவே கர்த்தர் விரும்புகிறார்.

ஆனால் அந்த மகிழ்ச்சி கர்த்தருக்குக் கீழ்ப் படிந்து அவர் சித்தம் செய்யும்போது உண்டாகும் மெய்யான மகிழ்ச்சி. அந்த பரிசுத்த மகிழ்ச்சிக்கு ஈடாக எதுவுமே இல்லை. பாவம் செய்து அதனால் வரும் சந்தோஷம் தற்காலிகமானதே. அந்த மகிழ்ச் சிக்கு ஊடே குற்ற உணர்வும் இருக்கும்.

2. யாதொரு பிரேதத்தையும் தொடக்கூடாது 

இது உயிரற்ற அந்தகாரக் கிரியைகளைக் குறிக் கிறது. எபி.6:1ல் செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கனியற்ற அந்தகாரக் கிரியைகள் என்று எபேசியர் 5:11ல் பார்க்கிறோம். அதாவது எந்தப் பயனும், நன்மையுமில்லாத பேச்சுகள், செயல்கள். சிலர் மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசுவார்கள், அந்தப் பேச்சில் ஒரு நன்மையுமிருக்காது. வாலிபர்கள் அநேகர் இவ்வித கனியற்ற, பயனற்ற பேச்சுகளில் நாள்முழுவதும் செலவிடுவார்கள். இதுபோக தெருத்தெருவாகச் சுற்றுவார்கள், யாருக்கும் எந்த நன்மையுமில்லாத செயல்களில் ஈடுபடுவார்கள்.

பல சபைகளில் வாலிபர்களை எந்த ஒரு காரி யத்திற்கும் பயன்படுத்தாமலிருப்பது வேதனை யான காரியம். இவர்கள் அனுபவமில்லாதவர்கள் என்று ஒதுக்கி விடுகிறார்கள். எனவே எதையா கிலும் செய்ய வேண்டும் என்று துடிக்கும் வாலிபர் கள் எங்கேயோ போய் எதையோ செய்கிறார்கள்.

3. தலைமுடியை சவரம் பண்ணக்கூடாது, முடியை வளரவிட வேண்டும்

நசரேய விரதமிருப்பவனைக் கண்டால் யாவ ரும் எளிதில் கண்டு கொள்ளக்கூடிய அளவில் அவன் தோற்றம் இருக்கும். அவன் மற்ற வாலிபர்களை விட வித்தியாசமானவன். பல வேளைகளிலும் மற்ற வர்கள் பரியாசம்பண்ணும் நிலையில் இருப்பான். ஆனால் இதை அவன் கர்த்தருக்காக செய்ய வேண்டும்.

விசுவாச வாலிப தம்பிகள், தங்கைமார் மற்ற எல்லா வாலிபர்களையும்விட வித்தியாசமாக இருப்பார்கள். தோற்றத்திலும், பேச்சிலும், செயலிலும் வித்தியாசமாயிருப்பார்கள். என்ன இவன் பெரிய சாமியார்போல நடந்துகொள்ளுகிறான், பெரிய பக்த னாக மாறிவிட்டான் என்ற பரியாசப் பேச்சுகளை யும் கேட்கவேண்டி வரலாம். ஆனாலும் கர்த்தருக் காக அவைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.

அருமைத் தம்பிமார்களே, தங்கைமார்களே! அரசியலுக்காக வாலிபர்கள் பயன்படுத்தப்படு கிறார்கள். செத்த உயிரற்ற கொள்கைகளுக்காக வாலிபர்கள் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணிக் கிறார்கள். மூடத்தனமான சடங்காச்சாரங்களுக்கும், மதகோட்பாடுகளுக்கும் தங்களை ஒப்புக்கொடுத்து வாழ்கிறார்கள். நீங்கள் இயேசுவுக்காக கொஞ்சம் பாடு அனுபவிக்க வெட்கப்பட வேண்டாம்.

சிம்சோனின் பிந்திய காலம்

தேசத்தை ஆளவேண்டியவன், தேவ வல்ல மையை, இழந்து கண்கள் பிடுங்கப்பட்டு மாவ ரைக்கும் வேலைக்கு வந்துவிட்டான். ஒரு சிறு பையன் அவனை நடத்தும் நிலைக்கு ஆளானான் (நியா.16:21,26). பிறருக்கு வேடிக்கைக் காட்டும் கோமாளியாகக் கருதப்பட்டான்.

எவ்வளவு வேதனை! பெற்றோருக்கும், தேசத் திற்கும் வேதனை! கர்த்தருக்கும் வேதனை! கடைசி யில் தேவ பெலனைப் பெற்று ஆயிரக்கணக்கான பெலிஸ்தரைக் கொன்று தானும் மரித்தான். தேசத்தை முன்னின்று நடத்தவேண்டிய நியாயாதிபதியாக இருந்தவன் பரிதாபமான மரணத்தை சந்தித்தான்.

பிள்ளைகளைப் பெற்றுவிட்டால் போதாது

பெற்றோரே!

எப்படிப்பட்ட நிலையில் வளர்த்து ஆளாக்கி னீர்கள் என்று கவனியுங்கள். பிள்ளைகளை கர்த்த ருக்காக வளர்க்க கவனம் செலுத்துங்கள். உங்கள் வாலிபப் பிள்ளைகளுக்காக தினமும் ஜெபியுங்கள்.

வாலிபர்களே!

நீங்கள் இயேசுவுக்குத் தேவை. அரசாள வேண்டிய நீங்கள் பாவத்திற்கு அடிமையாகி கண்களை இழந்து வேடிக்கைக் காட்டும் பரிதாப நிலைக்கு வரவேண்டாம். கர்த்தர் உங்களை வழி நடத்துவாராக.

மனோவா, சிம்சோன் குடும்பத்திலிருந்து கற்றுக் கொள்ளும் காரியங்கள்:

 • குழந்தையில்லா தம்பதியினருக்குக் கர்த்தர் தரிசனமாகும் அளவிற்கு ஜெப வீரர்களாயிருந் தனர்.
 • குழந்தை பிறக்கும் முன்பாகவே அதை எப்படி வளர்ப்பது என்ற விதிகளைக் கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
 • இஸ்ரவேலை ஆளுகை செய்யும் நியாயாதி பதியாக அவனை வளர்த்தனர்.
 • அவனை ஆரம்ப முதலே கண்டிப்புடன் வளர்க் காதது நமக்கு ஓர் எச்சரிப்பு.
 • விக்கிரக ஆராதனை செய்துவந்த பெலிஸ்திய பெண்ணை சிம்சோன் விரும்பினது ஒரு எச்சரிப்பு.
 • மகன் செய்த தவறுக்கு பெற்றோரும் துணை போனது நமக்கு ஓர் எச்சரிப்பு.
 • பிரதிஷ்டையை பலமுறை சிம்சோன் மீறினது ஓர் எச்சரிப்பு.
 • தேசத்தை முன்நடத்த வேண்டியவன் கண்களை இழந்து மாவாட்டினது ஓர் எச்சரிப்பு.
 • எச்சரிப்பாக இருக்க பல வாய்ப்புக்கள் கிடைத் தும் அதை அலட்சியப்படுத்தியது ஓர் எச்சரிப்பு
 • வாலிப வயதிலேயே அகால மரணமடைந்தது வேதனை.

Leave a Reply