யோசுவா – 2 சாமுவேல் சுருக்கம் 

 

யோசுவா – 2 சாமுவேல் சுருக்கம் 

யோசுவா JOSHUA

யோசுவாவின் புத்தகம் இறைமக்களாகிய இஸ்ரவேலருக்கு கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலாக காணப்படுகிறது. 40 வருட வனாந்திர யாத்திரைக்கு பின்பு கானான் தேசத்து மக்களை மேற்கொண்டு சுதந்தரிக்கும் சம்பவம் இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு இஸ்ரவேலரின் தலைவனாக இருந்து செயல்பட்டவன் யோசுவா வனாந்தரத்தில் மோசே தன்னுடைய காலம் நிறைவேறும்பொழுது கர்த்தரின் கட்டளைப்படி யோசுவாவை நியமித்தான் (எண்ணாகமம் 27:18). யோசுவா வழிநடத்தியதால் இப்புத்தகம் இவர் பெயரை ஏற்றது. 

யோசுவாவின் பெயர் ஒசேயா (எண்ணாகமம் 13:8) ஒசேயா என்றால் ‘இரட்சிப்பு’ என்று பொருள். பின்பு மோசே யோசுவா என பெயர் மாற்றினார் (எண்ணாகமம் 13:16) யோசுவா என்பதற்கு ‘இரட்சகர்”ஆண்டவர் இரட்சிக்கிறார்’ அல்லது வெற்றிதருகிறார் என்றும் பொருள். கிரேக்க மொழியில் ‘இயேசு’ என மொழிபெயர்க்கப்படுகிறது.

ஆசிரியர்

வேத பண்டிதர்களின் கருத்துப்படி இராஜாக்களின் காலம்வரை யோசுவாவின் புத்தகம் எழுதப்படவில்லை. அதாவது இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் நடைபெற்று 800 வருடங்களுக்கு பின் இது எழுதப்பட்டது. அனால் இதற்கு முன்பாகவே எழுதப்பட்டிருக்கும் என்பதற்கு சில காரணங்கள் உண்டு. யூத பாரம்பரிய குறிப்புகளில் பழமையான ‘தல்மாத்’ கூற்றுப்படி இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள யோசுவாவே இப்புத்தகத்தை எழுதினார் என்றும் கடைசி அதிகாரமான யோசுவாவின் மரண காரியங்கள் ஆரோனின் மகனான எலியேசர் மூலம் எழுதப்பட்டது என்றும் குறிப்பிடுகிறது.

காலம்

இந்த நூல் மோசே மரணத்திலிருந்து யோசுவா மரணம் வரையிலான 30 ஆண்டுகால வரலாற்றை கூறுகிறது இது யோசுவா மூலம் எழுதப்பட்டிருந்தால் சுமார் கி.மு. 1380 க்கு முன்னால் எழுதப்பட்டிருக்கவேண்டும். இல்லையெனில் இராஜாக்களின் காலத்தில் அதாவது கி.மு. 600லில் எழுதப்பட்டிருக்கவேண்டும்.

வரலாற்றுப் பின்னணி

“தேவ ஆவியை பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா” (யோவா 27:18) தன்னுடைய வாலிப வயதில் எகிப்தில் அடிமையாக செலவழித்தான். ரெவிதீமிலே அமலேக்கை எதிர்த்து வந்தபோது யோசுவா இஸ்ரவேலின் படையை வழிநடத்தி வெற்றிக்கண்டான் (யாத்திராகமம் 17:8-13) மோசே சீனாய் மலையில் பத்து கற்பனைகளை வாங்கச்சென்றபோது அவரோடு சென்றவர் யோசுவா (யாத்திராகமம் 24:13-14). எப்பிராயீம் கோத்திரத்தின் ஒருவராக கானான் தேசத்தை வேவுபார்க்க சென்றார் யோசுவா. மேலும் யோசுவாவும், காலேப்பும் தேவசித்தத்தை அறிந்து செயல்பட்டனர். கானானை சுதந்தரிக்கமுடியும் என்ற விசுவாசத்தினால் மற்றவர்கள் மரித்திருக்க இவர்கள் பிரவேசித்தனர் (எண்ணாகமம் 14:26-34). மோசேயின் இறுதிகாலத்தில் யோசுவாவை இஸ்ரவேலரின் தலைவராக நியமித்தார். யோர்தானனை கடக்குமுன் பொறுப்பேற்ற யோசுவா கானானை சுதந்தரித்து அதை 12 கோத்திரத்திற்கும் பங்கிட்டு கொடுத்தார்.

அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் மக்கள் விடுதலை விரும்பி இறைவனிடம் வேண்டியபொழுது வாக்குத்தத்த தேசமாக கானானை கொடுத்து வழிநடத்த மோசேயையும் பின்பு யோசுவாவையும் கொடுத்தார். இஸ்ரவேலர் தேவனுடைய வழிநடத்துதலை ஒரு சில வேளைகளில் உணர மறந்தாலும் விசுவாசத்தோடு யோசுவாவை பின் தொடர்ந்தனர். எதிர் வந்த எதிர்ப்புகளை தேவனுடைய உதவியோடு எதிர்கொண்டு தேசத்தை சுதந்தரித்தனர்.

நியாயாதிபதிகள் Judges

“கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார்.”(நியாயாதிபதிகள் 2:16) என்ற வசனத்திற்கேற்ப, இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வாக்குத்தத்தின் தேசத்தை சுதந்திரத்தபின் வழிநடத்திவந்த மோசே, யோசுவாவிற்கு பின்வந்த தலைவர்களை உள்ளடக்கியது. இவர்கள் இஸ்ரவேலரை நியாயம் விசாரித்தும் எதிரிகளிடமிருந்து தப்புவித்தனர். எனவே இப்புத்தகம் இப்பெயர்பெற்றது.

ஆசிரியர்

காலம் காலமாக சாமுவேல் தீர்க்கதரிசி இப்புத்தகத்தை எழுதினார் என்ற கருத்து இருப்பினும் இது நிச்சயிக்க முடியாததாகவே உள்ளது. நாளாகமம் 29:29,30 வசனங்கள் ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலும், நாத்தான், காத் என்பவர்களும் நடந்த காலசம்பவங்களை தொகுத்தனர் என்பது புலனாகிறது.

காலம்

வாக்குதத்தத்தின் தேசத்தை சுதந்தரித்தபின்பும், இஸ்ரவேலரின் முதல் அரசர் தெரிந்தெடுக்கப்படுமுன்பும் நடந்த சம்பவங்கள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இது சுமார் கிமு. 1375 முதல் 1050 வரை உள்ள காலமாகும்.

நியாதிபதிகள் அட்டவணை

  • யூதா – 1:1-38 – யூதா தன் சகோதரனாகிய சிமியோனோடு சேர்ந்து கானானியரிடமிருந்து இஸ்ரவேலரை விடுவித்தான
  • ஒத்தனியேல் – 1544-1505 – 3:1-4 – காலேபின் மருமகனாகிய இவன் மெசபத்தோமியா அரசனை வென்று இஸ்ரவேலரை விடுவித்தான்
  • ஏகூத் – 1486-14071 – 3:15-30 – மோவாபியரிடமிருந்து இஸ்ரவேலரை விடுவித்தான்
  • சம்கார் – 3:31 – பெலிஸ்தரிடமிருந்து இஸ்ரவேலரை விடுவித்தான்
  • பாராக் (தெபோராள் – 1386-1347 – அதி,4-5 – கானானியரிடமிருந்து இஸ்ரவேலரை விடுவித்தான்
  • கிதியோன் – 1339-1300 – அதி.6-8 – 300 பேரோடு மீதியானியரை தோற்கடித்தான் இஸ்ரவேலரை விடுவித்தான்
  • அபிமலேக்கு – 1299-1297 – 9:1-57 – சீகேமின் மனிதருக்கெதிராய் போர் செய்து மரித்தான்
  • தோலா – 1296-1274 – 10:1-2 – இஸ்ரவேலரை நியாயந்தீர்த்தான்
  • யாவீர் – 1273-1252 – 10:3-5 – இஸ்ரவேலரை நியாயந்தீர்த்தான்
  • யெப்தா – 1233-1228 – 11:1-12-7 – அம்மோனியரை தோற்கடிதான்
  • இப்சான் – 1227-1221 – 12:8-10 – இஸ்ரவேலரை நியாயந்தீர்த்தான்
  • ஏலோன் – 1220-1211 – 12:11-12 – இஸ்ரவேலரை நியாயந்தீர்த்தான்
  • அப்தான் – 1210-1203 – 12:13-15 – இஸ்ரவேலரை நியாயந்தீர்த்தான்
  • சிம்சோன் – 1202-1163 – அதி.13-16 – பெலிஸ்தரை வென்று இஸ்ரவேலரை விடுவித்தான்

இப்புத்தகம் எழுதப்பட்ட காலத்தை நோக்கின் அது அரசர் ஆட்சிகாலத்தில் எழுதப்பட்டதாகும்(17:6, 18:1, 19:1, 21:25) அரசன் இந்தகாலத்தில், இல்லாத காலத்தை குறித்து எழுதிய வசனங்களாகும். 1:21ன் படி எருசலேமிலே எபூசியரும் பென்யமீள் கோத்திரத்தினரும் சேர்ந்திருந்ததாக வாசிக்கின்றோம். சுமார் கி.பி. 1000 வது ஆண்டு தாவீது எருசலேம் நகரை மேற்கொண்டு தன் நகரமாக்கினான் என 2 சாமுவேல் 5:6-10ல் வாசிக்கிறோம். எனவே இப்புத்தகம் இதற்கு முன்பாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.

நோக்கமும் செய்தியும்

மோசே, யோசுவா ஆகியோரின் தலைமையில் வழிநடத்தப்பட்டுவந்த இஸ்ரவேல் புத்திரர், யோசுவாவின் மரணத்திற்கு பின் எதிரிகள் இவர்களை நெருக்கினபோது தேவனை நோக்கிப்பார்த்தார்கள் (1:1) மேலும் மக்கள் கட்டுப்பாடு குறைந்தவர்களாக மனம்போன வழியில் சென்று கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்தார்கள்(4:1,6:1,17,6) இதனிமித்தம் எதிரிகளால் நிந்திக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டனர். மக்கள் மனம் திரும்பி தேவனை நோக்கிப்பார்த்தபோது தேவன் நியாயாதிபதிகளை அவர்களுடைய தூதனாக அனுப்பி இஸ்ரவேல் புத்திரை விடுதலையாக்கி இரட்சித்தார். மறுபடியும் மக்கள் தேவனை மறந்தவர்களாக பொல்லாப்பானதை செய்து துன்பப்பட்டனர்.

ரூத் RUTH

இப்புத்தகம் மோவாபிய பெண்ணாகிய ரூத் முக்கிய பாத்திரமாக காணப்படுவதால் இப்பெயர்பெற்றது. ரூத் என்பதற்கு “அழகு”, “துணை”, “பொருத்தம்” எனப்பொருள். இவர் வம்சத்தில்தான் தாவீதும் அதன் பினபாக இயேசுவும் பிறந்தார்கள் (மத்தேயு 1:1,5) பெண்ணின் பெயர் பெற்ற இரண்டு புத்தகத்தில் இது ஒன்று.

ஆசிரியர்

யூதா பாரம்பரியம் இப்புத்தகத்தின் ஆசிரியர் சாமுவேல் எனக் குறிப்பிட்டிருந்தாலும் இதை நிரூபிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிறது. ஏனென்றால் ரூத் 4:17,22ல் தாவீதைப்பற்றி குறிப்பு உள்ளது. இது தாவீது அரசனான பினபாகவே எழுதப்பட்டிருக்கவேண்டும். இப்புத்தகத்தில் பயன்படுத்தப்பட்ட எபிரேய மொழி நடையும் இதற்கு சான்று பகர்கின்றன.

காலம்

இப்புத்தகத்தில் நிகழ்ந்த சம்பவம்

நியாதிபதிகளின் தொடக்க காலத்தில் 10 ஆண்டுகால நிகழ்ச்சியாகும். இது கிமு. சுமார் 13 வது நூற்றாண்டில் நடைபெற்றதாகும். இப்புத்தகம் எழுதப்பட்ட காலம் மேல் குறிப்பிட்டப்படி சுமார் கிமு. 1010க்கு பின்பு எழுதப்பட்டிருக்கவேண்டும்.

பின்னணி

மோவாப் என்பது உப்புகடலுக்கு கிழ்பக்கத்தில் உள்ள பிரதேசமாகும். மோவாபியர் என்பவர் லோத்து தன் மூத்த குமாரத்திமூலம் பெற்ற மோவாப் என்பவருடைய சந்ததியாகும் (ஆதியாகமம் 19:37) இவர்கள் யோத்தான் என்றும் அழைக்கப்பட்டார்கள் (ஆதியாகமம் 36:20) கலாச்சார குறிப்புகள் இப்புத்தகத்தின் காலத்தை தெளிவுப்படுத்துகிறது. நியாயதிபதிகள் காலத்தின் முற்பகுதியில் நடைபெற்றிருக்க வேண்டும். மேலும் இக்காலத்தில் மோவாப்பியருக்கும். இஸ்ரவேல் புத்திரருக்கும் நல்ல உறவு காணப்பட்டிருக்க வேண்டும்.

நோக்கமும், செய்தியும்

இப்புத்தகம் ரூத்தினுடைய தன்னலமற்ற தன்மையையும் நகோமியோடு உள்ள அழுத்தமான உறவையும் வெளிப்படுத்துகிறது.(1:16-17, 2:11-12, 3:10,4:15) மேலும் நகோமி ரூத்தின் மீது போவாஸின் இரக்கமும் வெளிப்படுத்தப்படுகிறது (அதி 2-4) தேவனின் இரக்கமும் இப்படிப்பட்டதாகவே சித்தரிக்கப்படுகிறது. இச்சம்பவம் இரட்சிப்பை மையமாக வைத்தே கடந்து செல்கிறது. தேவனுடைய இரட்சிப்பின் உருவகமாக இதைக்கருதலாம்.

1.சாமுவேல் 1 Samuel

இப்புத்தகம் எபிரேயமொழியில் ஒரே புத்தகமாகவே காணப்படுகிறது. பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பான செய்துவ ஜன்டில் இரண்டாக பிரிக்கப்பட்டு அதன்பின் உள்ளது அனைத்து மொழிபெயர்ப்புகளிலும் இரண்டாகவே உள்ளது.

இப்புத்தகம் இஸ்ரவேலின் முதல் இரு ராஜாக்களை ஏற்படுத்திய நியாயாதிபதியும், தீர்க்கதரிசியுமான சாமுவேல் பெயரையே புத்தக பெயராக கொண்டுள்ளது. இதன் தலைப்பு செப்துவஜன்டில் முதல், இரண்டாவது இராஜ்யம் எனவும் லத்தீன் மொழி வேதமான வல்கேட்டல் முதல், இரண்டாவது இராஜாக்கள் எனவும் இருந்தது. பின்பு தற்போதுள்ள பெயர் பெற்றது.

நியாயாதிபதியாக இஸ்ரவேலர்மேல் தேவனுடைய ஆட்சிசெய்த சாமுவேல் ஒரு தீர்கதரிசியாகவும் இருந்தார். இவர் இரண்டு ராஜாக்களை அபிஷேகம் செய்து அரியணை ஏற்றியவர். இவர் இறையாட்சி அரசாட்சி யாக மாறிய காலக்கட்டத்தில் அரசாட்சிக்கான சட்டதிட்டங்களை ஏற்படுத்தி கொடுத்தார். இவர் மோசேயை போல தேவனுடைய ஸ்தானாதிபதியாக செயல்பட்டார் (சங் 99:6, எரேமியா 15:1)

எழுதியவர், காலம்

இப்புத்தகத்தின் மொழி நடையை நோக்கும்பொழுது தனிப்பட்ட பல இடங்களிலிருந்து வந்த செய்திகளின் தொகுப்பாக காணப்படுகிறது. இதை ஆக்கியோன் இவற்றை சேகரித்து ஒன்றாக ஒரு தொகுப்பாக ஏற்படுத்தியிருக்கிறார்.

தொகுத்து வழங்கியவர்களை குறித்து பல் கருத்துக்கள் நிலவினாலும் ஆசாரியனாகிய அபியத்தார் அல்லது அகிமாஸ் ஆக இருக்கலாம் என்ற கருத்தும். சாலமோன் ராஜாவின் ஆலோசனைக் காரனும், தீர்க்கதரிசி நாத்தான்வேலின் மகன் சாபூர் என்ற கருத்தும் பொருத்தமுடையதாக காணப்படுகிறது. சாபூர் தாவீது காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை தன் தகப்பன் நாத்தான்வேல் மூலமும் பிறசம்பவங்களை அரண்மனைக் குறிப்புகளிலிருந்தும் சேகரித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சுமார் கிமு.425 முதல் கிமு.975 வரையுள்ள சம்பவங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்புத்தகத்தை ஆக்கியோன் சாலமோனின் மரணத்திற்கு பின் சற்று பின்பும் (கிமு.930). இராஜ்யம் வடதேசம், தென்தேசம் என இரண்டாக பிரிந்த பின்பும் எழுதியிருக்க வேண்டும் ஏனெனில் இதைபற்றிய குறிப்புகள் சாமுவேல் புத்தகத்தில் உள்ளது. (1சாமு 11:8, 17:52, 18:16, 2சாமு 5:5, 24:1-9). சாமுவேல், சவுல், தாவீது மற்றும் சாமுவேலின் காலத்தில் யூத மற்றும் இஸ்ரவேல் என்ற பிரிவினை இல்லாதிருந்தது. அனைவரும் இஸ்ரவேலர் என்ற அழைக்கப்பட்டனர்.புத்தகத்தில் 

பொருளடக்கம்

1 சாமுவேல் அரசராட்சி ஏற்படுத்தியது தெளிவாக காட்டப்படுள்ளது.

  1. சாமுவேலின் பிறப்பு, அழைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்நூலை இயற்றியவர் இரு அரசர்களைப் பற்றிய குறிப்புகளை தெளிவாக படம்பிடித்துக் காட்டியுள்ளார். அவர்களுடைய பிறப்பின் குறிப்புகள் மாத்திரம் குறிப்பிடவில்லை ஆனால் சாமுவேலின் வரலாற்று உண்மைகள் மிகத்தெளிவாக கூறியுள்ளார். இது 1சாமுவேலில் முதற் பகுதியாக (அதி1- 3) உள்ளது.
  2. இரண்டாவது பகுதி (4-8) தேவனுடைய உடன்படிக்கைப்பெட்டி பெலிஸ்தரால் பிடிக்கப்பட்டு கொண்டுபோகப்படுதல், அதினிமித்தம் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை, தேவன் தம் வல்லமையை வெளிப்படுத்துதல், சாமுவேல் நியாயாதிபதியாக இஸ்ரவேலரை வழிநடத்திய முறை தெளிவாக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் மக்கள் மற்ற தேசத்தைபோல் அரசன் வேண்டும் என சாமுவேலிடம் கோரினார். தேவன் சாமுவேல்மூலம் இதை கண்டித்த பொழுதும் (8:7, 9,22, 9:16-17, 10:24, 12:13) மக்கள் பிடிவாதம் செய்ததால் தேவன் இதற்கு அனுமதித்தார்.(8:7, 9,22
  3. 1சாமுவேல் மூன்றாவது பகுதி முதல் ராஜாவின் அழைப்பு அல்லது அபிஷேகம் அவருடைய வாழ்க்கையின் வெற்றி தோல்வி அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நூலை எழுதியவர் ஒரு குறிப்பை தெளிவாக்க விரும்புகிறார். மற்ற அரசர்களுக்கும் இஸ்ரவேல் இராஜக்களுக்கும் உள்ள வித்தியாசமே அது. இஸ்ரவேல் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம் இறையாட்சி மாறியதாகும். அரசாட்சியாக மாறும்பொழுதும் தேவனுக்கும் இஸ்ரவேலருக்கும்முள்ள உடன்படிக்கை பாதுகாக்கப்பட்டது. முதல் ராஜாவாகிய சவுல் அபிஷேகம் பண்ணப்பட்டது தேவனுடைய வார்த்தையின்படி (9:1-10:16) நடந்தது. மக்களுக்கு முன்பாக ராஜா அரியனை ஏறியபொழுது ராஜாங்கத்தின் முறையை ஜனங்களுக்கு தெரிவித்து அதை ஒரு புஸ்தகத்தில் எழுதி கர்த்தருடைய சந்நிதியில்வைத்து ஜனங்களை அனுப்பிவிட்டான் (10:25) இதன் பின் அவன் பெற்ற வெற்றி இவன் தெரிந்துகொள்ளுதலை உறுதிப்படுத்தியது. நெருக்கங்கள் ஏற்பட்டபொழுதும், ஆலோசனை தேவைப்பட்டபொழுதும் தேவனுடைய தீர்க்கதரிசியாகிய சாமுவேலிடத்தில் கடந்து வந்தான். இக்காரியத்தை செய்தபொழுது வெற்றியும். செய்யதவறியபொழுது தோல்வியையும் பெற்றதை தெளிவாக காணமுடிகிறது.

2 சாமுவேல் 2 Samuel

இப்புத்தகம் எபிரேயமொழியில் ஒரே புத்தகமாகவே காணப்பட்டது. பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பான செய்துவ ஜன்டில் இரண்டாக பிரிக்கப்பட்டு அதன்பின் உள்ளது அனைத்து மொழிபெயர்ப்புகளிலும் இரண்டாகவே உள்ளது. இப்புத்தகம் இஸ்ரவேலின் முதல் இரு ராஜாக்களை ஏற்படுத்திய நியாயாதிபதியும். தீர்க்கதரிசியுமான சாமுவேல் பெயரையே புத்தக பெயராக கொண்டுள்ளது. இதன் தலைப்பு செப்துவஜன்டில் முதல், இரண்டாவது இராஜ்யம் எனவும் லத்தீன் மொழி வேதமான வல்கேட்டல் முதல், இரண்டாவது இராஜாக்கள் எனவும் இருந்தது. பின்பு தற்போதுள்ள பெயர் பெற்றது.

நியாயாதிபதியாக இஸ்ரவேலர்மேல் தேவனுடைய ஆட்சிசெய்த சாமுவேல் ஒரு தீர்கதரிசியாகவும் இருந்தார். இவர் இரண்டு ராஜாக்களை அபிஷேகம் செய்து அரியணை ஏற்றியவர். இவர் இறையாட்சி அரசாட்சி யாக மாறிய காலகட்டத்தில் அரசாட்சிக்கான சட்டதிட்டங்களை ஏற்படுத்தி கொடுத்தார். இவர் மோசேயை போல தேவனுடைய ஸ்தானாதிபதியாக செயல்பட்டார் (சங் 99:6, எரேமியா 15:1)

எழுதியவர், காலம்

பல இப்புத்தகத்தின் மொழி நடையை நோக்கும்பொழுது தனிப்பட்ட இடங்களிலிருந்து வந்த செய்திகளின் தொகுப்பாக காணப்படுகிறது. இதை ஆக்கியோன் இவற்றை சேகரித்து ஒன்றாக ஒரு தொகுப்பாக ஏற்படுத்தியிருக்கிறார்.

தொகுத்து வழங்கியவர்களை குறித்து பல கருத்துக்கள் நிலவினாலும் ஆசாரியனாகிய அபியத்தார் அல்லது அகிமாஸ் ஆக இருக்கலாம் என்ற கருத்தும். சாலமோன் ராஜாவின் ஆலோசனைக் காரனும், தீர்க்கதரிசி நாத்தான்வேலின் மகன் சாபூர் என்ற கருத்தும் பொருத்தமுடையதாக காணப்படுகிறது. சாபூர் தாவீது காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை தன் தகப்பன் நாத்தான்வேல் மூலமும் பிறசம்பவங்களை அரண்மனைக் குறிப்புகளிலிருந்தும் சேகரித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சுமார் கிமு.425 முதல் கிமு.975 வரையுள்ள சம்பவங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்புத்தகத்தை ஆக்கியோன் சாலமோனின் மரணத்திற்கு பின் சற்று பின்பும் (கிமு.930), இராஜ்யம் வடதேசம், தென்தேசம் என இரண்டாக பிரிந்த பின்பும் எழுதியிருக்க வேண்டும் ஏனெனில் இதைபற்றிய குறிப்புகள் சாமுவேல் புத்தகத்தில் உள்ளது. (1சாமு 11:8, 17:52, 18:16, 2சாமு 5:5, 24:1-9). சாமுவேல், சவுல். தாவீது மற்றும் சாமுவேலின் காலத்தில் யூத மற்றும் இஸ்ரவேல் என்ற பிரிவினை இல்லாதிருந்தது. அனைவரும் இஸ்ரவேலர் என்ற அழைக்கப்பட்டனர்.

பொருளடக்கம்

2 சாமுவேலில் தாவீது தேவனுடைய ஆட்சி செய்யும் மனிதனாக சித்தரிக்கப்படுகிறார். தாவீது முதலாவது யூதாகோத்திரத்தினால் எப்பிரோனில் ராஜாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பு மற்ற கோத்திரத்தினால் அங்கீகரிக்கப்படுகிறார்.

எருசலேம் பட்டணத்தை எபூசியரிடமிருந்து கைபற்றி அதை தாவீதின் நகரமாக கட்டினான் (5:6-14) பின்பு கர்த்தருடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து எருசலேமுக்கு கொண்டுவந்தான் (அதி 6 சங் 1323-5)

தாவீதின் நாட்களில் தேவன் தேசத்தை அதிகமாக ஆசிர்வதித்தார். ஆதியாகமம் 3:15ல் தேவன் கொடுத்த வாக்கு பின் அது தாவீதின் சந்ததியாக குறிப்பிடப்பட்டது. (ஏசாயா 9:6-7, 11:1-16, எரேமியா 23:5-6, 30:8-9, 33:14-16 எசேக்கியல் 34:23-24, 37:24-25)

தாவீதை தலைவனாகவும் கொண்டிருக்கிற அதேவேளையில் அவருடைய பெலவீனத்தையும், வழி தவறுதலையும் கூறுகிறது.

இப்புத்தகம் தாவீது தேவனை துதிப்பதோடு நிறைவுபெறுகிறது (22:31-51). தாவீது அரசன் தேவனுக்கு அளவுகோலாக பிற இடங்களில் பார்க்க முடிகிறது (2 இராஜா 18:3, 22:2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *