வேதாகம குடும்பம் VIII. நகோமி (மாசியார்) ரூத் (மருமகள்)

VIII. நகோமி (மாசியார்). ரூத் (மருமகள்)

ரூத்தின் புத்தகம் ஓர் குடும்ப சூழ்நிலையை விளக்கும் அருமையான புத்தகம். தாவீது அரச னின் முற்பிதாக்களை விளக்கும் புத்தகம். பெத் லெகேம் என்ற ஊரில் எலிமெலேக்கு – நகோமி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தனர். தேசத்தில் பஞ்சம் உண்டானபோது இவர்கள் மோவாப் தேசத்திற்குச் சென்றுவிட்டனர். “பெத்லெகேம்” என்றால் “அப்பத்தின் வீடு” என்று பொருள். மோவாப் என் றால் முறைகேடான சந்ததி. அப்பத்தின் வீட்டை விட்டு பஞ்சம் பிழைக்க முறைகேட்டிற்குப் போய் விட்டார்கள் இந்த குடும்பத்தினர்.

இக்கட்டு,பிரச்சனை வரும்போது கர்த்தரை விட்டு முறைகேடான காரியங்களில் ஈடுபடும் குடும்பங்கள் இன்றும் உண்டு. மோவாபிற்குப் போன எலிமெலேக்கு அங்கேயே மரித்தான். நகோமி விதவையானாள். அவளுடைய இரண்டு பையன்களும் மோவாபிய பெண்களைத் திருமணம் செய்தனர். சில ஆண்டுகளில் இந்த இரண்டு மகன் களும் மரித்துவிட்டனர். நகோமியும் விதவை. அவளு டைய இரண்டு மருமக்களும் விதவைகளானார்கள். ஒருத்தி பெயர் ஓர்பாள், மற்றவள் பெயர் ரூத்.

முறைகேடான காரியங்களைச் செய்து, தேவ சித்தத்திற்குப் புறம்பான நிலையில் அந்நிய நாட்டுப் பெண்களை மணந்து அவலநிலை அடைந் தது இந்தக் குடும்பம். மூன்று விதவைகளுடன் அடுத்த கட்டம் ஆரம்பமானது. இஸ்ரவேல் நாட்டில் பஞ்சம் தீர்ந்தது. கர்த்தர் செழிப்பைக் கட்டளையிட்டார் என்று கேள்விப்பட்டாள் நகோமி.

நகோமி நல்ல மாமியார்

அந்நிய நாட்டிற்கு வந்து விதவையானாள் நகோமி. தன் இரண்டு குமாரரையும் இழந்துவிட் டாள். இப்படி நடந்தால் சில குடும்பங்களில் மாமி யார்கள் மருமக்களை சபிப்பார்கள். உன்னைத் திருமணம் செய்ததால்தான் என் மகன் செத்துப் போனான். நீ சாபமானவள், நீ என்றைக்கு என் வீட்டில் காலெடுத்து வைத்தாயோ அன்றைக்கே என் குடும்பத்திற்கு சாபம் வந்துவிட்டது என்று வசைபாடும் மாமியார்கள் பலருண்டு.

நகோமி தங்கமான மாமியார். நீங்கள் என் மகன்களுக்கு தயை செய்தீர்கள். எனக்கும் தயை செய்தீர்கள். கர்த்தர் உங்களுக்கு நிச்சயம் தயை செய்வார் என்று ஆறுதலாகப் பேசினாள் (ரூத் 1:8).மாமியார்களே! மருமக்களை இப்படி ஆசீர் வதித்துப் பேசுகிறீர்களா? அதுமட்டுமல்ல, தன் மருமக்களைப் பார்த்து உங்கள் தாய்வீட்டிற்குத் திரும்பப் போங்கள். நீங்கள் மறுமணம் செய்து மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்த கர்த்தர் உங்க ளுக்கு உதவி செய்வார் என்றாள். எவ்வளவு அருமையான மாமியார் இவள்!

எனக்குப் பணிவிடை செய்ய வாருங்கள் என்று அழைக்கவில்லையே. எத்தனை மாமியார்கள் இன்று மருமக்களை வேலைக்காரிபோல நடத்து கிறார்கள். வேலைக்காரிகளைவிட கேவலமாக நடத்தும் மாமியார்களும் உண்டு. இவளோ தன் மருமக்களை முத்தமிட்டாள். இன்றுள்ள மாமியார் கள் மருமக்களைக் கடித்து குதறிவிடுகிறார்களே! இவளோ தன் சொந்த மக்களைப்போல இவர்களை அன்புடன் நடத்தினாள்.

மருமகளாகிய ரூத்

நீ உன் தாய்வீட்டிற்குப் போய்விடு என்று மாமியார் சொன்னபோது ரூத் சத்தமிட்டு அழு தாள். அன்பான மாமியாரே உங்களைவிட்டு எப்படி நான் பிரிந்துபோக முடியும் என்று அழுதாள் ரூத். இந்தக் காலத்து ரூத்துகள் கதையே வேறு. தன் அம்மா வீட்டிற்குப் போகமுடியவில்லையே என்று தான் அழுகிறார்கள். அல்லது மாமியாரைப் பார்த்து உன் புருஷன் வீட்டிற்குப் போ என்று விரட்டி விடுகிறார்கள். ரூத் மிக அருமையான மருமகள்.

மாமியார் போகும் இடத்திற்கு நானும் போ வேன். மாமியார் தங்கும் இடத்தில் நானும் தங்கு வேன். மாமியார் சொந்தக்காரர்கள் என் சொந்தக் காரர்கள். மாமியார் ஆராதிக்கும் தேவனை நானும் ஆராதிப்பேன். மாமியார் மரிக்கும் இடத்தில் நானும் மரிப்பேன் (ரூத்.1:16,17).

இன்றுள்ள மருமகள் மாமியாரை கல்லறைக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்றல்லவா சபதம் பண்ணுகிறாள்! மாமியாருடன் மரிப்பேன் என்று கூறும் மருமகளைப் பார்க்க முடியுமா?

அன்பான வாசகர்களே! குடும்பப் பிரச்சனை களில் மிக முக்கியமானவைகளில் ஒன்று மாமியார் -மருமகள் பிரச்சனை. குடும்பங்களில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படலாம். அது குடும்ப உறவைப் பாதிக்கக்கூடாது.

நகோமி, ரூத் குடும்ப வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளும் காரியங்கள்:

  • பஞ்சம் பிழைக்க அப்பத்தின் வீடாகிய பெத்ல கேமைவிட்டு முறைகேடான மோவாபிற்குப் போனது வேதனைக்குரியது.
  • தவறான இடத்திற்குப் பிழைக்கப் போனதால் கணவனையும், மகன்களையும் இழந்தாள் நகோமி.
  •  தனக்கு ஏற்பட்ட தீமைகளுக்கு மருமக்கள்மேல் பழிபோடாத நல்ல மாமியார் நகோமி.
  • எனக்குப் பணிவிடை செய்ய வாருங்கள் என்று அழைக்காமல் நீங்கள் போய் மறுமணம் செய்து வாழுங்கள் என்று வாழ்த்தின நல்லவள் நகோமி.
  • போ என்று கட்டாயப்படுத்தியும் நான் போக மாட்டேன், உங்களுடன்கூடவே சாகும்வரை இருப்பேன் என்று சொன்ன அருமையான மருமகள் ரூத்.
  • கதிர் பொறுக்கியாவது மாமியாரை காப்பாற்ற
  • முன்வந்தாள் ரூத். * போவாஸ் ரூத்தை தவறாக நடத்தவில்லை.
  • தான் பணக்காரராக இருந்தும் ஏழ்மையிலிருந்த ரூத்தை திருமணம் செய்ய முன்வந்த பண்பாளன் போவாஸ்.
  • விதவையான மருமகள் நல்வாழ்வு வாழ வழிசெய்தவள் நகோமி.
  • மோவாபிய பெண்ணான ரூத் பரிசுத்த கோத் திரத்துத் தாயாக மாறினது தேவ கிருபை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *