IX. அன்னாள், சாமுவேல்
அன்னாளின் கணவன் எல்க்கானா. அன்னா ளுக்கு குழந்தை இல்லை. குழந்தையற்ற நிலை கணவனைவிட மனைவியை அதிகம் பாதிக் கிறது. மலடி என்ற வார்த்தையை அவளால் தாங் கிக்கொள்ள முடியாது. இப்படிப்பட்ட நிலையில் கணவன்மார் மனைவியை குறைகூறுவது உண்டு. மனதில் புண்படும்படி குத்திப் பேசுவதும் உண்டு. எல்க்கானா அப்படிச் செய்யவில்லை.
தன் மனைவியினிடத்தில் மிகுந்த அன்புள்ள வனாக இருந்தான். அவளுக்கு இரட்டிப்பான நன்மைகளைச் செய்தான். மற்றவர்கள் அவளை மனமடிவாகப் பேசினபோது, அன்னாளே அழாதே, பத்துப் பிள்ளைகளைப் பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்று ஆறுதலாகப் பேசினான்.
கணவன்மாரே! உங்கள் மனைவியிடம் உண்மை யான அன்பும் பாசமும் உடையவர்களாக இருக் கிறீர்களா? அன்பு வார்த்தையிலும், செயலிலும் நிச்சயம் வெளிப்படும். உங்கள் சகோதரிகளைவிட இனத்தாரைவிட இரட்டிப்பான அளவு உங்கள் மனைவியை நேசிக்கிறீர்களா? இரட்டிப்பான பங்கு கொடுக்கிறீர்களா? அன்பான வார்த்தைகளைப் பேசி ஆறுதல்படுத்துகிறீர்களா?
அன்னாள் ஊக்கமாக ஜெபித்தாள் சகோதரிகளே! உங்கள் வாழ்க்கையின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமலிருக்கும்போது சோர்ந்துபோய்விடக் கூடாது. ஊக்கமாக விசுவாசத் துடன் ஜெபிக்க வேண்டும். ஜெபத்தின்மூலம் எல்லா நன்மைகளையும் தேவனிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். அன்னாள் கண்ணீருடன் ஜெபித் தாள். பொருத்தனை பண்ணி ஜெபித்தாள். தன் இருதயத்தை தேவ சமூகத்தில் ஊற்றிவிட்டாள் (1 சாமு.1:10-15).
இப்படி ஜெபிக்கிற தாய்மார்க்ளுக்காக கர்த் தரைத் துதிக்கின்றேன். ஜெபித்த பின்பு அன்னாள் துக்கமுகமாக இருக்கவில்லை (1 சாமு.1:18). இது அவளுடைய விசுவாசத்தைக் காட்டுகிறது. கர்த்தர் தன் ஜெபத்திற்கு நிச்சயம் பதிலை அளிப்பார் என்று விசுவாசித்தாள். கர்த்தர் கிருபையாய் அவ ளுக்கு ஒரு மகனைக் கொடுத்தார். அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள்.
அன்னாள் தன் பொருத்தனையை நிறைவேற்றினாள்
அவள் பொருத்தனை பண்ணினபடியே சாமு வேல் சிறு பையனாக இருக்கும்போதே அவனை தேவனுடைய சேவைக்காக கொண்டுபோய் விட்டு விட்டாள். பிள்ளையில்லாமலிருந்த அவளுக்கு கர்த்தர் பிள்ளையைக் கொடுத்தபோது அவனை தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்பி இருப்பாள். ஆனாலும் கர்த்தருக்கு வாக்குக்கொடுத்த பொருத் தனையை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவளாக இருந்தாள்.
பொருத்தனைபண்ணி ஜெபித்த சகோதரிகளே! கர்த்தர் உங்கள் ஜெபத்திற்கு பதிலளித்தபின் பொருத்தனைகளை நிறைவேற்றினீர்களா? சாமு வேல் இன்னும் மிக சிறு பையனாகத்தான் இருந் தான். ஆனாலும் ஆலயத்தில் ஊழியம் செய்ய ஆசாரியனான ஏலியிடம் அவனை ஒப்படைத்து விட்டு வந்துவிட்டாள். இது தாய்மாருக்கு எளிதான காரியமல்ல. பலி செலுத்த வருடந்தோறும் ஆலயத் திற்குப் போகும்போதுதான் அவனை அவள் பார்த் தாள் என தெரிகிறது. அவனுக்கு ஒரு சின்ன சட்டையைத் தைத்துக்கொண்டு கொடுப்பாள் (1 சாமு.2:19). மன உறுதியுமுடைய தாயாக இருந்தாள்.
கர்த்தரின் சேவை செய்ய தன் மகனை ஒப்புக் கொடுத்தபோது கர்த்தர் அவளுக்கு மூன்று குமாரரையும், இரண்டு குமாரத்திகளையும் கொடுத்தார். அன்னாளின் கண்ணீரெல்லாம் ஆனந்தக் கண்ணீ ராய் மாறிற்று.
சிறுவன் சாமுவேலைப் பற்றி வேதம் கூறுவ தென்ன?
சாமுவேல் சிறுவயதிலும் கர்த்தரைப் பணிந்து கொண்டான் (1 சாமு.2:1). சாமுவேல் கர்த்தருடைய சந்நிதியிலே வளர்ந்தான் (1 சாமு.2:21).
சாமுவேல் கர்த்தருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தான் (1 சாமு.3:1).
எவ்வளவு அருமையான மகன். இதை வாசிக் கும் பெற்றோரே! உங்கள் பிள்ளைகளைப் பற்றி இப்படி சாட்சி கூறமுடியுமா? உங்கள் பிள்ளை களுக்கு சிறுவயதிலேயே ஜெபம் பண்ண, வேதம் வாசிக்கக் கற்றுக் கொடுக்கிறீர்களா? கர்த்தருக்குப் பணிவிடை செய்யும் ஆர்வத்தை ஊட்டுகிறீர்களா?
சிறுவன் சாமுவேலுடன் கர்த்தர் பேசினார் (1 சாமு.3:4,6,8,11)
சர்வ வல்லமையுள்ள ஆண்டவர், வானத்தை யும், பூமியையும் படைத்தவர். சிறுவன் சாமுவேலை பெயர்சொல்லி அழைத்து, அவனுக்கு தேவசெய்தி யைக் கொடுத்தார் என்பது எவ்வளவு ஆச்சரிய மானது. சிறுவன்தானே என்று அவனை விட்டுவிட வில்லை. கர்த்தர் இன்றும் நம் பிள்ளைகளுடன் பேச ஆயத்தமாயிருக்கிறார். கர்த்தரின் சத்தம் கேட்கும் நிலையில் நமது பிள்ளைகள் ஊக்கமாய் ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
சாமுவேல் வளர்ந்தான். கர்த்தர் அவனுடனே கூட இருந்தார் (1 சாமு.3:19).
அவன் கர்த்தருடைய தீர்க்கதரிசி என்று நாடே அறிந்துகொண்டது. கர்த்தர் தமது வார்த் தையினாலே சாமுவேலுக்கு தம்மை வெளிப்படுத் தினார் (1 சாமு.3:20,21).
சாமுவேல் இஸ்ரவேலை நியாயம் விசாரித் தான். அவனுடைய தலைமையிலே இஸ்ரவேலர் நிர்வாகம் பண்ணப்பட்டனர். சாமுவேல் ராஜாக் களை அபிஷேகிக்கும் சிலாக்கியம் பெற்றான். சவுலை அபிஷேகித்து ராஜாவாக்கினான். பின்பு தாவீதை அபிஷேகித்து ராஜாவாக்கினான். தேவன் அவனை அவ்வளவாய் கனப்படுத்தி உயர்த்தினார்.
சாமுவேலின் பிள்ளைகள் கர்த்தரைப் பின்பற்றவில்லை
சாமுவேல் தேசத்திற்கெல்லாம் நியாயாதி பதியாக இருந்தான். ஆனால் அவனுடைய பிள்ளை களான யோவேலையும், அபியாவையும் சரியாய் வளர்த்ததாக தெரியவில்லை. இவர்களை தேசத்தின் நியாயாதிபதிகளாய் நியமித்தான். ஆனால் அவர் கள் லஞ்சம் வாங்கி நியாயத்தைப் புரட்டிப் போட் டனர் (1 சாமு. 8:1-3).
பல பரிசுத்தவான்களின் குடும்பங்களில் காணப்படும் பரிதாப நிலை இது. பரிசுத்தவான் களின் பிள்ளைகள் தங்கள் பெற்றோரைப்போல கர்த்தரைப் பின்பற்றாமல் வழிதவறிப் போய்விடு கிறார்கள்.
இதை வாசிக்கும் பெற்றோரே!
உங்கள் ஜெபத்தினால், நேர்மையினால், நீதி யினால், தியாகத்தினால் கர்த்தர் இன்று உங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து உயர்த்தி இருக்கின்றார். ஆனால் இன்று உங்கள் பிள்ளைகள் வழிதவறிப் போகக் காரணமென்ன? உங்கள் குடும்பத்திற்கு நேரம் எடுக்காமல் வெளி ஊழியத்தை முக்கியப் படுத்தி குடும்பத்தை அலட்சியம் செய்ததால் வந்த வேதனை இது.
ஆரம்ப முதலே பிள்ளைகளை கர்த்தருக்குப் பிரியமாய் வளர்க்கக் கவனம் செலுத்துங்கள். குடும்பம் சரியில்லாமல் ஊழியம் செய்து, நிர்வாகம் பண்ணி பயன் இல்லை. கர்த்தர் உங்கள் ஒவ்வொரு வருக்கும் ஞானத்தைத் தர ஜெபிக்கிறேன்.
அன்னாள், சாமுவேல் குடும்பத்திலிருந்து கற்றுக் கொள்ளும் காரியங்கள்:
- அன்னாள் மலடியாக இருந்தபோதிலும் எல்க்கானா அவள்மீது மிகுந்த அன்புள்ளவனாயிருந்தான்.
- அன்னாள் சோர்ந்து போகாமல் விசுவாசத்துடன் பொருத்தனைபண்ணி ஜெபித்தாள்.
- சாமுவேல் சிறு பையனாக இருந்தபோதே பொருத்தனையை நிறைவேற்ற அவனை தேவ பணிவிடைக்கு அர்ப்பணித்தாள்.
- வருடம் ஒரு தடவை மட்டும் அவனைப் பார்த்து வந்தது அவளுடைய அர்ப்பணிப்பை யும் உறுதியையும் காட்டுகிறது.
- மூத்த மகனை கர்த்தர் பணிக்குக் கொடுத்த அன்னாளுக்குக் கர்த்தர் இன்னும் பல பிள்ளை களைக் கொடுத்து ஆசீர்வதித்தார்.
- சாமுவேல் சிறுவயதிலேயே தேவசமூகத்தில் வளர்ந்தான். தேவ அழைப்பை நேரடியாகப் பெற்றான்.
- தேவனுடைய தீர்க்கத்தரிசி என்று தேசம் முழு வதும் பெயர்பெற்றான். ராஜாக்களை அபிஷேகம் பண்ணும் சிலாக்கியம் பெற்றான்.
- சாமுவேல் தன் பிள்ளைகளை சரியாக வளர்க் காதது நமக்கு ஓர் எச்சரிப்பு.