1 இராஜாக்கள் – யோபு சுருக்கம் 

1 இராஜாக்கள் – யோபு சுருக்கம் 

1 இராஜாக்கள் 1 Kings

1,2 இராஜாக்கள் (1,2 சாமுவேல், 1,2 நாளாகமம் போலவே) எபிரேய வேதத்தில் ஒரே புத்தமாகவே உள்ளது. பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பான செப்துவஜென்டில் இரண்டாக பிரிக்கப்பட்டது. 1448 க்குப் பின் வந்த எபிரேய மொழி பெயர்ப்புகளிலும் பிரிக்கப்பட்டது. கிரேக்க மொழி பெயர்ப்பில் மூன்றாவது மற்றும் நான்காவது ராஜ்யத்தின் புத்தகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது சாமுவேல் புத்தகத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. லத்தீன் மொழிபெயர்ப்பான வல்கேட்டில் மூன்றாவது, நான்காவது இராஜ்யத்தை குறிக்கிறது.

1.2 சாமுவேல் புத்தகங்களும் 1, 2 இராஜாக்களின் புத்தகங்களும் அரசர்களின் வாழ்க்கையையும் அவர்களின் ஆட்சியையும், அவர்களுக்கும் தேவனுக்கும் இருந்த உறவையும் தெளிவாக குறிப்பிடுகிறது. இராஜாக்களின் புத்தகத்தில் இறுதியாக பாபிலோனில் அடிமைப்பட்ட காலம் வரை குறிப்பிடப்பட்டுள்ளது. 1 இராஜாக்களின் புத்தகத்தின் தொடர்ச்சியாகவே 2 இராஜாக்களின் புத்தகம் அமைந்துள்ளது. 1 இராஜாக்களின் புத்தகத்தின் கடைசிப் பகுதியில் ஆகாப் ராஜாவின் மரணமும் (1 இராஜா.22:37) பின்பு யோசபாத்தின் மரணமும் (1 இராஜா.22:50) குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் புத்தகத்தில் இச்சம்பவங்களின் தொடர்ச்சி காணப்படுகிறது.

எழுதியவர்

யூத பாரம்பரியத்தின் கருத்து 1, 2 இராஜாக்கள் புத்தகத்தை எழுதியவர் எரேமியா தீர்க்கதரிசி என்பதாகும். இதை யார் எழுதியிருந்தாலும், உபாகம புத்தகத்தை நன்கு அறிந்திருந்தவராவார்..

புத்தகத்தை எழுதியவர் பல்வேறு இடங்களிலிருந்து குறிப்புகளை சேகரித்திருக்கிறார் 1. சாலமோனுடைய நடபடிப் புத்தகங்கள் (11:41) 2. இராஜாக்களின் நாளாகம புத்தகம் (14:19) ஆகியவற்றை உதாரணமாக சொல்லலாம். வேத ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி இம்மூன்று புத்தகங்களும் (1,2 சாமுவேல், 1,2 இராஜாக்கள் 1,2 நாளாகமம்) அரண்மனையில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் புத்தகமாகும்.

இராஜாக்கள் புத்தகத்தில் எலியா மற்றும் எலிசா ஆகிய தீர்க்கதரிசிகள் ஊழியம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காலம்

இப்புத்தகத்தை இயற்றியோர் யோயாக்கீன் அரசன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்பும் (கி.மு 562 2 இராஜா 25:27-30) பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பு முன்னும் (கி.மு.538) இயற்றப்பற்றிருக்கலாம்.

நோக்கம், கருத்து

1, 2 இராஜாக்களின் புத்தகத்தில் நோக்கமும் கருத்தும் தெளிவான குறிப்பிடப்படாவிட்டாலும், இதை எழுதியவர் 1, 2 சாமுவேல் புத்தகத்தின் தொடர்ச்சியாகவும், கொடுக்கப்பட்டுள்ள வரலாற்று குறிப்புகளை வரிசையாகவும் அரசர்களின் ஆட்சியை படம் பிடித்து காட்டியுள்ளார். இப்புத்தகத்தின் ஊடாக ஓடும் கருத்து என்னவெனில், இஸ்ரவேலின் ஆசீர்வாதமும், இராஜாவின் ஆசீர்வாதமும் அவர்கள் தேவனின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடப்பதைப் பொறுத்து அமையும் என்பதாகும். தேவனுக்கு கீழ்படிந்து நடந்தால் ஆசீர்வாதமும், பாதுகாப்பும் உண்டு என்பதை தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமற்போனால் துன்பமும் அடிமைத்தனமும் உண்டு என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். இராஜாக்கள் புத்தகத்தில் அநேக இடங்களில் இராஜாக்களைப் பற்றிய குறிப்புகள் நாளாகம் புத்தகத்தில் எழுதியிருக்கிறது என வாசிக்கிறோம் (11:41,14:19,29,15:7,1,16:5,14,20,27). எனவே இராஜாக்களின் புத்தகத்தின் நோக்கம் அரசியல், சாமுதாய தெளிவாகிறது. காரியங்களை தெளிவுபடுத்த எழுதவில்லை என்பது

வட தேசமாகிய இஸ்ரவேலரின் இராஜாவாகிய உம்ரி தனது பேரரசை வலிமையுள்ளதாக்கி சமாரியாவை தலைநகராக்கி சிறப்பித்தார். இவர் மோவாபியரை மேற்கொண்டு இஸ்ரவேலரோடு இணைத்தார். (1இராஜா 16:23-28). இவர் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாததை செய்ததாக வாசிக்கிறோம்.(வ.25) இதைப்போலவே இரண்டாம் யெரோபெயாம் இஸ்ரவேலின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தினார். இவரைக் குறித்து சிறிதளவே புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (1 இராஜா 14:23-29). எனவே வரலாற்றிற்க்கு இவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தேவனோடு உள்ள கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. உறவுக்கே முக்கியத்துவம்

மக்களும் ராஜாவும் பாதைமாறும் பொழுது அவர்களை சரிப்படுத்த தீர்க்கதரிசியை தேவன் அனுப்புகிறார். அவர்கள் இறைவனின் வார்த்தையையும்,எச்சரிப்பையும், இவர்கள் மனம் திரும்பாத நிலையில் அவர்களுக்கு கிடைக்கப் போகும் தண்டனையையும் விளக்குகின்றனர்.

1 இராஜாக்கள் புத்தகத்தின் முதல் பகுதி சாலமோன் ராஜாவின் ஆட்சிகாலத்தை குறிப்பிடுகிறது. பின்பு ஆலயம் கட்டும் பணியைக் குறிப்பிடுகிறது. சாலமோனின் ஆட்சிக்குப்பின் தேசம் இரண்டாக பிரிந்தது. இஸ்ரவேல் என 10 கோத்திரத்தினர் ஒன்றாக இணைத்து வடதேசம் (இஸ்ரவேல் என செயல்பட்டதையும், யூதா மற்றும் பென்யமீன் கோத்திரங்கள் இணைந்து தென் தேசம் (யூதா ) என செயல்பட ஆரம்பித்ததையும் விளக்குகிறது.

எலியா தீர்க்கதரிசியின் ஊழியத்தோடு 1 இராஜாக்களின் புத்தகம் முடிவுறுகிறது.

2 இராஜாக்கள் 2 Kings

1.2 இராஜாக்கள் (1.2 சாமுவேல், 1, 2 நாளாகமம் போலவே) எபிரேய வேதத்தில் ஒரே புத்தமாகவே உள்ளது. பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பான செப்துவஜென்டில் இரண்டாக பிரிக்கப்பட்டது. 1448 க்குப் பின் வந்த எபிரேய மொழி பெயர்ப்புகளிலும் பிரிக்கப்பட்டது. கிரேக்க மொழி பெயர்ப்பில் மூன்றாவது மற்றும் நான்காவது ராஜ்யத்தின் புத்தகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது சாமுவேல் புத்தகத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. லத்தீன் மொழிபெயர்ப்பான வல்கேட்டில் மூன்றாவது, நான்காவது இராஜ்யத்தை குறிக்கிறது.

  1. 2சாமுவேல் புத்தகங்களும் 1, 2இராஜாக்களின் புத்தகங்களும் அரசர்களின் வாழ்க்கையையும் அவர்களின் ஆட்சியையும், அவர்களுக்கும் தேவனுக்கும் இருந்த உறவையும் தெளிவாக குறிப்பிடுகிறது. இராஜாக்களின் புத்தகத்தில் இறுதியாக பாபிலோனில் அடிமைப்பட்ட காலம் வரை குறிப்பிடப்பட்டுள்ளது. 1இராஜாக்களின் புத்தகத்தின் தெடர்ச்சியாகவே 2இராஜாக்களின் புத்தகம் அமைந்துள்ளது. 1இராஜாக்களின் புத்தகத்தின் கடைசிப் பகுதியில் ஆகாப் ராஜாவின் மரணமும் (1இராஜா 22:37) பின்பு யோசபாத்தின் மரணமும் (1இராஜா 22:50) குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் புத்தகத்தில் இச்சம்பவங்களின் தொடர்ச்சி காணப்படுகிறது.

எழுதியவர்

யூத பாரம்பரியத்தின் கருத்து 1, 2 இராஜாக்கள் புத்தகத்தை எழுதியவர் எரேமியா தீர்க்கதரிசி என்பதாகும். இதை யார் எழுதியிருந்தாலும், உபாகம புத்தகத்தை நன்கு அறிந்திருந்தவராவார்.

புத்தகத்தை எழுதியவர் பல்வேறு இடங்களிலிருந்து குறிப்புகளை சேகரித்திருக்கிறார்.

  1. சாலமோனுடைய நடபடிப் புத்தகங்கள் (11:41)
  2. இராஜாக்களின் நாளாகம புத்தகம் (14:19) ஆகியவற்றை உதாரணமாக

சொல்லலாம். வேத ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி இம்மூன்று புத்தகங்களும் (1,2 சாமுவேல், 1, 2 இராஜாக்கள் 1, 2 நாளாகமம்) அரண்மனையில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் புத்தகமாகும்.

இராஜாக்கள் புத்தகத்தில் எலியா மற்றும் எலிசா ஆகிய தீர்க்கதரிசிகள் ஊழியம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காலம்

இப்புத்தகத்தை இயற்றியோர் யோயாக்கீன் அரசன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்பும் (கி.மு 562 2 இராஜா 25:27-30) பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பு முன்னும் (கி.மு.538) இயற்றப்பற்றிருக்கலாம்.

நோக்கம், கருத்து

1, 2 இராஜாக்களின் புத்தகத்தில் நோக்கமும் கருத்தும் தெளிவான குறிப்பிடப்படாவிட்டாலும், இதை எழுதியவர் 1, 2 சாமுவேல் புத்தகத்தின் தொடர்ச்சியாகவும், கொடுக்கப்பட்டுள்ள வரலாற்று குறிப்புகளை வரிசையாகவும் அரசர்களின் ஆட்சியை படம் பிடித்து காட்டியுள்ளார். இப்புத்தகத்தின் ஊடாக ஓடும் கருத்து என்னவெனில், இஸ்ரவேலின் ஆசீர்வாதமும், இராஜாவின் ஆசீர்வாதமும் அவர்கள் தேவனின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடப்பதைப் பொறுத்து அமையும் என்பதாகும். தேவனுக்கு கீழ்படிந்து நடந்தால் ஆசீர்வாதமும், பாதுகாப்பும் உண்டு என்பதை தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமற்போனால் துன்பமும் அடிமைத்தனமும் உண்டு என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். இராஜாக்கள் புத்தகத்தில் அநேக இடங்களில் இராஜாக்களைப் பற்றிய குறிப்புகள் நாளாகம் புத்தகத்தில் எழுதியிருக்கிறது என வாசிக்கிறோம் (11:41,14:19,29,15:7,1,16:5,14,20,27). எனவே இராஜாக்களின் புத்தகத்தின் நோக்கம் அரசியல், சாமுதாய தெளிவாகிறது. காரியங்களை தெளிவுபடுத்த எழுதவில்லை என்பது

வட தேசமாகிய இஸ்ரவேலரின் இராஜாவாகிய உம்ரி தனது பேரரசை வலிமையுள்ளதாக்கி சமாரியாவை தலை நகராக்கி சிறப்பித்தார். இவர் மோவாபியரை மேற்கொண்டு இஸ்ரவேலரோடு இணைத்தார். (1 இராஜா 16:23-28). இவர் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாததை செய்ததாக வாசிக்கிறோம்.(வ.25) இதைப்போலவே யெரோப்பெயாம்(2) இஸ்ரவேலின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தினார். இவரைக் குறித்து சிறிதளவே புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (1 இராஜா 14:23-29). எனவே வரலாற்றிற்க்கு இவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தேவனோடு உள்ள உறவுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.

மக்களும் ராஜாவும் பாதைமாறும் பொழுது அவர்களை சரிப்படுத்த தீர்க்கதரிசியை தேவன் அனுப்புகிறார். அவர்கள் இறைவனின் வார்த்தையையும், எச்சரிப்பையும் இவர்கள் மனம் திரும்பாத நிலையில் அவர்களுக்கு கிடைக்கப் போகும் தண்டனையையும் விளக்குகின்றனர்.

பொருளடக்கம்

2 இராஜாக்களின் புத்தகம் எலிசா தீர்க்கதரிசியின் ஊழியத்தோடு ஆரம்பிக்கிறது. பின்பு இராஜாக்களின் பட்டியலோடு அவர்களின் குறிப்புகளும் தந்து யூதாவின் பாபிலோனிய சிறையிருப்போடு முடிகிறது.

1 நாளாகமம் 1 Chronicles

எபிரேய வேதத்தில் ‘டிப்ரி ஹேயாமிக்’ என அழைக்கப்படும் நாளாகமம் “நாட்களில் நடந்த நிகழ்வுகள்” என பொருள்படுகிறது. இப்புத்தகத்தின் பெயர் வேதத்தில் இராஜாக்களின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. (1 இராஜா 14:19,29, 15:7,23,31, 16:5,14,20,27, 22:46 இப்புத்தகம் 1, 2 சாமுவேல், 1,2 இராஜாக்கள் காலத்து நிகழ்வுகளை குறிப்பிடுகிறது. நாளாகமம் 1, 2 சாமுவேல், 1,2 இராஜாக்கள் ஆகிய இப்புத்தகங்களின் துணை நூல் எனவும் அழைக்கப்படுகிறது. காரணம் 1, 2 சாமுவேல், 1, 2 இராஜாக்களின் புத்தகங்களில் விடுபட்ட குறிப்புகளை 1, 2 நாளாகமம் கொடுக்கிறது. மூல வேதத்தில் 1, 2 நாளாகமம் ஒரே புத்தகமாக இடம் பெற்றிருந்தாலும் கிரேக்க மொழிபெயர்ப்பான செப்துவஜன்டில் இரண்டாக பிரிக்கப்பட்டு 1, 2 நாளாகமம் என அழைக்கப்பட்டது.

ஆசிரியர்

யூத பாரம்பரியத்தின்படி எஸ்றா இப்புத்தகத்தை எழுதினார் என்பது கருத்து. நாளாகமம், எஸ்றா ஆகிய புத்தகங்கள் ஒரே மொழி நடையை கொண்டிருப்பதும் இக்கருத்தை வலியுறுத்துகிறது. நாளாகமம் அரண்மனையில் உள்ளநாட்குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கான அதிகாரம், உரிமை எஸ்றாவுக்கு இருந்ததாலும் இப்புத்தகத்தை எஸ்றா எழுதியிருக்கலாம் என்பது உறுதிப்படுகிறது.

காலம்

நாளாகம் புத்தகத்தின் சம்பவ காலத்தை நோக்கின், இஸ்ரவேலின் முதல் அரசர் ஆட்சியில் நடந்த நிகழ்வுகள் முதல் எருசலேம் பாபிலோனியரால் சுட்டெரிக்கப்பட்ட காலம்வரையுள்ள சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. எனவே இப்புத்தகம் எழுதப்பட்ட காலம் இதற்குப் பின்பாகத்தான் இருக்கவேண்டும். இப்புத்தகத்தை எஸ்றா எழுதியிருப்பாரென்றால் சிறையிருப்பதற்கு பின் இஸ்ரவேலர் கானான் தேசத்தில் இருந்த நாட்களில் எழுதியிருக்க வேண்டும்.

நோக்கமும் செய்தியும்

1.இப்புத்தகத்தின் முக்கிய நோக்கம் அரசர்கள் காலத்தில் சம்பவங்களை, மக்கள் குறிப்பாக சிறையிருப்பிற்கு பின்வந்த மக்கள் அறிந்து கொள்ள எழுதப்பட்டதாகம். நடந்த

2.தேவனோடு உள்ள உளவு சரியாக இருந்தபொழுது தேசம் ஆசீர்வதிக்கப்பட்டது என்றும் மக்கள் தேவனைவிட்டு தூரம் சென்ற பொழுது துன்பத்தை அனுபவித்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

3.ஒவ்வொரு அரசர்களின் ஆவிக்குரிய நிலையும் அளவிடப்பட்டது. கர்த்தரின் பார்வையில் இவர்கள் எப்படியிருந்தார்கள் என்று கூறும் அளவுகோளாக காணப்பட்டது. (1 நாளா 14:2, 17:3, 21:6, 22:4)

  1. கர்த்தரின் ஆலோசனை எப்பொழுதும் அவரை தேடியவர்களுக்கு இருந்தது என இப்புத்தகம் சாட்சியாயிருக்கிறது. (1 நாளாகமம் 17:1, 18:6)

5.கர்த்தரின் ஆலயம் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டு முடியும்வரையுள்ள சம்பவங்கள் விளக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. (1நாளாகமம் 17, 2 நாளாகமம் 3-7)

  1. இஸ்ரவேலர் உடன்படிக்கையின் மக்கள் என்பதை தெளிவுபடுத்தி தேவன் ஏற்றவேளையில் அவர்களை விடுவிப்பார் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

2 நாளாகமம் 2 Chronicles

எபிரேய வேதத்தில் ‘டிப்ரி ஹேயாமிக்’ என அழைக்கப்படும் நாளாகமம் “நாட்களில் நடந்த நிகழ்வுகள்” என பொருள்படுகிறது. இப்புத்தகத்தின் பெயர் வேதத்தில் இராஜாக்களின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. (1 இராஜா 14:19,29, 15:7,23,31, 16:5,14,20,27, 22:46) இப்புத்தகம் 1, 2 சாமுவேல், 1, 2 இராஜாக்கள் காலத்து நிகழ்வுகளை குறிப்பிடுகிறது. நாளாகமம் 1, 2 சாமுவேல், 1, 2 இராஜாக்கள் ஆகிய இப்புத்தகங்களின் துணை நூல் எனவும் அழைக்கப்படுகிறது. காரணம் 1, 2 சாமுவேல், 1, 2 இராஜாக்களின் புத்தகங்களில் விடுபட்ட குறிப்புகளை 1, 2 நாளாகமம் கொடுக்கிறது. மூல வேதத்தில் 1, 2 நாளாகமம் ஒரே புத்தகமாக இடம் பெற்றிருந்தாலும் கிரேக்க மொழிபெயர்ப்பான செப்துவஜன்டில் இரண்டாக பிரிக்கப்பட்டு 1, 2 நாளாகமம் என அழைக்கப்பட்டது.

ஆசிரியர்

யூத பாரம்பரியத்தின்படி எஸ்றா இப்புத்தகத்தை எழுதினார் என்பது கருத்து. நாளாகமம், எஸ்றா ஆகிய புத்தகங்கள் ஒரே மொழி நடையை கொண்டிருப்பதும் இக்கருத்தை வலியுறுத்துகிறது. நாளாகமம் அரண்மனையில் உள்ள நாட்குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கவேண்டும். இதற்கான அதிகாரம், உரிமை எஸ்றாவுக்கு இருந்ததாலும் இப்புத்தகத்தை எஸ்றா எழுதியிருக்கலாம் என்பது உறுதிப்படுகிறது.

காலம்

நாளாகம் புத்தகத்தின் சம்பவ காலத்தை நோக்கின், இஸ்ரவேலின் முதல் அரசர் ஆட்சியில் நடந்த நிகழ்வுகள் முதல் எருசலேம் பாபிலோனியரால் சுட்டெரிக்கப்பட்ட காலம்வரையுள்ள சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. எனவே இப்புத்தகம் எழுதப்பட்ட காலம் இதற்குப் பின்பாகத்தான் இருக்கவேண்டும். இப்புத்தகத்தை எஸ்றா எழுதியிருப்பாரென்றால் சிறையிருப்பதற்கு பின் இஸ்ரவேலர் கானான் தேசத்தில் இருந்த நாட்களில் எழுதியிருக்க வேண்டும்.

நோக்கமும் செய்தியும்

1.இப்புத்தகத்தின் முக்கிய நோக்கம் அரசர்கள் காலத்தில் நடந்த சம்பவங்களை, மக்கள் குறிப்பாக சிறையிருப்பிற்கு பின்வந்த மக்கள் அறிந்து கொள்ள எழுதப்பட்டதாகம்.

  1. தேவனோடு உள்ள உளவு சரியாக இருந்தபொழுது ஆசீர்வதிக்கப்பட்டது என்றும் மக்கள் தேவனைவிட்டு தூரம் சென்ற பொழுது தேசம் துன்பத்தை அனுபவித்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

3.ஒவ்வொரு அரசர்களின் ஆவிக்குரிய நிலையும் அளவிடப்பட்டது. கர்த்தரின் பார்வையில் இவர்கள் எப்படியிருந்தார்கள் என்று கூறும் அளவுகோளாக காணப்பட்டது. (1 நாளா 14:2, 17:3, 21:6, 22:4) 

  1. கர்த்தரின் ஆலோசனை எப்பொழுதும் அவரை தேடியவர்களுக்கு இருந்தது என இப்புத்தகம் சாட்சியாயிருக்கிறது. (1 நாளாகமம் 17:1, 18:6) 

5.கர்த்தரின் ஆலயம் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டு முடியும்வரையுள்ள சம்பவங்கள் விளக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. (1 நாளாகமம் 17, 2 நாளாகமம் 3-7)

6.இஸ்ரவேலர் உடன்படிக்கையின் மக்கள் என்பதை தெளிவுபடுத்தி தேவன் ஏற்றவேளையில் அவர்களை விடுவிப்பார் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

எஸ்றா

எஸ்றா என்ற இப்புத்தகத்திற்கு, இப்புத்தகத்தின் தலைமை நபரான எஸ்றாவின் பெயரே கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்றா என்பதற்கு உதவியாளர்’ என்று பொருள். இவர் செராயாவின் மகன். ஆசாரியரான ஆரோன் வழிவந்தவர். (7:5) சிறைபிடித்து செல்லப்பட்ட மக்களை (அர்த்த சஷ்டா மன்னன் காலத்தில்) எருசலேமுக்கு திரும்ப அழைத்து வந்தார். இவர் எபிரேய மொழியில் தேர்ச்சி பெற்றவராக காணப்பட்டார்.

எஸ்றா – நெகேமியா தொடர்பு

நெகேமியா 1:1ல் அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிக்கைகள என குறிப்பிட்டிருந்து எஸ்றா நெகேமியா என இரு வேறு பிரிவுகளாக எண்ணத் தோன்றினாலும், இரண்டும் ஒரே புத்தகமாகவே எபிரேய வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எசுபியஸ் (கி.பி.37-100) மற்றும் எபிரேய தல்மாத் (பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பிலும் எஸ்றா புத்தகத்தை குறிப்பிடுகிற வேளையில் நெகேமியா குறிப்பிடப்படவில்லை ஆரிகன் (கி.பி.185-253) முதலாவது, இரண்டு புத்தகங்களையும் பிரித்து 1 எஸ்றா. 2 எஸ்றா என குறிப்பிட்டுள்ளார். வேதத்தின் லத்தீன் மொழிபெயர்ப்பான வல்கேட் (கி.மு.390-405) இரண்டடையும் பிரித்து எஸ்றா, நெகேமியா என குறிப்பிட்டுள்ளார்.

எழுதியவர்

ஒரு சில பகுதிகள் தன்மையில், தன் ஞாபகத்தில் உள்ளவைகளை எழுதியதுபோல காணப்படுகிறது. 7:27-28, 8:1-34, 9 மற்ற ஒருசில பகுதிகள் படர்க்கையில் எழுதியதுபோல காணப்படுகிறத. 7:1-26,10 இதன் மொழி நடையை கூர்ந்து நோக்கின் இவ்விரு பகுதிகளும் ஒருவரால் எழுதப்பட்ட ஒப்புமை காணப்படுகிறது.

வேத வல்லுனர்கள் எஸ்றா, நெகேமியாவை எழுதியவரே 1,2 நாளாகமத்தை எழுதியிருக்க வேண்டும். நாளாகமத்தின் தொடர்சியாகவே எஸ்றா 2 அமைந்துள்ளதை கவனிக்க முடிகிறது. 2 நாளாகமத்தின் முடிவு பகுதியும் எஸ்றாவின் ஆரம்ப பகுதியும் தொடர்புடையதாகவே காணப்படுகிறது. எனவே இது எஸ்றாவாகவே இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

காலம்

புத்தகத்தின் காலத்தை அறிய முயற்சித்தால், இப்புத்தகத்தின் முதற்பகுதி இஸ்ரவேலர் செருபாபேல் தலைமையில் பாபிலோனிய சிறையிலிருந்து திரும்பிய காலத்தைக் குறிக்கிறது. இந்நூல் வரலாற்று புவியியல் குறிப்புகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்நூலின் தலைமை பாத்திரமான எஸ்றா எழுதியதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இக்கூற்று சரியாக இருக்குமானால் இப்புத்தகம் கி.மு.454 முதல் கி.மு.443 வரையுள்ள காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

நோக்கமும் செய்தியும்

இஸ்ரவேலர் தேவனுக்கு விரோதமாக செயல்பட்டபொழுது அசீரிய மற்றும் பாபிலோனிய பேரரசரால் சிறைபிடிக்கப்பட்டனர். பின்னர் இஸ்ரவேலரின் மனம்திரும்புதலினால் தேவன் கோரேஸ் என்கிற பெர்சிய மன்னர் மூலமாக அவர்களை விடுவித்தார். இவர்களின் முதல் கூட்டம் செருபாபேல் தலைமையில் விடுதலை பெற்றனர். இக்கட்டளையின் சூழல், தேவன் செயல்படுகிறார் எனவும், மக்கள் வேண்டுதலை தேவன் கேட்கிறார் என்பதற்கும் சான்றாக அமைகிறது.

பாபிலோனிலிருந்து எருசலேம் திரும்பிய இரண்டாவது கூட்டம் அகஸ்வேரு காலத்தில் எஸ்றா தலைமையில் பயணப்பட்டது. இவர்கள் நான்கு மாதங்கள் பயணம் செய்து எருசலேம் வந்தடைந்தது.

ஆவிக்குரிய வாழ்க்கையில் மக்களை சரிப்படுத்த எஸ்றா அதிகமான முயற்சிகள் எடுப்பதை இப்புத்தகத்தில் காணமுடிகிறது. மேலும் கலாச்சார ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கிறார் (9:2, 10:10,11), நியாயப்பிரமாண முறைகளை விளக்குகிறார் (நெகேமியா 8:13), இவர் மக்களுக்காக தேவனிடத்தில் வேண்டுதல் செய்ததின் விளைவாக (10:1-44) ஒரு மறுமலர்ச்சி ஏற்படுகிறது.

நெகேமியா Nehemiah

நெகேமியா புத்தகத்தின் பெயர், தலைமை பாத்திரமான நெகேமியாவின் பெயரைவைத்து கொடுக்கப்பட்டது. நெகேமியா என்பதற்கு. ‘யெகோவா என் ஆறுதல்” பெயர். இவர் பாபிலோனிய அர்த்தசஸ்டா ஆட்சிகாலத்தில் என அரண்மனையில் பானபாத்திரக்காரனாக பணியாற்றினர். இவர் இறைவனிடம் அதிக விசுவாசமுள்ளவர் (4:14)

எஸ்றா – நெகேமியா தொடர்பு

நெகேமியா 1:1ல் ‘அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிக்கைகள் என குறிப்பிட்டிருந்து எஸ்றா நெகேமியா என இரு வேறு பிரிவுகாக எண்ண தோன்றினாலும், இரண்டும் ஒரே புத்தகமாகவே எபிரேய வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எசுபியல் (கி.பி.37-100) மற்றும் எபிரேய தல்மாத் (பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பிலும்) எஸ்றா புத்தகத்தை குறிப்பிடுகிற வேளையில் நெகேமியா குறிப்பிடப்படவில்லை ஆரிகன் (கி.பி.185-253) முதலாவது, இரண்டு புத்தகங்களையும் பிரித்து 1 எஸ்றா, 2 எஸ்றா என குறிப்பிட்டுள்ளார். வேதத்தின் லத்தீன் மொழிபெயர்ப்பான வல்கேட் (கி.மு.390-405) இவ்விரண்டு புத்தகங்களையும் பிரித்து எஸ்றா, நெகேமியா எனக் குறிப்பிட்டுள்ளது.

எழுதியவர்

எஸ்றாவில் குறிப்பிட்டுள்ளது போல 1,2 நாளாகமம், எஸ்றா, நெகேமியா இப்புத்தகங்களை எழுதியவர் அல்லது தொகுத்தவர் ஒருவராகவே இருக்க வேண்டும். இந்நூலில் நெகேமியாவின் வாழ்க்கை குறிப்பு தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்றா நெகேமியாவுக்கு நெருக்கமாக இருந்திருக்க கூடும்(8:13). ஏனவே எஸ்ரா இப்புத்தகத்தை எழுதியிருக்கக்கூடும்.

காலம்

நெகேமியா புத்தகத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் சுமார் 12 வருட கால் இடைவெளியில் நடந்தவைகளாகும். நெகேமியா பாபிலோனிருந்து எருசலேம் வந்து மறுபடியும் பெர்சியா சென்று மறுபடி எருசலேம் வந்துசேர்ந்த காலங்களை உள்ளடக்கியது. இப்புத்தகம் கி.மு.430ல் எழுதியிருக்கக் கூடும்.

செய்தியும் நோக்கமும்

நெகேமியா தான் வாழ்ந்த இடத்தில் செய்த பணிகள் உத்தமமானவை. இதநிமித்தம் மன்னன் இவரை எருசலேம் அனுப்புகின்றார். தன்னுடைய தேசத்தை குறித்த கரிசனையும் வெளிப்படுகிறது. எருசலேம் வந்து தன் தேசத்தை சீர்படுத்துகிறார். மற்ற மக்களின் உதவி தேவ ஒத்தாசையோடு கிடைக்கிறது. முதல் பகுதி இக்காரியங்களை குறிப்பிடுவதோடு முடிவடைகிறது.

இரண்டாம் பகுதி ஆவிக்குரிய மறுமலர்ச்சியைக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, சமய ஒழுக்கமும் நியாயப்பரமாணத்திற்கு கீழ்படிதலும், ஆலய காரியங்களுக்கு தங்களை உடன்படுத்துவது மேலும் பல சீர்திருத்தங்களை குறிப்பிடுகிறதாக உள்ளது.

எஸ்தர் Esther

எஸ்றா நெகேமியா போலவே இப்புத்தகமும் முதன்மை பாத்திரத்தின் பெயரை பெற்றுள்ளது. எஸ்தர் என்பது பெர்சிய பெயராகும் இதன் பொருள் ‘கிழக்கு வெள்ளி’ என்பதாகும். இப்பெயர் பாபிலோனிய தேவதை இஷ்டார் என்பதோடு தொடர்புள்ளதாகவும் கருதப்படுகிறது. எஸ்தரின் எபிரெயர் பெயர் ‘நறுமண செடி’ என்றும் பொருளுடைய அத்சாள் என்பதாகும்.(2:7)

எழுதியவர்

எஸ்தர் புத்தகம் யாரால் எழுதப்பட்டது எனத் தெளிவாக குறிப்பிட முடியாவிடினும், இப்புத்தக குறிப்புகளிலிருந்து சில முடிவுகளை எடுக்க முடியும். இப்புத்தகத்தில் யூத பண்டிகை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் யூதருக்கு வந்த பிரச்சனை விடுதலையாக மாறியதை மையமாக வைத்து கூறப்பட்டுள்ளதால் இது ஒரு யூதரால் எழுதப்பட்டிருக்க வேண்டும். மேலும் எழுதியவர் பெர்சிய வாழ்க்கை முறையையும் கலாச்சாரத்தையும் தெளிவாக கூறுவதால் பெர்சியாவில் வாழ்ந்த யூதராயிருக்க வேண்டும் மொர்தேகாய் இந்நிகழ்வுகளை கடிதமாக அனுப்பியிருக்கிறார் என 9:20 எழுதி வாசிக்க முடிகிறது. எனவே இப்புத்தகத்தை மொர்தேகாயோ அல்லது இக்குறிப்புகளை கொண்டு வேறு ஒருவர் எழுதியிருக்கலாம்.

காலம்

எஸ்தர் எழுதப்பட்ட காலத்தை கணிக்கும்பொழுது இது கி.மு.460 ஆக இருக்கக்கூடும். இது எஸ்றா பாபிலோனிலிருந்து எருசலேம் செல்லும் முன் உள்ள காலமாகும். புத்தக குறிப்பிலிருந்து பூரிம் பண்டிகை ஆசாரிக்கப்பட்டு சில காலங்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும் (9:19).மேலும் பெர்சிய பேரரசு கீரிஸ் பேரரசால் மேற்கொள்ளும் முன் (கி.மு.331) எழுதப்பட்டிருக்க வேண்டும்.

செய்தியும், நோக்கமும்

இப்புத்தகத்தில் இறைவனின் பெயர் குறிப்பிடப்படவில்லை எனினும் எல்லா செயல்பாட்டிலும் இறைவனின் திட்டமும்’ பாதுகாப்பும். ஆலோசனையும் வெளிப்படுகிறதை காணமுடிகிறது. தேவனின் பெயர் காணப்படாததின் காரணம் ஒருவேளை நாட்டில் காணப்பட்ட ஆட்சி முறையாக இருக்கலாம். இராஜாக்கள் தங்கள் மக்கள் தங்களை மட்டுமே வணங்க வேண்டுமென விரும்பினர். சில வேளைகளில் தாங்கள் வழிபடும் கடவுளை மட்டுமே மக்கள் வழிபடவேண்டுமென நிர்பந்தித்தனர். இப்படிப்பட்ட காலத்தில் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கலாம்.

இஸ்ரவேலை பாதுகாக்க தேவன் ஏற்படுத்திய திட்டமாக எஸ்தர் ராணியாகிறார். அரசனிடம் யூதர்களுக்காக பேசவும், இஸ்ரவேலருக்கு எதிராக செயல்பட்ட ஆமான் தண்டிக்கப்படவும் எப்படி எஸ்தரை தேவன் பயன்படுத்துகிறார் என்பது தெளிவாகிறது.

எஸ்தர், மொர்தேகாயின் விசுவாசம் விரிவாக காண்பிக்கப்படுகிறது. துன்பம் வரும்போது இறைவனை நோக்கிப்பார்கிற செயல் ஒரு எடுத்துக்காட்டாக குறிப்பிடப்படுகிறது.

கர்த்தர் யூத மக்களை பாதுகாத்த மகிழ்ச்சியை பண்டிகையாக பூரீம் பண்டிகையாக ஆசாரிக்க அழைப்புவிடுக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தேவன் கொடுத்த வெற்றி ஆண்டாண்டு காலமாக (ஆதார் மாதம், 14,15 தேதிகள்) நினைவுகூறுதலின் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

இப்புத்தகம் அரித்தசஸ்டாவின் விருந்தில் ஆரம்பித்து யூதர்களின் விருந்தில் முடிவடைகிறது.

யோபு Job

இந்நூலின் பெயர் இதன் முதன்மை பாத்திரமான யோபுவின் பெயரே கொடுக்கப்பட்டுள்ளது. ‘அயோப்’ என்ற எபிரேய பெயருக்கு ‘மனம் வருத்துதல்’ ‘பகைமையாயிருத்தல்’ என பொருள் இதன் விரிவாக்கப்பட்ட பொருள் மனம் திரும்புதல்’ என்பதாகும். யோபுவின் பெயர் நோவா (ஆதி6:9) தானியேல் (தானி.1:8, 6:3) ஆகியோருடன் ஒப்பிடப்பட்டு, நீதிமானாக கருதப்படுகிறது (எசேக்கியல் 14:14,20). யோபு பொறுமையுள்ளவன் என புதியஏற்பாட்டில் யாக்கோபு குறிப்பிடுகிறார் (யாக்கோபு 5:11).

ஆசிரியர்

யோபு புத்தகத்தில் யோபுவும் அவருடைய நண்பர்கள் (ஆலோசகர்கள்) பற்றியும் அதிகமாக குறிப்பிடப்பட்டிருப்பினும், இவர் இப்புத்தகத்தை எழுதவில்லை. எனினும் இஸ்ரவேலர் ஒருவரே இந்நூலை எழுதியிருக்க வேண்டும். காரணம் தேவனின் உடன்படிக்கைப் பெயரான யெகோவா என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இப்புத்தகத்தை ஆக்கியோர் தேவனின் ஒத்தாசையோடு அல்லது வழிநடத்துதலோடு கூடிய குறிப்புகளை பெற்றிருக்கிறார். ஏனெனில் முகவுரையில் தேவசந்நிதியில் நடைபெற்ற காரியங்கள் இவருக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவன் மட்டுமே அறியக்கூடிய காரியங்களை இவர் தெரிவிக்கிறதைக் காணமுடிகிறது.

காலம்

யோபு எழுதப்பட்ட காலத்தைப்பற்றி இரண்டு கருத்துக்கள் கூறப்படுகிறது. 1) யோபுவையும் அவருடைய வரலாற்று அமைப்பையும் குறித்து 2) இந்நூலை எழுதியவர் காலத்தைவைத்தும் இரண்டு குறிப்புகள் கூறலாம். இரண்டாவது கருத்தை மையமாக வைத்து கணிக்கும் பொழுது சாலமோன் அரசர் காலமுதல் பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்ட காலம்வரை உள்ள ஆண்டுகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது சரியாக இருக்குமானால் யோபுவை குறித்து எழுதியவர் வேறு குறிப்புகளிலிருந்தோ அல்லது செவிவழிச் செய்தியைக் கேட்டோ எழுதியிருக்கவேண்டும். யோபுவின் வரலாற்று

அமைப்பு, கி.மு. 2000 முதல் 1000 வரையுள்ள காலத்தை வெளிப்படுத்துகிறது. இவர் முற்பிதாக்களின் காலத்தில் வாழ்ந்திருக்க கூடும். இவர் நூறு வயதிற்குமேல் வாழ்ந்திருக்கிறார். இவருடைய செல்வங்கள் கால்நடைகளில் குறிப்பிடப்படகிறது. குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராகவும் செயல்படுகிறார். சபேயர், கல்தேயர் ஆகிய கூட்டத்தினர் முன் குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள்.

யோபு வாழ்ந்த இடம்

யோபு ஊத்ஸ் என்ற இடத்தில் வாழ்ந்தார். இது தெற்கு லீபனோனின் கிழக்கே அமைந்துள்ளது என வேதத்தில் பார்க்கலாம் (எரேமியா 25:20, புலம்பல் 4:21) வேத ஆராய்ச்சியாளர் கருத்துப்படி யோபு யோர்தான் நதிக்கு கிழக்கேயுள்ள தேசத்திலாவது சவக்கடலுக்கு தெற்கேயுள்ள தேசத்திலாவது வாழ்ந்திருக்கக் கூடும். யோபு ஒரு ஏதோமியனாக இருக்கலாம். காரணம் ஊத்ஸ் என்பவன் ஏசாவின் வம்சாவழியான ஏதோமியன் (ஆதி 36:28, 1நாளா1:42) மேலும் ‘ஊத்ஸ் தேசத்து ஏதோம் குமாரியே’ என புலம்பல் 4:21,22ல் வாசிக்கிறோம். ஊத்ஸ் ஏதோமுடன் தொடர்புடையது.

நோக்கமும், செய்தியும்

மனிதனின் துன்பவேளையில் வெளிப்படும் தேவ நீதியை இப்புத்தகம் தெளிவாக்குகிறது. வாழ்க்கையின் அனுபவத்தில் எழுகின்ற கேள்வியை இப்புத்தகம் எழுப்பி பதில் கூறுகிறது. தேவ பக்தியுள்ள மனிதன், உண்மையுள்ள மனிதன், நல்ல குணமுடையவன், மீறுதலுக்கு விலகுகிற பாவமற்ற மனிதன் மிக அதிகமான துன்பத்திற்கு உள்ளாகிறார். இச்சூழலில் இவருக்கு எந்த ஆறுதலும், வழி நடத்துதலும் கிடைக்கவில்லை. கடந்துவந்த நண்பர்களும் பூர்வங்களின் இறையியலை பேசினர். இதற்கான பதில் வேதத்திற்கே உரிய முறையில் கொடுக்கப்படுகிறது.

ஆதிமுதல் இறைவன்-மனிதர் உறவை முறிக்க முயலும் மூன்றாவது நபர் சாத்தான். இவன் மனிதனை தூண்டுகிறவன் (ஆதி 3, மத்தேயு 4:1), குற்றம் சுமத்துகிறவன். முன்னுரையில் இவன் மனிதனை இறைவரிடமிருந்து பிரிக்க முயல்கிறதை பார்க்க முடிகிறது.

தேவனுடைய மக்கள் எவ்வளவு துன்பத்தின் நடுவிலிருந்தாலும் தேவனுடைய பார்வையிலிருந்து மறைவதில்லை. எவ்வளவு இழந்தாலும் திரும்பப்பெறுவார்கள் என்பதை இப்புத்தகம் உறுதிப்படக்கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *