சங்கீதம் – உன்னதப்பாட்டு சுருக்கம் 

சங்கீதம் – உன்னதப்பாட்டு சுருக்கம் 

சங்கீதம் Psalms

துதி என்றும் பொருளுடைய ‘டெகிலிம்’ என எபிரேய பதத்தில் சங்கீதம் அழைக்கப்படுகிறது. சங்கீதத்தின் ஒரு தொகுப்பு ‘ஈசாயின் மகனான தாவீதின் விண்ணப்பங்கள்’ என இருந்திருக்கிறது (சங்கீதம் 72:20) சங்கீதம் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

  • பகுதி 1 சங்கீதம் 1-41
  • பகுதி 2 சங்கீதம் 42-72
  • பகுதி 3 சங்கீதம் 73-89
  • பகுதி 4 சஙிகீதம் 90-106
  • பகுதி 5 சங்கீதம் 107-150 

ஆசிரியர்கள்

சங்கீதம் மற்ற புத்தகங்களை போல ஒரு ஆசிரியரால் எழுதப்பட்டாமல் பலரால், பல காலங்களில், சூழ்நிலைகளில் எழுதப்பட்டு தொகுக்கப்பட்ட ஒரு பல நூலாகும்.

150 சங்கீதங்களில் 33 சங்கீதங்களில் எந்த தலைப்பும் இல்லாமல் காணப்படுகிறது. சங்கீத புத்தகத்தில் 51 சங்கீதகளின் ஆசிரியர்கள் தெளிவாக்கப்படாத நிலையில் உள்ளது. மீதமுள்ள சங்கீதங்களை ஏழு ஆசிரியர்கள் இயற்றியுள்ளனர்.

  • தாவீது – 3-9, 11-23, 34,41, 51-65,68-70,101,103, 108-110, 122,124,131,138-145
  • சாலமோன் – 72,127
  • மோசே – 90
  • எஸ்றானாகிய ஏமான் – 8
  • ஆசாபு – 50, 73-83
  • கோராகு சந்ததியார் – 44-49, 84, 85,86,87
  • எஸ்றானாகிய ஏதான் – 89

எஸ்றானாகிய ஏமான், ஏதான் ஆகியோர் ஞானிகள் என இராஜாக்களின் புத்தகத்தை எழுதியவர் குறிப்பிடப்பட்டுள்ளார் (1இராஜா 4:31)

புத்தகங்களின் பிரிவுகள்

சங்கீதங்களை கருத்துக்கேற்ப சில பிரிவுகளாக பிரிக்கலாம்

  • அறிவை உணர்த்துபவை 1,10,14,18
  • தேவனுக்கு நன்றியை செலுத்துபவை 9,17,22,29,34,116
  • அரசர்களைப் பற்றியது 2,19,20,44
  • துன்பகால புலம்பல் 3,5,43,59
  • தூய்மை பயணம் 23,47,49,77
  • பரலோக மகிமையை வெளிப்படுத்துபவை 46,67,92,95
  • சீயோனின் மேன்மை 41,45,75,86
  • இறைவனின் துதி (அ) புகழ் 8,28,32,103,150
  • நம்பிக்கை கொடுப்பவை 4,11,15,26
  • பாதுகாப்பை உணர்த்துபவை 18,20,27,28,46,91

சங்கீதத்தில் தீர்க்கதரிசனங்கள்

பல இடங்களில் பாடல்களாக வந்துள்ள சங்கீதம் தீர்கதரிசனங்களாயும் நிறைவேறியுள்ளது.

  • 2:7 மத்தேயு 3:17
  • 8:6 எபிரேயர் 2:8
  • 16:10 மாற்கு 16:6,7
  • 22:1 மத்தேயு 27:46
  • 22:7,8 லூக்கா 23:35
  • 22:16 யோவான் 20:2527
  • 22:18 மத்தேயு 27:35,36
  • 32:20 யோவான் 19:32-36
  • 35:11 மாற்கு 14:57,58
  • 35:19 யோவான் 15:25
  • 40:7,8 எபிரேயர் 10:7
  • 41:9 லூக்கா 22:47
  • 45:6 எபிரேயர் 1:8
  • 69:9 யோவான் 2:17
  • 69:21 மத்தேயு 27:34
  • 109:4 லூக்கா 23:24
  •  109-8 அப்போஸ்தலர் 1:20
  • 110:1 மத்தேயு 22:44
  • 110:4 எபிரேயர் 5:6
  • 118:22 மத்தேயு 21:42
  • 118:26 மத்தேயு 21:9

நீதிமொழிகள் Proverbs

சரியான உண்மையான, நியாயமான வார்த்தைகள் என்னும் பொருள் கொள்ளும் நீதிமொழிகள், ஒருவன் இவ்வுலக வாழ்க்கையில் வாழவேண்டிய முறை குறித்து சொல்லப்பட்ட புத்தகமாகும். இது அரசனுக்கும் ஆண்டிக்கும் பொருத்தக்கூடிய ஒன்றாக காணப்படுகிறது. சுருங்கக்கூறின் அனுதின வாழ்கையின் நெறிமுறையை கூறுகின்ற புத்தகமாகும்.

எழுதியவர்

இப்புத்தகத்தை எழுதியவரில் ஒருவர் தன்னை ஞானி என வெளிப்படுத்துகிறார். (22:7, 24:23). 1:1ன்படி இவர் தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமான ஞானி சாலமோனாகும். இந்த ஞானி சாலமோன் மாத்திரமல்ல 30:1ல் யாக்கேயின் மகன் ஆகூர் ஈத்தியேலுக்கு சொன்ன வார்த்தைகளாக வாசிக்கலாம். ஆகூர், ஈத்தியேல் ஆகிய இவ்விருவருடைய பெயர்கள் வேதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. உபதேசங்கள் என 31:160 வாசிக்கலாம். இவறைப்பற்றிய குறிப்பும் காணமுடிவதில்லை. எனினும் நீதிமொழிகளின் அதிகமான பகுதி சாலமோனையே சார்ந்திருக்கிறது.

காலம்

இந்நூலின் முக்கிய பகுதிகள் கி.மு.10ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இருப்பினும் இப்புத்தகம் முழுவடிவம் பெற்றது அல்லது மொழிபெயர்த்து எழுதப்பட்டது எசேக்கியா ராஜாவின் காலத்தில் என்பது புத்தக குறிப்பிலிருந்து வெளிப்படுகிறது (25:1) இது கி.மு.715 முதல் கி.மு. 686 வரையுள்ள காலமாகும்.

நோக்கம்

நீதிமொழிகளின் முன்னுரைப்படி எழுதியதன் நோக்கம் விவேகத்தையும் அறிவையும், நடக்கவேண்டிய வழியையும் இறையோருக்கு காண்பிக்க (1:4) எழுதப்பட்டுள்ளது. புத்திமான் கேட்டு தேறவும் (1:5) வாலிபருக்கும், இளையவருகளுக்கும் வாழ்க்கை முறையை கற்றுக்கொடுக்கவும். சிறந்த வாழ்க்கைக்கு வழிநடத்தவும் (1:8,10, 2:1, 3:1, 4:1, 5:1) எழுதப்பட்டது. தவறுகளிலிருந்து. தடைகளிலிருந்து தப்பித்து நடக்க வேண்டுவன, செய்யதகாதவைகள் இவைகளை விளக்க நீதிமொழிகள் எழுதப்பட்டுள்ளது. எல்லா ஞானத்திற்கும் ஆதாரம் தேவன் என்பதையும் குறிப்பிட தவறவில்லை.

  • 1-10 இவ்வதிகாரங்கள் வாலிபர்களுக்கான நடைமுறை
  • 11-20 மக்கள் பின்பற்றவேண்டிய காரியங்கள்
  • 21-30 அதிகாரிகள், அரசர்களுக்கான ஆலோசனைகள்
  • 31 பெண்களுக்கான வழிமுறை

செய்தி

கடவுளின் வழியை பின்பற்றுகிறவன் செழிப்பான் என்பதே இப்புத்தகத்தின் அடிப்படை தத்துவமாகும்.

நீதிமொழிகள் சன்மார்க்க வாழ்கையின் ஆதாரமாக காணப்பட்டாலும். ஆவிக்குரிய ஆலோசனைகளையும் ஏற்றமுறையில் கொடுக்கிறது. கர்த்தருக்கு பிரியமான காரியங்கள் எவை என்பதை காட்டுகிறது (8:35, 12:1, 16:7). தேவன் மேல் நம்பிக்கைவைக்க தூண்டுகிறது (3:5, 26), தேவனுக்கு மறைவானது ஒன்றுமில்லை. அவர் தம்முடைய தெளிவாக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளை பாதுகாக்கிறார் என்ற கருத்துக்கள்

வாழ்க்கையில் இரண்டு பாதை உண்டு. நீதிமொழிகள் தெரிந்தெடுக்க வேண்டிய பாதை எது என்பதை விளக்குகிறது. இதை ஆதாரமாக கொண்டு நன்மை, தீமையை அதிகமாக ஒப்புமைபடுத்தி கூறப்பட்டுள்ளது.

பிரசங்கி Ecclesiastes

‘கோகெலெத்’ என எபிரேய மொழியில் அழைக்கப்படும் பிரசங்கி ஒரு ஆத்துமாவின் வரலாறாக சித்தரிக்கப்படுகிறது. எபிரேய மொழியில் இதன் பொருள் ‘அவையில் பேசுகிறவர்’ என்பதாகும். அவை என்றால் மக்கள் கூட்டம். இதில் திருச்சபையும் அடங்கும். திருச்சபையில் பேசுகிறவன் பிரசங்கி அழைக்கப்படுகிறார். எனவே இப்புத்தகத்திற்கு பிரசங்கி எனப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

எழுதியவர்

இப்புத்தகத்தை எழுதியவர் யார் என வெளிப்படையாக குறிப்பிடப்படாவிட்டாலும் இது சாலமோன் ராஜா என்பதை யூகிக்க முடிகிறது. (1:1,12,16, 2:4-9, 7:26-29). எப்பொழுது எழுதினார் என்பது தெளிவாக இல்லை. இருப்பினும் இஸ்ரவேல் தேசம் யூதா, இஸ்ரவேல் என இரண்டாக பிரிவதற்கு முன் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

நோக்கம்

தன்னுடைய அதிகமான அனுபவங்களைவைத்து பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ள காலத்தை ஆசிரியர் நோக்கிப் பார்க்கிறார். மனிதன் தன் இறப்பை பற்றி அதிகமாக கூற இயலாது. இறப்புக்கு முன் உள்ள வாழ்வு பிரச்சனை நிறைந்ததாகவும், சுயநலமுடையதாகவும் காணப்படுகிறது என குறிப்பிடுகிறார்.

தன்னுடைய புரிந்துகொள்ளுதலைவைத்து ஆசிரியர் மனிதனை அளவிடுகிறார். மனிதனால் செய்யமுடிந்த காரியங்களை நோக்கும்பொழுது ஞானமுள்ளவனாலும், தேவனுக்கு பிரியமானவனாக இருந்தாலும், வரன்முறைக்கு உட்பட்டது (1:13, 16- 18, 7:24, 8:16-17). மனிதன் தேவனுடைய திட்டத்தையோ அல்லது ஏன் வாழுகிறோம் என்பதையோ அறிய முடிகிறதில்லை.

மனிதன் இவ்வுலகத்தை தன் வயப்படுத்திவிடலாம், அதை கட்டுப்படுத்த முடியுமென உழைக்கிறான். ஆனால் அது வீணானது என அறியாதிருக்கிறான். (1:4, 2:11, 17,26, 4:4,16, 6:19)

விசுவாசத்தின் மூலம் நாம் கண்டுகொள்ளுவது என்னவெனில் தேவன் தன் நோக்கப்படி அல்லது சித்தப்படி எல்லாவற்றையும் நடப்பிக்கிறார். (3:1-15, 5:19, 6:1- 2,9:1) மனிதன் இதை ஏற்றுக்கொள்ளவேண்டும். எனவே தேவன் கொடுப்பதற்கேற்ப பெறுமையாக வாழ்ந்து, வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். மனிதன் தன்னுடைய இயலாமையை ஏற்றுக்கொண்டு, அதிகமான எதிர்பார்ப்புகளோடு தோல்வியை தழுவி வருத்தப்பட்டு சோர்ந்துபோகாது வாழவேண்டும். மேலும் தேவனுக்கு பயந்து கற்பனைகளை கைக்கொள்ள வேண்டும் (12:13

செய்தி

தேவனை மையமாககொள்ளாத வாழ்கை நோக்கமற்றதும் பொருளற்றதுமாகும். அவரில்லாமல் எதுவும் பாதுகாப்பில்லை (2:25). அவர் மூலம் வருகின்ற வாழ்வையும் நன்மையான காரியங்களையும் நன்றியோடு ஏற்றுக்கொண்டு மகிழ்சியாயிருக்க வேண்டும்.

உன்னதபாட்டு Song of Solomon

எபிரேயத்தில் இப்புத்தகம் சாலமோனுடைய பாடலின் பாடல் என அழைக்கப்படுகிறது. இதன் பொருள் சாலமோனால் அல்லது சாலமோனுக்காக பாடப்பட்ட சிறந்த பாடல் என்பதாகும். (உபாகமம் 10:17 கர்த்தாதி கர்த்தர், தேவாதி தேவன், 1தீமோத் 6:15 இராஜாதி ராஜா என குறிப்பிட்டுள்ளது போல பாடலின் பாடல் என குறிப்பிடப்பட்டுள்ளது.)

தமிழில் உன்னதப்பாட்டு என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உன்னதம் என்றால் உ உயர்ந்த என பொருள். இப்பதம் அதிகமாக தேவனுக்கடுத்த வார்த்தையாகவே பயன்படுத்தப்படுகிறது. ‘உண்னதமானவர்’ ‘உன்னத ஸ்தலத்தில் வாசம்பண்ணுபவர் தேவன்’ எனவே இப்புத்தகத்தை தேவனுக்கடுத்த பாடல் என்று சொன்னால் மிகையாகாது.

எழுதியவர்

உன்னதப்பாட்டு 1:1ல் இப்புத்தகத்தை எழுதியவர் சாலமோன் என தெளிவாக குறிப்பிடுவதாலும், இவர் பெயர் ஒரு முறை பயன்படுத்தப்பட்டிருப்பதாலும் (1:1,5, 3:7,9,11, 8:11-12), இவர் இராஜா என குறிப்பிட்டிருப்பதாலும் (1:4,12), இது சாலமோன் ராஜாவாகத்தான் இருக்கவேண்டும்.

காலம்

சாலமோன் இப்புத்தகத்தை எழுதியிருப்பாரானால் இது எழுதப்பட்ட காலம் கி.மு.10ம் நூற்றாண்டு அதாவது ஏறத்தாழ 935ஆம் ஆண்டாகும்.

நோக்கமும் செய்தியும்

இறைவனுடைய அன்பு பல வழிகளில் வெளிப்படுகிறது. இவற்றில் ஒன்று கணவன் மனைவி அன்பு ஆகும். அதை திருமறையில் பல இடங்களில் பார்க்க முடிகிறது (சங்கீதம் 45:6-11, ஓசியா 2:19-20) மேலும் இயேசுக்கிறிஸ்துவை மனவாளனாகவும் திருச்சபையை மனவாட்டியாகவும் உருவகப்டுத்தியிருப்பதை புதிய ஏற்பாட்டில் தெளிவாக காணமுடிகிறது. (எபேசியர் 5:21-31, வெளி 19:7-9 2 கொரிந்தியர் 11:2) இயேசுவும் இது சார்ந்த உவமையை கூறியிருக்கிறார். (மத்தேயு 25:1-10)

இந்நூலின் செய்தி சாலமோன் மாறுவேடத்தில் சூலமித்தியாளை சந்திக்கிறார் அன்பு கொள்ளுகிறார் பின்பு மறுபடி வருவதாக வாக்குகொடுத்து செல்கிறார். இதற்கும் இயேசுவினுடைய வாழ்விற்கும் அவர் மறுபடியும் வருவேனென்று வாக்குகொடுத்து சென்றதற்கும் அதிகமான தொடர்பு உண்டு.

எபிரேயர்கள் கருத்துப்படி நீதிமொழிகள் பிரகாரம் போன்றும் பிரசங்கியின் புத்தகம் பரிசுத்த ஸ்தலமாகவும் உன்னதப்பாட்டு மகாபரிசுத்த ஸ்தலமாகவும் உருவகித்து கூறப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *