வேதாகம குடும்பம்:  X. ஏலியின் குடும்பம்

வேதாகம குடும்பம்:  X. ஏலியின் குடும்பம்

1சாமுவேல் புத்தகத்தின் முதல் சில அதிகாரங் களில் ஏலியின் குடும்பத்தைக் குறித்து விளக்கப் பட்டுள்ளது. ஏலி தேவனுடைய ஆலயத்தில் ஊழியம் செய்துவந்த தேவ ஊழியன். அவனுக்கு ஓப்னி, பினெகாஸ் என்ற இரு குமாரர் இருந்தனர். தேவ னுக்கு ஊழியம் செய்யும் அருமையான வாய்ப்பைப் பெற்ற குடும்பம். தேவசமூகத்தில் தினமும் தரித் திருக்கத்தக்க சிலாக்கியம் பெற்றிருந்தனர். ஆனாலும் ஏலியின் பிள்ளைகள் துன்மார்க்கமாய் நடந்தனர். ஏலி தன் பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்க்க வில்லை என்று தேவன் வேதனைப்பட்டார்.

ஏலியின் பிள்ளைகள் செய்த பாவம் 

1. பேலியாளின் மக்களாய் இருந்தனர் (1 சாமு.2:12) 

அதாவது துன்மார்க்கராயிருந்தனர். ஆவிக்குரிய பெற்றோருக்குப் பிள்ளைகளாய் பிறப்பது எவ்வளவு சிலாக்கியம். அந்த சிலாக்கியத்தைப் பெற்றிருந்தும் அதன்படி நடவாமல் பாவ வாழ்வில் வாழ்ந்துவந்தனர் ஓப்னி, பினெகாஸ்.

2.அவர்கள் கர்த்தரை அறியவில்லை (1 சாமு.2:12) 

எல்லா மக்களையும்விட கர்த்தரை அதிகமாய் நெருங்கி வாழ்ந்து வந்தஇவர்கள் கர்த்தரை அறி யாத புறஜாதி மக்களைப் போல வாழ்ந்தது எத்தனை வேதனை. அநேக ஊழியருடைய பிள்ளைகள் இந்த நிலையில்தானிருக்கின்றனர் என்பது கசப் பான உண்மை.

3. கர்த்தருக்குக் காணிக்கை செலுத்துமுன் பலவந்த மாய் எடுத்துக்கொள்ளுதல்

கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தினபின்பு ஆசாரியனுக்குரியது கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால் கர்த்தருக்குரியதை பலியாக செலுத்தும் முன்பதாகவே பலவந்தமாக எடுத்துக்கொள்ளும் கொள்ளைக்கூட்டமாக செயல்பட்டனர் ஏலியின் பிள்ளைகளும் வேலைக்காரரும்.

கர்த்தருக்கு ஒழுங்காக தசமபாகம் காணிக்கை கொடுக்காமல் தங்கள் பிள்ளைகளுக்கு செலவு செய்யும் எந்தப் பணமும் இந்த நிலையில் உள்ளது தான். ஊழியத்திற்குக் கொடுக்கப்பட்ட பணத்தை ஊழியத்திற்குச் செலவு செய்யவிடாமல் ஊதாரித் தனமாய் செலவு செய்யும் ஊழியரின் பிள்ளைகள் மேலும் தேவனுடைய கோபாக்கினை நிச்சயம் வரும்.

அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரியதாயிருந்தது (1 சாமு.2:17).

4.ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூடுகிற பெண் களுடன் விபச்சாரம் (1 சாமு.2:22)

கர்த்தரைத் தொழுதுகொள்ள திரள்கூட்டம் மக்கள் இஸ்ரவேல் நாட்டின் பல பலபகுதிகளிலி ருந்தும் வருவார்கள். இப்படிப்பட்ட கூட்டத்தில் வரும் பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொண் டார்கள். இது ஜனங்கள் மத்தியில் பேசப்பட்டது.

5. தகப்பனுக்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந் தார்கள் (1 சாமு.2:25)

ஏலி தன் பிள்ளைகளின் பாவங்களைக் குறித்து கேள்விப்பட்டான். அவர்களிடம் இதைக்குறித்துப் பேசினான். ஆனால் அவர்கள் தகப்பனை மதிக்க வில்லை. அவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய வில்லை.

சிறு வயதிலேயே பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்காத பெற்றோர்கள் யாவரும் சந்திக்கும் பரிதாப நிலை இதுதான். ஒழுங்கற்று வளர்ந்தவர் களிடம் திமிர் கூடிவிடும். கீழ்ப்படிதல் இருக்காது. அவன் அழிவிற்கு ஆயத்தமாகிவிட்டான் என்று அர்த்தம். சிலர் இந்த நிலையில்தான் பிரசங்கியார் களுக்கு கடிதம் எழுதி, காணிக்கை அனுப்பி என் மகனுக்காக ஜெபியுங்கள் என்று புலம்புவார்கள். நீ உன் பிள்ளைக்கு ஏற்ற காலத்தில் புத்திசொல்ல தவறவிட்டுவிட்டபின்பு புலம்பி என்ன பயன்? எந்த பிரசங்கியார் ஜெபம் பண்ணினாலும் அவன் திருந்தாத நிலைக்குப் போய்விட்டானே!

ஏலியின் பாவமென்ன?

மேற்போக்காய் பார்த்தால் ஏலி நல்லவன் போல் தோன்றலாம். தன் பிள்ளைகளுக்கு புத்தி சொன்னான் அல்லவா என்று அநேகர் கேட்க லாம். கர்த்தர் அவனைக் குறித்துச் சொல்வதைக் கவனியுங்கள். கர்த்தர் அவனுக்கு இரண்டுபேர் மூலம் எச்சரிக்கைக் கொடுத்தார்.

தேவமனுஷன் ஒருவன் திட்டமாய் தீர்க்கதரி சனம் உரைத்தான் (1 சாமு.2:27-36). தேவனுடைய மனுஷன் ஒருவன் ஏலியிடம் வந்தான் என்று 1 சாமு.2:27ல் கூறப்பட்டுள்ளது. கர்த்தர் இந்த தேவ மனுஷன்மூலம் எச்சரிப்புக் கொடுத்தார். இவன் பெயர் என்ன என்று சொல்லப்படவில்லை.

ஏலியின் பாவங்கள்

1. என் பலியை, காணிக்கையை உதைக்கிறாய் (1 சாமு.2:29)

தேவசமூகத்தில் மக்கள் பயபக்தியுடன் செலுத் தின காணிக்கையை இவன் மதிக்கவில்லை. அலட்சியப்படுத்தினான்.

என் வாசஸ்தலத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என் பலியையும், என் காணிக் கையையும், நீங்கள் உதைப்பானேன்? (1 சாமு. 2:29).

2. காணிக்கைகளைக் கொண்டு தன்னைக் கொ ழுக்கப் பண்ணினான் (1 சாமு.2:29)

மக்கள் தியாகம் பண்ணிக்கொடுக்கிற காணிக் கைகளை எவ்வளவு பயபக்தியுடன் செலவு செய்ய வேண்டும்? காணிக்கைகளில் பிரதானமானவை களை எடுத்து தங்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு செலவு செய்தனர்.

மக்கள் தியாகம் பண்ணி தசமபாகம், காணிக் கை கொடுக்கின்றனர். அவர்களில் சிலர் இன்னும் வாடகை வீட்டில் இருந்துகொண்டு சந்தோஷ மாக தியாகம் பண்ணி தசமபாகம் கொடுக்கின் றனர். இப்படிப்பட்ட மக்களிடம் வாங்கும் பணத் தை போதகர்கள் குடும்பம் எப்படி கவனமாய் செலவு செய்ய வேண்டும்? அவசியமான பொருட் களை வாங்கினால் பரவாயில்லை. ஆடம்பர வாழ்விற்கும் இப்படிப்பட்ட ஏழைகளின் பணம் செலவானால் வேதனை உண்டாகாதா?

வெளிநாடுகளிலிருந்து காணிக்கை அனுப்பும் அநேகர் அந்த நாட்டு நிலையில் ஏழைகள்தான். அந்த ஏழ்மை நிலையிலும் தியாகம் பண்ணி வெளி நாட்டு ஊழியர்களுக்குக் காணிக்கை அனுப்பு கிறார்கள். இங்கே பல சந்தர்ப்பங்களிலும் அந்தப் பணம் ஆடம்பர செலவுகளுக்கே பயன்படுத்தப் படுகிறது.

3. கர்த்தரைவிட தன்பிள்ளைகளை அதிகம் மதித் தான் (1 சாமு.2:29)

பிள்ளைகள் மேல் அன்பாயிருப்பது தவறு அல்ல. கர்த்தரைவிட பிள்ளைகளை அதிகம் நேசிக்கும் நிலை வந்துவிட்டால் பிள்ளைகளுக்கு ஆபத்து வந்துவிட்டது என்று கூறலாம். கர்த்தரைவிட பிள்ளைகளை அதிகம் நேசிக்கும்போது, பணமும் பிரயாசமும் அவர்களுக்காகவே செலவாகும்.

என் ஜனமாகிய இஸ்ரவேலின் காணிக்கைகளி லெல்லாம் பிரதானமானவைகளைக் கொண்டு உங்களைக் கொழுக்கப்பண்ணும்படிக்கு, நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பா னேன் என்கிறார் (1 சாமு.2:29).

4. பிள்ளைகளை அடக்கி வளர்க்காத ஏலி (1 சாமு.3:13)

ஏலி தன் பிள்ளைகளுக்குப் புத்தி சொன்னது போல எழுதப்பட்டிருந்தாலும், கண்டித்து வளர்க் காத ஒரு தகப்பனாயிருந்தான். அவர்களை அடக்கி வளர்க்காதது பாவமாக கருதப்பட்டது. சாமுவேல் என்ற சிறுவன் மூலமும் கர்த்தர் ஏலியை எச்சரித் தார்

பெற்றோர்களே! ஊழியர்களே!

உங்கள் சாட்சி என்ன? நான் சொல்லித்தான் பார்க்கிறேன். அவன் கேட்கமாட்டேங்கிறான் என்று சாக்குப்போக்குச் சொல்லி தப்பிக்கலாம் என்று எண்ண வேண்டாம். நரகத்திற்குப் பிள்ளைகளை ரெடி பண்ணிவிட்டீர்கள் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

தண்ணீரில் கைகழுவினதால் பிலாத்து யோக்கி யனல்ல. கூடியிருந்தவர்களினிமித்தம் தன் வாக்கை காப்பாற்ற யோவான்ஸ்நானகனின் தலையை தட்டில் கொண்டுவரச் சொன்ன ஏரோது குற்றமற்ற வனல்ல. நரகத்திற்கு நேரே போகிறான் என்று தெரிந்த பின்பும் ஏனோ தானோ என்று இருந்து கொண்டு சாக்குப்போக்கு சொல்ல வேண்டாம். தப்ப முடியாது. முழுக்குடும்பத்திற்கும் ஆபத்து வருகிறது. 

எச்சரிக்கை நியாயத்தீர்ப்பு

  • 1) ஒப்னி, பினெகாஸ் பெலிஸ்தியரால் கொல்லப்பட் டனர்.
  • 2) ஏலி பிடரி முறிந்து செத்தான்.
  • 3) இஸ்ரவேலைவிட்டு தேவமகிமை விலகிப்போ யிற்று – இக்கபோத்

ஏலியின் குடும்பத்திலிருந்து கற்றுக்கொள்ளும் காரியங்கள்:

  • தேவனுக்கு ஊழியம் செய்த ஏலி பிள்ளைகளை சரியாக வளர்க்கவில்லை.
  • தகப்பனுக்குக் கீழ்ப்படியாத பிள்ளைகளாக இருந்தார்கள் அவன் மக்கள்.
  • கர்த்தர் பலமுறை எச்சரித்தும் பிள்ளைகளைக் கண்டிப்புடன் நடத்தாமல் அவர்கள் இஷ்டத் திற்கு விட்டுவிட்டான்.
  • தேவனுக்கு விரோதமாக பாவம் பாவம் செய்ய துணிகரம் கொண்ட பிள்ளைகளாயிருந்தனர்.
  • கர்த்தரின் காணிக்கைகளைக் கொண்டு ஆடம்பர செலவு செய்தனர்.
  • கர்த்தரைவிட தன் பிள்ளைகளை அதிகம் மதித்ததாக கர்த்தர் வேதனைப்பட்டார்.
  • கர்த்தரின் பலியையும் காணிக்கையையும் அலட்சியப்படுத்திய குடும்பம்.
  • கர்த்தரின் உடன்படிக்கைப் பெட்டி எதிரிகளிடம் போகக் காரணமான குடும்பம்.
  • ஒரே நாளில் பிள்ளைகள் கொல்லப்பட்டனர். ஏலியும் மரித்தான்.
  • தேவமகிமை இஸ்ரவேலைவிட்டுப் போக காரணமான குடும்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *