You are currently viewing வேதாகம குடும்பம்: XI. சூனேமில் கனம்பொருந்திய பெண்

வேதாகம குடும்பம்: XI. சூனேமில் கனம்பொருந்திய பெண்

XI. சூனேமில் கனம்பொருந்திய பெண்

இந்தக் குடும்பத்திலிருந்த பெண்ணுக்கு “கனம் பொருந்தியவள்” என்ற பட்டத்தை வேதம் கொ டுத்துள்ளது பாராட்டுக்குரியது. இந்தப் பெண் நல்ல செல்வாக்குடைய குடும்பத்தின் தலைவியாக இருந் திருக்க வேண்டும். செல்வம் நிறைந்த குடும்பத்தி லுள்ள பெண்களில் பலர் கனத்திற்குரியவர்களாக இருப்பதற்குப் பதில் தலைக்கனம் உள்ளவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். இவள் சகல நற்பண்பு களுமுள்ளவளாக இருந்தாள் என்பதை இவள் சரித்திரம் விளக்குகிறது.

தேவ மனிதனை வருந்தி உபசரித்தாள் எலிசா தீர்க்கதரிசி இவள் ஊருக்குப் போயி ருந்தபோது அவனை தன் வீட்டிற்கு வந்து சாப் பிடும்படி வருந்திக் கேட்டுக்கொண்டாள். சில பெண்களுக்கு தங்கள் வீட்டிற்கு விருந்தினர் வருவதே பிடிக்காது. அப்படியே தப்பித்தவறி வந்துவிட்டாலும் அன்பற்ற உபசரணையைப் பார்த்து வந்தவன் ஓடியே போவான். ஒரு தடவை எங்கள் வீட்டிற்கு வாருங்கள் என்று சிலர் அழைப்பார்கள். ஆனால் என்றைக்கு வரவேண்டும் என்று திட்டமாய் சொல்ல மாட்டார்கள். ஒரு வருடம் கழித்து அதே நபரைப் பார்க்கும்போது ஒரு தடவை எங்கள் வீட்டிற்கு வாருங்கள் என்று ஏனோதானோ என்று அழைப்பார்கள்.

இவள் எலிசாவை விருந்து சாப்பிட அழைத் தாள், வருந்திக் கேட்டுக்கொண்டாள் என்று கூறப் பட்டுள்ளது. அதாவது இவள் அழைத்தபோது எலிசா இப்போது வர வசதி இல்லை என்று மறுத் திருக்கலாம். ஆனால் இவள் விடவில்லை. கண்டிப் பாக வாருங்கள் என்று பலமுறை அழைத்து, நல்ல உணவு கொடுத்திருக்க வேண்டும்.

நமது பொருளாதார நிலைக்கு ஏற்றபடி விருந்து இருக்க வேண்டும். சில ஏழைகள் நல்ல விருந்து கொடுப்பார்கள். சில செல்வந்தர்கள் மிக சாதாரண உணவு கொடுப்பார்கள். தேவ மக்க ளுக்கு நாம் எப்போதும் சிறப்பானதைச் செய்ய வேண்டும். விருந்துக்கு அழைத்துவிட்டு கஞ்சத் தனம் காட்டக்கூடாது. கடன் வாங்கி விருந்து கொடுக்கக்கூடாது. நமக்கு நல்ல வசதி இருக்கும் போது சிறப்பான விருந்து கொடுக்க வேண்டும். குறிப்பாக பரிசுத்தவான்களுக்கு மிக நல்ல விருந்து கொடுத்தால் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

எலிசா பலமுறை இந்த வீட்டிற்கு வந்து உணவு உண்டான்

ஒருதடவை உணவு கொடுத்ததோடு நின்று விடவில்லை. மறுபடியும் நீங்கள் வரவேண்டும். எப்போதெல்லாம் இந்த ஊருக்கு வருகிறீர்களோ அப்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று அவள் அழைத்திருக்க வேண்டும்.எலிசா வும் இந்த பெண்ணின் அன்பின் உபசரணையைக் கண்டு பல தடவை இங்கே வர ஆரம்பித்தான்.

சிலர் ஒரு தடவை விருந்து கொடுத்ததோடு தங்கள் உபசரணையை முடித்துக்கொள்வார்கள். விருந்துக்குப் போகிறவர்களும் மறுபடியும் அந்த வீட்டிற்குப் போக விரும்பமாட்டார்கள். ஆனால் சூனேம் சகோதரி மிகச் சிறந்தவள்.

எலிசாவை பரிசுத்தவான் என்று கண்டு கொண்டாள்

தன் வீட்டிற்கு வரும் ஆட்கள் எப்படிப்பட்ட வர்கள் என்று பகுத்தறியும் தன்மை அநேக பெண் களுக்கு உண்டு. இவளும் அப்படிப்பட்டவள்தான். ஆட்களை நிதானிக்கத் தெரியாத பெண்கள் பலர் பிரச்சனையில் மாட்டிக்கொள்வார்கள். தன் வீட்டிற்கு வருகிற ஊழியக்காரர் எப்படிப்பட்டவர், அவர் சரி யான உபதேசமுள்ளவரா, சரியான வாழ்வு வாழ்பவரா என்று நிதானிக்கத் தெரியாமல் வம்பில் மாட்டிக்கொள்ளுகிற பெண்கள் உண்டு. தவறான போதனையில் சிக்கி சத்தியத்தை விட்டு, சபையை விட்டு விலகிப்போன பெண்களுமுண்டு.

சுவிசேஷகர் என்ற பெயரில் சிலர் வருவார்கள், தீர்க்கதரிசி என்ற பெயரில் வருகிற ஆண்களும் பெண்களுமுண்டு. எச்சரிப்பில்லாமல் சரியாய் நிதா னிக்காமல் வீட்டிற்குள் அனுமதித்து வினையை விலைக்கு வாங்காதீர்கள். இந்தப் பெண் எலிசா வை பரிசுத்தவான் என்று நன்கு புரிந்து கொண்டு உபசரித்தாள்.

எலிசா தன் வீட்டில் தங்க ஓர் அறையை கட்டினாள்

எலிசா தீர்க்கதரிசிக்கு விருந்து கொடுத்து ஆசீர்வாதங்களைப் பெற்றுப் பழகிப்போன அவள் எலிசா ஒரு தனி ஆள், அவருக்கு வீடு, குடும்பம் கிடையாது. எனவே நம் வீட்டில் தங்கலாமே என்ற நல்ல எண்ணம் அவளில் உருவாயிற்று. உணவு கொடுப்பது கொஞ்ச செலவுதான். மாடியில் அறை கட்டுவது அதிக செலவானது. ஆனாலும் தன் செல் வத்தை அதற்கு செலவு செய்வது தனக்கு ஆசீர் வாதம் என்று உணர்ந்தாள். இப்படிச் செய்ய வேண்டுமென்று எலிசா கேட்கவில்லை. தேவை யை அறிந்து, உணர்ந்து செயல்பட்ட குணசாலி யான பெண் இவள்.

கணவனை மதித்த கனம் பொருந்திய மனைவி இவள் நல்ல திறமையுள்ளவளாக இருந்தாள். இவளுடைய கணவனுடைய திறமை, அறிவைவிட இவளுடைய செயல்பாடு சிறந்ததாகத் தெரிகிறது. ஆனாலும் குடும்பத்திற்குத் தலைவன் கணவன் என்பதை அவள் மறக்கவில்லை. வரம்புமீறி செயல் படாத கனத்திற்குரியவளாகத் திகழ்ந்தாள். சில திறமையுள்ள பெண்கள் கணவனை மதிப்பதில்லை. அவர் ஒரு பேதை, விபரம் தெரியாதவர் என்று சொல்லுவார்கள். விபரம் தெரியாத திறமையற்ற கணவனாக இருப்பதால்தான் இத்தனை வருடம் உன்னைவிட்டுப் போகாமல் இருக்கிறார் என்று நான் சொல்வதுண்டு.

தேவைகளை முன்னறிந்து செயல்பட்டாள் நாம் மெத்தையின் மேல் ஒரு சிறிய அறை வீட்டைக் கட்டி அதில் அவருக்கு ஒரு கட்டிலை யும், மேஜையையும், நாற்காலியையும், குத்து விளக்கையும் வைப்போம் (2 இராஜா.4:10).

மாடி வீடு கட்டி, மாத வாடகைக்கு விட்டு வருமானத்தைத் தேடும் இந்தக் கால குடும்பத்திற்கு இவள் முற்றிலும் வித்தியாசமான பெண். பணத்தை விட பரிசுத்தவான்களை நேசித்த பெண் இவள்.

சிலர் வீடு கட்டுவார்கள். தேவையான பொருட் களை வைக்கமாட்டார்கள். சரியான கட்டில் இருக் காது, மேஜை, நாற்காலி இருக்காது, விளக்கு இருக்காது, பாத்ரூமில் பக்கெட் இருக்காது, டிப்பர் இருக்காது. இந்தப் பெண் வாழ்ந்தது சுமார் 2600 வருடங்களுக்கு முன்பு. ஆனாலும் அந்தக் காலத் திலும் இவ்வளவு கவனமாக, யோசனையாக செயல் பட்டது ஆச்சரியமாயிருக்கிறது. வெறும் பாயும், தலையணையும் போதும் என்று எண்ணவில்லை.

தன் தேவைகளை ஒருபோதும் வெளியே சொல்லாத பெருமாட்டி அவள்

இவ்வளவு நன்மைகளையும் எலிசா தீர்க்க தரிசிக்கு செய்தாலும் தனக்கிருந்த ஒரு பெரிய தேவையை அவள் சொல்லவேயில்லை. இவளுக்கு குழந்தையில்லாமலிருந்தது. பொதுவான இப்படிப் பட்ட நிலையில் எலிசாவைப் பார்த்த முதல் நாளி லேயே அவள் சொல்லியிருக்க முடியும். அப்படித் தான் யாரும் செய்வார்கள். அப்படிச் சொல்லியிருந் தாலும் தவறு ஒன்றுமில்லை. இத்தனை மாதங் களுக்குப் (அல்லது வருடங்கள்) பின்பும் அவள் தன் தேவையை சொல்லவே இல்லை.

எலிசா அவளை அழைத்து, உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்? ராஜா வினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேச வேண்டிய காரியங்கள் 143உண்டோ என்று கேட்டான் (2இரா.4:13)

அப்படிக் கேட்ட பின்பும் தன் தேவையை அவள் சொல்லவில்லை. நான் என் ஜனங்கள் மத்தியில் சுகமாகத்தான் வாழ்கிறேன் என்றாள். ஆச்சரியமான பெண் இவள். எலிசாவிற்கு அரண்மனைவரை செல்வாக்கு இருந்தது. ஆனாலும் அவள் அப்படி ஒரு நன்மையை எதிர்பார்க்கவில்லை. கர்த்தர் உனக்கு குழந்தைப் பாக்கியம் தருவார்

‘இவளுக்கு குழந்தை இல்லை என்பதை தன் வேலைக்காரன் மூலம் அறிந்துகொண்ட எலிசா “ஒரு பிராண உற்பத்தி காலத் திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய்” என்று கூறினான். எலிசா அவளுக்காக ஜெபிக்கவில்லை. அவன் கண்ணைத் திறந்துகொண்டே தீர்க்கதரிசன மாக சொன்ன வார்த்தைகள் நிறைவேறிற்று. 10 மாதத்திலே கர்த்தர் அவளுக்கு ஒரு மகனை கொடுத்தார்.

குழந்தை இல்லை என்று கண்ணீர்விட்டு அழ வில்லை. எலிசாவே நீர் எனக்கு குழந்தை கிடைக்க ஜெபித்து குழந்தை கிடைத்தால் உமக்கு ஒரு அறை கட்டித் தருவேன் என்று நிபந்தனை விதிக்கவில் லை. தேவ மனுஷனுடைய இருதயத்தைக் குளிரப் பண்ணும்போது கேட்காமலேயே கர்த்தர் அற்புதம் செய்வார்.

மகன் மரித்தபோதும் விசுவாசத்தை விட்டு விடவில்லை

அவள் மகன் வளர்ந்து வந்தான். ஒருநாள் வியாதிப்பட்டு மரித்து விட்டான். மரித்த மகனை மாடியில் கட்டியிருந்த அறையில் எலிசாவின் கட்டிலின்மேல் வைத்தாள், கதவை பூட்டினாள். நடந்ததை தன் கணவனிடம் சொல்லவில்லை. அவள் கணவன் இப்படிப்பட்ட அதிர்ச்சியை தாங்க முடியாதவனாக இருந்திருக்கலாம்.

எலிசாவிடம் போகத் தீர்மானித்து தன் கணவ னிடம், ஒரு வேலைக்காரனும் பயணம் செய்ய கழுதையும் வேண்டுமென்று கேட்டாள். கணவ னுக்கு ஒன்றுமே தெரியப்படுத்தாமலேயே எலிசா விடம் போய் அவன் காலைப் பிடித்துக்கொண்டாள். எலிசா வந்து ஜெபித்து, செத்த பிள்ளை உயிர் பெறச் செய்தான்.

னேமியாளின் பணிவு

எலிசாவிடம் போய் அவன் காலைப்பிடித்து மன்றாடினாள். பிள்ளை உயிர்பெற்றபின் எலிசா வின் பாதத்தில் விழுந்து தரைமட்டும் பணிந்தாள்.

இதை வாசிக்கும் சகோதரிகளே! இவளிடம் காணப்பட்ட பண்புகளில் உங்களிடம் ஏதாவது இருக்கிறதா? நற்பண்புகள் உங்களிடம் உருவாக உங்களைக் கர்த்தருக்கு அர்ப்பணியுங்கள்.

சூனேமியாளின் கணவன்

இவனைப் பற்றி அதிக விளக்கம் ஒன்றுமில் லை (பல ஆண்களின் நிலையும் இதுதான்). ஆனால் தன் மனைவி செய்த நற்காரியங்களுக்கு இவனுடைய ஒத்துழைப்பு இருந்தது என்பது தெளிவு. எலிசாவிற்கு அடிக்கடி விருந்து பண்ணுவதைக் குறித்து குறை சொல்லவில்லை. மேல் வீட்டில் ஓர் அறை கட்டி அதில் தேவையான பொ ருட்களை வைக்க மறுப்புச் சொல்லவில்லை. இந்த சூழ்நிலையில் பல கணவன்மார் இது வீண் செலவு என்று முணுமுணுப்பார்கள். உனக்கு என்ன இந்த எலிசாவிடம் இவ்வளவு பரிவு என்று சந்தே கத்தை எழுப்புவார்கள். இவன் அப்படிப்பட்டவனல்ல.

சூனேமியாளிடம் முன்நடத்திச் செல்லும் திறன் (Leadership) இருந்தது. அதை அறிந்து அங்கீ கரித்து அதற்கேற்ற கணவனாக நடந்துகொண் டான். கணவன்மாரே, மனைவி யோசனையாய் செய்யும் காரியங்களைக் குறித்து மகிழ்ச்சியடை கிறீர்களா? அல்லது எரிச்சலடைகிறீர்களா? சந்தே கப்படுகிறீர்களா?

சூனேமில் கனம்பொருந்திய பெண் குடும்பத்திலி ருந்து கற்றுக்கொள்ளும் காரியங்கள்:

  • கனம்பொருந்திய பெண் என்று சாட்சி பெற்ற பெண் இவள்.
  • ஊருக்குவந்த தீர்க்கத்தரிசியை வருந்தி அழைத்து விருந்து கொடுத்த சிறந்த பெண் இவள்.
  • எலிசாவை பரிசுத்தவான் என்று பகுத்தறிந்த பரிசுத்தவாட்டி இவள்.
  • தீர்க்கத்தரிசி தன் வீட்டில் தங்க மேல்மாடியில் ஓர் அறை கட்டினது இவளின் சிறந்த பண்பை வெளிப்படுத்துகிறது.
  • தன் கணவன் விபரம் குறைந்தவனாக இருந்த போதிலும் அவனை மதித்தாள்.
  • உனக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று எலிசா கேட்டபோதும், தனக்கு ஒரு குழந்தை இல்லையென்று சொல்லாத அடக்க மான பெண்.
  • மகன் திடீரென்று இறந்துபோன போதிலும் விசுவாசத்தை தளரவிடவில்லை, மனம் பேதலிக் காமல் உறுதியாயிருந்தாள்.
  • தேவ உதவியை நாடி எலிசாவிடம் போய் அவன் காலைப்பிடித்த பாக்கியவதி.
  •  மரித்த மகன் உயிர்பெறும் வரை எலிசாவை விடவில்லை.
  • தன் மனைவியின் தலைமைத்துவத்தை அலட்சி யப்படுத்தாதவன் அவள் கணவன்.

 

Leave a Reply