ஆவிக்குரிய விழிப்பு

ஆவிக்குரிய விழிப்பு

மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம் (1தெச 5:6)

விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியம்

  • கிறிஸ்து வரப்போகிற வேளையை அறியாததினால்(வெளி 3:3)
  • பிசாசின் கிரியைகளை அறிந்து அகப்படாமலிருக்க (1பேது 5:8)
  • நம்முடைய கிரியைகள் நிறைவுள்ளதாயிருக்க… (வெளி 3:2) 
  • கிறிஸ்துவினால் பிரகாசிக்கப்பட்டுக்கொண்டிருக்க(எபே 5:14)
  • இனி சம்பவிக்கப் போகிறவைகளுக்கு தப்ப (லூக் 21:36)
  • தேவனுக்கு முன் நிற்க பாத்திரவான்களாக எண்ணப்பட (லூக் 21:36)
  • மோசம் போகாதிருக்க (1கொரி 15:33)
  • பாவம் செய்யாமல் தெளிந்தவர்களாயிருக்க (1கொரி 15:34) 
  •  கிறிஸ்துவின் வருகையை அறியாதிருக்கிறதினால் (மத் 24:42)
  • சோதனைக்குட்படாமல் ஜெபம்பண்ண (மத் 26:41) 
  • நிர்வாணமாய் நடவாதபடிக்கு… (வெளி 16:15)
  • பாக்கியவான்களாய் இருக்க (லூக் 12:37)
  • தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதிருக்க (மாற் 13:37) 
  • கதவை தட்டுகிற நேசரின் சத்தத்தைக் கேட்க (உன் 5:5)
  • சத்துரு வந்து களையை விதைத்துவிடாதிருக்க (மத் 13:25)
  • கற்பிக்கப்பட்டபடியினால் (மாற் 13:34)
  • தேவ மகிமையைக் காண… (லூக் 9:32)
  • ஆத்துமாக்களைக் குறித்த உத்திரவாதமிருப்பதால் (எபி 13:17)
  • சாகிறதற்கேதுவானவைகளை ஸ்திரப்படுத்த…(வெளி 3:2)

எப்படி விழித்திருக்க வேண்டும்? 

  • ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் (கொலோ 4:2)
  • ஆவியினால் ஜெபம்பண்ணி (எபே 6:18)
  • நீதிக்கேற்றபடி (1கொரி 15:34)
  •  பரிசுத்தவான்கள் புத்திசொன்னதை நினைத்து (அப் 20:31)
  • எப்போதும் ஜெபம்பண்ணி (லூக் 21:36) 
  • தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து (1பேது 5:8)
  • உத்திரவாதம்பண்ணி(எபி 13:17)
  • விசுவாசத்தில் நிலைத்திருந்து (1கொரி 16:13)
  • மிகுந்த மன உறுதியோடு (எபே 6:18)
  • பரிசுத்தவான்களுக்காக பண்ணும் வேண்டுதலோடு (எபே 6:18)

விழித்திருங்கள்!

  • பாவஞ்செய்யாமல் விழித்திருங்கள்! (1கொரி 15:34)
  • சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருங்கள்! (மத் 26:40,41)
  • ஜெபத்தில் விழித்திருங்கள்! (கொலோ 4:2)
  • மரித்தோரை விட்டு எழுந்திருக்க விழித்திருங்கள்! (எபே 5:14)
  • எஜமான் வரும்போது விழித்திருங்கள்! (லூக் 12:35)
  •  பிசாசை ஜெயிக்க விழித்திருங்கள்! (1பேது 5:8,9)
  • நேசரின் சத்தத்தைக் கேட்க (உன் 5:2)
  • திருடன் வீட்டைக் கன்னமிடாதிருக்க (மத் 24:43)
  • நினையாத வேளையில் நம் எஜமானராகிய தேவன் வந்து நம்மை தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருப்போம்!

Leave a Reply