உண்மையான வாழ்க்கை
அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன் (1 சாமு 22:24)
உண்மையாயிருப்பதின் பலன்கள்…
- நம்மீது யாதொரு குற்றமும் குறைவும் காண இயலாது (தானி 6:4)
- பிழைக்கவே பிழைத்திருப்போம் (எசே 18:9)
- பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவோம் (நீதி 28:20)
- கர்த்தர் நமக்கு சமீபமாயிருப்பார் (சங் 145:18)
- அநேகத்தின்மேல் அதிகாரியாக உயர்த்தப்படுவோம் (மத் 25:21)
- தேவனின் சந்தோஷத்திற்குள் பிரவேசிப்போம் (மத் 25:21)
- ஜீவ கிரீடத்தைப் பெற்றுக்கொள்வோம் (வெளி 2:10)
- தேவனுக்கு பிரியமானவர்களாயிருப்போம் (நீதி 12:22)
- தேவனால் தற்காக்கப்படுகிறோம் (சங் 31:23)
- ஆயுசு நாட்கள் நீடிக்கும் (2இரா 20:3,6)
- தேவன் முகமுகமாக பிரத்தியட்சமாய் பேசுவார் (எண் 12:7,8)
- தேவன் தமது சாயலைக் காணும்படி செய்வார் (எண் 12:7,8)
- நிலையான வீட்டைக் கட்டுவார் (1சாமு 2:35)
- உண்மைக்குத் தக்க பலனைப் பெறுவோம் (1சாமு 26:23)
எதில் உண்மை?
- கர்த்தருடைய ஊழியத்தில் (1தீமோ 1:12)
- கர்த்தரைத் தொழுதுகொள்வதில் (யோவா 4:24)
- ஊழிய உக்கிராணத்துவத்தில் (1கொரி 4:2)
- தேவ சத்தத்திற்குச் செவிகொடுப்பதில் (உபா 28:1)
- கர்த்தருக்குப் பயந்து சேவிப்பதில் (யோசு 24:14)
- பணம், பொருள், செல்வாக்கில் (2இரா 22:7)
- காணிக்கைகள், தசமபாகத்தில் (2நாளா 31:12)
- உலகப் பொருளைப்பற்றி (லூக் 16:11)
- அந்நியருக்கு செய்வதிலே (3யோவா 1:5)
- செய்யும் வேலையில் (2நாளா 34:12)
- ஏழைகளை நியாயம் விசாரிப்பதில் (நீதி 29:14)
- மனிதருக்குள்ள வழக்கைத் தீர்ப்பதில் (எசே 18:8)
- பிறரோடே பேசுவதில் (சக 8:16)
- உள்ளத்தில் (சங் 51:6)
- தேவனுடைய வீட்டில் (எண் 12:7)
- உபத்திரவத்தில் (வெளி 2:10)
- எல்லாவற்றிலும் (1தீமோ 3:11)
உண்மையாய் இல்லையெனில்..
- தேவன் தமது முகத்தை மறைப்பார் (உபா 32:20)
- எஜமான் தண்டிப்பார் (லூக் 12:46)
- நம்பிக்கை குறைந்து போகும் (லூக் 16:11)
- தேசத்தின்மேல் கர்த்தருக்கு வழக்குண்டாகும் (ஓசி 4:1)
- மாறுபாடான சந்ததியாக மாறும் (உபா 32:20)
உண்மை தங்கள் பக்கம் இருக்க அநேகர் விரும்புகின்றனர்; உண்மையின் பக்கம் தாங்கள் இருக்க எவரும் விரும்புவதில்லை