கழுகுகளைப்போல எழும்புவார்கள்

கழுகுகளைப்போல எழும்புவார்கள்

ஆதார வசனம் : ஏசா:40-31

..கழுகுகளைப்போல எழும்புவார்கள்

  • இவ்வசனத்தில் கர்த்தருக்கு காத்திருக்கிறவர் புதுபெலனடைந்து எழும்புவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
  • நமது ஆவிக்குரிய பூமிக்குரிய வாழ்வில் தேவனுக்காய் எழும்புவதற்கு கர்த்தரிடத்தில் காத்திருக்க வேண்டும் 

யார் எழும்புவார்கள்

காத்திருக்கிறவர்கள் எழும்புவார்கள்.

 எப்படி எழும்புவார்கள்? 

கழுகுகளைப்போல எழும்புவார்கள்.

கழுகுகளைப்போல எழும்ப செய்யவேண்டியது?

1.யோபு:39-27 உயர்ந்த எண்ணம் உள்ளவர்களாக இருக்கவேண்டும்.

கழுகு உயரத்தில் பறக்ககூடியது, உயரத்தில் கூடு கட்டக்கூடியது அதுபோல நமது ஜீவியத்தில்  சிந்தனை,செயல்பாடு,பேச்சு,அனைத்திலும் உயர்ந்த மேன்மையான அனுபவத்தையுடையதாக இருக்க வேண்டும். கழுகு உயரத்தில் இருப்பதுதான் அதற்கு பாதுகாப்பு பெலன் கொலோ:3-1-2 மேலானவைகளை நாடுதல்.

2.யோபு:39-28 தேவசமூகத்தில் தங்க வேண்டும்.

கழுகு கன்மலையின் சிகரத்தில் தங்ககூடிய பறவை கன்மலை என்பது இயேசுவைக் காட்டுகிறது இயேசுவின் சமூகத்தில் காத்திருக்கிற அனுபவம் உள்ளவர்கள் எழும்புவார்கள்.

3.யோபு:39-29 தூரப்பார்வை வேண்டும்.

கழுகு தூரத்திலுள்ள இரையை நோக்கக்கூடியது அதுபோல விசுவாச பார்வைஇருக்கவேண்டும். எபி:11-13

4.எரே:4-13,புல:4-19 வேகமாய் செயல்பட வேண்டும்.

  • கழுகு மற்ற பறவைகளை விட வேகமாய் பறக்கூடியது அது தேவனுக்காய் வேகமாய் செயல்பட வேண்டும்.
  • மாற்:12-34 வேகமாய் செயல்பட்டால் தேவ ராஜ்ஜியத்திற்கு தூரமாக அல்ல சமீபமாய் இருப்போம்.

5.யாத்:19-4 சுமக்க வேண்டும்.

கழுகைப்போல குடும்பத்தை பிள்ளைகளை பொருப்புகளை சுமக்கிறவர்களாக இருக்கவேண்டும். ஆதி:47-13

6.உபா:32-11 கற்றுக்கொடுக்க வேண்டும் (அல்லது) படிப்பித்தல்.

கழுகு தன் கூட்டை கலைத்து தன் குஞ்சுகளை அந்தரங்கத்தில் பறப்பதற்கு கற்றுக்கொடுகிறது போல நமது பின் தலைமுறைகளுக்கு தேவ காரியங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.

7.மத்:24-28 இயேசுவிடத்தில் சேருகிற அனுபவம்.

வருகையின் எண்ணம்,ஆயத்தம் உள்ளவர்கள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *