கீழ்படிதலுள்ள வாழ்க்கை

கீழ்படிதலுள்ள வாழ்க்கை

உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரிய வந்திருக்கிறது… (ரோ 16:19)

கர்த்தருக்குள் யாருக்கு எதற்குக் கீழ்ப்படிய வேண்டும்?

 • தேவனுக்குக் கீழ்ப்படியவேண்டும் (எபி 12:9; யாக் 4:7)
 • அவரது கற்பனைகளுக்கு… (பிர 12:13) 
 • திருவசனத்திற்கு… (எபே 5:24) 
 • பரிசுத்த ஆவியானவருக்கு… (யோவா 16:8)
 • ஊழியர்களுக்கு… (எபி 13:17)
 • அதிகாரமுள்ளவர்களுக்கு… (ரோம 13: 1,2)
 • தொழிலாளி எஜமானுக்கு… (தீத்து 2:9)
 • பிள்ளைகள் பெற்றோருக்கு… (எபே 6:1) 
 • விசுவாசிகள் ஒருவருக்கொருவர்… (எபே 5:21)
 • மனைவி கணவன் ஒருவருக்கொருவர்…(எபே 5:22) 

கீழ்ப்படிந்தவர்கள்…

 • நோவா கீழ்ப்படிந்து பேழையை உண்டுபண்ணினார் (ஆதி 6:22)
 • ஆபிரகாம் கீழ்ப்படிந்து புறப்பட்டுப்போனார் (ஆதி 12:1; எபி 11:8) 
 • மோசே கீழ்ப்படிந்து ஜனங்களை விடுவித்தல் (யாத் 4:1-20)
 • யோசுவா ஜனங்களை விருத்தசேதனம்பண்ண.. (யோசு 5:2,3)
 • காலேப் கீழ்ப்படிந்து உத்தமனாய் நடந்தார் (எண் 14:24)
 • கிதியோன் ஜனங்களை தப்புவிக்க கீழ்ப்படிந்தார் (நியா 6:27)
 • ரூத் தன் மாமிக்குக் கீழ்ப்படிந்தாள் (ரூத் 1:11)
 • சாராள் ஆபிரகாமை ஆண்டவனே என்று சொல்லி…. (1பேது 3:6) 
 • சாமுவேல் தேவ சத்தத்துக்குக் கீழ்ப்படிந்தார் (1சாமு 2:9)
 • தீர்க்கதரிசி எலியா… (1இரா 17:2)
 • நூற்றுக்கு அதிபதி… (யோவா 4:50)
 • பிதாவாகிய தேவனுக்குக் குமாரனாகிய கிறிஸ்து (பிலி 2:8)
 • பவுலும் சீலாவும் ஊழியத்திற்குப் புறப்படுதல் (அப் 13:2)

கீழ்ப்படிதலினால் வரும் ஆசீர்வாதங்கள்

 • சகல காரியங்களிலும் ஆசீர்வதிக்கப்படுவோம் (ஆதி 24:1)
 • நீதிமானாக்கப்படுகிறோம் (எசேக் 18:9)
 • வாக்குத்தத்தங்கள்மூலம் ஆசீர்வதிக்கப்படுகிறோம் (ஏசா 1:19)
 • தேவனுக்குக் கீழ்ப்படியும்போது பிசாசு ஓடிப்போவான் (யாக் 4:7)
 • தேவன் நம்மோடு வாசம்பண்ணுவார் (யோவா 14:23)
 • நாம் கெட்டுப்போவதில்லை (யோவா 10:27,28)
 • தேசத்தில் முன்மாரி பின்மாரி மழையை அனுப்புகிறார் (உபா 11:14)

கீழ்ப்படியாவிட்டால்…

 • ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ள முடியாது (யோசு 5:6)
 • அநேக சாபங்கள் வரும் (உபா 28:15)
 • இருதயம் கடினப்பட்டுப்போகும் (சங் 81:11,12)
 • கர்த்தருடைய கை விரோதமாயிருக்கும் (1சாமு 12:15) 
 • தீங்கை வரப்பண்ணுகிறார் (எரே 35:16)

கர்த்தருக்குக் கீழ்படிகிறவர்கள் அவரின் முழு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதோடு அவராலேயே முற்றும் வழிநடத்தப்படுவர்.

Leave a Reply