வேதாகம குடும்பம்: XIII. யோபின் குடும்பம்
வேதாகமம் எழுதப்பட்ட காலத்திற்கு முன்பு வாழ்ந்தவன் யோபு. அதாவது மோசேயின் நாட் களுக்கு முன் முற்பிதாக்களின் காலத்தில் வாழ்ந் தவன் (கி.மு.2000க்கு முன்). யோபு எல்லாவிதத் திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான்.
ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் முதலிடம் பெறுகிறது (யோபு 1:1)
யோபை அறிமுகம் செய்து வைக்கும் முறை நேர்த்தியானது. அவன் உத்தமன், சன்மார்க்கன், தேவனுக்குப் பயந்தவன், பொல்லாப்புக்கு விலகு கிறவன். ஒரு குடும்பத் தலைவன் இப்படிப்பட்ட வனாக இருக்க வேண்டும். ஒருவன் என்ன படித் திருக்கிறான், என்ன உத்தியோகத்தில் இருக்கிறான் என்பதைத்தான் முதலில் கூறுவார்கள். ஒருவனுடைய உண்மையான நிலையை வெளிப்படுத்துவது அவனுடைய ஆவிக்குரிய நிலைதான். ஒரு குடும்பத் தலைவன் ஆவிக்குரியவனாக இருந்தால் அந்தக் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
கர்த்தர் யோபையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்க வில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர் வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெரு கிற்று (யோபு 1:10) 10005
ஒரு குடும்பத் தலைவன் கர்த்தருக்குப் பயந்த உத்தமனாய், தன் நடத்தைகள் எல்லாவற்றிலும் சன்மார்க்கனாய் நடந்துகொள்ளும்போது நிச்சயம் கர்த்தர் அவன் குடும்பத்தை வேலியடைத்துக் காப்பார். அநேக பிள்ளைகள் கெட்டுப்போகக் காரணம் தகப்பன் சரியில்லாதது என்பது உண்மை. யோபு தன் குடும்பத்திற்காக பலி செலுத்தினான் (மோசேயின் பலிமுறைகளுக்கு முன்பு வாழ்ந் தவன் என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரம்). தன் பிள்ளைகள் பாவம் செய்துவிடக்கூடாது, தவறான எண்ணங் கொண்டவர்களாக இருக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்தினான்.
யோபிற்கு ஏழு குமாரர், மூன்று குமாரத் திகள் இருந்தார்கள்
பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம். ஆண்டவர் இந்த ஆசீர்வாதத்தையும் அவனுக்குக் கொடுத்திருந்தார். இந்தக் காலத்தில் பத்துப் பிள்ளைகள் என்பது கற்பனை செய்து பார்க்க முடியாதது. ஒன்றுக்குமேல் இப்போது வேண்டாம், ஒன்றுகூட வேண்டாம், நாமே குழந்தைகள், நமக் கேன் குழந்தைகள் என்ற தத்துவம் நிலவும் இக் காலத்திற்கு இந்த எண்ணிக்கை மிக அதிகம்தான். ஆனால் அக்காலத்தில் இது சர்வ சாதாரணம்.
யோபின் சொத்துகள்
7000 ஆடுகள், 3000 ஒட்டகங்கள், 500 ஏர் மாடுகள், 500 கழுதைகள், திரளான பணிவிடைக் காரர் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. அக்கால சொத்துகள் இவை. ஆவிக்குரியவர்கள் என்றால் ஏழைகளாக இருக்க வேண்டும் என்று சிலர் தவ றான கருத்துடையவர்களாக இருக்கின்றனர்.
பணக்காரர் பரலோக ராஜ்யத்திற்குள் வருவது அரிது. மரித்த பணக்காரன் பாதாளத்தில் தன் கண் களை ஏறெடுத்துப் பார்த்தான். ஏழை லாசரு பரலோகத்தில் ஆபிரகாமின் மடியில் கொண்டு போய் விடப்பட்டான் என்ற வசனங்களை மனதில் கொண்டு சிலர் இப்படிப்பட்ட கருத்திற்கு வந்து விடுகின்றனர்.
செல்வம் பெருகும்போது எச்சரிப்பாக வாழா விட்டால் கர்த்தரைவிட்டு விலகும் ஆபத்து உண்டு என்பது உண்மை. ஆனால் எல்லா செல்வந்தர் களும் கர்த்தரைவிட்டு விலகுவார்கள் என்பது உண்மையல்ல. பண ஆசைதான் எல்லா தீமைக்கும் வேராக இருக்கிறது. சரியான ஆட்களிடம் பணம் இருந்தால் கர்த்தருடைய ராஜ்ய வளர்ச்சிக்கு அது உதவியாகவே இருக்கும் என்பது எக்காலத்திலும் உண்மை.
யோபு பெரிய செல்வந்தனாக இருந்தான். அதே சமயம் உத்தமனாக கர்த்தருக்குப் பயந்து வாழ்ந்து வந்தான். அவன் மனைவியைப் பற்றி அதிகம் சொல்லப்படவில்லை. அவள் சொன்ன ஒரு வாக்கியம் மட்டும்தான் அவளைப்பற்றி நாம் விளங்கிக்கொள்ள முடிகிறது.
யோபுவின் குடும்பத்திற்கு ஏற்பட்ட பேரழிவு சாத்தானின் முயற்சியால், யோபிற்கு இருந்த அத்தனை செல்வங்களும் ஒரே நாளில் அழிந்தன. திடீரென்று ஏற்பட்ட விபத்தில் பத்துப் பிள்ளை களும் குடும்பமாக செத்தார்கள். யோபிற்கு கொடிய வியாதி உண்டாகி உருவழிந்து காணப்பட்டான். ஓர் துன்மார்க்கனுக்குக்கூட இப்படி வருவதை யாரும் விரும்ப மாட்டார்கள். பரிசுத்த வாழ்வு வாழ்ந்து வந்த யோபிற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டது.
யோபின் மனைவி சொன்ன வார்த்தைகள்: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும் (Gшny 2:9) யோபின் மனைவியின் இந்த வார்த்தைகளை இரண்டு கோணத்தில் பார்க்கலாம்:
(1) கர்த்தருக்கு உண்மையாயிருந்த தன் கணவனுக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது. இனியும் கர்த்த ரைப் பின்பற்றி என்ன பயன் என்ற அவிசுவாசத்தில் கூறப்பட்ட வார்த்தைகளாக இருக்கலாம்.
2) தன் கணவன் அனுபவிக்கிற கொடிய வேதனை யைக் கண்டு அவன் இந்த நிலையில் உயிர் வாழ்வதைவிட சாவதே மேல் என்ற விரக்தியில் கூறியிருக்கலாம்.
அருமை சகோதரிகளே! உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட நஷ்டம், மரணம், வியாதி உங்களை நிலைகுலையச் செய்ய லாம். உங்கள் கணவர் அனுபவிக்கும் வியாதியை எண்ணி சோர்பு வரலாம். ஆனால் எந்த நிலை யிலும் கர்த்தரை விசுவாசிப்பதை விட்டுவிடா திருங்கள். அந்த ஒரு காரியம்தான் உங்களுக்கு வெற்றியைத் தரும். நடக்கும் காரியங்கள் உங்க ளுக்கு விளங்காததாக இருந்தாலும் விசுவாசத்தை, நம்பிக்கையை விட்டுவிடாதிருங்கள்.
அதுமட்டுமல்ல, பாடுபடுகிற உங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு, உங்கள் கணவருக்கு இந்த இக்கட்டான வேளையில் ஆறுதல் சொல்லப் பழகுங்கள். வெந்த புண்ணில் வேலை குத்துவது போல் பேச வேண்டாம். விரக்தியான வார்த்தைகள் வேதனையைக் கொண்டுவரும், அவிசுவாசத்தை வெளிப்படுத்தும்.
அருமை சகோதரரே!
இதுபோலவே மனைவி படும் வேதனைகளைப் பார்த்து சோர்வான வார்த்தைகளைப் பேசி அவர் களை புண்படுத்த வேண்டாம். வேதனையிலிருக் கிறவர்களுக்குத் தேவை ஆறுதல். ஆறுதல் சொல்லத் தெரியாவிட்டால் அதைரிய வார்த்தைகளை அலப் பாமல் அமைதியாகவாவது இருந்து விடுங்கள்.
கொஞ்சக்காலம் பாடு அனுபவித்த யோபு, பின்பு ஆரோக்கியமடைந்து இரட்டிப்பான ஆசீர்வாதம் பெற்றான்.
கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்… யோபு நூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான் (யோபு 42:12-17)
440 குடும்பத்திற்கு வரும் சோதனைகளை, பாடு களை பொறுமையுடன் சகித்து ஜெபித்து, தொ டர்ந்து கர்த்தருக்கு உண்மையோடிருந்தால் கர்த்தர் நிச்சயமாய் ஆசீர்வதிப்பார்.
யோபின் குடும்பத்திலிருந்து குடும்பத்திலிருந்து கற்றுக்கொள்ளும் காரியங்கள்:
- செல்வந்தனாக இருந்த யோபு பரிசுத்தவானாக வாழ்ந்து கர்த்தரால் சாட்சி பெற்றான்.
- என் சம்பாத்தியம் என்று சொல்லாமல் எல்லாம் கர்த்தர் கொடுத்தது என்று சாட்சி கூறினான்.
- அவன் குடும்பம் கர்த்தரால் வேலியடைத்துக்காக்கப்பட்டது.
- பரிசுத்தவானுக்கும் பாடுகள் உண்டு என்பது இவனுடைய வாழ்வின் பாடம்.
- எல்லாவற்றையும் இழந்தபோதிலும் கர்த்தரை குறைகூறாத பரிசுத்தவான்.
- கர்த்தர் கொடுத்தார், சாத்தான் எடுத்தான் என்று சொல்லாமல் கர்த்தர் எடுத்தார் என்று தைரியமாயிருந்தவன்.
- ஆறுதல் சொல்ல வேண்டிய மனைவி மனம் பேதலித்துப் பேசியது ஓர் எச்சரிப்பு.
- நண்பர்கள் அவனை குற்றம் சாட்டினபோது சோர்ந்துபோகாமல் பதிலளித்தவன்.
- குறைகூறின நண்பர்களுக்காக கர்த்தரிடம் பரிந்துபேசி மன்றாடினான்.
- சோதனையில் வெற்றியடைந்து இரட்டிப்பான ஆசீர்வாதம் பெற்றான்.