வேதாகம குடும்பம்: XIV. சகரியா – எலிசபெத்து
புதிய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள முதல் குடும்பம் சகரியா – எலிசபெத்து குடும்பம். லூக்கா இந்த குடும்பத்தைக் குறித்து தெளிவாய் எழுதுகிறார்.
அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனை களின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்ற மற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள் (லூக்.1:6).
இவர்கள் இருவரைப் பற்றியும் கூறப்பட்டுள்ள காரியங்கள் மூலம் இவர்கள் ஒரு நல்ல தரமுள்ள தம்பதிகள் என்பதை நன்கு விளங்கிக் கொள்ளலாம்.
கர்த்தருடைய சகல கற்பனையின்படியும் நடந்துவந்தார்கள்
ஏனோதானோ என்ற வாழ்க்கை வாழாமல் ஓர் நல்ல பக்தியுள்ள வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஒரு சில கட்டளைகளைக் கைக்கொண்டவர்கள் என்று சொல்லாமல் தேவனுடைய எல்லாக் கட்ட ளைகளுக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தனர். கணவன்- மனைவி இருவரும் ஆவிக்குரிய வாழ்வில் ஒரு மனதுடன் இணைந்து வளர்வது எவ்வளவு ஆசி சீர் வாதமானது! தேவனுடைய எல்லாக் கட்டளை களுக்கும் கீழ்ப்படிந்து நடக்கும் தம்பதிகள் மெய் யாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தான். எல்லாக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடக்கும் குடும்பம் என்று சாட்சி சொல்லக்கூடிய வாழ்வு வாழ்பவர் கள் குறைவே. இவர்கள் தேவனுடைய வசனத் திற்குக் கீழ்ப்படிந்து பரிசுத்தமாய் வாழ்ந்து வந்தனர்.
எல்லா நியமங்களையும் கைக்கொண்டு வந்தனர்
நியமங்கள் என்பது ஒழுங்குகள், சட்டதிட் டங்கள். அதாவது, சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப் படிந்து நடந்தனர். சிலர் வசனத்திற்கு கீழ்ப்படிந்து பரிசுத்தமாய் வாழ்வார்கள். ஆனால் சில ஒழுங்கு களுக்குக் கீழ்ப்படிய மாட்டார்கள். சபையோடுள்ள காரியங்களில், அலுவலகத்திலுள்ள வேலை சம்பந்தமான காரியங்களில், பக்கத்து வீட்டுக்காரர் களுடன் பழகும் விஷயத்தில் சிலர் அறநெறித் தன்மையுடன் நடந்துகொள்வதில்லை.
சகரியாவும் எலிசபெத்தும் தேவனோடும் மனிதரோடும் நல்ல உறவில் இருந்தனர். இதை வாசிக்கும் அருமையான சகோதரனே, சகோதரியே இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ உங்களை முழு வதும் ஒப்புக்கொடுங்கள்.
குற்றமற்றவர்களாய் நடந்தனர்
தேவனுக்கு விரோதமான பாவம் செய்ய வில்லை என்பது மட்டுமல்ல, மற்றவர்களுக்கு விரோதமான குற்றங்களையும் செய்யாமலிருப்பது அவசியம். பரிசுத்தமாய் வாழும் பலர் பிறருடைய குறைகளை பெரிதுபடுத்திப் பேசுவார்கள். பிறரு டைய குற்றங்களை மற்றவர்களுக்கு விவரித்துப் பேசுவார்கள். குடும்பத்திற்குள்ளும் சமாதானமாய் இருக்கமாட்டார்கள். மனைவியிடம் எப்போதும் குற்றம் கண்டுபிடித்து சண்டை போடுவார்கள். கணவனை சந்தேகிப்பார்கள். கொடுக்கல் வாங் கலில் சரியாய் நடந்துகொள்ள மாட்டார்கள். எந்த விஷயத்திலும் குற்றமற்றவர்களாக நடக்க முயற் சிப்பது அவசியம்.
பிள்ளையற்ற பெற்றோராயிருத்தனர் (லூக்.1:7) இவ்வளவு பரிசுத்தமாய் வாழ்ந்த இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாதிருந்தது. இந்த நிலை யிலுள்ள அநேகர் கர்த்தரை குறை கூறுவார்கள். வாழ்வில் சோர்ந்து போவார்கள்.
குழந்தையில்லாத பரிசுத்த பெற்றோரே! சோர்ந்துபோகாமல் கர்த்தரைப் பற்றிக்கொள் ளுங்கள். கடவுளே இல்லை என்பவர்களுக்கும், கல்லையும், மரத்தையும் வணங்குபவர்களுக்கும் கூட குழந்தை இருக்கின்றதே! கர்த்தர் நிச்சயம் குழந்தை பாக்கியத்தைத் தருவார்.
இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் பெண்ணை சிலர் மலடி என்று குறைகூறுவார்கள். குழந்தை இல்லாத கணவனைவிட மனைவிதான் அதிகம் பாதிக்கப்படுவாள். அநேகருடைய இழிச்சொல்லுக்கு ஆளாவாள். சில கணவர்மாரும் குழந்தை இல்லாத தற்கு தன் மனைவியை குறை கூறிப் பேசுவார்கள். அநேக சந்தர்ப்பங்களில் கணவனுடைய குறையி னால்தான் குழந்தை இல்லாமலிருக்கும்.
சில குடும்பங்களில் கணவனுடைய பெற்றோர் தங்கள் மகனுக்கு வேறு பெண்ணைத் திருமணம் செய்துவைக்க முயற்சிப்பார்கள். கணவன்மாரே குழந்தை இல்லாததற்காக உங்கள் மனைவியிடம் வெறுப்பைக் காட்டாதிருங்கள்.
இருவரும் வயது சென்றவர்கள் (லூக்.1:7)
எத்தனையோ ஆண்டுகள் காத்திருந்தனர். ஆபிரகாமின் வாழ்க்கையை மனதில்கொண்டு எதிர்பார்ப்போடு வாழ்ந்திருக்கலாம். அல்லது குழந்தையைத் தர கர்த்தர் விரும்பவில்லை, பரவா யில்லை என்று கர்த்தர் சித்தத்திற்கு ஒப்படைத்து இருப்பதில் திருப்தியடைந்து வாழ்ந்திருக்கலாம்.
சகரியா தொடர்ந்து தேவசந்நிதியில் ஊழியம் செய்துவந்தான்
ஆசாரிய வகுப்பைச் சேர்ந்த அவன் கர்த்த ருக்கு ஊழியம் செய்துவந்தான். குழந்தை தராத ஆண்டவருக்கு ஊழியம் செய்து பயனென்ன என்று சோர்ந்துபோகவில்லை.
அருமை நண்பரே! உங்களுக்கு இன்று என்ன நடக்கிறது என்பதை வைத்து கர்த்தரை எடை போடக்கூடாது. வியாபார நோக்கத்தில் கர்த்தரை சேவிக்கக்கூடாது. நீங்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்வதும், கர்த்தருக்கு தாராளமாய் கொடுப்பதும் தொடரட்டும். மற்றவர்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை. கர்த்தர் உண்மையுள்ளவர். உங்களை ஒருபோதும் மறக்கவே மாட்டார். அவர் வேளை என்ற ஒன்று உண்டு. அதில் அவர் தமது சித்தத்தை வெளிப்படுத்துவார்.
சகரியா குழந்தைக்காக ஜெபிப்பதை நிறுத்தி விடவில்லை
காபிரியேல் என்ற தூதன் சகரியாவிற்குத் தரிசன மாகி… உன் வேண்டுதல் கேட்கப்பட்டது (லூக். 1:13) என்றான்.
அப்படியானால் சகரியா தொடர்ந்து ஜெபித்து வந்தான். பதில் கிடைக்கும்வரை ஜெபித்தான். எத்த னையோ ஆண்டுகள் ஜெபித்திருக்க வேண்டும். ஆலயத்தில் ஊழியம் செய்துவந்த நேரத்தில் தேவதூதன் தரிசனமாகி உனக்கு ஒரு குழந்தை யைக் கர்த்தர் தருவார் என்ற நற்செய்தியை அறிவித்தான். அதுமட்டுமல்ல அவனுக்கு என்ன பெயரிட வேண்டும் என்பதையும் (யோவான்) அறிவித்தான். பிறக்கப் போகும் யோவானின் வாழ்க்கை, ஊழியம் எப்படியிருக்கும் என்ற விளக்கமும் வெளிப்படுத்தப்பட்டது.
நமக்குப் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைகளைப் பற்றியும் சரியான வெளிப்பாடு கிடைத்தால் எவ் வளவு நன்றாக இருக்கும்! பிள்ளைகளைப் பெற்று விட்டு பெயர் வைக்கப் படும்பாடு எவ்வளவு! இந்தப் பெற்றோருக்கு அந்தப் பிரச்சனையே இல்லை. இந்தக் குழந்தையைக் குறித்த சகல காரி யங்களும் பரலோகத்திலேயே திட்டமிடப்பட்டி ருந்தன! ஆமென்.
சகரியாவின் அவிசுவாசம்
இத்தனை ஆண்டுகளில் ஊக்கமாய் ஜெபித்து வந்த அவனுக்கு தேவதூதன் நேரில் வந்து சொல் லியும் நம்ப இயலாதவனாக இருந்தான். “நானும் என் மனைவியும் வயதானவர்களாக இருக்கின் றோமே, இதை நான் எதினால் அறிவேன்” என்று அடையாளம் கேட்டான். ஜெபித்தால் போதாது, விசுவாசத்துடன் ஜெபிக்க வேண்டும் என்பதற்கு சகரியர் ஒரு உதாரணம். அவனுக்கு ஒரு அடை யாளம் கொடுக்கப்பட்டது. பிள்ளை பெறும்வரை நீ ஊமையாய் இருப்பாய் என்பதே அந்த அடையாளம்.
வீட்டிற்குப் போய் மனைவியிடமும் சிலேட்டில் எழுதித்தான் காரியத்தை விவரித்திருப்பான். கர்த்தர் சொன்னபடியே எலிசபெத்து ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். என்ன பெயர் வைக்க வேண்டு மென்று சகரியாவிடம் கேட்டபோது எழுத்துப் பலகையில் “யோவான்” என்று எழுதினான். உடனே அவன் வாய் திறந்து பேசி, கர்த்தரைத் துதித்தான்.
அருமையான சகோதரனே, சகோதரியே! தொடர்ந்து ஜெபியுங்கள். பதில் கிடைக்கும்வரை ஜெபியுங்கள். தொடர்ந்து கர்த்தரை ஆராதியுங்கள். அவருக்கு ஊழியம் செய்யுங்கள். சந்தேகப்படா திருங்கள். ஏற்ற காலத்தில் கர்த்தர் பதிலளிப்பார்.
சகரியா எலிசபெத்து குடும்ப வாழ்விலிருந்து – கற்றுக்கொள்ளும் காரியங்கள்:
- இருவரும் கர்த்தருக்குப் பிரியமான வாழ்வு வாழ்ந்தார்கள்.
- தங்களுக்குக் குழந்தை இல்லாத போதிலும் கர்த்தருக்குத் தொடர்ந்து ஊழியம் செய்து வந்தனர்.
- முதிர்வயதான போதிலும் குழந்தை வேண்டும் என்ற விண்ணப்பத்தை தொடர்ந்து ஏறெடுத்து வந்தனர்.
- குழந்தை கொடுக்கப்படும் என்ற நற்செய்தி யை அறிவிக்கக் கர்த்தர் காபிரியேல் தூதனை இவனிடம் அனுப்பினது பெரிய சிலாக்கியம்.
- தாங்கள் ஜெபித்து வந்ததற்கு பதில் கிடைக்காத போது, அதை விசுவாசியாமலிருந்தது நமக்கு ஓர் எச்சரிப்பு.
- அவிசுவாசத்தின் தண்டனையாக ஊமையனானான்.
- அவன் அவிசுவாசித்த போதிலும் கர்த்தர் வாக்குப்பண்ணினதைக் கொடுத்தார்.
- மரியாளின் வாழ்த்துதலைக் கேட்டபோது எலிசபெத்தின் வயிற்றில் வளர்ந்துவந்த குழந்தை துள்ளிற்று.
- கர்ப்பத்திலிருக்கும்போதும் குழந்தை பரிசுத்த ஆவியானவரின் தொடுதலைப் பெற முடியும்.ல்கெ முடியும்.
- இயேசுவை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கும் மகனைப் பெற்றாள்.
- எரிந்து பிரகாசிக்கும் விளக்காக விளங்கின மகன் அவன்.