சோதனை

சோதனை

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு, விடுத்திருந்றி ஜெபம்பண்ணுங்கள் (மடு 26:41)

சோதனையைப் பற்றி வேதத்தில்

 • சோதித்தபின் பொன்னாக விளங்குவேன் (யோபு 23:10)
 • கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார் (சங் 11:5; எரே 20:12) 
 • உன்னை சந்தோஷத்தினால் சோதித்துப்பார்ப்பேன் (பிர 2:1)
 • இருதயங்கள் உள்ளந்திரியங்களை சோதிக்கிறார் (சங் 7:9; 11:4) 
 • வெள்ளியைப் புடமிடுகிறதுபோல புடமிடுகிறார் (சங் 66:10) 
 • இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்டார் (மத் 4:1; மாற் 1:13)
 • இயேசு நம்மைப்போல சோதிக்கப்பட்டார் (எபி 4:15)
 • தீய யோசனைகளால் சோதனைகள் (அப் 20:19; 23:16)
 •  அப்.பவுலின் சரீரத்தில் முள்ளாகிய சோதனை (2கொரி 12:7)

சோதனை ஏன்?

 • தேவ வல்லமையை அறியும்படி… (உபா 8:2,3)
 • *l தேவனை நேசிப்பதை அறிய… (உபா 13:1-3) 
 • தான் ஒன்றுமில்லை என்று அறிய…(பிர 3:18,19)
 • பொறுமையைப் படிக்க… (ரோம 5:3,4)
 • தேவ சித்தம் நிறைவேற… (சங் 105:19)
 • வேத பிரமாணங்களைக் கற்றுக்கொள்ள… (சங் 119:71)
 • ஊழியத்திற்கு தகுதியாக்க… (மல் 3:3)
 • பொன்னாக விளங்கும்படியாக…(யோபு 23:10)
 • பரலோக இரகசியங்களை வெளிப்படுத்த (வெளி 1:9,10) 
 • கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேற… (சங் 105:17-19)
 •  ஜீவகிரீடம் பெற… (வெளி 2:10: அப் 14:22) 

மனிதன் எப்படி சோதிக்கப்படுகிறான்?

 • புறஜாதிகளால் (நியா 2:21-23)
 • வசனத்தால் (மத் 4:1-4)
 • வியாதியால் (யோபு 2:7)
 • காவலில் (வெளி 2:10; அப் 16:25)
 • அக்கினியால் (1பேது 4:12,13)
 • புகழச்சியால் (நீதி 27:21)
 • பாவ இச்சைகளால் இழுக்கப்பட்டு (யாக் 1:14)

யாருக்கு சோதனை?

 • கர்த்தரிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு (எபி 12:5-11)
 • நீதிமானுக்கு (சங் 34:19; யோபு 5:17,18)
 • தேவ பக்தியுள்ளவர்களுக்கு (2பேது 2:9; 1கொரி 10:13)
 • தேவபிள்ளைகளாய் வாழ்பவர்களுக்கு (1பேது 4:16; 3:14)
 • கிறிஸ்து வெளிப்பட காத்திருப்போருக்கு (1பேது 1:6,7)
 • ஜெபிக்காமலிருப்போருக்கு (மத் 26:41)
 • தேவ எச்சரிப்பை அசட்டைபண்ணுவோருக்கு (மத் 26:41-74)

சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவானாக மாறுகிறான்; உத்தமனாக தன்னை விளங்கப்பண்ணுகிறான்

Leave a Reply