தீமைக்கு விலகியிருத்தல்
பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் வீட்டு விலகுங்கள். (1தெச 5:22)
எதுவெல்லாம் தீமை?
- தேவனுக்கு விரோதமான துரோகப் பேச்சை பேசுதல் (உபா 13:5)
- பரிதானம் வாங்குவது (1சாமு 8:3)
- புரட்டு நாவு தீமையானது (நீதி 17:20)
- தேவனை விட்டு விலகுவது (எரே 2:13)
- அந்நிய தெய்வத்தை வணங்குவது (எரே 2:11,13)
- உண்மைக்கு மிஞ்சினது (மத் 5:37)
- பண ஆசை (1தீமோ 6:10)
- பிறருக்கு இடறலுண்டாக புசித்தல் (ரோம 14:20)
தீமை செய்கிறவர்கள்…
- சந்ததி ஒருபோதும் பேர் பெறுவதில்லை (ஏசா 14:20)
- தேவன் விரோதமாக எழும்புவார் (ஏசா 31:2)
- தீமை கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெற வைக்கும் (ஏசா 59:4)
- செய்த தீமை தண்டிக்கும் (எரே 2:19)
- ஆக்கினையை அடைவர் (யோவா 5:29)
- தேவனைக் காண்பதில்லை (3யோவா 1:11)
- செய்த தீமையே பதிலாக வரும் (நீதி 11:27)
- மரணத்துக்கு ஏதுவாக மாறுவர் (நீதி 11:19)
- வீட்டைவிட்டு தீமை நீங்காது (நீதி 17:13)
- தீமை துன்மார்க்கனைக் கொல்லும் (சங் 34:21)
தீமையைப் பற்றி வேதத்தில்…
- அந்நிய தேவர்களை சேவித்தல் (யோசு 24:20)
- தீமையானது தன் வாயை மூடும் (யோபு 5:16)
- புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான் (நீதி 17:20)
- மூடர் தாங்கள் செய்வதை அறியாதிருக்கிறார்கள் (பிர 5:1)
- பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராகும் (1தீமோ 6:10)
- தீமையானதைப் பின்பற்றக்கூடாது (3யோவா 1:11)
- தீமை செய்கிறவர்கள் திடப்படுவதுபோல தோன்றுவர் (மல் 3:15)
தீமை செய்கிறவர்களின் வாழ்வு…
- கனியற்ற வாழ்வு
- மன்னியாத வாழ்வு
- தேவனுக்குக் கீழ்ப்படியாத வாழ்வு
- தேவனுக்குப் பயப்படாத வாழ்வு
- தேவ சித்தம் செய்யாத வாழ்வு
- உலக கவலையோடுள்ள வாழ்வு
- மாம்ச சிந்தையான வாழ்வு
- சுயமகிமையைத் தேடும் வாழ்வு
- பெருமையுள்ள வாழ்வு
- மனமேட்டிமையான வாழ்வு
- புறங்கூறித் திரியும் வாழ்வு
- தேவனுக்குப் பிரியமில்லாத வாழ்வு
எவருக்கும் தீமை செய்யாமலிருப்பது மட்டும் அறமாகாது: பிறருக்கு நன்மை செய்யாமலிருப்பதும் தீமையே