ஓசியா – மீகா சுருக்கம் 

ஓசியா – மீகா சுருக்கம் 

ஓசியா Hosea

ஆசிரியர்

ஓசியா என்பதற்கு “இரட்சிப்பு” எனப் பொருள் எபிரேய மூல வார்த்தையை நோக்குவோமானால் யோசுவா, இயேசு என்ற பெயர்களும் இதிலிருந்து வந்ததாகும். இரட்சிக்கிறார்” என்பதாகும்.

ஓசியாவின் தந்தை பெயேரி (1:1) என்பவராவார். இவருடைய மனைவி திட்வாமின் மகள் கோமேர் (1:3) இவருக்கு மூன்று பிள்ளைகள். 1. மகன் இஸ்ரியேல் ஏகூவின் வம்சத்தின் மேல் இஸ்ரவேலின் இரத்தப்பழியைத் தீர்க்க அடையாளமாகும் (1:4). 2. மகள் லோரு காமா (அன்பு பெறாதவள்) இஸ்ரவேல் வம்சத்தோடு இனி இரக்கம் செய்வதில்லை என்பதன் அடையாளமாகும். 3. மகன் லோகம்மீ (எம் மக்கள் அல்லர் (அ) நான் உங்கள் கடவுள் அல்ல) (1:9) இஸ்ரவேலர் இனி தேவனுடைய மக்கள் என அழைக்கப்படமாட்டார்கள் என்பதற்கு அடையாளமாகும். –

இவர் ஊழியம் ஆமோஸ் ஊழியத்திற்கு சற்று பின்பு ஆரம்பித்தது. ஆமோஸ் தேவனுடைய நியாத்தீர்ப்பை குறித்து கண்டித்துரைத்தார். இஸ்ரவேல் மேலுள்ள அன்னிய ஆட்சியை குறித்தும் உறுதிப்படுத்தினார். ஆந்த அன்னிய ஆட்சி அசீரியா ஓசியா என தெளிவுப்படுத்தினார். (7:11,8:9,10:6,11:11)

இவர் இஸ்ரவேல் தேசத்தை சேர்ந்தவர்.தீர்க்கதரிசனங்களை எழுதியவர்களில் இஸ்ரவேல் தேசத்தை சேர்ந்த ஒரே ஒருவர் இவரே. இப்புத்தகம் சமாரியா தேசத்தை அசீரியா மேற்கொண்ட பின்பு யூதேயா தேசத்திலிருந்து எழுதப்பட்டிருக்கலாம்.

சிறிய தீர்கதரிசிகளின் அட்டவணையில் முதலாவதாக இப்புத்தகம் இடம் பெற்றுள்ளது.

பின்னணி

1.ஓசியா வட தேசமாகிய இஸ்ரவேலின் வீழ்ச்சியின் கி.மு.722) காலகட்டத்தில் வாழ்ந்தார்.

2.கடைசி 25 ஆண்டுகளில் (கி. மு. 747-722) இஸ்ரவேல் தேசத்தை 6 பேர் அரசாண்டனர். (2 இராஜா 15:8-17:41) (1. சகரியா 2.சல்லூம் 3. மெனாக்கேம் 4. பெக்காகியா 5. பெக்கா 6. யோதாம்) இந்த அரசர்கள் தேவனுடைய கோபத்தில் அரசர்களாக நியமிக்கப்பட்டு, தேவனின் உக்கிரத்திலே தள்ளப்பட்டவர்கள்(13:11).

செய்தியும் நோக்கமும்

1)ஓசியா புத்தகத்தின் முதல் பகுதி (அதி. 13)

ஓசியாவின் வாழ்க்கை மக்களின் வாழ்க்கைக்கு அடையாளமாக காண்பிக்கிறதை அறிய முடிகிறது. தேவன் ஓசியாவை நோக்கி வேசியாகிய கோமேரை மணக்கும்படி சொல்கிறார். இவர்களுடைய மூன்று பிள்ளைகளும் மூன்று அடையாளங்களாக கொடுக்கப்பட்டு, பெயர்களும் அதற்கேற்றார் போல் கொடுக்கப்படுகிறது. 2ம் அதிகாரம் ஓசியா – கோமேர் இடையே உள்ள உறவுக்கும் தேவன்-இஸ்ரவேலர் இடையே உள்ள உறவுக்கும் ஒப்புமைப் படுத்தப்படுகிறது. உண்மையற்ற தன் மனைவியை ஓசியா வீட்டைவிட்டு வெளியே அனுப்புகின்றனர். ஆனால் ஓசியா தொடர்ந்து நேசிக்க அறிவுறுத்தப்படுகிறார். மறுபடியுமாக தன் மனைவியை சேர்த்துக்கொள்ளுகிறார். இந்த உறவு இஸ்ரவேலரோடு உள்ள உறவை வெளிப்படுத்துகிறது. (2:4,9,18) இஸ்ரவேலர் தேவனை விடுத்து அடிமைத்தனத்திற்கு நேராக செல்லுவதையும் எச்சரிக்கிறார். (7:16,8: 14,9:3,6,17 11:5) தேவன் இன்னும் இஸ்ரவேலரை நேசிக்கிறார் என்பதை அவர்களுடைய திரும்புதல் மூலம் தெளிவுபடுத்துகிறார். (1:11, 2:14-23, 3:5, 11:10-11, 14:4-7)

2) இப்புத்தகத்தின் இரண்டாவது பகுதி (அதி 4-14)

கானானிய தெய்வங்களை வணங்குதல் இஸ்ரவேலரின் ஈடுபாடு குறித்து விவரித்து அவர்களை மனம்திரும்ப ஓசியா அழைக்கிறார். அழிவிற்கு தப்ப இஸ்ரவேலர் விக்கிரக ஆராதனையை விடவேண்டும். (6:14) தேவன் நியாயந்தீர்க்கிறவர் மக்கள் பாவம் செய்யும் வேளைகளில் அவர்களை கண்டித்து மக்களை உணர்த்துகிறார். கீழ்படியாதவர்களைத் தண்டிக்கிறார். ஆனால் மக்கள் மனம்திரும்பும்பொழுது அவர்களை சேர்த்துக்கொள்ளுகிறார்.

யோவேல் JOEL

“யெகோவா தேவன்” என்னும் பொருளுடைய யோவேல் தீர்க்கதரிசியை குறித்து மிக குறைவாகவே வேதத்தில் குறிப்புகள் உள்ளது. இவருடைய தந்தை பெயர் பெத்துவேல் என்பதாகும்.(1:1)

பின்னணி வரலாறு

இப்புத்தகத்தில் எந்த இராஜாவின் பெயரோ, வட தேசமாகிய இஸ்ரவேலைக் குறித்தோ, அசீரியா அல்லது பாபிலோனைக் குறித்தோ குறிப்புகள் ஏதுமில்லை. இருப்பினும் தேவாலய வழிபாட்டைக் குறித்தும் ஆசாரிய பணியைக் குறித்தும் அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளது. மீட்பைக் குறித்து சிலேடையாக காரியங்கள் சொல்லப்பட்டுள்ளது. எனினும் இப்புத்தகத்தின் காலத்தை கனிப்பது கடினமாகவே உள்ளது.

  1. யூதேயா அரசன் யோவாஸின் ஆட்சியின் முதல் காலத்தில் (கி. மு. 835) யோவாஸ் ராஜா சிறுவனாக இருந்ததால் பிரதான ஆசாரியர் சிறுவனாகிய ராஜா இடத்தில் ஆட்சிசெய்துவந்தார். இதற்கு சற்றுமுன்பு யூதா ராஜாவோடு இஸ்ரவேல் ராஜா நல்லுறவு கொண்டிருந்தான். இதன் மூலம் யூதாவை சேர்ந்த யோசாபாத்துக்கும் இஸ்ரவேல் தேச ராஜா ஆகாப் மகள் அத்தாலியாளுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து முடிந்தது. இவர்களுடைய மகன் அகசியா யூதாவின் ராஜாவானான். ஆனால் யெகூ (இஸ்ரவேலன்) அகசியாவை கொலை செய்தான். (2 இராஜா 9:27-28) பின்பு அத்தாலியாள் ஆட்சியை கைப்பற்றினாள். இதினிமித்தம் இஸ்ரவேலோடு கொண்டிருந்த உறவு முறிந்தது. இக்காலத்தில் அசீரிய பேரரசு பெலனிழந்து, பாபிலோன் பேரரசு பெலப்பட ஆரம்பித்தது.
  2. பாபிலோனின் சிறைபிடிப்பிற்குப் பின்பு இக்காலத்தில் யூதா பெர்சியா பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தது. அரசர்கள் யாருமில்லை. எருசலேம் தேவாலயம் திரும்ப கட்டப்பட்டிருந்தது. இக்காலத்தில் ஆசாரியர்கள் தேசத்தை வழிநடத்தி வந்தனர்.

எழுதிய நோக்கம்

யோவேல் காலத்தில் கர்த்தர் வெட்டுக்கிளியினால் வாதித்தார். இதை தீர்க்கதரிசி வரப்போகிற கர்த்தருடைய நாளுக்கான முன்னறிவிப்பாக கருதினார். கர்த்தருடைய நாள் மூன்று நோக்கங்களைக் கொண்டது. ஆவை வரப்போகிற நியாயத்தீர்ப்பை குறித்து எச்சரிக்க மக்களை மனம்திரும்ப அழைக்க தேவஜனத்திற்கு கர்த்தருடைய நாளுக்குப் பின்வரும் இரட்சிப்பைக் குறித்து நம்பிக்கையைக் கொடுக்க.

பொருளடக்கம்

நேர்த்தியாக அடுக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று யோவேல் புத்தகமாகும்

  1. 1ம் அதிகாரம், வெட்டுக்கிளியால் தேசத்தில் ஏற்படும் இழப்பு மனிதர்களையும், விலங்குகளையும் பட்டினிக்கு வழிநடத்தியது. எனவே யோவேல் ஆசாரியர்களை உபவாசித்து மனம்திரும்பி தேவனிடத்தில் ஜெபிக்க அழைக்கிறார்.

2.2ம் அதிகாரத்தில் முதல் அதிகாரத்தை உதாரணமாக எடுத்து எதிராளி எவ்வளவாக வருவர்கள் என விளக்குகிறார். எனவே மக்கள் மனம்திரும்ப வேண்டும் என கூறுகிறார். இங்கு தேவனுடைய செய்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தேவன் ஜனங்களின் அழுகைக்கு பதிலளிப்பார். எதிராளியிடமிருந்து மக்களை விடுவிப்பார். தேவன் மக்களுக்கு புதிய ஆவியை, அதாவது தம்முடைய ஆவியை கொடுத்து எழுப்புவார்.

3.3ம் அதிகாரத்தில் இறுதி நாட்களில் நடைபெறப்போகும் தேவனுக்கும் பிசாசுக்கும்மான யுத்தத்திற்கு முன்பாக மக்களை தேவன் எழுப்புவார். இறுதியில் தேவன் வெற்றிபெறுவார்.

யோவேல் தீர்க்தரிசியின் புத்தகத்தில் “கர்த்தருடைய நாள்” முக்கிய கருத்தாக பிரதிபலிக்கிறது. (1:15, 2:2,11,31) 

  • 1. பழைய கருத்து மாற்றப்பட்டு இது நிகழ்காலக் காரியமாக குறிப்பிடப்படுகிறது. 
  • 2.நிகழ்காலத்திற்கும் வருங்காலத்திற்கும் உள்ள வேறுபாடு தெளிவாக்கப்படுகிறது. (2:19-27) 
  • 3. முடிவுகாலம் என்பது உலகத்திற்குப் பொதுவானது (3:2,1:10)

யோவேல் தீர்தரிசி பெந்தேகோஸ்தே தீர்க்கர் என அழைக்கப்படுகிறார். புதிய ஏற்பாட்டில் பேதுரு மாம்சமான யாவர்மேலும் தேவன் ஆவியை உற்றுவார் என யோவேல் 2:28-29ல் கூறப்பட்டிருப்பது நிறைவேறுவதாக கூறுகிறார். (அப் 2ம் அதி

ஆமோஸ் Amos

ஆமோஸ் என்பதற்கு “சுமை தாங்குகிறவர்” எனப் பொருள். யூதா தேசத்திலுள்ள தெக்கோவா என்னும் ஊரைச் சேர்ந்தவர். ஆனால் இவர் வடதேசமாகிய இஸ்ரவேலுக்கு தன் செய்தியை கொடுத்தார். இவர் மந்தையை மேய்க்கிறவரும், கட்டத்திப் பழங்களை பொறுக்குகிரவராய் இருத்தார்.(7:14)

பின்னணி வரலாறு

1.கி.மு. 930ல் யூதா பென்யமீன் கோத்திரங்கள் தவிர இஸ்ரவேலின் மற்ற 10 கோத்திரங்களும் தாவீது ஆட்சி செய்துவந்த பேரசிலிருந்து பிரிந்து சுதந்திரமாக செயல்படத் துவங்கியது. நாபேத்தின் குமாரன் யெரோபெயாம் இத்தேசங்களுக்கு இராஜாவானான். இவர்களுடைய தலைநகர் சமாரியாவாகும். இரு இஸ்ரவேல் எனவும் வட தேசம் எனவும் அழைக்கப்பட்டது. யூதா, பென்யமீன் கோத்திரத்தார் ஒன்றாக இணைந்து யூதா தேசம் அல்லது தென்தேசத்தை ஏற்படுத்தினர். இவர்களை ரெகோபெயாம் ஆட்சிசெய்துவந்தார். இவர்களின் தலைநகர் எருசலேமாகும்.

இஸ்ரவேலர் (வடதேச மக்கள்) தேவனை வழிபட மக்கள் எருசலேம் செல்லுவது வழக்கம். தேசம் பிரிந்திருப்பதால் தேவாலயமுள்ள எருசலேம் (யூதா தேசம்) செல்லாமல் தன் ராஜ்யத்தில் தங்கியிருக்கும்படி வடதேசமாகிய இஸ்ரவேலின் வடக்கு எல்லையில் உள்ள தாணிலும், தெற்கு எல்லையிலுள்ள பெத்தேலிலும் பொன்னினாலான இரண்டு கன்றுக்குட்டிகளைச் செய்து அவைகளை வணங்கும்படி கூறினார் (1 இராஜா 12:28). இது தேவனுடைய முதலாவது கட்டளைக்கு எதிரானதாகக் காணப்பட்டது (யாத் 20:3-5). இது இவர்களுடைய உருவழிபாடு அல்லது விக்கிரக ஆராதனைக்கு ஆரம்பமாயிருந்தது. அது அழிக்கப்படும் வரை (கி.மு. 722) தொடர்ந்தது. சமாரியா

  1. முதலாம் யெரோபெயாமை தொடர்ந்து தேசம் படைபலத்தில் வலுவிழந்து காணப்பட்டது. இரண்டாம் யெரோபெயாமின் காலத்தில் (கி.மு.793-781) அது மாறி தேசம் வளமை பெற்றது. இக்காலமே இஸ்ரவேலின் பொற்காலமாகும்.
  2. இரண்டாம் யெரோபெயாமுக்கு பின் வந்தவர்கள் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாததை செய்தார்கள். பணம் படைத்தவர்கள் ஏழைகளை நசுக்க ஆரம்பித்தனர். பார்வைக்கு அழகாயிருந்த தேசத்தின் உள்ளான அழுக்கை ஆமோஸ் தீர்க்கர் சுட்டி காண்பித்தார்.

பொருளடக்கம்

  1. ஆமோஸ் தீர்க்கதரிசி உத்தமத்தையும் தேவநீதியையும் குறித்து வலியுறுத்திக் கூறினார். இவர் குறிப்பிடும் உண்மைத் தன்மையே உலக உறவுகளுக்கு குறிப்பாக ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் பழைய ஏற்பாடு தரும் விளக்கமாக அமைந்திருக்கிறது.
  2. ஆமோஸ் அதிகாரம் படைத்தவர்களையும், பணக்காரர்களையும் வன்மையாக கண்டிக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் எளியவரை ஒடுக்கி ஏழைகளிடம் திருடுகிறார்கள் (2:6, 4:1, 5:10-13, 8:1-6)
  3. 3.ஆமோஸ் மனிதர் மூலமாக ஒரு சமுதாய மறுமலர்ச்சி ஏற்பட அழைத்தார். இது குறைவுள்ளதாயிருந்தாலும், மனிதனின் மாற்றம் (5:14-15,24) சமூக நீதி மீதுள்ள தேவனின் கரிசனைக்கு அடிப்படையாக அமைகிறது.
  4. இஸ்ரவேலர் கொண்டுள்ள போலியான சமய சடங்காச்சாரங்களை ஆமோஸ் சாடுகிறார். சமய சடங்காச்சாரங்கள் மக்களை தூய்மைப்படுத்தி விடும் என மக்கள் நம்பினார்கள். இந்த தவறான மனப்பாங்கு தேவனுக்கு அருவருப்பானது என விளக்குகிறார் (4:4, 5:5-6,21-23) மக்களின் மனநிலை மாறவேண்டும் எடுத்துரைக்கிறார். என
  5. 5.மக்கள் மனதிலும் செயலிலும் மாற்றம் பெறவில்லையென்றால் தேவனின் நியாயத்தீர்ப்பு மக்கள்மேல் வரும் எனவும், இதற்கு எவரும் தப்ப முடியாது எனவும் (9:1-6)கூறினார். இருப்பினும் எதிர்காலத்தில் தேவன் தம்முடைய அன்பால் மக்களை எழும்பச்செய்வார் (9:8-15).

ஒபதியா Obadiah

பழைய ஏற்பாட்டில் மிகச்சிறிய நூல் ஒபதியாவாகும். தீர்க்கதரிசனப் புத்தகங்களில் முதலாவது எழுதப்பட்டதும் இப்புத்தகமாகும்.

ஒபதியா புத்தகம் எப்பொழுது எழுதப்பட்டது எனத் தெளிவாகக் குறிப்பிட முடியவில்லை. காரணம் எந்த ஒரு வரலாற்றுச் சம்பவங்களும் இப்புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. 11-14 வசனங்கள் எருசலேமின் அழிவின் நாளை குறிப்பிடுகிறதாக உள்ளது. வரலாற்றின் அடிப்படையில் எருசலேம் 4 அழிவின் நாட்களை சந்தித்திருக்கிறது.

  • எகிப்திய ராஜா சீஷாக் மூலமாக வந்த அழிவு (கி. மு. 925)( 1இராஜாக்கள் 14:25- 26,2நாளாகமம் 12 அதிகாரம்
  • பெலிஸ்தியர் மற்றும் அரேபியர் மூலமாக யோராம் ஆட்சிகாலத்தில் வந்த அழிவு (கி.மு.848-341) (2நாளா 21:16-17, ஆமோஸ் 1:6,11-13) 
  • இஸ்ரவேலின் ராஜா யோவாஸ் மூலமாக வந்த அழிவு (கி. மு. 790) (2இராஜா 14,2நாளா 25) (இது பொருந்தக் கூடியதாக உள்ளது. ஏனெனில் ஒபதியாவின் காலம் கி. மு. 835 ஆகும்.) 
  • பாபிலோனிய இராஜா நேபுகாத்நேச்சார் மூலம் வந்த அழிவு (கி. மு. 586) (2இராஜா 24 25. சங்கீதம் 137:7)

பின்னணி வரலாறு

1.எதோமியர், எருசலேமில் வந்த அழிவின் போது அல்லது எருசலேம் அழிவை சந்தித்தபோது நகைத்து ஒருவேளை பாதுகாப்பற்ற மக்களை கொள்ளையிட்டிருக்கலாம். அழிவிற்கு தப்பியோடியவர்களை எதிராளியின் படைவீரர்களிடம் காட்டிக் கொடுத்தனர். எனவே இப்புத்தகம் எதோமியருக்கு சாபத்தை கொடுக்கக்கூடியதாக உள்ளது.

2.யூதா தேசத்தின் தென்பகுதியில் உள்ள மலைகளில் எதோம் அமைந்திருந்தது. எனவே பாதுகாப்பாகவும், தன்நிறைவாகவும் உள்ளது. எனவே பெருமையோடிருக்கும் ஏதோமியரை ஒபதியா கண்டிக்கிறார். ஏதோமியரின் பாதுகாப்பு தேவகோபத்திற்கு முன்பாக ஒன்றுமில்லாது போகும்.

நோக்கம்

இப்புத்தகம் ஏதோமியரை பழிவாங்கும்படியான ஆவியோடு எழுதப்பட்டுள்ளது எனக் கருதுகின்றனர். இருப்பினும் தேவனுக்கும் அவருடைய ஜனங்களுக்கும் இடையே உள்ள உறவைத் தெளிவாகக் காட்டுகிறதாக உள்ளது. யார் தேவ ஜனத்திற்கு விரோதமாக செயல்படுகிறார்களோ கடிந்துகொள்ளுகிறார்.(சகரியா 2:8,9, வெளி 18:1-20 அவர்களை தேவன்

ஒபதியாவின் செய்தி ஏதோமியரின் கரங்களினால் துன்பத்தை அனுபவித்தவர்களுக்கு ஆறுதலின் வார்த்தையாக உள்ளது.

ஒபதியாவின் தீர்க்கதரிசனம் தேவன் இஸ்ரவேலருக்கு மட்டும் தேவனல்ல (2:15) அகில உலகத்திற்கும் தேவன் எனத் தெளிவுபடுகிறது.

சிறப்புக் குறிப்பு – எதோமியரைப்பற்றி…

  1. 1.ஏதோமியர் ஏசாவின் வம்சாவழியாவர் (ஆதி 25:19-34) 
  2. ஏதோம் தேசம் சேயீர் மலைப்பகுதியில் உள்ளது. இது சவக்கடலுக்கும் அகாபாவுக்கும் இடையே அமைந்துள்ளது. அரபாவுக்கு கிழக்காக உள்ளது (ஆதி 36:1-10)
  3. இஸ்ரவேலருக்கும் ஏதோமியருக்கும் இடையே உள்ள பகை இரட்டை சகோதரர் யாக்கோபு ஏசா மூலம் உருவானது. (ஆதி 27) இப்பகை நூற்றாண்டுகளாக தொடர்ந்தது. இஸ்ரவேல் (யாக்கோபு) -எதோமியர் (ஏசா)  இஸ்ரவேல் எகிப்திலிருந்து யாத்திரையாக வரும்பொழுது, ஏதோமை கடந்துசெல்ல உத்தரவு கேட்டு மறுக்கப்பட்டது (எண் 20:14-21).
  4. ஏதோமின் பிற்கால நிலமையை பார்க்கும்பொழுது, ஏதோம் தொடர்ச்சியாக வெளி ராஜ்யங்கள் மூலம் ஆளப்பட்டு இறுதியில் தன்னுடைய தனித்தன்மையை இழந்துவிட்டது. கி.பி.70ல் ரோமர் எருசலேமை அழித்தபோது ஏதோமையும் அழித்தனர்.

யோனா Jonah

யோனா என்பதற்கு புறா எனப் பொருள். இவர் தகப்பன் பெயர் அமித்தாய். இவர் நாசரேத்துக்கு 3 மைல் வடகிழக்கே உள்ள காத் என்ற ஊரைசேர்ந்தவர் (யோனா 1:1, 2 இராஜா 14:25)

பின்னணி வரலாறு

1கி.மு.900-625 அசீரியா பேரரசு வல்லரசாக திகழ்ந்தது. இதன் தலைநகர் நினிவே ஆகும். இது வடக்கு மெசப்படோமியாவில் இதெக்கேல் ஆற்றின் கரையிலுள்ள நகரமாகும்.(தற்போது ஈராக்கில் உள்ளது) தங்களின் வலுவான இராணுவத்தாலும், தளவாடங்களாலும், திறமையின் மூலம் தங்கள் ஆட்சியை இப்பகுதி முழுவதும் நிலைநாட்டினர். கி.மு.680ல் அவர்கள் அரசு பெர்சியா வளாகுடா முதல் தெற்கே எகிப்து வரை பரவியிருந்தது.

  1. யோனா சுமார் கி.மு.800ல் பிறந்திருக்க வேண்டும். இவ்வேளையில் அசீரியா வடதேசத்தின் எல்லைகளில் இஸ்ரவேலை நெருக்கிக்கொண்டிருந்தது. இஸ்ரவேலின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. இப்பொழுது அசீரியா நிறுத்தப்படாவிட்டால் இஸ்ரவேலரை அவர்கள் மேற்கொண்டு விடுவார்கள். இம் முக்கிய சூழலில் யோனா நினிவே மக்களுக்கு தீர்க்கதரிசனம் உரைத்தார்.

நோக்கம்

தேவன் இஸ்ரவேலுக்கு மாத்திரமல்ல உலகத்திற்கும் தேவன் என்றும், அனைவரையும் நேசிக்கிறார் என்றும் தெளிவுபடுத்த எழுதப்பட்டது.

1.இக்காலத்தில் இஸ்ரவேலர் தாங்கள் மாத்திரமே தேவனின் தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் என்றும் தேவன் இவர்களுக்கு உலக ராஜ்யங்கள் அனைத்தையும் மேற்கொள்ள உதவுவார் எனவும் நம்பினார்.

  1. இஸ்ரவேலர் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் இதன் மூலம் உலக மக்கள் மனம்திரும்பி ஒரே தேவனின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள உதவவேண்டும். 

3.தேவனின் அன்பை யோனா நன்கு அறிந்திருந்தார். (3:2, யாத் 34:6)தேவன் அசீரியாவை அழிப்பார் எனவும் நம்பினார். (1:2)நினிவே மக்கள் மனம்திரும்ப தாமதித்து அழிவை எதிர்நோக்க வேண்டுமென யோனா விரும்பினார். ஆனால் தேவன் இவர் நோக்கத்தை அனுமதிக்காமல் தன்னுடைய அன்பினால் இஸ்ரவேல் அல்லாதோரையும் அரவணைப்பார் என்பதை இப்புத்தகம் தெளிவுபடுத்துகிறது.

பொருளடக்கம்

இப்புத்தகத்தில் நினிவே பட்டணத்தில் கொடுத்த யோனா தீர்க்கதரிசியின் செய்தி குறிப்பிடப்படவில்லை. அவரைப்பற்றிய வாழ்க்கை குறிப்பே உள்ளது. இப்புத்தகத்தில் யோனா இஸ்ரவேலரின் குணநலன்களை பிரதிபலிக்கிறார்.

  1. இஸ்ரவேல் மக்கள் மூலமாக உலகத்திற்காக தேவன், கொண்டுள்ள இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்ற யோனாவை பயன்படுத்துகிறார்.
  2. இரண்டு இறையியல் கருத்துக்கள் இப்புத்தகததில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேவன் உலகத்தின் மீது கொண்டுள்ள அன்பு. இயற்கையின் மீதுள்ள தேவனுடைய 61606060LD (1:4, 4:8)

சுருக்கமாக கூறினால் தேவன் சர்வலோகத்திற்கும் ஆண்டவர், இவர் மூலமாக எல்லாகாரியத்தையும் செய்ய முடியும்.ஆனால் இவ்வல்லமையை நேசத்தோடு பயன்படுத்துகிறார்.

மீகா Micah

மீகா என்பதற்கு “தேவனுக்கு இணையார்?” அல்லது “தேவனைப் போன்றவர் யார்? எனப்பொருள். பெலிஸ்தியா எல்லை அருகிலுள்ள மோரேசத் என்ற ஊரில் பிறந்த இவர் யூத அரசர்களான யோதாம், ஆகாசு, எசேக்கியா ஆகிய மூன்று அரசர்களிடத்திலும் தீர்க்கதரிசனம் உரைத்தார். இவர் இஸ்ரவேலின் தலைநகராகிய சமாரியாவிலும் யூதாவின் தலைநகரமாகிய எருசலேமிலும் கரிசணையோடு தீர்க்கதரிசனம் உரைத்தார்.

காலம்

மீகா ஏசாவின் காலத்தில் வாழ்ந்தவர்.

  1. மீகாவின் வாழ்க்கை காலத்தில் (கி.மு. 760-695) அசீரிய பேரரசின் ராஜா இஸ்ரவேலலையும், யூதா தேசத்தையும் மேற்க்கொள்ளவும் முற்றுகையிடவும் ஆயத்தமாக இருந்து பின் மேற்கொண்டார். கி.மு. 722 ல் இஸ்ரவேல் அசீரியரால் மேற்கொள்ளப்பட்டு மக்கள் சிதறடிக்கப்பட்டும். அசீரியாவுக்கு கைதிகளாகவும் கொண்டு செல்லப்பட்டனர்.
  2. பிற பேரரசுகளும் தேவ ஜனமாகிய இஸ்ரவேலை ஆட்சிசெய்ய நெருக்கிக்கொண்டிருந்தனர். ஆவை, பாபிலோன் (கி.மு. 609-539), பெர்சியா (539-333) கிரீஸ் (கி.மு 333-169).
  3. மீகாவின் வாழ்க்கைக் காலத்தில் இஸ்ரவேல் மற்றும் யூதா மக்கள் தங்களுடைய அரசனையும், படைபலத்தையும், பிற அரசுகளின் உதவியையுமே நாடியது. தேவனுடைய கிருபையையும் வல்லமையையும் நம்ப மறந்தது. இச்சூழலில் இஸ்ரவேலரின் விசுவாசம் நிலைத்திருக்கவும். இக்காலகட்டத்தில் ஆவிக்குரிய வாழ்க்கையின் நெருக்க நிலையை சந்திக்கவும் ஏசாயா மக்களை ஆயத்தப்படுத்துகிறார்.

நோக்கம் பின்னணி

  1. மீகாவின் செய்தி சமுதாய ஏற்ற தாழ்வுக்கு எதிராக வந்தது. இவர் ஒடுக்கப்பட்ட, ஏழைகளின் தலைவனாயிருந்தார். பணக்காரர்களுக்கு எதிராக தொழிலாளிகளோடு நின்றார்.
  • பணக்காரர்கள் இரவுமுழுவதும் ஏழைகளின் நிலங்களையும், வீடுகளையும் அபகரிக்க யோசனைபண்ணி விடியற்காலையில் அதை நடப்பிக்கின்றார்.(2:1-2)
  • பணம்படைத்தவர்கள் ஏழைகளின் சதையை தின்று தோலை உரித்து எலும்புகளை உலையில் போடுபவர்கள் போல செயல்படுகின்றனர்.(3:1-3)
  1. இஸ்ரவேலுக்கும், யூதேயா தேசத்தாருக்கும் சமயம் ஒரு வடிவமாக மாத்திரம் இருப்பதாக உணர்ந்தார்.
  • பலியும், சடங்காச்சாரங்களும் தேவனுடைய தயை பெறுவதற்கும், தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் போதுமென இஸ்ரவேலர் 61600160016066. (6:6-1, 3:11)
  • விக்கிரக ஆராதனை பரவியிருந்தது (1:7). பிற சமய வழிபாட்டு முறைகள் தேவனை ஆராதிக்க பயன்படுத்தப்பட்டது.
  • ஆசாரியர்களும், தீர்க்கர்களும் கூலிக்காக செயல்படுகின்றனர்.(3:11) 
  1. மீகா மக்களின் சமுதாய மற்றும் கலாச்சாரத்தின் நம்பிக்கையற்ற நிலையை வெளிப்படுத்துகிறார். (7:5-6)

4.மக்கள் தேவனைப்பற்றிக் கொண்டிருக்கும் தவறான கருத்தை சரிப்படுத்த முயற்சிக்கிறார். இதற்காக தவறான சமயக்கருத்துக்களை அகற்றி சரியான கருத்தைப் போதிக்கிறார். உண்மையான சமயம் என்பது பலியிடுவதும் சமய வழிபாடுகளை செய்வதும் தசமபாகம் செலுத்துவதுமல்ல. தேவனுடைய நீதியான சட்டதிட்டங்களின்படி வாழ்வது எனத் தெளிவுபடுத்தினார். மீகா நான்கு கேள்விகளை கேட்டு பின் சரியான நடைமுறையை வரிசைப்படுத்துகிறார். (6:6-8)

  • நீதியை செய் (அல்லது) நியாயம் செய் என்ற வித்தியாசமில்லாத சமநிலையை குறிப்பிடுகிறது. (2:1-2,8-9)
  • இரக்கத்தை சிநேகி உலகத்தில் உள்ள அனைவரையும் சிநேகிக்க வேண்டும், இரக்கம் செய்யவேண்டும் (6:8)
  • தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடக்கவேண்டும். நடக்கவேண்டும் வேதத்தில் வாசிக்கும்பொழுது அது அவனுடைய நடத்தையை குறிக்கிறது.(எபேசியர் 4:1-2)
  • இம் மூன்று குணாதிசயங்களும் இயேசு கிறிஸ்துவால் குறிப்பிடப்படுகிறது. (மத்தேயு 23:23)

பொருளடக்கம்

இப்புத்தகம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

  • 1. அதிகாரம் 1-2.
  •  2. அதிகாரம் 3-5.
  • 3. அதிகாரம் 6-7.

இப்புத்தகம் நான்கு அம்சங்களை கொண்டதாக உள்ளது.

  • 1. மனம்திரும்ப அழைப்பு
  • 2. குற்றச்சாட்டுப் பட்டியல்
  • 3.தண்டனையின் செய்தி 
  • 4. திரும்புவதற்கான வாக்குத்தத்தம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *