நீதியான வாழ்க்கை
நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது. (யாகி 3:18)
நீதிமான்…
- நித்திய அஸ்திபாரமுள்ளவன் (நீதி 10:25)
- மரணத்தின்மேல் நம்பிக்கையுள்ளவன் (நீதி 14:32)
- பாடி மகிழ்வான் (நீதி 29:6)
- சிங்கத்தைப்போல தைரியமாயிருப்பான் (நீதி 28:1)
- நன்மை பலனாய் வரும் (நீதி 13:21)
- கொம்புகள் உயர்த்தப்படும் (சங் 75:10)
- நித்திய கீர்த்தியுள்ளவன் (சங் 112:6)
- கர்த்தரால் நேசிக்கப்படுகிறான் (சங் 146:8)
நீதிமானாய் வாழும்போது கிடைக்கும் ஆசீர்வாதங்கள்…
- ஜெபத்தைக் கேட்கிறார் (நீதி 15:29)
- நீதிமானின் ஊக்கமான ஜெபம் மிகவும் பெலனுள்ளது (யாக் 5:16)
- நீதிமானுக்கு ஒரு கேடும் வராது (நீதி 12:21)
- நீதிமான் அசைக்கப்படுவதில்லை (நீதி 10:30)
- நீதிமானின் சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும் (நீதி 10:6)
- கூடாரங்களில் இரட்சிப்பின் சந்தோஷம் இருக்கும் (சங் 118:15)
- கர்த்தர் தாங்குவார் (சங் 37:17)
- பசியினால் வருந்தவிடார் (நீதி 10:3)
நீதிமானாய் வாழும்போது…
- சமாதானம் கிடைக்கும் (சங் 37:37)
- மகிமை உண்டாகும் (சங் 73:24
- நம்பிக்கை பிறக்கும் (நீதி 23:18)
- நித்திய ஜீவன் கிடைக்கும் (ரோம 6:22)
- இளைப்பாறுதல் கிடைக்கும் (தானி 12:13)
- உயிர்த்தெழுதலில் பங்கடைவோம் (1கொரி 15:51)
நீதிமானாய் வாழும்போது கிடைக்கும் பலன்கள்…
- செழிப்பான வாழ்க்கை (உபா 8:7)
- கனியுள்ள வாழ்க்கை (உபா 8:8)
- புஷ்டியான வாழ்க்கை (உபா 8:8)
- குறைவில்லாத வாழ்க்கை (உபா 8:9)
- உறுதியுள்ள வாழ்க்கை (உபா 8:9)
- நல்ல வாழ்க்கை (உபா 8:10)
எப்படி நீதிமானாக்கப்படுகிறோம்?
- தேவன் நீதிமானாக்குகிறார் (ரோம 8:33)
- இயேசுகிறிஸ்துவினால் (அப் 13:38)
- பரிசுத்த ஆவியானவரால் (1கொரி 6:11)
- கிருபையினால் (ரோம 3:24)
- விசுவாசத்தினால் (ரோம 5:1)
- இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் (ரோம 5:9)
- தன்னைத் தாழ்த்துகிறதினால் (லூக் 18:13)
ஒருவன் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலும், தேவ கட்டளைகளைக் கைக்கொள்வதாலும் நீதிமானாக்கப்படுகிறான்