You are currently viewing வேதாகம குடும்பம்: XV. யோசேப்பு – மரியாள் 

வேதாகம குடும்பம்: XV. யோசேப்பு – மரியாள் 

வேதாகம குடும்பம்: XV. யோசேப்பு – மரியாள் 

மிகவும் தனிச்சிறப்புப் பெற்ற குடும்பம் யோசேப்பு -மரியாள் குடும்பம்.

யோசேப்பு

இயேசுவைப் பெற்றெடுத்த தாயாகிய மரியாள் உலகமெல்லாம் போற்றப்படுகிறாள். ரோமன் கத் தோலிக்க சபையார் இயேசுவைவிட மரியாளை அதிகம் கனப்படுத்துகின்றனர். யோசேப்பு முக்கிய இடம் பெறுவதில்லை. ஆனால் யோசேப்பிடம் காணப்பட்ட நற்குணங்களை மறந்துவிடக்கூடாது.

1. யோசேப்பு நீதிமான் (மத்.1:19) 

திருமணத்திற்கு ஆயத்தமாயிருந்த இந்த வாலிபனை பரிசுத்த வேதாகமம் நீதிமான் என்று சாட்சியிடுகிறது. இவர் வாலிப வயதிலே உண்மை யும் நடந்தவர். ஒழுக்கமுள்ளவர். இப்படிப்பட்ட சாட்சி பெறுவது ஒரு வாலிபனுக்கு எவ்வளவு பெருமை.

2.மரியாளை அவமானப்படுத்த விரும்பா தவர் (மத்.1:19)

உலக சரித்திரத்திலேயே மரியாளின் நிலை தனித்தன்மை வாய்ந்தது. மரியாள் பரிசுத்த கன்னி கையாய் வாழ்ந்தவள். காபிரியேல் தூதனை தேவன் மரியாளிடம் அனுப்பி…

பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமான உன்னதமான வருடைய பலம் உன்மேல் நிழலிடும். நீ கர்ப்பவதி யாகி ஒரு குமாரனைப் பெறுவாய் என்ற செய்தி யை அறிவித்தார் (லூக்.1:35,31).

உலகத்தில் இதற்கு முன்போ பின்போ ஏற் படாத ஒரு சிறப்பு அனுபவம் இது. இதன்படியே மரியாள் கர்ப்பமுற்றாள். இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் எந்த மணமகனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். குடும்பத்தாரிடமும் ஊராரிடமும் கூறி மணமகளை கேவலப்படுத்தி திருமணத்தை நிச்சயம் நிறுத்தி விடுவான். ஆனால் யோசேப்பு தங்கமான பண்பாளர். தனக்கென்று நியமிக்கப் பட்ட மரியாளை அவமானப்படுத்த விரும்பவில் லை. அமைதியான முறையில் அவளைத் தள்ளி விட யோசித்தார்.

மனைவி செய்யும் சிறு தவறுகளையும் பெரிது படுத்திப் பேசுவோர் ஏராளமுண்டு. மனைவியை சந்தேகித்து துன்பப்படுத்தும் கணவன்மார் உண்டு. மனைவி தவறு செய்யாதிருந்தும் தவறு செய்தது போல கற்பனை செய்துகொண்டு மனைவியையும் அவள் வீட்டாரையும் கேவலப்படுத்துவோர் பலர் உண்டு.

3. யோசேப்பு தேவ வெளிப்பாடு பெற்றான் (மத்.1:20)

கர்த்தருடைய தூதன் சொப்பனத்திலே யோ சேப்பிற்கு வெளிப்பட்டு மரியாளை சந்தேகிக்க வேண்டாம். “அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியானவரால் உண்டானது” என்ற வெளிப் பாட்டைப் பெற்றான். திருமணத்திற்கு ஆயத்த மாகும் வாலிபர்கள் யாவரும் தங்கள் வாழ்க்கை யைக் குறித்து வெளிப்பாடு உடையவர்களாய் இருப்பது மிக அவசியம்.

4. கர்ப்பமுற்றிருந்த மரியாளை யோசேப்பு திருமணம் செய்தார் (மத்.1:24)

தேவ வெளிப்பாடு பெற்ற யோசேப்பு மரியாளை அன்புடன் மணந்து கொண்டார். தன் மனைவியின் நிலையை நன்கு விளங்கிக் கொண் டார். யோசேப்பின் பெருந்தன்மை பாராட்டுக் குரியது.

5. பல மாதங்கள் மரியாளுடன் சரீர உறவு வைத்துக் கொள்ளவில்லை (மத்.1:25)

திருமணமான எந்த வாலிபனும் இப்படிப்பட்ட தியாகம் செய்ய எதிர்பார்க்க முடியாது. யோசேப்பு நல்ல கட்டுப்பாடோடிருந்த வாலிபன். மரியாள் இயேசுவை பெற்றெடுக்கும்வரை அவளை நெருங்கவில்லை. இது யோசேப்பிடம் காணப்பட்ட சிறந்த பண்பு. மனைவியின் நிலை அறியாமல் சில கணவன்மார் சுயநலமுள்ளவர்களாயிருப்பதால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் உருவா கின்றன.

மரியாள் வாழ்நாள் முழுவதும் கன்னிகையா கவே வாழ்ந்தாள் என்று ரோமன் கத்தோலிக்க நண்பர்கள் கூறுவார்கள். இது உண்மையல்ல என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது.

அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்தான் (மத்தேயு 1:25).

இயேசு முதற்பேறான குமாரன். அதாவது முதல் பிள்ளை என்று கூறப்பட்டுள்ளது. ஒரே பிள்ளை அல்ல. முதல் பிள்ளை. அப்படியானால் அதற்குப் பின் மரியாளுக்கும் யோசேப்பிற்கும் பிள்ளைகள் பிறந்தார்கள் என அறிகிறோம்.

முதல் குழந்தை பெறுமளவும் அவளை அறிய வில்லை. அதாவது அவளுடன் உறவு வைத்துக் கொள்ளவில்லை. எனவே இயேசு பிறந்தபின் மரியாளும் யோசேப்பும் கணவன் மனைவியாக உறவு கொண்டார்கள் என அறிகிறோம். இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்து பிரசங் கித்தபோது அவர்மூலமாய் நடந்த அற்புத அடை யாளங்களையும் கண்டு ஆச்சரியப்பட்ட அந்த ஊரார் …

இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கி றார்கள் அல்லவா? என்று சொல்லி அவரைக் குறித்து இடறலடைந்தார்கள் (மாற்கு 6:3).

இந்த வசனங்களின் அடிப்படையில் மரியா ளுக்கும் யோசேப்பிற்கும் பல பிள்ளைகள் இருந் தார்கள் என அறிகிறோம்.

மரியாள்

உலகில் வந்த எந்தப் பெண்ணையும்விட மிக சிறப்புப் பெற்றவள் மரியாள். மரியாளைப்போல உண்மையுள்ள கன்னியர் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். ஆனால் மரியாளுக்குக் கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்ததால் இயேசுவைப் பெற்றெடுக்கும் சிலாக்கியம் பெற்றாள்.

1. திருமணத்திற்கு முன்பே கர்ப்பமுற்று பல சந்தேகங்கள், வசைச்சொல்லுக்கு ஆளானவள் வாழ்ந்த மரியாளுக்குக் கிடைத்த சிலாக்கியம் தனிச்சிறப்பு வாய்ந்தது. 

உலக இரட் சகராகிய இயேசுகிறிஸ்துவை பெற்றெடுக்கும் சிலாக்கியம் பெற்றாள். ஆனால் பரிசுத்த ஆவி யானவர்மூலம் கர்ப்பமுறும் நிலையை ஏற்றுக் கொண்டது எளிதானதல்ல.

பொதுவாக ஒரு பெண் திருமணத்திற்கு முன் கர்ப்பமுற்றால் தவறான நடத்தையின் மூலம் ஏற் பட்டது என்பதை யாவரும் அறிவர். அந்த இழிச் சொல்லை, சந்தேகத்துடன் பேசப்பட்ட பேச்சைக் கேட்க வேண்டிய நிர்ப்பந்த நிலை அவளுக்கு உண்டாயிற்று. தன்னை திருமணம் செய்ய இருக்கும் யோசேப்பு என்ன நினைப்பார், அவருக்கு இதை விளக்கிச் சொன்னால் புரிந்துகொள்வாரா போன்ற பல எண்ணங்கள் அவளுக்குத் தோன்றி இருக்கும்.

2. உலக இரட்சகரைப் பெற்றெடுக்கப் போகி றோம் என்ற எண்ணத்தில் தனக்கு திருமணம் வேண்டாம் என்றும் சொல்லவில்லை.

இயேசுவைப் பெற்றெடுக்கும் சிலாக்கியம் பெற்ற அவள் ஒரு குடும்பப் பெண்ணாக இருக் கவே விரும்பினாள். தனக்கு நியமிக்கப்பட்ட யோசேப்பை அலட்சியப்படுத்தவில்லை. சில பெண்களுக்கு சில சிலாக்கியங்களும், கிருபை களும், வரங்களும் கிடைத்துவிட்டால் திருமணமே வேண்டாம் என்பார்கள், அல்லது கணவனை மதிக்க மாட்டார்கள். மரியாள் நல்ல அடக்கமுடை யவளாக இருந்தாள்.

3. இயேசுவைப் பெற்றெடுத்தபின் யோசேப் பிற்கு நல்ல மனைவியாக வாழ்ந்து பிள்ளை களைப் பெற்றெடுத்தாள்

உலக இரட்சகரையே பெற்று விட்டோமே. இனி யோசேப்புடன் என்ன உறவு, இனி எதற்குக் குழந் தைகள் என்று பிரதிஷ்டை ஒன்றும் செய்யவில்லை. தன் கணவனுக்கு நல்ல மனைவியாக இருந்தாள். பல பிள்ளைகளைப் பெற்றெடுத்து நல்ல தாயாக இருந்து அவர்களை வளர்த்தாள்.

யோசேப்பு – மரியாளின் குடும்பத்திலிருந்து கற்றுக் கொள்ளும் காரியங்கள்:

  •  நீதிமான் என்று பெயர் பெற்றவன் யோசேப்பு தனக்கு நியமிக்கப்பட்ட பெண் கர்ப்பமுற்றிருக் கிறாள் என்று கேள்விப்பட்டும் அவளை அவமா னப்படுத்த விரும்பாமலிருந்த பண்பாளன் இவன்.
  • மரியாளின் உண்மை நிலையைக் குறித்து தேவ வெளிப்பாடு பெற்றான்.
  • பலர் பலவிதமாகப் பேசின போதிலும் மரியாளை மனமுவந்து மணந்தான்.
  • அவள் இயேசுவை பெற்றெடுக்கும்வரை அவளுடன் எந்த தொடர்பும் வைக்காத நல்ல அடக்கமுள்ளவனாக இருந்தான்.
  • திருமணத்திற்கு முன்பே தேவ பெலத்தால் கர்ப்பமுற்று பல சந்தேகங்களுக்கு ஆளானவள் மரியாள்.
  • தேவகுமாரனைப் பெற்றெடுக்கப் போவதால் யோசேப்பு வேண்டாம் என்று கணவனை ஒதுக்கவில்லை.
  • இயேசுவைப் பெற்றெடுத்த பின்பு நல்ல மனைவியாக இருந்து ப்ல பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாயாக விளங்கினாள்.
  • இயேசு தன்னுடன் வருகிறார் என்று யூகித்து அவரை எருசலேமில் விட்டுவிட்டு பின்பு தேடி அலைந்தது நமக்கு ஓர் எச்சரிப்பு.
  • உலக இரட்சகரைப் பெற்றெடுத்து வளர்த்த பெருமைக்குரிய பெண்மணி மரியாள்.

Leave a Reply