வேதாகம குடும்பம்: XVI. அனனியா – சப்பீராள்

வேதாகம குடும்பம்: XVI. அனனியா – சப்பீராள்

அனனியா சப்பீராள் குடும்பத்திலிருந்து பல எச்சரிப்புக்களைக் கற்றுக்கொள்ளுகிறோம். இவர் களுடைய குடும்பப் பின்னணியத்தைக் குறித்து அதிகம் கூறப்படவில்லை.

கர்த்தருக்கு கொடுக்க தங்கள் சொத்து களை விற்றார்கள்

இந்தக் குடும்பத்தைக் குறித்துப் பிரசங்கிப் போர் இவர்களின் குற்றங்களை சுட்டிக்காட்டுவது தான் வழக்கம். ஆனால் இவர்களின் ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தது. ஒரு சபையில் கர்த்த ருக்காகத் தாராளமாய் கொடுப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். 100 விசுவாசிகள் உள்ள சபையில் ஒழுங்காக தசமபாகம் (வருமானத்தில் பத்தில் ஒன்று) கொடுப்பவர்கள் பத்துப் பேர் இருந்தால் அது பெரிய காரியமாகத் தோன்றும். பெரும் பாலான விசுவாசிகள் தங்களால் இயன்றதைக் கொடுப்பார்கள் அவ்வளவுதான்.

100 விசுவாசிகளுள்ள சபையில் சபையின் தேவைகளுக்காக தங்கள் ஆஸ்தியை விற்றுக் கொடுப்பவர்கள் எத்தனைபேர் இருப்பார்கள்? ஆயிரம் பேரில் ஒருவர் இருக்கலாம் என்றுதான் நிதானிக்க முடியும். அனனியா, சப்பீராள் கர்த்தருக் காக கொடுக்க தங்கள் காணியாட்சியை விற்றார்கள். எனவே இந்த விஷயத்தில் இவர்கள் பாராட்டப் பட வேண்டியவர்களே.

விற்றதில் ஒரு பங்கை சபைக்குக் கொடுத் தனர்

கர்த்தருடைய சேவைக்காக கொடுக்க முன் வந்ததும் நல்ல செயலே. இன்று சபைக்கு வருபவர் களில் பலர் எந்த ஊழியத்திற்கும் கொடுக்காமல் இருப்பதைப் பார்க்கிறோம். இவர்கள் தங்கள் சொத் தை விற்று ஒரு பங்கை கர்த்தருக்குக் கொடுத் தார்கள்.

அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்

சபைக்கு ஒரு விளக்கு வாங்கிக் கொடுத்தாலும் தங்களுக்குப் பெயர் வரவேண்டும் என்று எண்ணி தங்கள் பெயரை அதில் எழுதிக் கொடுப்பவர்கள் பலருண்டு. ஆனால் அனனியா தன் பணத்தை அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தது அவனு டைய தாழ்மையை, பணிவைக் காட்டுகிறது.

இவர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? கர்த்தருக்கு எல்லாம் கொடுத்துவிடுவோம் என்று பொருத்தனை பண்ணி அதை மீறி இருக் கிறார்கள்.

பொருத்தனையைக் குறித்து வேதம் கூறுவதென்ன? மோசே இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங் களின் தலைவரை நோக்கி: கர்த்தர் கட்டளை யிடுவது என்னவென்றால்:

ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக் கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக் கின்படியெல்லாம் செய்யக்கடவன் (எண்.30:1,2).

பொருத்தனை பண்ணியபடி செய்ய வேண்டும் எனப் பார்க்கிறோம்.

நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ் செய்யாதே; உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும்.

நீ பொருத்தனைப் பண்ணாதிருந்தால், உன் மேல் பாவமில்லை (உபாகமம் 23:21,22).

பொருத்தனை பண்ணியதை செலுத்த தாம திக்கக் கூடாது. “பொருத்தனை பண்ணியதை செலுத்தாவிட்டால் அது பாவமாகும்” என்று கூறப்பட்டுள்ளது.

பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும் (நீதி.20:25).

பொருத்தனை செய்த பின்பு வேறு யோசனை செய்வது கண்ணியாக அமையும் என்ற எச்சரிப் பைப் பார்க்கிறோம்.

நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண் டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்து கொண் டதைச் செய்.

நீ நேர்ந்து கொண்டதைச் செய்யாமற் போவதைப் பார்க்கிலும், நேர்ந்து கொள்ளாதிருப்பதே நலம் (பிரசங்கி 5:4,5),

கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்து வைத்தனர் அனனியாவும் சப்பீராளும் முழுவதும் கொ டுக்கப் பொருத்தனை பண்ணியபின்பு மறு யோசனை செய்தார்கள். நமக்கு ஆத்திரம் அவசரம் வந்தால் யாரிடம் போவது, எனவே கொஞ்சம் நமக்காக வைத்துக்கொள்வோம் என்று திட்டமிட்டனர்.

தேவ சமூகத்தில் அனனியா பொய் சொன்னான் நிலத்தின் கிரயம் மொத்தமே இவ்வளவுதான் என்று பொய் சொன்னான். நாங்கள் விற்றது இவ்வளவிற்கு, எங்களுக்கென்று எடுத்துக் கொண் டது இவ்வளவு, மீதி இவ்வளவு என்று சொல்லி இருக்க வேண்டும். பொருத்தனை பண்ணியபின் மறுபரிசீலனை செய்தது ஒரு பாவம். தேவ சமூகத்தில் பொய் சொன்னது மற்றொரு பாவம். அனனியா அந்த இடத்திலேயே விழுந்து மரித்தான்.

சப்பீராள் இவளிடம் காணப்பட்ட குறையென்ன?

1.ஒரு பங்கை வஞ்சித்து வைக்க இவளும் கணவ னுடன் ஒத்துப்போனாள்

தன் கணவன் செய்த தவறை இவள் சுட்டிக் காட்டி அவனைத் திருத்தி இருக்க வேண்டும். அநேக குடும்பங்களில் இன்று ஆசீர்வாதம் நிலைத் திருக்கக் காரணம் அந்த வீட்டின் தலைவியே என்று எனக்குத் தெரியும். கணவன்மார் போடும் தப்புக் கணக்குகளுக்கு உடன்படாததால் அடியும் உதையும் வாங்கினாலும் தன் கணவன் செய்யும் தவறைச் சுட்டிக்காட்டி அவனைத் திருத்தியதால் இன்று அந்த குடும்பங்கள் அழிவினின்று காக்கப்பட்டுள்ளன.

2. சப்பீராள் தேவசமூகத்தில் பொய் சொன்னாள்

 நிலத்தை இவ்வளவிற்குத்தானா விற்றீர்கள் என்று பேதுரு கேட்டபோது ஆம், இவ்வளவிற்குத்தான் விற்றோம் என்று பொய் சொன்னாள். அந்த இடத்திலேயே அவளுக்கும் மரணம் ஏற்பட்டது. 

3. வீட்டில் சேர்த்து வைத்த பணம் அடக்கத்திற்கும் உதவவில்லை

எதிர்காலத்திற்கு உதவும் என்று எண்ணி வஞ்சித்து வைத்த பணம் இவர்கள் இருவருடைய அடக்கத்திற்குக்கூட உதவவில்லை.

உங்கள் உள்ளத்தில் எழும்பும் கேள்வி களுக்குப் பதில்கள்:

1) எந்தப் பொருளை விற்றாலும் எல்லாவற்றையும் கர்த்தருக்கே கொடுக்க வேண்டுமா?

அவசியமில்லை. ஒரு பொருளை விற்கும் போது, ஆண்டவரே இதில் பத்தில் ஒன்றைத் தரப் பொருத்தனை பண்ணுகிறேன் என்று தீர்மானித் தால் அதை மட்டுமே கொடுத்தால் போதும். எதைப் பொருத்தனை பண்ணினோமோ அதைக் கொடுக்கக் கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

2) எதைக் கொடுத்தாலும் பொருத்தனை பண்ணித் தான் கொடுக்க வேண்டுமா?

பொருத்தனை பண்ணுவது அவரவரைப் பொ ருத்தது. நீங்கள் பொருத்தனை பண்ணவேண்டிய நிர்ப்பந்தம் ஒன்றுமில்லை.

கணவனும் மனைவியும் ஒற்றுமையாய் ஒரு மனதுடன் செயல்படுவது நல்லதுதான். ஆனால் கர்த்தரை வஞ்சிக்கிற விஷயத்தில் ஒருமனப்பட் டது அவர்கள் இருவருக்கும் சாபத்தைக் கொண்டு வந்தது.

கணவன், மனைவியரே!

அன்று சபையில் பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாய் கிரியை செய்யக்கூடிய அளவில் சபை ஜெபத்தில் உறுதியாயிருந்தபடியால் தவறு செய்த வர்கள் உடனே தண்டிக்கப்பட்டனர். இன்று இதை விட அதிகமாய் கர்த்தரை வஞ்சிக்கிறவர்கள் சபை களில் உள்ளனர். ஆனாலும் இவ்விதத் தண்டனை யை உடனே பெறுவதில்லை. சபையில் தேவ சமூகம் பிரசன்னமாயிருக்கும்போது அற்புதங்கள் அதிகம் நடைபெறும். பாவிகள் மனந்திரும்பு வார்கள். துணிகரமாய் பாவம் செய்கின்றவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

நீங்கள் நல்ல காரியத்திற்கு ஒருமனப்படுங்கள். ஞானஸ்நானம் எடுப்பதில், கர்த்தருக்குக் கொடுப் பதில், ஊழியத்திற்கு ஒப்புக்கொடுப்பதில் சபைக் காரியங்களில் ஒத்துழைப்பதில் ஒருமனப்படுங்கள்.

கணவன் தவறு செய்யும்போது அந்தத் தவறுக்கு மனைவி ஒத்துப்போகக்கூடாது. அன்புடன் கண்டித்து கணவனை அல்லது மனைவியைத் திருத்த வேண்டும். இல்லாவிடில் தண்டனை நிச்சயம்.

அனனியா சப்பீராள் குடும்பத்திலிருந்து கற்றுக் – கொள்ளும் காரியங்கள்:

  • கர்த்தருக்குக் கொடுக்க சொத்துகளை விற்றது அவர்களின் கொடையுள்ளத்தைக் காட்டுகிறது.
  • விற்றதில் ஒரு பங்கை கொடுத்ததும் நற்செயலே
  • காணிக்கையை அப்போஸ்தலருடைய பாதத் தில் கொண்டுபோய் வைத்தது அவர்களின் பணிவைக் காட்டுகிறது.
  • எல்லாம் கொடுப்போம் என்று பொருத்தனை பண்ணினது நல்ல காரியமே.
  • பொருத்தனையை நிறைவேற்றாமல் போனது நமக்கு ஓர் எச்சரிப்பு.
  • அப்போஸ்தலரிடம் பொய் சொன்னது தண்ட னைக்குரியதாயிற்று.
  • கணவனும் மனைவியும் பொய் சொல்ல ஒரு மனப்பட்டது ஓர் எச்சரிப்பு.
  • இருவரும் ஒரே நாளில் அகால மரணமடைந்தது அடுத்த எச்சரிப்பு.
  • சபைக்கு ஒரு தவறான குடும்பமாய் விளங் கினது வேதனை.
  • எதிர்கலத்திற்கென்று வீட்டில் ஒழித்துவைத்தது தங்கள் அடக்கத்திற்குக்கூட பயன்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *