பாவமில்லாத வாழ்க்கை

பாவமில்லாத வாழ்க்கை

துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும் (சங் 19:(3)

பாவம் என்பதற்கு…

  • பாவம் என்பதற்கு எபிரேய மொழியில் 2 வார்த்தைகளும், கிரேக்க மொழியில் 2 வார்த்தைகளும் வேதாகமத்தில் பயன்படுத்தப்பட் டுள்ளது. வேதாகமத்தில் மொத்தம் 763 முறை இடம்பெற்றுள்ளது. பாவத்தைக் குறித்து எபிரேயு மொழியில் CHATTAH, AVON என்ற
  • வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. 
  • இதில் CHATTAH என்பதற்கு பொல்லாங்கை நடப்பிப்பது என்று அர்த்தமாகும் (சங் 51:4; 1தெச 5:18; ஆதி 19:7,9)
  • AVON என்பதற்கு செம்மையானதை புரட்டுவது, முரட்டாட்டம் பண்ணுவது, கலகம் செய்வது என்று அர்த்தமாகும் (யோபு 33:27; சங் 78:8, எண் 14:9)
  • பாவம் என்ற வார்த்தை கிரேக்க மொழியில் PARAPTOMA, HAMARTIA என்ற வார்த்தைகள் சொல்லப்பட்டுள்ளன.
  • இதில் PARAPTOMA என்ற வார்த்தைக்கு அக்கிரமம் (சிந்தனையில் வரும் அசுத்தங்கள்) என்பது அர்த்தம் (எபே 2:5; ஏசா 55:7; சங் 103:3)
  •  HAMARTIA என்ற வார்த்தைக்கு இலக்கைத் தவற விடுவது என்று அர்த்தமாகும் (மத் 1:21; ரோம 6:23)

பாவத்தைக் குறித்து வேதத்தில்

  • அந்தரங்கப்பாவம் (சங் 90:8)
  • துணிகரமான பாவம் (சங் 19:13)
  • கொடிய பாவம் (1யோவா 5:16)

பாவத்தின் தன்மைகள்

  • தேவனை மனஸ்தாபப்பட வைக்கிறது (ஆதி 6:6)
  • தேவனின் இருதயத்தை விசனப்படுத்தும் (ஆதி 6:5,6)
  • குற்றமுள்ள மனசாட்சியை உண்டாக்கும் (சங் 51:3)
  • தேவ உறவிலிருந்து பிரிக்கிறது (ஆதி 3:8; ரோம 5:17; சங் 1:5)
  • அடிமைப்படுத்திவிடும் (யோவா 8:34)
  • மனதைக் குருடாக்கி விடுகிறது (2கொரி 4:4)
  • அவிசுவாசத்திற்குள்ளும் நடத்திவிடும் (எபே 2:12)
  • தீட்டுப்படுத்தும் தன்மையுடையது (தீத் 1:15)
  • ஆக்கினைக்குள்ளாக தீர்க்கும் (ரோம 5:18)

பாவம் நீங்க

  • தான் பாவி என்று உணர்வடைய வேண்டும் (சங் 19:12) 
  • இயேசுவை விசுவாசிக்க வேண்டும் (மாற்கு 2:5-10)
  • மனந்திரும்பி பாவ மன்னிப்பு பெற வேண்டும் (அப் 5:31)
  • அறிக்கையிட்டு விட்டுவிட வேண்டும் (நீதி 28:13)
  • ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும் (அப் 22:16)
  • பிறர் தப்பிதங்களை மன்னிக்க வேண்டும் (மத் 6:14,15)
  • தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் (1யோவா 5:18)

பாவத்தின் முதல் பிறப்பு மரணம்: அதன் கடைசி பிறப்பு நரகம். பாவங்களை அறிக்கையிடுதல் மனந்திரும்புதலின் முதல்படி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *