பெருமை
பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார்…(1பேது 5:5)
பெருமை…
- பிறரை விட மேன்மையாயிருக்க விரும்புவது (லூக் 18:11)
- பெருமையில் வெளிப்படுவது பொல்லாப்பு (சங் 52:1)
- பிறரோடு தம்மை ஒப்பிடுவது (லூக் 18:11)
- தேவனை நமக்கு எதிர்த்து நிற்க செய்கிறது பெருமை (யாக் 4:6)
- ஆவிக்குரிய பெருமை மிகவும் தந்திரமுள்ளது (லூக் 18:11)
- பெருமையும் அகங்காரமும் பரிசுத்தத்திற்கு இடையூறு (ஏசா 13:11)
பெருமை எப்படி வெளிப்படுகிறது?
- பேச்சில் பெருமை (யாக் 3:5) (நம் குடும்பம், செல்வம், புகழ், திறமை பற்றி பேசும்போது)
- முகத்தில் பெருமை (1சாமு 16:7) (உயர் பதவிகளில் அமர்ந்ததும்)
- கண்களில் பெருமை (சங் 73:7)
(சிலருக்கு பதவி உயர்வு வந்துவிட்டால்)
- செயல்களில் பெருமை (எபே 2:9) (பிறரை மதிக்காமல் பெருமையான செயல்களில் ஈடுபடுதல்)
- இருதயத்தில் பெருமை (மாற் 7:22,23) (பார்வைக்கு தாழ்மை உள்ளவர்களாயிருத்தல்)
- ஜெபத்தில் பெருமை (லூக் 18:12)
(நன்றாக ஜெபம்பண்ண தெரிந்திருப்பதால்)
- அழகில் பெருமை (எசேக் 28:17) (தனக்குத்தானே மெச்சிக்கொள்ளுதல்)
- ஜாதிப் பெருமை (1கொரி 3:4)
(தான் பிறந்த ஜாதியைக் குறித்து)
- சம்பாத்தியத்தில் பெருமை (லூக் 12:17-20)
(தான் சம்பாதித்ததைக் குறித்து பெருமை)
- தன் திறமையில் பெருமை (தானி 4:30)
(தன் கை வல்லமையைக் குறித்து)
- தேவன் கொடுத்த கிருபையில் பெருமை (2சாமு 18:9) (அப்சலோம் தன் அழகைக் குறித்து)
- உயர்வில் பெருமை (எஸ்தர் 3:1,2)
(ஆமான் தன்னை ராஜா உயர்த்தி வைத்ததினிமித்தம்)
பெருமையின் விளைவுகள்…
- தேவன் துக்கிக்கிறார் (ஏசா 13:17)
- தேவன் எதிர்த்து நிற்கிறார் (1பேது 5:5)
- பெருமையை ஒழியப்பண்ணுவார் (எசே 7:24)
- மனிதனைத் தீட்டுப்படுத்தும் (மாற் 7:22,23)
- தேவன் முறித்துப் போடுவார் (லேவி 26:19)
- தானே பொல்லாப்பை தேடிக்கொள்கிறான் (2இரா 14:10)
- மனிதனை அடங்கச் செய்கிறார் (யோபு 33:17)
- தேவன் மறு உத்தரவு கொடுக்கிறதில்லை (யோபு 35:12)
நம்மை கிறிஸ்துவுக்கு முன்பாக நிறுத்திப் பார்க்கும்போது இருதயத்தின் பெருமை தானாக அடங்குகிறது