நாகூம் – மல்கியா சுருக்கம் 

நாகூம் – மல்கியா சுருக்கம் 

நாகூம் Nahum

நெகேமியா என்ற பெயரின் சுருக்கமே நாகூம் ஆகும். நெகேமியா என்றால் “ஆறுதல்” என்று பொருள். இவர் எல்கோசா என்ற ஊரைச் சேர்ந்தவர் (1:1). இவ்வூர் இருந்த இடத்தைப்பற்றி மூன்று கருத்துக்கள் உள்ளது. அவை என்னவெனில்,

  • 1. எருசலேமுக்கு தென்மேற்காக இருக்கலாம்.
  • 2. கலிலேயாவிலே இருக்கலாம்
  • 3. கப்பர்நகூம் ஆக இருக்கலாம் (கப்பர் நகூம் – நாகூமின் பட்டணம்)

பின்னணியும் காலமும்

1.கி.மு. 900 முதல் அசீரியர் பழைய ஏற்பாட்டு சரித்திரத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்களாகக் காணப்பட்டனர். நாகூம் காலத்தில் இவர்கள் இருமுறை பாலஸ்தீனாவை மேற்கொண்டனர். கி. மு. 722 இஸ்ரவேல் தேசத்தை மேற்கொண்ட சல்மனாசர் (2 இராஜா 17:6). கி. மு. 701 யூததேசத்தை மேற்கொண்ட சனகெரிப் (2 இராஜா 18:13).

  1. அசிரியர் தங்கள் ஆதிக்கத்தை தங்கள் படைபலத்தால் நிலைநிறுத்தி வைத்திருந்தனர். அவர்கள் கெட்ட உலகத்தின் அச்சடையாளமாக வர்ணிக்கப்பட்டனர். இப்படியாக அசீரியரின் தலைநகரான நினிவேயை நாகூம் “இரத்த பழியின் நகரமாக” கூறுகிறார் (3:1).

3.நாகூம் தன் புத்தகத்தை கி. மு. 663க்குச் சற்று பின்பும் 612க்கு முன்பாகவும் எழுதியிருக்க வேண்டும். ஏனெனில் கி.மு. 663ல் நடந்த எகிப்தின் வீழ்ச்சியைப்பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.(3:10). கி. மு. 612ல் நடைபெற்ற அசீரியரின் நினிவே வீழ்ச்சியைக் குறித்து முன்னறிவிக்கப்படுகிறது.(2:8-10)

  1. நினிவே நகருக்கு யோனா மூலமாக ஒரே கடவுளைக் குறித்து அறிய தருணம் கொடுக்கப்பட்டது. அவர்கள் மனம் திரும்பினர். ஆனால் 150 ஆண்டுகள் கழித்து நினிவே நகரின் வீழ்ச்சியைப்பற்றி நாகூம் அறிவித்தான்.
  1. உலகத்தை குறித்த தேவனின் அக்கரையை தெளிவுபடுத்துகிறது.
  1. அசீரியரின் கரத்தில் துன்பத்தை அனுபவிக்கின்ற மக்களை ஆறுதல்படுத்த இப்புத்தகம் எழுதப்பட்டது.

ஆபகூக் HABAKKUK

விசுவாசத்தின் தீர்க்கதரிசி என அழைக்கப்படுகிற ஆபகூக் என்பதற்கு “தழுவுதல்” என்று பொருள். இவரைக்குறித்து வேதத்தில் மிகக் குறைவாகவே அறியமுடிகிறது. இவர் தேவாலயத்தில் இசைத்துறையில் உள்ள லேவியனாக இருக்கும்போது அழைப்பை பெற்றிருக்கலாம் (3:1,19).

பின்னணியும் காலமும்

  1. வீட்டிலிருந்த எரேமியா, பாபிலோனிலிருந்த தானியேல் இவர்கள் வாழ்ந்த காலத்தில் ஆபகூக் வாழ்ந்தான். நாகூம் தீர்க்கதரிசனம் உரைத்ததற்கிணங்க அசீரியரின் உலக ஆட்சி வீழ்ச்சியுற்றது. எகிப்தும். பாபிலோனும் பின்னர் வலிமையின் இடத்திற்காகப் போட்டியிட்டன. எகிப்து மன்னன் பார்வோன்நேகோ ஐபிராத்து நதி ஓரமான கர்கேமிஸ் என்ற இடத்தில் போரிட்டான் (2 இராஜா 23:29 2நாளா 35:20-24) எகிப்துக்காக பார்வோன்நேகோவோடு போரிட்ட யூதாவின் ராஜா யோசியா கி. மு. 605ல் அப்போரில் கொல்லப்பட்டான். பாபிலோன் மன்னர் நேபுகாத்நேச்சார் தலைமையில் கல்தேயரும் ஒன்று சேர்ந்தனர். இறுதியில் பாபிலோனியர் வெற்றிபெற்று வல்லரசாக விளங்கியது.
  1. பாபிலோனியர், கல்தேயர், யூத மக்களை நியாயத்தீர்க்கும் கருவிகளாக தேவன் பயன்படுத்துவதை இப்புத்தகத்தில் ஆபகூக் குறிப்பிடுகிறார். இக்குறிப்பின்படி பாபிலோனியரின் ஆதிக்கம் வளரும் நாட்களில் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கவேண்டும். இது கி. மு. 607ல் எழுதியிருக்ககூடும்.
  1. ஆபகூக் தீர்க்கதரிசியின் காலத்தில் யூதா தேசமக்கள் பாவத்திலும், அக்கிரமத்திலும் அதிகமாக பெருகியிருந்தனர். யோசியா ராஜாவின் ஆவிக்குரிய மறுமலர்சிக்குப்பின் 10 வருடங்களில் யூதேயாவில் பெரும்மாற்றம் ஏற்ப்பட்டது. இக்காலம் ஆவிக்குரிய காலத்தின் இருண்டகாலமாக கருதப்படுகிறது. (1:2-4) பாபிலோனியரின் சிறைப்பிடிப்பிற்கு முன்னர் எருசலேம் மக்களின் இருதயத்தைக் குறித்து 2 நாளா 36:14-16ல் பார்க்கமுடிகிறது. மேலும் யூதா மக்களின் விக்கிரகாரதனையை எரேமியா 10:3பிபி படம்பிடித்துக் காட்டுகிறது. தவறு செய்த யூதாவை ஏன் தீமை நிறைந்த கொடிய பாபிலோன் வெற்றிகொள்ள வேண்டும்? இக்கேள்விகளுக்கு இறைவன் பதிலளிக்கிறார் யூதாவுக்கு தண்டனை தேவைப்பட்டது தேவன் யூதாவை திருத்த பாபிலோனை தெரிந்துகொண்டார். மேலும் பாபிலோன் முறைவரும். அப்பொழுது பாபிலோன் முழுவதுமாக வெளியே அகற்றப்படும். இறைவனின் மக்களுக்காக கிருபையுள்ள எதிர்காலம் காத்திருக்கிறது. தேவன் தம்முடைய ஆட்சியில் தாமே அதை வெளிப்படுத்துவார்.

ஆபகூக் அவருடைய எல்லாத்துன்பங்களின் இடையிலும் ஜெபிக்கச் சென்றார். இறைவனுடைய விடைக்காகக் காத்திருந்தார். தேவன் அவர் ஜெபித்ததைக் கேட்டார். எனவே தேவனைப் பாடினார்.(3:18,19)

செப்பனியா Zephaniah

செப்பனியா என்பதற்கு “தேவன் மறைவிலிருக்கிறவன்” அல்லது “தேவன் பாதுகாக்கிறார்” எனப்பொருள். இவர் கொடிய மன்னனாகிய மனாசேயின் நாட்களில் பிறந்து தேவனால் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். இவர் எசேக்கியா ராஜாவின் வம்சத்தில் வந்தவராயிருக்கலாம். மேலும் இவர் எருசலேமில் வாழ்ந்திருக்கக் கூடும்.

காலம்

யோசியாவின் காலத்தில் (கி. மு. 640-609) செப்பனியா தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார். இவருடைய ஊழியம் கி.மு.621ல் முன் இருந்திருக்கவேண்டும். தேவாலயத்தில் உபாகமத்தின் புத்தகம் கண்டெடுக்கப்பட்டு. நாட்டில் உள்ள தீமைகளை யோசியா அகற்றியபோது செப்பனியா தன் ஊழியத்தை நிறைவேற்றினார்.

நோக்கம்

1.தீய மன்னனாகிய மனாசேயின் காலத்தில் (கி.மு. 687-643) LOMMIL ஆமோன் (கி. மு. 643-641) காலத்தில் தேசம் பாவத்தில் உழன்றது. இது யோசியாவின் காலத்திலும் தொடர்ந்தது. இவற்றை சீர் செய்ய செப்பனியா தீர்கதரிசனம் உரைத்தார்.

2.செப்பனியாவின் அடிப்படை வார்த்தை “கர்த்தருடைய நாள்”(1:7,8,14,15,16,18: 2:2,3: 3:8,11,16,20) இதன் விளக்கமாவது, யூதா மக்கள் தங்கள் தனிப்பட்ட பாவத்தின் மத்தியிலும், கர்த்தருடைய நாளிலே அவர்களுக்கு ஆசிர்வாதமும், வெற்றியும் வருமென காத்திருந்தனர். கர்த்தருடைய நாள், மக்கள் செய்த தீமைக்கான நீயாயத்தீர்ப்பின் நாளாக அறிவித்தார். இதன் விளைவு யூத தேசம் அன்னிய நாட்டின் கரத்தில் வீழ்ந்துவிடும். மேலும் கர்த்தருடைய நாள் தேவனுடைய ஜனத்திற்கு நம்பிக்கையும் வெற்றியையும் கொடுக்கும் நாளாக கருதப்பட்டது.

  1. கர்த்தருடைய நாளின் மறுபக்கமாக செப்பனியா பார்த்தது என்னவென்றால், இது ஒரு முடிவின் காலம் அல்லது உலகம் இந்நாளில் ஒரு முடிவிற்கு வரும் என்பதாகும். எனவே இது கடைசி காலத்தில் நடைபெறப்போகும் காரியங்களை விவரிக்கிறது.

ஆகாய் Haggail

ஆகாய் என்பதற்கு “என் பண்டிகை” எனப்பொருள்.

  1. யூதர்களுடைய முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கூடாரப்பண்டிகை அன்று ஆகாய் பிறந்திருக்கக்கூடும். இவரின் இரண்டாவது செய்தி 21ம் நாள் 7ம் மாதம் வந்தது. இதுவும் பண்டிகைக்காலமாகும் (2:1, லேவி 23:39-42) 15ம் நாள் 7ம் மாதம் ஆரம்பித்தது நாட்கள் தொடர்ந்து 23ம் நாள் 8 முடிவடையும்.
  1. ஆகாய் எஸ்றா 5:1 லும் 6:14 லும் குறிப்பிடப்பட்டிருக்கிறார். இங்கு இளைய தீர்க்கதரிசியாகிய சகரியாவோடு சேர்ந்து எருசலேம் தேவாலயத்தை மறுபடி கட்ட உற்சாகப்படுத்துகிறார்.
  1. ஆகாய் பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு செருபாரேல் தலைமையில் வந்த 50,000 யூதர்களில் ஒருவராக (கி. மு. 537). வந்திருக்கலாம்.
  1. 2:3ல் இந்த ஆலயத்தில் முந்தைய மகிமை என குறிப்பிட்டிருப்பதை பார்க்கும்போது இவர் யூதா தேசத்தில் பிறந்து பாபிலோனியரால் சிறைபிடிக்கப்பட்டு 70 வருடங்களுக்கு பின்பு திரும்ப வந்து பழைய ஆலயத்தின் மகிமையை நினைவுபடுத்திப் பார்க்கிறார். இது சரியாக இருக்குமானால் இவரின் வயது 60-75 இருக்க வேண்டும். அப்படியானால் இவர் தீர்க்கதரிசனம் உரைத்தக் காலம் கி.மு. 520 ஆகும்.

வரலாற்றுப் பின்னணி

1.கி.மு.539ல் அதாவது எருசலேம் அழிக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பின்பு பாபிலோனியர் வசமிருந்த அனைத்து தேசமும் பெர்சிய மன்னனான கோரேசுக்கு மாற்றப்பட்டது. எனவே யூதேயா என அழைக்கப்படும் யூதா. பாபிலோன் வசமிருந்த யூதரின் வாக்குத்தத்த பூமி அனைத்தும் இதில் அடங்கும்.

2.கி. மு. 60560 அதாவது எரேமியா கூறிய 70 வருட சிறையிருப்பு (எரேமியா 25:18-12) முடிந்த பின்பு கோரேசு மூலமாக விடுதலையாக்கப்பட்டு தங்கள் சொந்த தேசத்தில் (எருசலம்) தேவாலயத்தை திரும்ப கட்ட வந்தனர் (2 நாளா 36:22-23, எஸ்றா 1:1-4)

3.புதைப்பொருள் ஆராய்ச்சி மூலமாக நிருபிக்கப்பட்டுள்ள உண்மையின்படி பாபிலோனிலிருந்து எருசலேம் வந்த அனைத்துக் குழுவினருக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  1. இதன்படி கி. மு. 537ல் முதல் குழுவினர் செருபாபேல் மற்றும் யெசுவா தலைமையில் பாபிலோனிலிருந்து எருசலேம் வந்தனர். இவர்கள் வந்து சேர்ந்தவுடன் எருசலேமில் குடியிருந்தவர்கள் எதிர்த்ததிநிமித்தம் வேலை நிருத்தப்பட்டுள்ளது. (எஸ்றா 1-6)

1.5. பின்பு ஆகாய், சகரியா ஆகியோருடைய தூண்டதலின் பேரில் தேவாலயப்பணி ஆரம்பித்து கி.மு. 516 ல் இப்பணி முடிகிறது.

நோக்கம்

  1. 1 தன்னுடைய சொந்த வீடடைக்குறித்த வீட்டைக் விரைவாக கட்டி தேவனுடைய கவலை இல்லாதவர்களாயிருந்தும் சமய மந்தத்தன்மையிலிருந்தும் விடுபட உதவிசெய்ய இப்புத்தகம் எழுதப்பட்டது (1:1-15).

2.செருபாபேல். யெசுவா என்ற தலைவர்களை உற்சாகப்படுத்தி ஆலய கட்டுமானப்பணியைத் தொடங்க (2:1-9)

  1. தேவனுக்கு முதலிடம் கொடுத்து ஆலயத்தை மறுபடியும் கட்ட மக்களை தூண்டி இதன்மூலம் மக்கள் தேவதிட்டத்தை நிறைவேற்றி, தேவனிடத்திலிருந்து சந்தோஷத்தையும், வல்லமையையும் பெற (2:10-19)
  1. செருபாபேல் போன்ற கீழ்படிதலுள்ள தலைவர்கள் மீது தேவன் கரிசனையுள்ளவராயிருக்கிறார். இவர்கள் மற்ற அரசர்களுக்கு இணையானவர்கள் என தெளிவுபடுத்த.

சகரியா Zechariah

யெகோவா நினைவுகூர்கிறார் என்ற பொருளுடைய சகரியாவைக்குறித்து அதிகமாக வேதத்தில் பார்க்க முடிகிறதில்லை. ஆனால் பாபிலோன் சிறையிருப்பிற்குப் பின் திரும்பிவந்த யூதர்கள் மத்தியில் ஆகாய் தீர்கதரிசியோடு சேர்ந்து மக்களை, இடிக்கப்பட்ட எருசலேம் தேவாலயத்தைக் திரும்பக் கட்ட உற்சாகப்படுத்தினார் என வாசிக்கிறோம். (எஸ்றா 1:1-6)

பின்னணி வரலாறு

1.கி.மு. 539ல் அதாவது எருசலேம் அழிக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பின்பு பாபிலோனியர் வசமிருந்த அனைத்து தேசமும் பெர்சிய மன்னனான கோரேசுக்கு மாற்றப்பட்டது. எனவே யூதேயா என அழைக்கப்படும் யூதா. பாபிலோன் வசமிருந்த யூதரின் வாக்குத்தத்த பூமி அனைத்தும் இதில் அடங்கும்.

2.கி.மு. 605ல் அதாவது எரேமியா கூறிய 70 வருட சிறையிருப்பு (எரேமியா 25:18-12) முடிந்த பின்பு கோரேசு மூலமாக விடுதலையாக்கப்பட்டு தங்கள் சொந்த தேசத்தில் (எருசலம்) தேவாலயத்தை திரும்ப கட்ட வந்தனர் (2 நாளா 36:22-23, எஸ்றா 1:1-4)

3.புதைப்பொருள் ஆராய்ச்சி மூலமாக நிருபிக்கப்பட்டுள்ள உண்மையின்படி பாபிலோனிலிருந்து எருசலேம் வந்த அனைத்துக் குழுவினருக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  1. இதன்படி கி.மு. 537ல் முதல் குழுவினர் செருபாபேல் மற்றும் யெசுவா தலைமையில் பாபிலோனிலிருந்து எருசலேம் வந்தனர். இவர்கள் வந்து சேர்ந்தவுடன் எருசலேமில் குடியிருந்தவர்கள் எதிர்த்ததினிமித்தம் வேலை நிறுத்தப்பட்டது. (எஸ்றா 1-6)

5.பின்பு ஆகாய், சகரியா ஆகியோருடைய தூண்டுதலின் பேரில் தேவாலயப்பணி ஆரம்பித்து கி. மு. 516ல் இப்பணி முடிகிறது.

எழுதியவர், நோக்கம்

சகரியா புத்தகம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது (அதி 1- 8.அதி 9.14).இரண்டு பகுதிகளும் இரண்டுபேர் மூலமாக எழுதப்பட்டது என கூறுபவரும் உண்டு. முதல்பகுதி சகரியா இளைஞனாயிருந்த பொழுது இவர் பெற்ற தரிசனம், இரண்டாவது பகுதி முதிர்வயதாயிருக்கையில் தேவன் கொடுத்த செய்தி என கருதுபவரும் உண்டு.

பகுதி:1

இப்பகுதி சிறையிருப்பிற்கு பின் நடைபெற்ற நிகழ்வுகளை உள்ளடக்கியது என தெளிவாகத் தெரிகிறது. இதன் நோக்கம் துவண்டிருந்த இஸ்ரவேலரை உற்சாகப்படுத்துவதாகும். தேவனின் ராஜ்யம் படிப்படியாக உண்மையாவதைக் குறிப்பிடுகிறார்.

பகுதி:2

வரலாற்றில் இதன் இடம் தெளிவாக விளங்குகிறது. இது வருங்காலத்தில் நடைபெறப்போகிறவற்றை வெளிப்படுத்துகிற பகுதியாகக் காணப்பட்டது. தெளிவற்றிருந்த இஸ்ரவேலருக்கு தேவன் சர்வத்தையும் ஆளுகிறவர் எல்லாவற்றையும் தெளிவாக செய்து சரியாக முடிப்பார் வலியுறுத்த என எழுதப்பட்டது.

பொருளடக்கம்

  1. மனம்திரும்புதல்: மனம்திரும்ப அழைப்பு (1:2-6) மன்னிப்பு உறுதியளிக்கப்படுதல் (3:1-5,9) தேவன் ஜனங்களோடு வாழவேண்டும் (1:6, 2:20-11, 8:3)
  1. தேவனின் ஆளுகை: எல்லா நிகழ்வுகளையும் தேவன் ஆளுகிறார். (10:1,3,8-12, 12:1-5, 13:2-3, 14:3-21) தேவன் ராஜாவாயிருக்கிறார் (14:9) தேவன் நியாதிபதியாயிருக்கிறார் (3:2, 7:13-14, 9:3-6, 12:4,9, 14:12-13,18) தேவன் இரட்சகர் (3:8, 8:7,13, 9:16, 10:6-8, 12:7)தேவன் தன் ஜனத்திற்காக பரிதபிக்கிறார்(1:13,17, 8:4-5,15, 10:3,6-12) தேவன் தன் ஜனத்தை திரும்பக் கொண்டுவருகின்றார்(8:8, 10:9-10)
  1. உற்சாகம்: தேவனிடத்திலிருந்து பெலன் வருகிறது (10:6,12, 12:15). தேவனிடத்திலிருந்து பாதுகாப்பு (2:4-5, 11-12, 8:3,20-23, 14:10-16) வருகிறது. மேலும் வருகின்ற தலைவர் (3:8, 6:12-13 9:9-10, 11:7, 13:7-9) வரப்போகிற சமாதானத்தின் ராஜ்யம் (1:11, 3:10,9:10) ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்துவும், சகரியாவும்

சகரியாவில் வரப்போகிற மேசியாவைக்குறித்த அநேக வெளிப்பாடுகளுண்டு. முதல் வருகையில் மேசியா மனிதனாக, ஊழியராகவும் இரண்டாம் வருகையில் இராஜாவாக வருவதையும் இப்புத்தகம் சித்தரிக்கிறது.

  • 1. நீதியின் கிளை (3:8, 6:12,13) 
  • 2.7 கண்களுடைய கல் (3:9)
  • 3.இராஜா-ஆசாரியன் (6:13)
  • 4. தாழ்மையுள்ள ராஜா (9:9,10) 
  • 5.மூலைக்கல் (10:4)
  • 6. நல்ல மேய்ப்பன் 30 சேக்கலுக்கு
  • 7. குத்தப்பட்டவர் (12:10) 
  • 8. சுத்திகரிக்கும் ஊற்று (13:1)
  •  விற்க்கப்படுதல் (11:4-13) 
  • 9. வெட்டப்பட்ட மேய்ப்பன் (13:7) 10.எல்லா உலகத்திற்கும் ராஜா (14:9,16)

மல்கியா Malachi

மல்கியா என்பதற்கு என் தூதன்’ அல்லது ‘யெகோவாவின் தூதன்’ எனப் பொருளாகும். மல்கியா என்பது இத்தீர்க்கதரிசியின் உண்மையான பெயரா அல்லது யாரேனும் இப்புத்தகத்திற்கு கொடுத்த பெயரா என்பது தெளிவாக இல்லை. காரணம் மல்கியா 3:1ல் இதோ என் தூதனை அனுப்புகிறேன் என வாசிக்கின்றோம். இது பொதுவாக குறிப்பிடப்பட்தா அல்லது பெயராக குறிப்பபிடப்பட்டதா என்பது தெளிவாக இல்லை.

பின்னணி வரலாறு

  1. இப்புத்தகத்தில் யூதர்களின் சூழ்நிலை, எஸ்றா, நெகேமியா இவர்களின் மறுமலர்ச்சிக்கு முன்பதாக நடந்த காரியங்களாக இருக்கலாம் (கி. மு. 450) 
  1. 70 வருட பாபிலோனிய சிறையிருப்பின் காலத்தில் எருசலேமுக்கு வந்தவர்கள் ஒழுக்கமற்ற, தவறான சமயத்தில் வீழ்ந்தனர் தங்களின் தெரிந்தெடுப்பை இவர்கள் மறந்தார்கள். நீங்கள் என்னுடைய மக்கள் நான் உங்கள் தேவன் என்னும் உறவை மறந்து செயல்பட்டனர்.
  1. இப்படிப்பட்ட அவிசுவாசத்தில் இவர்கள் வாழ்ந்ததால் மற்ற புறஜாதியாருக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் ஏதுமில்லாதிருந்தது.
  1. மல்கியாவும் அவரோடு ஊழியத்தில் இணைந்த எஸ்றா நெகேமியாவும் இது தவறு என உணர்ந்து விரைவாக சரிசெய்ய முயன்றனர்.

நோக்கம்

தேவனுக்காக பேசும் மல்கியா மக்களோடு வாக்குவாதம் பண்ணுகிறதை இப்புத்தகம் வெளிப்படுத்துகிறது. சடங்காசாரங்களில் அக்கரையில்லாத, செய்யவேண்டிய கடமைகளை செய்யாத முரட்டாட்டமுள்ள மக்களின் கேள்விகளுக்கு மல்கியா பதிலளிக்கிறார். (1:2, 1:6-8, 2:14,17, 3:8,13-15). இப்புத்தகம் பூயூதருக்கும். கர்த்தருக்கும் இடையே நடந்த வாக்குவாதமாக அல்லது கேள்வி-பதிலாக அமைந்துள்ளது.

எடுத்துக் காட்டு 1:2

  • யூதர்கள்: “நீர் எங்களை நேசிக்கவில்லை”
  • ஆண்டவர்: “நான் உங்களை சிநேகித்தேன்
  • யூதர்கள்: “எப்படி சிநேகித்தீர்?
  • ஆண்டவர்: “நான் யாக்கோபை (இஸ்ரவேல்) சிநேகித்து ஏசாவை (ஏதோம்) வெறுத்தேன்”
  1. மேலும் மக்களிடம் காணப்பட்ட குறைகளை சுட்டிக்காண்பித்து திருத்துவதற்காக இப்புத்தகத்தை எழுதுகிறார்.

ஆவியில்லாத கடமைக்கான வழிபாடு (1:6-8) தீமையான உறவுகள் (2:10-12) தேவ நீதியை கேள்விகேட்டல் (2:17-3:6) கடவுளை கொள்ளையடித்தல் (3:7-12) காத்திருத்தலில் பொறுமையின்மை (3:17-4:3)

கிறிஸ்துவின் வருகையை குறித்த கருத்துக்கள் 

உடன்படிக்கையின் ஆலயத்தில் தூதனாக கிறிஸ்து வருகிறார்(3:1) தம் ஜனத்தை தூய்மைபடுத்துகிறார் (3:3) – 

கிறிஸ்து தேவாலயத்தைச் சுத்தம் செய்தல் (யோவா2:14-17)மக்களைப் பரிசுத்தப்படுத்துதல (எபிரேயர் 13:12) 

கிறிஸ்துவினுடைய வருகை நியாயத்தீர்ப்பை கொண்டுவரும் (4:1)

ஜீவ புத்தகத்தில் பெயர் இல்லாதவர்கள் அக்கினிக் கடலில் தள்ளப்படுவார்கள் (வெளி 20:11-15)

நீதியின் சூரியனாக தம்மக்களை குணமாக்குகிறார் (4:2)

கிறிஸ்து திரளான ஜனங்களை சுகமாக்கினார் (மத்தேயு 12:15.வெளி 21:4)

கிறிஸ்துவின் தூதன் பாதையை செவ்வைசெய்ய வருகிறார் (3:1.4:5)

யோவான் ஸ்நானகன் கிறிஸ்துவை அறிக்கை. செய்தல் (மத்தேயு 11:1-14)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *