வேதாகமத்தில் உள்ள “அபிஷேகம்”

வேதாகமத்தில் உள்ள “அபிஷேகம்”

வர்ணனைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது (உபா. 28:40; ரூத் 3:3, 2 சாமு. 12:20; 14:2, 2 நாளா. 28:15, தானி. 10:3; மீகா. 6:15)

விருந்தினருக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது ( சங். 23:5; லூக்கா 7:38,46; யோவான் 11.2)

சுகத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது (ஏசா. 61:1; மாற்கு 6:13 லூக்கா 10:34; யாக்கோபு 5:14) [எசேக்கியேல் 16:9  சுகாதார அடிப்படையில் பயன்படுத்தப்பட்டுள்ளது] 

சவ அடக்க ஆயத்தத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது ( மாற்கு 16:1; யோவான் 12:3,7; 19:39-40; கவனிக்க. 2 நாளா. 16:14, ஆனால் அபிஷேகம் எனும் வினைச்சொல் இல்லாமல்)

மத சம்பந்தமானவற்றுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது ( ஆதி. 28:18; 31:13 [ஒரு தூண்]; யாத். 29:35 [பலிபீடம்]; யாத். 30:26; 40:9-16; லேவி. 8:10-13;எண்ணா. 7:1 (ஆசாரிப்புகூடாரம்]] 

தலைவரை நியமிப்பதற்கு

 1. ஆசாரியர்கள்
 • a. ஆரோன் (யாத். 28:41; 29:7; 30:30) 
 • b. ஆரோனின் புத்திரர் (யாத். 40:15; லேவி. 7:36)
 • c. நியமிக்கப்பட்ட சொற்றொடர் அல்லது பட்டம் (எண். 3:3; லேவி. 16:32)
 1. ராஜாக்கள்
 • a. தேவனால் ( 1 சாமு. 2:10; 2 சாமு. 12:7; 2 இராஜா. 9:3,6,12; சங். 45:7; 89:20)
 • b. தீர்க்கதரிசிகளால் ( 1 சாமு. 9:16; 10:1; 15:1,17, 16:3,12-13; 1 இராஜா.1:45; 19:15-16)
 • c. ஆசாரியர்களால் (1 இராஜா. 1:34,39; 2 இராஜா, 11:12)
 • d. மூப்பர்களால் ( நியா. 9:8,15, 2 சாமு. 2:7; 5:3; 2 இராஜா 23:30) 
 • e. மேசியாவின் ராஜாவாக இயேசு ( சங். 2:2; லூக்கா 4:18 (ஏசா. 61:1); அப், 4:27: 10:38; எபி. 1:9 [சங், 45;7])
 • f. இயேசுவை பின்தொடர்பவர்கள் ( 2 கொரி. 1:21; 1 யோவான் 2:20,27 
 1. பெரும்பாலும் தீர்க்கதரிசிகள் ( 1 இராஜா. 19:16; ஏசா. 61:1)
 2. தெய்வேக விடுதலையின் கருவிகளை விசுவாசிக்க மறுத்தல்
 • a. கோரேசு ( ஏசா. 45:1) 
 • b. தீருவின் ராஜா ( எசேக்கியல். 28:14, இங்கே ஏதேன் தோட்டத்தின் உருவக அணியை பயன்படுத்துகிறார்) 
 1. பதம் அல்லது பட்டம் “மேசியா” என்பது “அபிஷேகம் பண்ணப்பட்டவர்”   சங். 2:2: 89:38; 132:10

அப்போஸ்தலர் 10:38ம் வசனத்தில் தேவத்துவத்தின் மூன்று நபர்களும் அபிஷேகத்தில் ஈடுபட்டுள்ளனர். இயேசு அபிஷேகம் பண்ணப்பட்டார் ( லூக்கா 4:18; அப்போ. 4:27; 10:38), அனைத்து விசுவாசிகளையும் உள்ளடக்குவதற்காக இக்கருப்பொருளானது மேம்படுத்தப்பட்டுள்ளது ( 1 யோவான் 2:27) அபிஷேகம் பண்ணப்பட்டவர், அபிஷேகம் பண்ணப்பட்டவர்களானார்கள்! 

பழைய ஏற்பாட்டின் அடையாளமான எண்ணெய்யினால் வெளியரங்கமாக அபிஷேகிக்கப்படுத்தலானது தேவனால் விசேஷித்த வேலைக்காக அழைக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்புடையது (உ+ம், தீக்கதரிசிகள், ஆசாரியர்கள் மற்றும் இராஜாக்கள்). கிறிஸ்து என்பது எபிரேய பதமான அபிஷேகம் பண்ணப்பட்டவர் அல்லது மேசியா என்பத்தின் மொழிபெயர்ப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *