ஜெயமுள்ள வாழ்வு
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (1கொரி 15:57)
நாம் ஜெயிக்க வேண்டியவைகள்
- பொல்லாங்கனை ஜெயிக்க வேண்டும் (1யோவா 2:13)
- உலகத்தை ஜெயிக்க வேண்டும் (யோவா 16:33)
- சத்துருவை ஜெயிக்க வேண்டும் (சங் 41:11)
- மாம்சத்தை, அதின் ஆசை இச்சைகளை (கலா 5:24)
- உலகத்தின் அசுத்தங்களை (2பேது 2:20)
ஜெயமுள்ள வாழ்க்கைக்கு கிடைக்கும் பலன்
- ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்க கொடுப்பார் (வெளி 2:7)
- 2ம் மரணத்தினால் சேதப்படுவதில்லை (வெளி 2:11)
- ஜாதிகள் மேல் அதிகாரம் கொடுப்பார் (வெளி 2:26)
- மறைவான மன்னாவைக் கொடுப்பார் (வெளி 2:17)
- புதிய நாமத்தைக் கொடுப்பார் (வெளி 2:17)
- வெண்வஸ்திரம் தரிப்பிப்பார் (வெளி 3:5)
- நாமம் பரலோகத்தில் அறிக்கை செய்யப்படும் (வெளி 3:5)
- தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவார் (வெளி 3:12)
- தம்மோடுகூட உட்காரும்படி அருள் செய்வார் (வெளி 3:21)
ஜெயம் பெற தடைகள்
- தேவனை விட்டு விலகுதல் (எபி 3:12) ஒழுக்கமற்ற வாழ்க்கை (ஓசி 14:4)
- விடவேண்டியதை பிடித்துக்கொள்ளுதல் (எரே 2:13)
- பிடித்துக்கொள்ள வேண்டியதை விட்டுவிடுதல் (எரே 2:13)
- அன்பு குறைந்துபோதல் (மத் 24:12)
- வெதுவெதுப்பான வாழ்க்கை (வெளி 3:16)
- உலகத்தின்மேல் அதிகமான நேசம் (2தீமோ 4:10)
- இருதயத்தை கடினப்படுத்துதல் (எபி 3:8)
- ஆதியிலிருந்த தேவ அன்பு குறைந்து போவது (வெளி 2:4)
- முறுமுறுத்தல், விரக்தியடைதல் (யோவா 6:61)
- ஜெபத்தை அசட்டை செய்வது (மத் 26:41)
- தன் தவறை ஒத்துக்கொள்ளாத நிலை (எரே 3:13)
- தன்னைத் தாழ்த்துவதற்கு விருப்பமில்லை (2நாளா 33:12)
- பரிசுத்தம் குறைவுபடுதல் (மல் 2:11)
- விசுவாசம் குறைவுபடுதல் (மாற் 9:24; மத் 13:58)
- ஜெபம் குறைவுபடுதல் (மத் 26:40)
- பிரதிஷ்டையில் குறைவுபடுதல் (நியா 14:1)
- உபவாசத்தில் உறுதியில்லாதிருத்தல் (மத் 17:21)
- சாட்சியின் வசனத்தைக் காத்துக்கொள்ளத் தவறுதல் (வெளி 12:11
- உபத்திரவத்தின்போது சோர்ந்துபோகுதல் (யோவா 16:33)
- உலக போக்கின்படி செல்லுதல் 2பேது 2:20)
தேவனே! உலகம் மாமிசம் பிசாசை மேற்கொண்டு. ஜெயமெடுத்து வாழ்வில் ஜெயம்பெற கிருபை தாரும்!