மன்னிக்கும் குணம்

மன்னிக்கும் குணம்

கிரிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னீந்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியங்கள் (எபே 4:32)

மன்னிப்பு…

  • உள்மனக் காயத்தை ஆற்றும்
  • சுகத்தைக் கொண்டுவரும்
  • ஒப்புரவாக வைக்கும்
  • சந்தோஷத்தைக் கொண்டுவரும்
  • இணைந்து செயல்பட வைக்கும்

மன்னிப்பதினால் கிடைக்கும் பலன்கள்…

  • நாம் மன்னிப்பதால் தேவன் நமக்கு மன்னிப்பார் (மத் 6:14)
  • மற்றவர்களின் நேசத்தைக் கொண்டு வரும் (லூக் 7:47)
  • காணிக்கையை தேவன் அங்கிகரிப்பார் (மத் 5:23,24) 
  • நம்முடைய மனம் இலகுவாகிறது, மனம் தெளிவடைகிறது
  • குற்றத்தை மன்னிப்பது மனுஷனுக்கு மகிமை (நீதி 19:11) 

ஆண்டவர் இயேசுவும் மன்னிப்பும்

  • சட்டத்தின்படி கல்லெறிந்து கொள்ளப்படவேண்டியவர்களை இயேசு மன்னித்தார் (யோவா 8:11)
  • தோழனும், மிகவும் நம்பினவனும், துரோகம் செய்தவனுமான யூதாஸை சிநேகிதனே என்றழைத்தார் (சங் 41:9; மத் 26:50)
  • சிலுவையிலறைந்தவர்களை மன்னிக்கும்படி பிதாவிடம் வேண்டிக்
  • கொண்டார் (லூக் 23:34)
  • மறுதலித்த பேதுருவை மன்னித்து பயன்படுத்தினார் (யோவா 21:15)
  • தேவன் மன்னிக்கிறார் (யாத் 34:7; 1யோவா 2:12)
  • அவர் நமது ஜெபத்தைக் கேட்டு மன்னிப்பார் (2நாளா 6:21)
  • இரத்தஞ்சிந்துதலினால் மன்னிப்பு உண்டாகும் (எபி 9:22) மனந்திரும்பி உபவாசிக்கும்போது (யோனா 3:10)
  • பாவங்களை அறிக்கையிடும்போது (1யோவா 1:9)
  • நாம் மற்றவர்களுக்கு மன்னிக்கும்போது (மத் 6:14)
  • உண்மையாய் தேவனிடம் திரும்பும்போது (லூக் 15:21)

மன்னியாமை…

  • சாபங்கள் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று
  • தேவன் நம்மை வெறுக்க காரணமானவைகளில் ஒன்று
  • சாத்தான் தாக்குவதற்கு அடித்தளமான ஒன்று
  • ஜெபம் கேட்கப்படாமற்போவதற்கான காரணங்களில் ஒன்று
  • ஒருமனதைக் கெடுக்கும் காரியங்களில் ஒன்று

மன்னியாமையின் அடையாளங்கள்…

  • கோபத்தை விட்டுவிடுவதற்கு மறுப்பு தெரிவிப்பது 
  • மற்றவர்களோடு ஒப்புரவாவதற்கு தயக்கங்காட்டுவது
  • மனதின் சுமையை இலகுவாக்காமல் இருப்பது
  • உதட்டளவில் மன்னிப்பது; உள்ளத்தில் பகைமை உணர்வோடிருப்பது 
  • கடமைக்காக மன்னிப்பது; கடின இருதயத்தோடு வாழ்

தேவனிடமும், மனிதனிடமும் விருப்பமில்லாமல் மன்னிப்பு கேட்பது இரண்டாவது முறையாக அவமதிப்பதற்குச் சமம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *