மத்தேயு – அப்போஸ்தலர் சுருக்கம் 

மத்தேயு – அப்போஸ்தலர் சுருக்கம் 

மத்தேயு Matthew

பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் பாலமாக மத்தேயு நற்செய்தி நூல் அமைந்துள்ளது. இயேசுவை மேசியாவாகவும், அபிஷேகம்பண்ணப்பட்டவராகவும் உருவகிக்கும் இந்நூல், யூத மக்களுக்காக எழுதப்பட்டதாகும். உபதேசங்களுக்கு முதலிடம் தரும் இந்நூலில் இயேசுவின் செயல்களை விட வார்த்தைகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எழுதியவர்

மத்தேயு நற்செய்தி நூலின் ஆசிரியர் யார் என்பதை இப்புத்தக்தில் நேரடியாக காண முடியாவிடினும் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டு திருச்சபை மூப்பர்கள் (ஊரசர் குயவநசள), குறிப்பாக பேப்பயஸ் (யியைள) (கி.பி.100), வரலாற்று ஆசிரியர் எசுப்பியஸ் (நுரளரடிரைள) ஆகியோரது வரலாற்று குறிப்புப்படியும் சபை பாரம்பரியப் படியும் (ஊரசா வுசயனவைழை)ெ மத்தேயு இந்நூலை எழுதினார் என்று தெளிவாக எடுத்துக்கூற முடியும். இந்நூலை கிரேக்க பதத்தில் மத்தேயுவின் கூற்று அல்லது வாக்குமூலம் மொழி பெயர்க்கலாம். இவர் இயேசு என கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவராவார். மத்தேயு என்பதற்கு ஆண்டவரின் அன்பளிப்பு’ (புகைவ ழக வாந டுழசன) என்று பொருள். இவர் வரி வசூலிப்பவராக இருந்து இயேசுவை பின்பற்றியவர் (மத்தேயு 9:9-13). மாற்கு, லூக்கா இருவரும் இவரை லேவி என்று அழைக்கின்றனர்.

காலம், எழுதப்பட்ட இடம்

இந்நூலில் யூத சமய கருத்துக்கள், எபிரேய பெயர்கள், அதிகமாக காணப்படுவதால். இது பாலஸ்தீனா தேசத்திலிருந்து எழுதப்பட்டிருக்க வேண்டும். எனினும் சிரியா அந்தியோகியாவிலிருந்து எழுதப்பட்டிருக்கலாம் என்ற கருத்தே மேலோங்கி இருக்கிறது.

எழுதப்பட்ட காலத்தைக் குறித்து அதிக கருந்து வேறுபாடுகள் இருப்பினும், இரண்டு கருத்துக்களே நாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. முதல் கருத்து கி.பி.50 இரண்டாம் கருத்து கி.பி.70.

எழுதியதின் நோக்கம்

யோவான் 20:31ஐ வாசிக்கும் பொழுது, நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டதன் நோக்கத்தை பொதுவாக அறியலாம். எனினும் மத்தேயு நற்செய்தி நூலை வாசிக்கும் பொழுது, இந்நூல் எழுதப்பட்டதற்கான ஒருசில சிறப்பான நோக்கத்தை புரிந்து கொள்ளமுடிகிறது. இந்நூலில் யூத பாரம்பரியம் இழையோடுவதை நம்மால் காண முடிகிறது. இயேசுவை மேசியாவாக ஏற்றுக் கொள்ளாத யூத மார்க்கத்தார் இயேசுவை மேசியாவாக ஏற்றுக் கொள்ளத்தூண்டுவதே இந்நூலின் பிரதான நோக்கமாகும்.

எனவேதான் இந்நூலில் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுதல்கள் அநேகம் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு சிலுவையில் அறையப்பட்டு மேசியா எனக் கேலி பேசப்பட்டபடியால் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கிறார் (27: 62 – 28 :20). மத்தேயு ‘ரபி’ (சுயடி)ை எனப்பட்ட போதகர் வகுப்பை சேர்ந்தவராதலால் இயேசுவின் போதகத்தை மக்களுக்கு குறிப்பாக யூதர்களுக்கு தெரிவிக்க இந்நூலை இயற்றியுள்ளார்.

இந்நூலின் தனிச்சிறப்பு

  1. இயேசுவின் வம்ச வரலாறு, அவர் யூத வகுப்பை சேர்ந்தவர் என்பதை மட்டும் தெரிவிக்கலாம், அரச வம்சத்தில் பிறந்தவர் அதாவது தாவீதின் வம்சத்தில் பிறந்தவர் என்பதை எடுத்துக் கூறுகிறார். இது இயேசு ‘யூதரின் ராஜா’ என்பதை தெளிவாக்க கூறப்பட்ட கருத்தாகும்.
  1. யூதர்களை கவரும் பொருட்டு அநேகமாக ஒவ்வொரு அதிகாரத்திலும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் நிறைவேறியதாக குறிப்பிட்டுள்ளார். இவர் தன்னுடைய நூலில் 25 பழைய ஏற்பாட்டு நூல்களையும் சுமார் 129 பழைய ஏற்பாட்டு வசனங்களையும் கையாண்டுள்ளார்.

3.சபை என்கிற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ள ஒரே நற்செய்தி நூல் மத்தேயுவாகும் (16:18,18:17).

4.இந்நூலில் உவமைகளும் அற்புதங்களும் காணப்படுகின்றன. 15 12 இவற்றில் 10 உவமைகளும் 3 அற்புதங்களும் மத்தேயுவில் மட்டுமே காணப்படுகின்றன.

5.மத்தேயு வெளிப்படுத்தப்பட்ட எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் (ழஉயடலிவஉை நுளஉாயவழடழபல). (13:24-30,20:1- 16,22:1-14,25)

6.இவர் இயேசுவின் வார்த்தைகளுக்கு (போதனை ) மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இயேசுவின் வார்த்தைகள் மத்தேயுவில் வசனங்களில் காணப்படுகின்றன. 644

மாற்கு Mark

“இதோ நான் ஆதரிக்கிற என் தாசன்” -ஏசாயா 42:1 (Behold the Servant)

இவ்வசனத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட நற்செய்தி நூல் மாற்கு ஆகும். இயேசுவை பாடுபடும் ஊழியனாக உருவகிக்கும் மாற்கு நற்செய்தி நூலின் ஆதார வசனம்

“மனுஷ குமாரனும் ஊழியம் கொள்ளும் படி வராமல் ஊழியஞ்செய்யவும்…. வந்தார்”-(மாற் 10:45),

இயேசுவினுடைய தெய்வீக வல்லமையை காட்டும் இயேசுவினுடைய செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்நூலை எழுதியிருக்கின்றார்.

எழுதியவர்

இந்நூலிலும் ஆசிரியர் தன் பெயரை நேரடியாக குறிப்பிடாவிடினும், இந்நூலை எழுதியவர் யோவான் மாற்கு என்பதில் எப்பொழுதும் சந்தேகம் எழுந்ததில்லை. இதற்காண சான்றுகளை நோக்கும்பொழுது முதலாம் இரண்டாம் நூற்றாண்டு திருச்சபை மூப்பர்களும் (Church Fathers) போதகர்களுமான பேப்பையஸ் (Papias), ஜஸ்டின் (Justin the Martyr), இரேனியஸ் (Irenaeus) ஆகியோர் இதற்கு சான்று பகிர்கின்றனர்.

இவர் பேதுரு மூலமாக இயேசுவை ஏற்றுக்கொண்டு (1 பேதுரு 5:13) பேதுருவோடு அதிகமாக இணைந்து ஊழியம் செய்தார். புதிய ஏற்பாட்டில் இவரைப்பற்றி எட்டு இட்களில் வாசிக்கின்றோம். பவுலின் முதலாவது மிஷினரி பயணத்தின்போது யோவான் மாற்கு அவரோடு இணைந்து புறப்பட்டார். இவர் பர்னபாவின் உறவினர் (கொலோசெயர் 4:10).

எப்பொழுது எங்கிருந்து எழுதப்பட்டது?

எழுதப்பட்ட காலத்தை நோக்கும்போது கி.பி.40 முதல் 70க்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனினும் நற்செய்தி நூல்களில் இந்நூல் முதலாவதாக எழுதப்பட்டிருக்கிறது என்ற உண்மை எல்லா வேத ஆராய்ச்சியாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பவுல், பேதுரு அகியோரது சிறையிருப்பின் காலத்தில் (கி.பி.64-67) மாற்கு அவர்களோடு அங்கு தங்கியிருந்ததை நாம் வாசிக்கின்றோம், (1 பேதுரு 5:13, கொலோ 4:10). இக்காலத்தில் மாற்கு இந்நூலை எழுதியதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றன. மேற்கூறிய காலத்தில் மாற்கு தங்கியிருப்பாரானால் அவர் ரோமாபுரியிலிருந்து எழுதியிருக்கவேண்டும். மேலும் மாற்கு ரோமாபுரியோடு அதிகம் தொடர்பு கொண்டிருந்தார் என நாம் வேதத்தில் பார்க்கிறோம் (2 தீமோ 4:11),

எழுதப்பட்ட நோக்கம்

இந்நற்செய்திநூல் புறஜாதியருக்கு குறிப்பாக ரோமாரியிலுள்ள மக்களுக்காக எழுதப்பட்டது. இதன் காரணமாக பழைய ஏற்பாட்டு தீர்க்க தரிசனங்கள் வெகு சில மட்டுமே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மேலும் அரமைக் மொழி வார்த்தைகளுக்கும் (5:14) யூத கலாச்சாரங்களுக்கும் (7:3,11) விளக்கம் தரப்பட்டுள்ளன. ரோமர்களை உற்சாகப்படுத்தும் செயல்களான பிசாசு, நோய், மரணம் போன்றவற்றின் மீது இயேசுவின் வல்லமையை எடுத்துக்கூறுகிறார். எனினும் இரண்டு முக்கிய நோக்கங்கள் என்னவெனில் ரோம திருச்சபையை பாடுகள் மத்தியிலும் விசுவாசத்தில் வளரவும், நற்செய்திபணி செய்யவும் எழுதப்பட்டது.

இந்நூலின் தனிச்சிறப்புகள்

  1. இந்நூல் இயேசுவின் வார்த்தைகளை விட அவர் செய்த செயல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
  1. மாற்கு தன் நூலில் அற்புதங்களையும் உவமைகளையும் 18 18 கூறியுள்ளார். இவற்றில் 2 அற்புதங்களும் 2 உவமைகளும் மாற்குவில் மட்டுமே காணப்படுகின்றன.
  1. இந்நூலில் இயேசுவின் ஊழியத்தைக்குறித்து அதிகம் கூறப்பட்டுள்ளது. இந்நூலில் இயேசுகிறிஸ்து ஊழியக்காரராக சித்தரிக்கப்பட்டுள்ளார் மட்டுமல்லாமல் அவருடைய மனிதத்தன்மையை இந்நூல் அழுத்தமாகக் காட்டுகிறது.
  1. இயேசு மேசியா என்பது புத்தகத்தின் இறுதிவரை மறைக்கப்பட்டு, இறுதியாக (8:27-30) வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

லூக்கா Luke

மனந்திரும்பிய கிரேக்கனும், சிறந்த நற்செய்தி பணியாளருமான லூக்கா யூதர் புறஜாதியார் உட்பட சகல ஜனங்களும் கிறிஸ்துவின் விசுவாசத்தில் வளர எழுதிய நூல் லூக்கா நற்செய்தி நூலாகும்.

இதோ ஒரு புருஷன்” – சகரியா 6:12 இதுவே இந்நூலின் அடிப்படையாகும். இந்நூலின் ஆதார வசனம் மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்” – (லூக்கா 3:5)

எழுதியவர்

அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தையும் லூக்கா நற்செய்தி நூலையும் எழுதியவர் மருத்துவராயிருந்த லூக்கா என்பது தெளிவாக புரிகிறது. இரண்டாம் நூற்றாண்டு திருச்சபைப் போதகர்கள் எழுதிவைத்துச்சென்றுள்ள குறிப்புகள் இதை வழிமொழிகின்றன. குறிப்பாக இரேனேயுஸ் (ஐசநயெநரள) மற்றும் முரட்டோரியன் (ஆரசயவழசயை) ஆகியோரது குறிப்பும் இக்கருத்தை தெளிவுப்படுத்துகின்றன.

லூக்கா 1:1ன் படியும் அப்போ 1:1ன் படியும் மகா கனம்பொருந்திய தெயோப்பிலியு எனப்பட்ட தனிநபருக்கு எழுதப்பட்ட ஒன்றாகும். தெயோப்பிலியு ரோம அதிகாரியாகவோ அல்லது ரோம அரசாங்கத்தில் உயர்பதவி வகித்தவராகவோ இருந்திருக்கலாம்.

தெயோப்பிலியு – தமிழ் மொழிபெயர்ப்பின்படி ‘தேவனுடைய நண்பர்கள்’ அல்லது ‘தேவனை நேசிப்பவர்கள்’ என்பது பொருள். ஏனவே இப்புத்தகம் தேவனை நேசிப்பவர்களுக்காக எழுதப்பட்டிருக்கலாம்.

காலம்

லூக்கா நற்செய்திநூல், மாற்கு நற்செய்திநூலுக்கும் அப்போஸ்தலரின் நடபடிகளின் புத்தகத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும். எனினும் கி.பி. 59-63ல் எழுதப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

எழுதப்பட்ட இடம்

அகாயா, செசரியா, எபேசு ஆகிய ஊர்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து இப்புத்தகத்தை எழுதியிருக்கலாம் என்ற கருத்து நிலவினாலும் ரோமாபுரியிலிருந்து எழுதினார் என்னும் கருத்து சற்று மேலோங்கியுள்ளது. இருப்பினும் தேயோப்பிலு என்னும் ரோம அதிகாரி வாழ்ந்த இடமே இப்புத்தகம் எழுதப்பட்ட இடமாக இருக்கக்கூடும்.

நோக்கம்

இப்புத்தகத்தின் நோக்கத்தை பார்க்கும்பொழுது

  1. ஆதிமுதல் நடந்தவற்றைக் கண்ணாரக்கண்டு, எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்த விசேஷங்களின் நிச்சயத்தை வாசிப்பவர் புரிந்து கொள்ளவும் (லூக்கா 1:2-4).

2.மேலும் இயேசுவினுடைய இரட்சிப்பு சகல ஜாதியாருக்கும் பொதுவானது அதாவது “மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பை காண்பார்கள்” (லூக்கா 3:5) என்பதை புற ஜாதியாருக்கு தெளிவுபடுத்த.

3.இயேசுவானவர் வாழ்க்கையிலே பரிசுத்த ஆவியாக செயல்பட்டதுபோல ஆதித்திருச்சபையிலும் செயல்பட்ட விபரத்தைக் காட்டுவதற்கும்.

  1. ரோம பேரரசுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை எதிர்த்து, கிறிஸ்தவர்களின் உண்மைநிலையை காட்டுவதற்கும்.

ஆதி அப்போஸ்தலர்கள் மறையும் காலத்தில் திருச்சபை மக்களை ஊக்கப்படுத்துவதற்கும் எழுதியுள்ளார் என்பது தெளிவாகிறது.

இந்நூலின் தனிச்சிறப்புகள்

  1. இது ஒரு விளக்கமான நூல் என்று கூறினால் மிகையாகாது. இதில் யோவான்ஸ்நானகனின் பிறப்பு முதல் இயேசு கிறிஸ்துவின் பரமேறுதல் வரை கூறப்பட்டுள்ளது. 
  1. இயேசு யூதர்களுக்கு சொந்தம் என்ற கருத்தை விடுத்து அதற்குமாறாக இவ்வுலகிற்கு சொந்தம் என்பதை வலியுறுத்திக்காட்டுகிறது.
  1. இயேசுவின் வம்ச வரலாற்றை மத்தேயு நற்செய்திநூல் ஆபிரகாமிலிருந்து காட்டுகிறது. ஆனால் லூக்கா நற்செய்தி நூலோ ஆதாமிலிருந்து காட்டுகிறது.
  1. இயேசுகிறிஸ்துவின் ஜெப வாழ்க்கைக்கு இந்நூலில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இயேசு ஜெபித்த ஜெபங்கள் இந்நூலில் 15 இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  1. இப்புத்தகத்தில் 20 அற்புதங்களும் 39 உவமைகளும் கூறப்பட்டுள்ளன. இவற்றில் 7 அற்புதங்களும் 21 உவமைகளும் லூக்காவில் மட்டுமே காணப்படுகின்றன.

6.இந்நூல் இயேசுகிறிஸ்துவை ஏழைகள் ஒதுக்கப்பட்டோர் மற்றும் புறஜாதியாரின் நண்பராக சித்தரித்துக்காட்டுகிறது. பெண்கள், குழந்தைகள் ஆகியோரிடம் அவர் கொண்டிருந்த பரிவும் காட்டப்பட்டுள்ளது.

யோவான் John.

சபையின் ஆவிக்குரிய தேவைகளை சந்திக்கும் பொருட்டாக எழுதப்பட்ட இந்நூல் இதோ, உங்கள் தேவன்” (ஏசாயா 40:9) என்ற வசனத்தை அடிப்படையாக கொண்டது. இயேசுவை தேவகுமாரனாக இந்நூல் உருவகிக்கிறது. இந்நூல் ஏனய மூன்று நற்செய்தி நூல்களிலிருந்து வேறுபட்டுள்ளது.

எழுதியவர்

இந்நுலை எழுதியவர் தன்னை இயேசுவிற்கு அன்பாய் இருந்தவர் (யோவான் 21:20,24) என்று அறிமுகம் செய்கின்றார். இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் 3 பேர் அவருடன் அதிக நெருக்கமாக இருந்தனர். அவர்கள் யோவான், யாக்கோபு, மற்றும் பேதுரு ஆவார்கள். 13:23,24ல் பேதுரு இந்நூலை எழுதியவர் இல்லை என்பது உறுதியாகிறது. யாக்கோபு கி.பி.44ல் (அப்போஸ்தலர் 12:2) ஏரோது மன்னரால் கொலை செய்யப்பட்டு விட்டார் எனவே யோவான் மட்டுமே இந்நூலை எழுதியிருக்க முடியும் மேலும் இந்நூல் முதலாம் நூற்றாண்டில் இறுதிப்பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அக்காலம் வரை உயிரோடிருந்த சீடர் யோவான் மட்டுமே. அது மட்டுமல்லாமல் இரேனியஸ் என்னும் திருச்சபை போதகர் செபதேயுவின் குமாரானாகிய யோவான் நற்செய்தி நூல்களை எழுதினார் என்று தம் குறிப்பில் கூறியுள்ளார்.

காலம்

எழுதப்பட்ட காலத்தைப்பொருத்தவரை இரண்டு கருத்துக்கள் நிலவுகிறது.

1.கி.பி.85ல் எழுதப்பட்டது. மற்ற மூன்று நற்செய்தி நூல்கள் எழுதப்பட்ட பின்பு யோவான் இந்நூலை எழுதினார். எனவேதான் முதல் மூன்று நூல்களில் கூறப்பட்டிராத காரியங்களை தன்னுடைய நூலில் கூறியுள்ளார். மேலும் இவரது இறையியல் (வாநழடழபல) சற்று வளர்ச்சியடைந்தது

  1. கி.பி.50க்குப்பின் 70க்கு முன் எழுதப்பட்டிருக்கவேண்டும் ஏனெனில் கி.பி.70ல் எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டது. ஆனால் யோவான் 5:2ல் எருசலேம் தேவாலயம் நிகழ்கால வார்த்தைகளில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற வசனங்கள் இக்கருத்துக்கு வழி மொழிகின்றன.

நோக்கம்

யோவான் 20:31ல், இந்நூலின் நோக்கம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இயேசு தேவனுடைய குமாரானாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும் படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும் படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.”

இந்நூலின் தனிச்சிறப்புகள்

  1. இந்நூலை நாம் ஒரு வரலாற்று நூலாக கருதலாம். மற்ற நூல்களை விட இந்நூலில் நிகழ்ச்சிகள் கால வரிசைப்படி எழுதப்பட்டுள்ளன.

2.இந்நூலின் இயேசு ‘நான்’ என்று கூறிய வார்த்தைகள் 120 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. தேவன் பிதாவாகவும் கிறிஸ்து அவரால் அனுப்பப்பட்டவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

  1. இந்நூலில் 8 அற்புதங்கள் காட்டப்பட்டுள்ளது. இதில் 7 அற்புதங்கள் இந்நூலில் மட்டும் காணப்படுகிறது.
  1. இயேசு பிதாவிற்கு நிகரானவர் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டிலேயே பிதா பயன்படுத்திய நான், நானே என்ற வார்த்தை தொடர்ந்து இயேசுவின் வாயிலிருந்து புறப்படுவதாக இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5.இயேசுவின் உபதேசத்திற்கு மத்தேயுவைப்போலவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய உபதேசங்கள் பொருளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அப்போஸ்தலர் Acts of the Apostles

புதிய ஏற்பாட்டில் அனைத்து புத்தகங்களும் கி.பி. முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்பதை நாம் அறிவோம். முதலாம் நூற்றாண்டு திருச்சபையை நன்கு அறிவதன் மூலம் முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்தகங்களையும் அவைகளின் பின்னணியையும் நாம் அறிய முடியும்.

இப்புத்தகம் ஏன் அப்போஸ்தலர் நடபடிகள் என குறிப்பிட வேண்டும் என நோக்கின். பேதுரு, யோவான், பர்னபா, ஸ்தேவான், பிலிப்பு, இயேசுவின் சகோதரராகிய யாக்கோபு மற்றும் பவுல் இவர்களைப் பற்றியும் இவர்கள் ஊழியத்தையும் பற்றியதாக இருப்பதனால் இப்பெயர் வந்தது என புரிகிறது.

ஆசிரியர்

ரோமர், கொரிந்தியர் நிருபங்களில் உள்ளது போல நேரிடையான ஆசிரியர் பெயர் அப்போஸ்தலருடைய நடபடிகளில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், பின்வரும் ஆதாரங்களைப் பார்க்கும் பொழுது இது லூக்கா என்பவரால் எழுதப்பட்டது என அறியலாம்.

1.லூக்கா 1:1-4, அப்போஸ்தலர் 1:1 இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது லூக்கா நற்செய்தி நூலின் ஆசிரியரும், அப்போஸ்தலர் நடபடிகளின் ஆசிரியரும் ஒருவரே என்பது புலனாகும்.

  1. லூக்கா நற்செய்தி நூலின் முடிவும், அப்போஸ்தலர் நடபடிகளின் ஆரம்பமும் ஒன்றாகப் பொருந்துகிறது. அப்போஸ்தலர் 1:2ல் தன்னுடைய முதலாம் புத்தகத்தை (பிரபந்தத்தை) அதாவது லூக்கா நற்செய்தி நூலைப்பற்றிக் கூறுகிறார்.
  1. அப்போஸ்தலர் 16:9-18. 20:5, 21:18, 27:1-28:16 வசனங்களில் நாங்கள். எங்கள் என குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களை பார்க்கும்பொழுது, ஆசிரியர், பவுலோடு பிரயாணம் செய்தவர் என்பது புலனாகிறது. பவுலோடு ஊழியப் பிரயாணம் மேற்கொண்டவர்களில் லூக்காவும் ஒருவர். ஆனாலும் மேலே குறிப்பிட்டுள்ள வசனங்களை கூர்ந்து நோக்கும்பொழுது லூக்கா பவுலோடு இருந்த நாட்களில் மாத்திரமே நாம், நாங்கள் என்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே இப்புத்தகத்தின் ஆசிரியர் லூக்கா என்பது தெளிவாகிறது. இவர் ஒரு மருத்துவர். (கொலோ 4:14). இவர் புறஜாதி (யூதரல்லாத) இனத்தை சேர்ந்தவர். இவருடைய ஊர் அந்தியோகியா அல்லது பிலிப்பு பட்டணமாக இருக்கலாம் என வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

காலம்

அப்போஸ்தலருடைய நடபடிகள் எழுதப்பட்ட காலம் கி.பி. 63-64 ஆக இருக்கலாம். காரணங்கள்.

  1. பவுல் ரோமபுரியில் சிறைபிடிக்கப்பட்ட காலத்திற்குப்பின்பு (கி.பி.61-63) எழுதப்படிருக்க வேண்டும். 

2.ரோமப்பேரரசர் நீரோ மன்னரின் அடக்குமுறைக்கு முன்னதாகவும். அதேபோல் யூதப்புரட்சிக்கு முன்னதாகவும் (கி.பி. 66-74) எழுதப்பட்டிருக்கவேண்டும்.

3.பவுல் இறப்பதற்கு முன்பும் (கி.பி. 65) எருசலேம் தேவாலயம் இடிக்கப்படுவதற்கு முன்பும் (கி.பி. 70) எழுதப்பட்டிருக்கவேண்டும்.

யாருக்கு ஏன் எழுதப்பட்டது?

லூக்கா 1:1ன் படியும் அப்போஸ்தலர் 1:1ன் படியும் மகா கனம் பொருந்திய தெயோப்பிலியு எனப்பட்ட தனிநபருக்கு எழுதப்பட்ட ஒன்றாகும். தெயோப்பிலியு ரோம அதிகாரியாகவோ அல்லது ரோம அரசாங்கத்தில் உயர்பதவி வகித்தவராகவோ இருந்திருக்கலாம்.

தெயோப்பிலியு – தமிழ் மொழிபெயர்ப்பின்படி “தேவனுடைய நண்பர்கள்” அல்லது “தேவனை நேசிப்பவர்கள்” என்பது பொருள். ஏனலே இப்புத்தகம் தேவனை நேசிப்பவர்களுக்காக எழுதப்பட்டிருக்கலாம்.

இதன் நோக்கத்தை பார்க்கும்பொழுது

  1. ஆதிமுதல் நடந்தவற்றைக் கண்ணாரக்கண்டு எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்து விசேஷங்களின் நிச்சயத்தை வாசிப்பவர் புரிந்து கொள்ளவும்(லூக்கா 1:2-4)

2.இயேசுவானவர் வாழ்க்கையிலே பரிசுத்த ஆவியாக செயல்பட்டதுபோல ஆதித்திருச்சபையிலும் செயல்பட்ட விபரத்தைக் காட்டுவதற்கும்.

  1. ரோம பேரரசுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை எதிர்த்து, கிறிஸ்தவர்களின் உண்மை நிலையை காட்டுவதற்கும்.
  1. ஆதி அப்போஸ்தலர்கள் மறையும் காலத்தில் திருச்சபை மக்களை ஊக்கப்படுத்துவதற்கும் லூக்கா இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.

சுருங்கக்கூறின், ஆதித்திருச்சபையானது எப்படி உலகம் முழுவதும் பரிசுத்த ஆவியானவரால் ஆரம்பிக்கப்பட்டு அவரது வல்லமையால் பரவியது என்பதை சுட்டிக்காட்டும்படியாக எழுதப்பட்ட ஒரு புத்தகம்.

பொருளடக்கம்

அப்போஸ்தலருடைய நடபடிகளின் பொருளடக்கம் கிறிஸ்தவ திருச்சபையின் ஆரம்பத்தையும், அதன் வளர்ச்சியையும் காண்பிப்பதாக உள்ளது.

திருச்சபையின் ஆரம்பத்தை முதல் இரண்டு அதிகாரங்களில் நாம் காணலாம்.

அதன் வளர்ச்சியை நாம் ஆராயும் பொழுது அது அப்போஸ்தலர் 1:8ஐ அடிப்படையாகக் கொண்டுள்ளது.

“பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்பொது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும் 3:1 – 5:42

யூதேயா முழுவதிலும் 6:1 8:1

சமாரியவிலும் 8:1 – 40 பூமியின் கடைசி பரியந்தமும் 9:1 28:31 எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்.”

அப்போஸ்தலர் நடபடிகளில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான காரியங்கள் இரண்டு உள்ளது.

1) ஆதித்திருச்சபையின் குணாதிசயங்கள்:

திருச்சபையின் தோற்றத்திற்கான வித்தை மத்தேயு 16:18ல் இயேசுவானவர் விதைத்தபோதிலும் வெளிப்படையான ஆரம்பத்தை நாம் அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். இப்படியாக ஆரம்பிக்கப்பட்ட திருச்சபை தனக்கே உரிய குணாதிசயங்களைக் கொண்டதாகக் காணப்பட்டது. இதை நாம் அப்போஸ்தலர் 2:42-47 பகுதிகளில் காணலாம்.

  • 1.அப்போஸ்தலருடைய உபதேசத்தை பின்பற்றினார்கள்.(2:42)
  • 2.அப்போஸ்தலருடன் ஐக்கியத்தில் நிலைத்திருந்தார்கள். (2:42, 44,45)
  •  3. அப்போஸ்தலருடன் அப்பம் பிட்டுதலில் பங்கு பெற்றார்கள். (2:42, 46)
  • 4.அப்போஸ்தலர் மூலமாக அற்புதங்கள் செய்யப்பட்டது. (2:43)
  • 5 அப்போஸ்தலரிடத்தில் தங்கள் உடைமைகளை பகிர்ந்து கொண்டார்கள். (2:44,45)

2) ஆதித்திருச்சபையின் ஆராதனை முறை:

இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் ஜெபாலயத்திலும் (Synagague) வீடுகளிலும் கூடி தேவனை ஆராதித்து வந்தார்கள். ஆராதனை முறையானது ஜெபாலய ஆராதனை முறையிலிருந்து எடுக்கப்பட்டதாக இருந்தது. ஜெபாலய ஆராதனை முறையானது ஐந்து முக்கிய பிரிவுகளை கொண்டதாக காணப்பட்டது.

  • 1. ஜெபம் (Shema) -உபாகமம் 6:4-9, 11:13-21.
  • 2.ஆகம வாசிப்பு (Reading of the Word of God)
  • 3. வியாக்கியானம்
  • 4.உபதேசம்
  • 5.ஆசீர்வாதம்

சங்கீதங்கள் பாடல்களாக பாடப்பட்டது. திருச்சபை மக்கள் தங்களுக்கு உண்டான ஆஸ்திகளை விற்று, பொதுவாக வைத்து, அனுபவித்து வந்தார்கள். விதவைகளும், குழந்தைகளும் இதன் மூலமாக பராமரிக்கப்பட்டு வந்தார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *