1 தெசலோனிக்கேயர் – எபிரெயர்  சுருக்கம் 

1 தெசலோனிக்கேயர் – எபிரெயர்  சுருக்கம் 

1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians

தெசலோனிக்கே, ரோமப்பேரரசின் ஒரு மாகாணமான மக்கதோனியாவின் தலைநகரமாகும் இது வடக்கு கிரீஸ் நாட்டில் உள்ள ஒரு பெரிய துறைமுக நகரமாகும். இதன் மக்கள் தொகை இரண்டு லட்சமாக இருந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. தற்பொழுது இது கிரீஸ் நாடு என அழைக்கப்படுகிறது. இதன் மக்கள் தொகையில் 98மூ கிறிஸ்தவர்கள்.

யார் யாருக்கு எப்பொழுது எழுதியது?

தெசலோனிக்கேயருக்கு எழுதின கடிதங்கள் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதாகும் (1தெச 1:1 2தெச 1:1) மேலே குறிப்பிட்டுள்ளது போல் மக்கத்தோனியாவிலுள்ள தெசலோனிக்கே நகரத் திருச்சபையைச் சேர்ந்த இளம் விசுவாசிகளுக்காக கொரிந்து பட்டணத்திலிருந்து கி.பி. 51ஆம் ஆண்டில் பவுல் இரு கடிதங்களை எழுதினார். இதுவே 1,2 தெசலோனிக்கேயராகும்.

எழுதப்பட்ட சூழ்நிலை

கி.பி. 50ஆம் ஆண்டு பவுல் சீலாவோடு இணைந்து இரண்டாம் மிஷினரி பயணத்தை மேற்கொண்டு, இடையில் தங்களோடு சேர்ந்துகொண்ட தீமோத்தேயுவுடன் தெசலோனிக்கே பட்டணத்தை அடைகின்றனர் (அப் 17:1). பவுல் அங்கு மூன்று வாரம் தங்கியிருந்து, ஓய்வு நாட்களில் அவர்களோடு சம்பாஷித்தார். பின்பு குறுகிய நாட்கள் யாசோன் இல்லத்தில் தங்கியிருந்தார் பின்பு யூத மார்க்கத்தினரால் பிரச்சனைகள் எழுப்பப்பட்டதன் நிமித்தமாக பவுலும் சீலாவும் பெரேயா அனுப்பி வைக்கப்பட்டார்கள். (அப் 17:10) ஒருவேளை தீமோத்தேயு தெசலோனிக்கேயிலேயே தங்கியிருந்து பின்பு பெரேயாவிலேயே அவர்களோடு இணைந்து கொண்டிருக்கலாம். பெரேயாவிலும் பிரச்சனை உண்டானதன் நிமித்தம் பவுல் அத்தனே பட்டணம் செல்கிறார் (17:14). தீமோத்தேயு தெசலோனிக்கே பட்டணத்திற்கு சபையின் நிலைமை குறித்து அறிந்து வர பவுலினால் அனுப்பி வைக்கப்படுகிறார் (1தெச 3:1-5). பின்பு பவுல் கொரிந்து பட்டணத்திற்கு செல்கிறார். அங்கு தீமோத்தேயுவும் சீலாவும் வந்து சேர்கின்றனர் (அப் 18:5). தெசலோனிக்கே திருச்சபை விசுவாசத்தில் வளர்ந்து வருவதை தீமோத்தேயு அறிவித்ததினால் (1தெச 3:6) பவுல் மகிழ்ச்சியோடு முதலாம் கடிதத்தை அனுப்புகிறார். ஏறத்தாழ ஆறு மாதத்திற்குப் பின்பாக தெசலோனிக்கே திருச்சபை வளர்ச்சியையும் அதின் பிரச்சனைகளையும் அறிந்துகொண்டு இரண்டாவது கடிதத்தை எழுதி அனுப்புகிறார்.

எழுதிய நோக்கம்

பவுல் தெசலோனிக்கே பட்டணத்தில் சிறிது காலம் மட்டும் தங்கி திடீரென விட்டுச்சென்றார். அங்குள்ள திருச்சபையினர் பிரச்சனைகள் மற்றும் உபத்திரவங்கள் மத்தியிலும், தேவனைப்பற்றும் விசுவாசதிதில் வளர்வதற்கு தைரியப்படுத்தவும், ஆவிக்குரிய வாழ்கையில் வளர்வதற்கான அறிவுரைகள் கூறவும் முதலாம் கடித்ததை எழுதினார். இயேசு கிறிஸ்து மறுபடி வந்து விசுவாசிகளை அழைத்துச் செல்வார் என போதித்திருந்தார். இதற்கிடையில் விசுவாசிகளிள் சிலர் மரித்துப்போனார்கள். இவர்களின் நிலமையை குறித்து அறிந்திராத தெசலோனிக்கேயர் குழப்பத்திற்குள்ளானார்கள். இவர்களின் குழப்பத்தை நீக்கி தெளிவையுண்டாக்கவும் (1தெசலோனிக்கேயர் 4) இக்கடிதத்தை எழுதுகிறார்.

முக்கிய கருத்துக்கள்

குறுகிய காலத்தில் இயேசுவைப்பற்றி அறிந்து கொண்டு உபத்திரவத்தை சகித்து. விசுவாசத்தில் நிலைத்திருப்பதாக பவுல் தெரிவிக்கின்றார் (1தெச 1:9க). இயேசு கிறஸ்துவை பிதாவாக, தேவனுக்கு இணையாகக் காட்டுகிறார் (1தெச 1:1, 3:1, 2தெச 1:1.2:16). திருச்சபையை பரிசுத்த வாழ்க்கைகக்கு நேராக நடக்க அறிவுறுத்துகிறார். தெசலோனிக்கேயருக்கு எழுதின கடிதங்கள் இயேசுவின் இரண்டாம் வருகையைப்பற்றி குறிப்பிடுகின்ற முக்கியமான வேத பகுதியாக அமைகின்றது. இரண்டாம் வருகையைப்பற்றிய தவறான கருத்துக்களை நீக்கி, சரியான கருத்தை மக்களுக்கு தெரியப்படுத்துகிறார். இதன் மூலம் மக்கள் தங்கள் கடமைகளை செய்யவும் வேலைக்குச் செல்லவும் அறிவுறுத்துகிறார்.

2 தெசலோனிக்கேயர் 2 Thessalonians

தெசலோனிக்கே, ரோமப்பேரரசின் ஒரு மாகாணமான மக்கதோனியாவின் தலைநகரமாகும் இது வடக்கு கிரீஸ் நாட்டில் உள்ள ஒரு பெரிய துறைமுக நகரமாகும். இதன் மக்கள் தொகை இரண்டு லட்சமாக இருந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. தற்பொழுது இது கிரீஸ் நாடு என அழைக்கப்படுகிறது. இதன் மக்கள் தொகையில் 98மூ கிறிஸ்தவர்கள்.

யார் யாருக்கு எப்பொழுது எழுதியது?

தெசலோனிக்கேயருக்கு எழுதின கடிதங்கள் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதாகும் (1தெச 1:12தெச 1:1) மேலே குறிப்பிட்டுள்ளது போல் மக்கத்தோனியாவிலுள்ள தெசலோனிக்கே நகரத் திருச்சபையைச் சேர்ந்த இளம் விசுவாசிகளுக்காக கொரிந்து பட்டணத்திலிருந்து கி.பி. 51ஆம் ஆண்டில் பவுல் இரு கடிதங்களை எழுதினார். இதுவே 1,2 தெசலோனிக்கேயராகும்.

எழுதப்பட்ட சூழ்நிலை

கி.பி. 50ஆம் ஆண்டு பவுல் சீலாவோடு இணைந்து இரண்டாம் மிஷினரி பயணத்தை மேற்கொண்டு இடையில் தங்களோடு சேர்ந்துகொண்ட தீமோத்தேயுவுடன் தெசலோனிக்கே பட்டணத்தை அடைகின்றனர் (அப் 17:1). பவுல் அங்கு மூன்று வாரம் தங்கியிருந்து, ஓய்வு நாட்களில் அவர்களோடு சம்பாஷித்தார். பின்பு குறுகிய நாட்கள் யாசோன் இல்லத்தில் தங்கியிருந்தார் பின்பு யூத மார்க்கத்தினரால் பிரச்சனைகள் எழுப்பப்பட்டதன் நிமித்தமாக பவுலும் சீலாவும் பெரேயா அனுப்பி வைக்கப்பட்டார்கள்.(அப் 17:10) ஒருவேளை தீமோத்தேயு தெசலோனிக்கேயிலேயே தங்கியிருந்து பின்பு பெரேயாவிலேயே அவர்களோடு இணைந்து கொண்டிருக்கலாம். பெரேயாவிலும் பிரச்சனை உண்டானதன் நிமித்தம் பவுல் அத்தனே பட்டணம் செல்கிறார் (17:14). தீமோத்தேயு தெசலோனிக்கே பட்டணத்திற்கு சபையின் நிலைமை குறித்து அறிந்து வர பவுலினால் அனுப்பி வைக்கப்படுகிறார் (1தெச 3:1-5). பின்பு பவுல் கொரிந்து பட்டணத்திற்கு செல்கிறார். அங்கு தீமோத்தேயுவும் சீலாவும் வந்து சேர்கின்றனர் (அப் 18:5). தெசலோனிக்கே திருச்சபை விசுவாசத்தில் வளர்ந்து வருவதை தீமோத்தேயு அறிவித்ததினால் (1தெச 3:6) பவுல் மகிழ்ச்சியோடு முதலாம் கடிதத்தை அனுப்புகிறார். ஏறத்தாழ ஆறு மாதத்திற்குப் பின்பாக தெசலோனிக்கே திருச்சபை வளர்ச்சியையும் அதின் பிரச்சனைகளையும் அறிந்துகொண்டு இரண்டாவது கடிதத்தை எழுதி அனுப்புகிறார்.

எழுதிய நோக்கம்

தெடர்ந்து உபத்திரவத்தின் மத்தியில் விசுவாசிகள் தைரியத்தோடு வளரவும், பரிசுத்த வாழ்க்கைக்கு நேராக வளரவும், இயேசுவின் இரண்டாம் வருகை பற்றிய தவறான கருத்துக்களை திருத்தவும், தங்களுடைய கடமைகளை அல்லது வேலைகளை செய்யக்கோரியும் தன்னுடைய இரண்டாவது கடிதத்தை எழுதினார்.

முக்கிய கருத்துக்கள்

குறுகிய காலத்தில் இயேசுவைப்பற்றி அறிந்து கொண்டு உபத்திரவத்தை சகித்து. விசுவாசத்தில் நிலைத்திருப்பதாக பவுல் தெரிவிக்கின்றார் (1தெச 1:9க). இயேசு கிறஸ்துவை பிதாவாக, தேவனுக்கு இணையாகக் காட்டுகிறார் (1தெச 1:1, 3:1, 2தெச 1:1, 2:16. திருச்சபையை பரிசுத்த வாழ்க்கைகக்கு நேராக நடக்க அறிவுறுத்துகிறார். தெசலோனிக்கேயருக்கு எழுதின கடிதங்கள் இயேசுவின் இரண்டாம் வருகையைப்பற்றி குறிப்பிடுகின்ற முக்கியமான வேத பகுதியாக அமைகின்றது. இரண்டாம் வருகையைப்பற்றிய தவறான கருத்துக்களை நீக்கி, சரியான கருத்தை மக்களுக்கு தெரியப்படுத்துகிறார். இதன் மூலம் மக்கள் தங்கள் கடமைகளை செய்யவும் வேலைக்குச் செல்லவும் அறிவுறுத்துகிறார்.

1 தீமோத்தேயு 1 Timothy

1.2 திமோத்தேயு தீத்து ஆகிய இம்மூன்று புத்தகங்களும் ‘ஆயர் கடிதங்கள்’ அல்லது ‘போதகர் கடிதங்கள்’ (Pastoral Epistle) என அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவை தீமோத்தேயுவிற்கும் தீத்துவிற்கும் சபை பராமரிப்பைப் பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்கிறது. இவை அப்போஸ்தலர் 28ல் குறிப்பிட்டுள்ள சம்பவங்களுக்கு சற்று பின்னர் எழுதப்பட்டவைகளாகும். முன்பு (அப்போஸ்தல நடபடிகளில்) கூறப்ட்டது போல் பவுலின் மூன்றாவது மிஷினரி பிரயாணத்திற்கு பின் ரோமபுரி சென்றபோது (கி.பி. 62-67) தீமோத்தேயுவையும் தீத்துவையும் சபை பராமரிப்பிற்காக விட்டுச்சென்று பின்பு அவர்களுக்கு இம்மூன்று கடிதங்களையும் வரைந்தார்.

தீமோத்தேயு என்பவர் யூதத்தாய்க்கும் யூதரல்லாத தகப்பனுக்கும் பிறந்தவர். லீஸ்திராவை சேர்ந்த இவர் பவுல் கலாத்தியாவுக்கு இரண்டாம் முறை சென்ற போது அவரோடு ஊழியத்தில் இணைந்தார் (அப்போஸ்தலர் 16:1பிபி). அதன் பின்பாக பவுலின் மற்ற பிரயாணத்தின்போதும், ரோமபுரி சிறைவாசத்தின் போதும் பவுலோடு இணைந்திருந்தார். இறுதியில் எபேசு திருச்சபைக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை நாம் கடிதத்தின் மூலம் காண்கின்றோம்.

இக்கடிதத்தை எழுதியவர் பவுல் என்று நாம் அறிகிறோம் (1தீமோ 1:1,2), 1,2 தீமோத்தேயு, தீமோத்தேயுவிற்கு எழுதப்பட்டது.

எழுதப்பட்ட சூழ்நிலை

அப்போஸ்தலர் 28க்கு பின்பு பவுல் ரோமபுரி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் (கி.பி.62) அங்கிருந்து பவுல் தான் திட்டமிட்டிருந்தப்படி தன்னுடைய ஊழியப்பயணத்தை ஆரம்பித்தார் (4 வது மிஷினரி பயணம்). கி.பி.62 முதல் 64 வரை ஸ்பானியா நாட்டில் ஊழியம் செய்துவிட்டு, கிரேத்தா தீவிற்கு வந்தார். அங்கு தீத்துவோடு ஊழியம் செய்தார். தீத்துவை அங்கு அவர் சபையை நிர்வகிக்க வைத்துவட்டு மிலேத்து பட்டணத்திற்கும், பின்பு கொலோசேக்கும். அதன் பின்பு எபேசுவிற்கும் சென்றார். (1தீமோ 1:3). அங்கு தீமோதேயுவை சபை பராமரிக்க கேட்டுக்கொண்டு, மக்கத்தோனியாவிற்கு கடந்து சென்றார். அங்கிருந்து எபேசு பட்டணத்தில் உள்ள தீமோத்தேவிற்கு தன்னுடைய முதலாவது கடிதத்தை எழுதினார். பின்பு கிரேத்தா தீவிலுள்ள தீத்துவிற்கு ஒரு கடிதத்தை எழுதினார். அக்கடிதத்தில் தீத்துவை தெக்கோபோலிக்கு வரும்படி அழைத்துவிட்டு பவுல் அங்கு பிரயாணப்பட்டார். (தீத்து 3:12). மாரிகாலத்திற்கு பின்பு (தீத்துவோடு?) ரோமபுரிக்கு சென்று அங்கு நீரோ மன்னரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். அங்கு மரணதண்டனைக்குள்ளாக தீர்க்கப்படப்போகும் சூழ்நிலையில் (2தீமோ 4:6-8) தீமோத்தேயுவுக்கு இரண்டாவது கடிதத்தை எழுதினார். பின்பு கி.பி.67ல் சிறைச்சேதம் பண்ணப்பட்டார்.

எழுதியதன் நோக்கம்

பவுல் தன்னுடைய உடன் ஊழியர்களுக்கு தகுந்த அறிவுரை கூறவும், தற்போதும், எதிர்காலத்திலும் தங்கள் கடமைகளை துணிவுடன் செய்யவும் ஊக்கப்படுத்தியும் இக்கடிதத்தை எழுதினார். இருப்பினும் இக்கடிதத்தை எழுத சிறப்பு நோக்கம் உண்டு.

பவுல் தன்னுடைய உதவியாளராகிய தீமோத்தேயுவுக்கு (1:3,18) கள்ளப் போதனைகளுக்கு எதிரான விளக்கம் கொடுக்கவும் (1:3-7,4:1-8,6:3-5,5:20-21), வளரும் எபேசு சபையை கண்காணிக்கும் படி உற்சாகப்படுத்தவும், சரியான தலைவரை தேர்ந்தெடுக்க அறிவுரை கூறவும்.(3:1-13,5:17-25) இக்கடிதத்தை எழுதினார்.

தன்னுடைய எதிர்கால திட்டத்தை வெளிப்படுத்தவும் (3:12) இக்கடிதத்தை எழுதினார்.

2 தீமோத்தேயு 2 Timothy

1.2 திமோத்தேயு தீத்து ஆகிய இம்மூன்று புத்தகங்களும் ‘ஆயர் கடிதங்கள் அல்லது ‘போதகர் கடிதங்கள்’ (Pastoral Epistle) என அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவை தீமோத்தேயுவிற்கும் தீத்துவிற்கும் சபை பராமரிப்பைப் பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்கிறது. இவை அப்போஸ்தலர் 28ல் குறிப்பிட்டுள்ள சம்பவங்களுக்கு சற்று பின்னர் எழுதப்பட்டவைகளாகும். முன்பு (அப்போஸ்தல நடபடிகளில்) கூறப்ட்டது போல் பவுலின் மூன்றாவது மிஷினரி பிரயாணத்திற்கு பின் ரோமபுரி சென்றபோது (கி.பி. 62-67) தீமோத்தேயுவையும் தீத்துவையும் சபை பராமரிப்பிற்காக விட்டுச்சென்று பின்பு அவர்களுக்கு இம்மூன்று கடிதங்களையும் வரைந்தார்.

தீமோத்தேயு என்பவர் யூதத்தாய்க்கும் யூதரல்லாத தகப்பனுக்கும் பிறந்தவர். லீஸ்திராவை சேர்ந்த இவர் பவுல் கலாத்தியாவுக்கு இரண்டாம் முறை சென்ற போது அவரோடு ஊழியத்தில் இணைந்தார் (அப்போஸ்தலர் 16:1பிபி). அதன் பின்பாக பவுலின் மற்ற பிரயாணத்தின்போதும், ரோமபுரி சிறைவாசத்தின் போதும் பவுலோடு இணைந்திருந்தார். இறுதியில் எபேசு திருச்சபைக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை நாம் கடிதத்தின் மூலம் காண்கின்றோம்.

இக்கடிதத்தை எழுதியவர் பவுல் என்று நாம் அறிகிறோம் (1தீமோ 1:1,2), 1,2 தீமோத்தேயு, தீமோத்தேயுவிற்கு எழுதப்பட்டது.

எழுதப்பட்ட சூழ்நிலை

அப்போஸ்தலர் 28க்கு பின்பு பவுல் ரோமபுரி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் (கி.பி.62) அங்கிருந்து பவுல் தான் திட்டமிட்டிருந்தப்படி தன்னுடைய ஊழியப்பயணத்தை ஆரம்பித்தார் (4 வது மிஷினரி பயணம்). கி.பி.62 முதல் 64 வரை ஸ்பானியா நாட்டில் ஊழியம் செய்துவிட்டு, கிரேத்தா தீவிற்கு வந்தார். அங்கு தீத்துவோடு ஊழியம் செய்தார். தீத்துவை அங்கு அவர் சபையை நிர்வகிக்க வைத்துவட்டு மிலேத்து பட்டணத்திற்கும், பின்பு கொலோசேக்கும். அதன் பின்பு எபேசுவிற்கும் சென்றார். (1தீமோ 1:3). அங்கு தீமோதேயுவை சபை பராமரிக்க கேட்டுக்கொண்டு, மக்கத்தோனியாவிற்கு கடந்து சென்றார். அங்கிருந்து எபேசு பட்டணத்தில் உள்ள தீமோத்தேவிற்கு தன்னுடைய முதலாவது கடிதத்தை எழுதினார். பின்பு கிரேத்தா தீவிலுள்ள தீத்துவிற்கு ஒரு கடிதத்தை எழுதினார். அக்கடிதத்தில் தீத்துவை தெக்கோபோலிக்கு வரும்படி அழைத்துவிட்டு பவுல் அங்கு பிரயாணப்பட்டார். (தீத்து 3:12). மாரிகாலத்திற்கு பின்பு (தீத்துவோடு?) ரோமபுரிக்கு சென்று அங்கு நீரோ மன்னரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். அங்கு மரணதண்டனைக்குள்ளாக தீர்க்கப்படப்போகும் சூழ்நிலையில் (2தீமோ 4:6-8) தீமோத்தேயுவுக்கு இரண்டாவது கடிதத்தை எழுதினார். பின்பு கி.பி.67ல் சிறைச்சேதம் பண்ணப்பட்டார்.

எழுதியதன் நோக்கம்

பவுல் தன்னுடைய உடன் ஊழியர்களுக்கு தகுந்த அறிவுரை கூறவும், தற்போதும், எதிர்காலத்திலும் தங்கள் கடமைகளை துணிவுடன் செய்யவும் ஊக்கப்படுத்தியும் இக்கடிதத்தை எழுதினார். இருப்பினும் இக்கடிதத்தை எழுத சிறப்பு நோக்கம் உண்டு.

  1. ஆசியா நாட்டிலிருக்கிற யாவரும், பிக்கெல்லு, அர்மோகெனே முதலாய் அனைவரும் பவுலை விட்டு விலகினார்கள் (1:15), கிரெஸ்கே, தீத்து ஆகியோர் ஊழியத்திற்காக மற்ற இடங்களுக்கு சென்று விட்டனர். எனவே பவுல் தனிமையை உணர்ந்தவராக தன்னுடைய நண்பராகிய தீமோத்தேயுவை தன்னிடத்தில் வரக்கேட்டு (4:9,21) இக்கடிதத்தை எழுதினார்.
  1. நீரோ மன்னனின் பாடுகளை சகித்து, சுவிசேஷத்தை பாதுகாக்கவும் (1:14,3:14) தொடர்ந்து அறிவுக்கவும் (4:2)அதற்காக பாடனுபவிக்கவும் (1:8,2:3) உற்சாகப்படுத்தி இக்கடிதத்தை எழுதினார்.
  1. தீமோத்தேயுவற்கு எழுதுகிற கடிதத்தின் மூலம் எபேசு சபை மக்களோடு பேசவும் (4:22) இக்கடிதத்தை எழுதினார்.

தீத்து TITUS

1, 2 திமோத்தேயு தீத்து ஆகிய இம்மூன்று புத்தகங்களும் ‘ஆயர் கடிதங்கள்’ அல்லது “போதகர் கடிதங்கள் தீயளவழசயட நுளைவடந) என அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவை தீமோத்தேயுவிற்கும் தீத்துவிற்கும் சபை பராமரிப்பைப் பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்கிறது. இவை அப்போஸ்தலர் 28ல் குறிப்பிட்டுள்ள சம்பவங்களுக்கு சற்று பின்னர் எழுதப்பட்டவைகளாகும். முன்பு (அப்போஸ்தல நடபடிகளில்) கூறப்ட்டது போல் பவுலின் மூன்றாவது மிஷினரி பிரயாணத்திற்கு பின் ரோமபுரி சென்றபோது (கி.பி. 62-67) தீமோத்தேயுவையும் தீத்துவையும் சபை பராமரிப்பிற்காக விட்டுச்சென்று பின்பு அவர்களுக்கு இம்மூன்று கடிதங்களையும் வரைந்தார்.

தீத்து என்பவர் பவுல் மூலமாக இயேசுவை ஏற்றுக்கொண்டவர் (தீத்து 1:4).

பவுலுக்கு மிக உதவியாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். பவுலின் எருசலேம் பிரயாணத்தில் (அப்போஸ்தலர் 15) அவரோடு கூட சென்றார். (கலா 2:1-3) இவர் ஒரு புற ஜாதியார். பவுலோடு எபேசு பட்டணத்தில் (மூன்றாவது மிஷினரி பயணத்தின் போது) ஊழியம் செய்தார். (2 கொரிந்தியர் 2:12-13,7:5,6) பவுலின் ரோமபுரி சிறைவாசத்திற்கு பின்பு கிரேத்தா தீவிலே இருவரும் ஊழியம் செய்தனர் (தீத்து 1:5) பின்பு கிரேத்தா தீவின் சபைகளை நிர்வகிக்கும்படி அங்கு விட்டுச் செல்லப்பட்டார். கி.பி.66-67ல் ஊழியத்திற்காக தல்மாத்தியாவிற்கு (தற்போதுள்ள யுகோஸ்லேவியா) சென்றார்.

இக்கடிதத்தை எழுதியவர் பவுல் என்று நாம் அறிகிறோம் (தீத்து1:1), தீத்து நிருபம் அல்லது கடிதம், தீத்துவிற்கு எழுதப்பட்டது.

எழுதப்பட்ட சூழ்நிலை

அப்போஸ்தலர் 28க்கு பின்பு பவுல் ரோமபுரி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் (கி.பி.62) அங்கிருந்து பவுல் தான் திட்டமிட்டிருந்தப்படி தன்னுடைய ஊழியப்பயணத்தை ஆரம்பித்தார் (4 வது மிஷினரி பயணம்). கி.பி.62 முதல் 64 வரை ஸ்பானியா நாட்டில் ஊழியம் செய்துவிட்டு, கிரேத்தா தீவிற்கு வந்தார். அங்கு தீத்துவோடு ஊழியம் செய்தார். தீத்துவை அங்கு அவர் சபையை நிர்வகிக்க வைத்துவட்டு மிலேத்து பட்டணத்திற்கும், பின்பு கொலோசேக்கும். அதன் பின்பு எபேசுவிற்கும் சென்றார். (1தீமோ 1:3). அங்கு தீமோதேயுவை சபை பராமரிக்க கேட்டுக்கொண்டு, மக்கத்தோனியாவிற்கு கடந்து சென்றார். அங்கிருந்து எபேசு பட்டணத்தில் உள்ள தீமோத்தேவிற்கு தன்னுடைய முதலாவது கடிதத்தை எழுதினார். பின்பு கிரேத்தா தீவிலுள்ள தீத்துவிற்கு ஒரு கடிதத்தை எழுதினார். அக்கடிதத்தில் தீத்துவை தெக்கோபோலிக்கு வரும்படி அழைத்துவிட்டு பவுல் அங்கு பிரயாணப்பட்டார். (தீத்து 3:12). மாரிகாலத்திற்கு பின்பு (தீத்துவோடு?) ரோமபுரிக்கு சென்று அங்கு நீரோ மன்னரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். அங்கு மரணதண்டனைக்குள்ளாக தீர்க்கப்படப்போகும் சூழ்நிலையில் (2தீமோ 4:6-8) தீமோத்தேயுவுக்கு இரண்டாவது கடிதத்தை எழுதினார். பின்பு கி.பி.67ல் சிறைச்சேதம் பண்ணப்பட்டார்.

எழுதியதன் நோக்கம்

பவுல் தன்னுடைய உடன் ஊழியர்களுக்கு தகுந்த அறிவுரை கூறவும், தற்போதும், எதிர்காலத்திலும் தங்கள் கடமைகளை துணிவுடன் செய்யவும் ஊக்கப்படுத்தியும் இக்கடிதத்தை எழுதினார். இருப்பினும் இக்கடிதத்தை எழுத சிறப்பு நோக்கம் உண்டு.

  1. எதிர்ப்புகளை மேற்கொள்ள உதவியும் அதிகாரமும் கொடுக்க (1:5, 2:1,7- 8, 15,3:9)
  1. விசுவாசம் மற்றும் கிறிஸ்தவ நடத்தை குறித்த உபதேசங்களை கூறவும், கள்ள போதகர்களை குறித்து எச்சரிக்கவும். 
  1. தீத்துவைக்குறித்த தன்னுடைய எதிர்கால திட்டத்தை வெளிப்படுத்தவும் (3:12) இக்கடிதத்தை எழுதினார்.

பிலேமோன் Philemon

யார் யாருக்காக எப்பொழுது எழுதியது?

கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப்பட்டவனாய் ரோமபுரி சிறைச்சாலையில் இருக்கிற பவுல் பிலேமோன் என்பவருக்கு எழுதிய தனிப்பட்ட கடிதமாகும். இரண்டாம் வசனத்தில் ஒருவேளை அப்பியாளுக்கும், ஆர்கிப்புக்கும், பிலேமோன் வீட்டில் கூடுகிற சபைக்கும் எழுதப்பட்டதாக நாம் வாசித்தாலும், அப்புத்தகத்தை கூர்ந்து நோக்கும் போது அது பிலேமோனுக்கு எழுதப்பட்ட தனிப்பட்ட கடிதம் என்பது புரியும். பிலேமோன் யார் என்று பார்ப்போமானால் இவர் எபேசு பட்டணத்திற்கு 100 மைல் கிழக்காக உள்ள கொலோசே பட்டணத்தைச் சேர்ந்த செல்வந்தவனாக இருந்தார். பவுல் எபேசு பட்டணத்தில் தங்கியிருந்த காலத்தில் (கி.பி.53-55) இயேசுவை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் பவுல் இக்கடிதத்தை ரோமபுரியில் சிறையிருந்த காலத்தில் (கி.பி.60) எழுதினார்.

எழுதப்பட்ட சூழ்நிலையும், நோக்கமும்

ஒநேசிமு எனப்பட்ட அடிமை தன்னுடைய எஜமானாகிய பிலேமோனிடமிருந்து தப்பித்து ரோமாபுரி வந்தடைகிறான். இவன் பவுலை எவ்வாறு எப்படி சந்தித்தான் என்பது தெளிவாக இல்லை. ஒருவேளை தன்னுடைய ஊரானாகிய எப்பாபிரா மூலமாக சந்தித்திருக்ககூடும். ஓநேசிமு பவுல் மூலமாக இயேசுவை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பி, பவுலுக்கு மிக உதவியாக இருக்கின்றான்(13,14). பவுல் அவனை முறையாகாது தனக்கு உதவியாக வைத்திருக்க விரும்பினாலும் என அது உணர்ந்து ஒநேசிமுவை கொலோசேயிலுள்ள பிலேமோனிடத்திற்கு அனுப்பி வைக்கிறான். அவனிடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் குறித்தும், அவனை ஏற்றுக்கொள்ளும் படியும், பிலேமோனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். தப்பிப்போன அடிமையை எஜமானிடம் ஒப்படைக்க எழுதப்பட்ட கடிதமே இப்புத்தகமாகும்.

எபிரெயர் HEBREWS

இக்கடிதத்தின் ஆசிரியர் தன் பெயரை வெளிப்படையாக குறிப்பிடவில்லை. கி.பி. 400 முதல் 1600 வரை இக்கடிதம் பவுல் எழுதிய கடிதமாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் இக்கருத்துக்கு இப்புத்தகத்தில் ஆதாரமோ, முதலாம் இரண்டாம் நூற்றாண்டு திருச்சபைத்தலைவர்களின் ஒப்புதலோ காணப்படவில்லை. திருச்சபை மறுமலர்ச்சி காலத்தில் பவுல் எழுதியிருக்க முடியாது என்ற கருத்து மேலோங்கியிருந்தது. இதற்கு முக்கிய காரணம் எபிரேயர் கடிதத்திற்கும் மற்ற பவுலின் கடிதங்களுக்கும் காணப்படும் போதனை வேறுபாடாகும். இக்கடிதத்தின் மொழிநடையிலும் இறையியலிலும் வேறுபாடுகள் அதிகம் காணப்படுகிறது. பவுல் எழுதிய கடிதங்களில் காணப்படும் பொதுவான வடிவமைப்பு இதில் காணப்படவில்லை. “இரட்சிப்பு முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலேயே நமக்கு உறுதியாக்கப்பட்டது” என்ற வசனத்திலிருந்து இந்நிருபத்தின் ஆசிரியர் இயேசுவோடு கூட இருந்தவராகவோ அல்லது அவர் மூலமாய் நேரடியாக சிறப்பு வெளிப்பாட்டை பெற்றவராகவோ இருக்க முடியாது என தெளிவாக உணரமுடிகிறது. எனவே இதன் ஆசிரியர் பவுலாக இருக்க முடியாது.

இக்கடிதத்தை பர்னபா எழுதியிருக்கலாம் யூகிக்கப்படுகிறது. இதற்கான என முதலாவது சான்று கி.பி. 200ல் வாழ்ந்த டெர்டூலியன் (வுநசவரடயை)ெஎன்னும் சபை மூப்பர் தன் புத்தகத்திலே இக்கடிதத்தை பர்னபா எழுதியதாக குறிப்பிட்டுள்ளார். இக்கடிதத்தை வாசிக்கும் போது, இக்கடிதத்தின் ஆசிரியர் அப்போஸ்தலர் திருச்சபையிலே அதிகாரம் பெற்றவராகவும். பழைய ஏற்பாட்டை நன்கு அறிந்தவராகவும் நாம் காண்கின்றோம். இக்குணநலன்களை பர்னபா பூர்த்தி செய்கிறார். ஏனெனில் பர்னபா யூத குலத்தில் பிறந்த லேவியன் ஆவார். (அப்போஸ்தலர் 4:36) அவர் பவுலின் மிகச்சிறந்த நண்பராகவும், பவுலோடு கூட ஊழியத்திற்காக பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு பிரித்தெடுக்கப்பட்ட நற்செய்திப் பணியாளரும் ஆவார் (அப்போஸ்தலர் 13:1-4) 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்டின் லூத்தர் இக்கடிதத்தை எழுதியவர் அப்பொல்லோவாக இருக்கக்கூடும் எனக்கருதுகின்றார். அப்போலோ யூதனும், வேதாகமங்களில் வல்லவனாகவும் இருந்தார் (அப்போஸ்தலர் 18:24). இவர் பவுலோடு கூட கொரிந்து திருச்சபையிலே ஊழியம் செய்தார் (1கொரி1:12).

காலம்

இக்கடிதம் எருசலேம் தேவாலயம் இடிக்கப்படுவதற்கு அதாவது கி.பி. 70க்கு முன்பாக எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் பலிகளும், யூத சடங்குகாச்சாரங்களும் இப்புத்தகத்தில் அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேவாலயம் அழிக்கப்பட்ட பின்பு இவை அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது. இக்கடிதம் தேவாலயம் இடிக்கப்பட்டபின் எழுதப்பட்டிருந்தால் இடிக்கப்பட்ட சம்பவங்கள் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் இப்புத்தகத்தின் ஆசிரியர் ஆசாரிய ஊழியத்தின் காரியங்களை நிகழ்காலத்திலே கூறியுள்ளார். (எபி. 5:1-3, 7:23,27,8:3-5)

யாருக்காக எழுதப்பட்டது?

இக்கடிதம் முக்கியமாக யூத மார்க்கத்திலிருந்து கிறிஸ்தவ மார்க்கத்திற்கு வந்திருந்த, அதே நேரத்தில் யூதர்களுக்காக எழுதப்பட்டது. பழைய ஏற்பாட்டை நன்கு அறிந்திருந்த முதலாம் நூற்றாண்டில் பிற்பகுதியில் யூதமார்க்கத்தினர் போதித்து வந்த கள்ள போதனைகளுக்கு (கலா. 2:14) எதிராகவும் எழுதப்பட்டது. மேலும் மனந்திரும்பிய யூதர்கள் மறுபடியும் யூதமார்க்கத்திற்கு திரும்பும் அபாயம் ஏற்பட்டதன் நிமித்தமாகவும், அவர்களுக்கு சரியான் போதனையை எடுத்துரைக்கும் படியாக இக்கடிதம் எழுதப்பட்டது. அப்போஸ்தலர் 6:7 ல் குறிப்பிட்டுள்ள விசுவாசத்திற்கு கீழ்படிந்து, மனந்திரும்பிய ஆசாரியர்களுக்காகவும் எழுதப்பட்டிருக்கலாம்.

முக்கிய கருத்து

இயேசு கிறிஸ்து. தேவனுடைய கிருபையை வெளிப்படுத்தவும், மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் பாலமாக அமையவும் போதுமானவர், உன்னதமானவர் என்பதை எடுத்துக்காட்டுவது இக்கடிதத்தின் முக்கிய கருத்து. எபிரேயர் 1:1 ல் தேவனின் முழமையான மற்றும் முதலான வெளிப்பாடு இயேசு கிறிஸ்து என்பது எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவை நடுவராகக்கொண்ட புதிய உடன்படிக்கையின் மூலமாக பழைய ஏற்பாட்டு தீர்க்க தரிசனங்களும் வாக்குத்தத்தங்களும் நிறைவேறுகிறது என்பதை இக்கடிதம் எடுத்துக்காட்டுகிறது.

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page