யாக்கோபு – வெளிப்படுத்தின விசேஷம் சுருக்கம் 

யாக்கோபு – வெளிப்படுத்தின விசேஷம் சுருக்கம் 

யாக்கோபு James

ஆசிரியர்

இக்கடிதத்தை எழுதிய ஆசிரியர் யாக்கோபு என்பது முதல் வசனத்திலேயே நமக்கு தெளிவாகத் தெரிகிறது. இவர் இயேசு கிறிஸ்துவின் சகோதரராக இருக்கலாம். இவர் அப்போஸ்தலர் 15ம் அதிகாரத்திலே எருசலேமில் கூடிய ஆலோசனை சங்கத்தின் தலைவராக காட்டப்பட்டுள்ளார். புதிய ஏற்பாட்டிலே யாக்கோபு என்னும் பெயருள்ள நான்கு பேரை நாம் காண்கிறோம். இயேசுவின் சீடராய் இருந்த செபதேயுவின் குமாரன் யாக்கோபு. இவர் கி.பி.44ல் சிரைச்சேதம் பண்ணப்பட்டார் (அப்போஸ்தலர் 12:2). மற்ற இரண்டு யாக்கோபும் ஆதித்திருச்சபையில் முக்கியத்துவம் பெறவில்லை. நான்காவது இயேசுவின் சகோரராகிய யாக்கோபு, இவர் முதலாவது இயேசுகிறிஸ்துவை உயிர்த்தெழுதலுக்குப் பின்பாக ஏற்றுக்கொண்டார். விசுவாசியாமல் அவரின்

காலம்

இக்கடிதம் கி.பி. 50க்கு காரணம் முன்பாக எழுதப்பட்டிருக்கலாம் எனக்கருதப்படுகிறது.

1.யூதப்பாரம்பரியம் மிக்கதாக இக்கடிதம் காணப்படுவதால் திருச்சபையில் யூதர்கள் மட்டுமே அங்கத்தினர்களாக இருந்த காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம். புற ஜாதியார் விருத்த சேதனமடைய வேண்டும் என்பது பற்றி கருத்து

2.குறிப்பிடப்படாததால் இது எருசலேம் ஆலோசனைக்கூட்டம் கூட்டப்படுவதற்கு முன்பே (கி.பி.49) எழுதப்பட்டிருக்கவேண்டும். மேற்கூறிய காரணங்கள் சரியாக இருக்குமென்றால் புதிய ஏற்பாட்டில் முதலாவதாக எழுதப்பட்ட நூல் யாக்கோபு ஆகும்.

யாருக்காக எழுதப்பட்டது

யாக்கோபு 1:1ல் இருந்து யாருக்காக என்பது தெளிவாக தெரிகிறது.

சிதறியிருக்கிற 12 கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது”

12 கோத்திரங்கள் என அவர் குறிப்பிடப்பட்டிருப்பது யூத கிறிஸ்தவர்களுக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது (2:1,5:7-8). இவர்கள் எருசலேம் திருச்சபையின் அங்கத்தினர்கள், ஸ்தேவானின் மரணத்திற்குப்பின் (அப்போஸ்தலர் 8:1,11:19) பெனிக்கே நாடு, சீப்புரு தீவு, அந்தியோகியா, பட்டணங்களுக்கு சிதறிச்சென்றவர்களாக இருக்கலாம். இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துன்பம் (5:7-11) யூதர்களால் கிறிஸ்தவர்களுக்கு வந்த துன்பமாக இருக்க முடியும். இதை பொறுமையோடு தாங்கும்படியாக யாக்கோபு இவர்களுக்கு போதிக்கின்றார்.

இக்கடிதத்தின் சிறப்பம்சம்

நற்கிரியைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விசுவாசத்துடன் கூடிய கிரியையே சிறந்தது என்னும் கிறிஸ்தவ வாழ்க்கை தத்துவத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது.

1 பேதுரு 1 Peter

எழுதியவர்

இக்கடிதத்தை எழுதியவர் தன்னை சீமோன் பேதுரு என தெளிவாக காட்டுகிறார். மேலும் இவர் இயேசுவின் பாடுகளுக்குச்சாட்சியாக இருந்தார். 1 பேதுரு 5:1ல் கூறுகின்றார் இக்கடிதத்தை சில்வானு (1பேதுரு 5:12) துணையுடன் எழுதியிருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

காலம்

1 பேதுரு 4:14-16, 5:8,9ல் கூறப்பட்டுள்ள உபத்திரவங்கள் நீரோ எனப்பட்ட ரோமப்பேரரசின் காலத்தல் (கி.பி. 54-68) ஆரம்பமானது. எனவே இக்காலத்தில் அல்லது அதற்கு பின்பு எழுதப்பட்டிருக்கவேண்டும். மேலும் பவுலினுடைய சிறைச்சாலைக் கடிதங்களான எபேசியர். கொலோசேயர் பேதுருவுக்கு அறிமுகமாயிருக்கலாம்.

இக்கூற்று சரியானால் எபேசியர் கொலோசேயர் எழுதப்பட்ட காலத்திற்கும் (கி.பி.60) அதே வேளையில் கி.பி. 67-68ல் பேதுரு இரத்த சாட்சியாக மரித்த இந்த இடைப்பட்ட காலத்தில் இக்கடிதம் எழுதப்பட்டிருக்வேண்டும். பேதுரு இக்கடிதத்தை பாபிலோனிலிருந்து எழுதுவதாக கூறுகிறார். (1 பேதுரு 5:13). பாபிலோன் என்று கூறும்பொழுது மெசப்படோமியாவிலுள்ள பாபிலோன் அல்லது ரேமபுரி என்னும் இரண்டு கருத்துக்கள் உள்ளது. மெசப்படோமியாவிலுள்ள பாபிலோனுக்கு பேதுரு சென்றதாக நமக்கு குறிப்புக்கள் ஏதுமில்லை. என்பது இது ரோமபுரியாக இருக்கவேண்டும். ஏனெனில், ரோபுரியை மறைமுகமாக அழைப்பது வழக்கதிலிருந்தது (வெளி 17:9,10). மேலும், பேதுரு தன்னுடைய கடைசிகால வாழ்க்கையை ரோமாபுரியில் செலவிட்டார் என்பது வரலாற்று உண்மை.

எழுதப்பட்ட நோக்கம்

கிறிஸ்தவர்களின் வாழ்க்கையையும் கடமைகளையும் விளக்குகின்ற ஒரு கடிதமாக எழுதப்பட்டுள்ளது.

உபத்திரவ காலத்தில் கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்தை விட்டுவிடாதபடி தரித்திருக்க அவர்களை ஊக்கப்படுத்தவும் எழுதப்பட்டுள்ளது.தெளிவான நோக்கம் ஒன்று இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

“உங்களுக்குப்புத்திசொல்லும்படிக்கும் நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதான் என்று சாட்சியிடும்படிக்கும்……..” (1 பேதுரு 5:12)

2 பேதுரு 2 Peter

எழுதியவர்

இக்கடிதத்தை எழுதியவர் தன்னை சீமோன் பேதுரு என தெளிவாக காட்டுகிறார். மேலும் இவர் இயேசுவின் பாடுகளுக்குச்சாட்சியாக இருந்தார். 1 பேதுரு 5:1ல் கூறுகின்றார் இக்கடிதத்தை சில்வானு (1பேதுரு 5:12) துணையுடன் எழுதியிருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

காலம்

1 பேதுரு 4:14-16, 5:8,9ல் கூறப்பட்டுள்ள உபத்திரவங்கள் நீரோ எனப்பட்ட ரோமப்பேரரசின் காலத்தல் (கி.பி. 54-68) ஆரம்பமானது. எனவே இக்காலத்தில் அல்லது அதற்கு பின்பு எழுதப்பட்டிருக்கவேண்டும். மேலும் பவுலினுடைய சிறைச்சாலைக் கடிதங்களான எபேசியர், கொலோசேயர் பேதுருவுக்கு இக்கூற்று சரியானால் எபேசியர் கொலோசேயர் எழுதப்பட்ட காலத்திற்கும் (கி.பி.60) அதே வேளையில் கி.பி. 67-68ல் பேதுரு இரத்த சாட்சியாக மரித்த இந்த இடைப்பட்ட காலத்தில் இக்கடிதம் எழுதப்பட்டிருக்வேண்டும். பேதுரு இக்கடிதத்தை பாபிலோனிலிருந்து எழுதுவதாக கூறுகிறார். (1 பேதுரு 5:13). பாபிலோன் என்று கூறும்பொழுது மெசப்படோமியாவிலுள்ள பாபிலோன் அல்லது ரேமபுரி என்னும் இரண்டு கருத்துக்கள் உள்ளது. மெசப்படோமியாவிலுள்ள பாபிலோனுக்கு பேதுரு சென்றதாக நமக்கு குறிப்புகள் ஏதுமில்லை. என்பது இது ரோமபுரியாக இருக்கவேண்டும். ஏனெனில், ரோபுரியை மறைமுகமாக அழைப்பது வழக்கதிலிருந்தது (வெளி 17:9,10). மேலும், பேதுரு தன்னுடைய கடைசிகால வாழ்க்கையை ரோமாபுரியில் செலவிட்டார் என்பது வரலாற்று உண்மை.

எழுதப்பட்ட நோக்கம்

பேதுரு தன்னுடைய முதலாவது கடிதத்தில் சபைக்கு வெளிப்புறம் இருந்து வருகின்ற உபத்திரவங்களை எதிர்கொள்ள சபைக்கு ஊக்கமளிக்கிறார். தனது உ இரண்டாது கடிதத்தில் 3 முக்கிய நோக்கங்களை குறிப்பிடுகிறார்.

  1. கிறிஸ்துவ திருச்சபை வளர்ச்சியடைய ஊக்கப்படுத்த (அதி1).

2.கள்ளப்போதகர்களுக்கு எதிராக போராட (அதி 2). 

3.கிறிஸ்துவின் வருகையின் நிச்சயத்தை வலியுறுத்தவும் அதற்காக விழித்திருக்க சபையை ஊக்கப்படுத்தவும் (அதி 3) இக்கடிதத்தை எழுதினார்.

1 யோவான் I JOHN

(1,2,3 யோவான்) இம் மூன்று கடிதங்களை எழுதியவர் தன்னை மூப்பர் என வெளிப்படுத்தினாலும் இது இயேசுவின் சீடராகிய யோவான் என்பவரின் தெளிவான கூற்றாகும். இதற்கு காரணம் யோவான் நற்செய்தி நூல், வெளிப்பத்தின விசேஷம் ஆகியவற்றின் மொழிநடையும் இக்கடிதத்தின் மொழிநடையும் ஒன்றாக காணப்படுகிறது.

1யோவான் 1:14 வரையுள்ள வசனங்களிலிருந்து ஆசிரியர் இயேசுவோடு இருந்தவர் என்பதை நாம் தெளிவாக உணர முடிகிறது.

நாஸ்திகத்தின் (Gnosticism) ஆரம்பகால தத்துவம் இக்கடிதத்தில் பிரதிபலிப்பதாலும், யோவானுடைய வயோதிக தன்மை பிரதிபலிப்பதாலும் ஆதித்திருச்சபை எழுத்தாளர்களின் கூற்றுப்படியும் இக்கடிதம் கி.பி. 85க்கும் 95க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கவேண்டும்.

யாருக்காக எழுதப்பட்டது?

1யோவான் 2:12-14, 19,3:1, 5:13 ஆகிய வசனங்களை நோக்கும் போது, இது விசுவாசிகளுக்கு எழுதப்பட்டிருக்க வேண்டும், எனினும் கடிதத்தை பெறுபவர் யார் என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை. எனவே இது அனைவருக்கும் பொதுவாக எழுதப்படிருக்கலாம். யோவான் கி.பி. 70-100ல் எபேசு பட்டணத்தை (தற்போதைய துருக்கி) மையமாகக்கொண்டு அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேவ பணியாற்றினார் என்று வரலாற்று குறிப்புகள் கூறுகின்றது. எனவே எபேசு பட்டணத்தை சுற்றியுள்ள திருச்சபைகளுக்கு இக்கடிதத்தை எழுதியிருக்வேண்டும்.

எழுதப்பட்ட சூழ்நிலையும் நோக்கமும்

நாஸ்திகத்தின் (Gnosticism) ஆரம்ப கட்ட தத்துவங்கள் பரவி வந்த காலம் அது. கண்ணுக்கு புலப்படும் பொருள் அனைத்தும் தீமையானது, ஆவி மட்டுமே நல்லது (Spirit is good, Matter is evil) என்ற தத்துவம் கிறிஸ்தவ மக்களிடம் வெகுவாக காணப்பட்டது. எனவே இத்தவறான தத்துவத்தை விட்டு விடக்கோரி இக்கடிதம் எழுதப்பட்டது. அதே நேரத்தில் தன் கண்ணால் கண்ட பூமியில் மானுட அவதாரம் எடுத்த இயேசுவை விசுவாசிக்கவும், சந்தோஷம் நிறைவாயிருக்கவும் (1:4) எழுதினார். விசுவாசிகளுக்கு நித்திய ஜீவன் உண்டென்று அறிவிக்கவும் (5:13) இக்கடிதத்தை எழுதினார்.

2 யோவான் 2 JOHN

இம் மூன்று கடிதங்களை எழுதியவர் தன்னை மூப்பர் என வெளிப்படுத்தினாலும் இது இயேசுவின் சீடராகிய யோவான் என்பவரின் தெளிவான கூற்றாகும். இதற்கு காரணம் யோவான் நற்செய்தி நூல், வெளிப்பத்தின விசேஷம் ஆகியவற்றின் மொழிநடையும் இக்கடிதத்தின் மொழிநடையும் ஒன்றாக காணப்படுகிறது.

1 யோவான் 1:1-4 வரையுள்ள வசனங்களிலிருந்து ஆசிரியர் இயேசுவோடு இருந்தவர் என்பதை நாம் தெளிவாக உணர முடிகிறது.

காலம்

நாஸ்திகத்தின் (Gnosticism) ஆரம்பகால தத்துவம் இக்கடிதத்தில் பிரதிபலிப்பதாலும், யோவானுடைய வயோதிக தன்மை பிரதிபலிப்பதாலும் ஆதித்திருச்சபை எழுத்தாளர்களின் கூற்றுப்படியும் இக்கடிதம் கி.பி. 85 க்கும் 95க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கவேண்டும்.

யாருக்கு எழுதப்பட்டது?

நற்செய்திப்பணியாளர்களை உபசரிக்கிற மக்கள் குறிப்பாக தாய்மார்களுக்காக இக்கடிதம் எழுதப்பட்டது. அம்மாள் என்பது ஒருமையில் அல்லாமல் பன்மையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எழுதப்பட்ட சூழ்நிலையும் நோக்கமும்

முதல் இரண்டு நூற்றாண்டுகளில் இயேசுகிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி, நற்செய்திப் பணியாளர்கள் மூலமாக ஒவ்வொரு ஊர்களுக்கும் எடுத்துச்செல்லப்பட்டது. விசுவாசிகள் குறிப்பாக தாய்மார்கள் இப்பணியாளர்கள் தங்கள் ஊர்களுக்கு வரும்போது இவர்களை ஏற்று, உபசரித்து, பிரயாணத்திற்கு தேவையான பொருட்களை கொடுத்தனுப்புவது வழக்கமாக இருந்தது.

இப்பொழுது நாஸ்திக தத்துவத்தை (Gnosticism) பரப்புவதற்காக அதைசார்ந்த மக்கள் இதைபோல பழக்கத்தை ஏற்படுத்தினர். இவர்கள் திருச்சபையின் அங்கத்தினர்களாக இருத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யோவான், தாய்மார்கள் பகுத்தறிந்து அதாவது வந்திருப்பவர் நற்செய்தியாளரா அல்லது கள்ளப்போதகரா என்பதை அறிந்து அவர்களை உபசரிக்கவேண்டும் என எச்சரிக்கிறார். தெரியாமலும் கள்ளப்போதகர்களை உபசரிக்கக்கூடாது என்பதற்காகவே இக்கடிதம் எழுதப்பட்டது.

3 யோவான் 3 JOHN

இம் மூன்று கடிதங்களை எழுதியவர் தன்னை மூப்பர் என வெளிப்படுத்தினாலும் இது இயேசுவின் சீடராகிய யோவான் என்பவரின் தெளிவான கூற்றாகும். இதற்கு காரணம் யோவான் நற்செய்தி நூல், வெளிப்பத்தின விசேஷம் ஆகியவற்றின் மொழிநடையும் இக்கடிதத்தின் மொழிநடையும் ஒன்றாக காணப்படுகிறது.

1 யோவான் 1:1-4 வரையுள்ள வசனங்களிலிருந்து ஆசிரியர் இயேசுவோடு இருந்தவர் என்பதை நாம் தெளிவாக உணர முடிகிறது.

காலம்

நாஸ்திகத்தின் (Gnosticism) ஆரம்பகால தத்துவம் இக்கடிதத்தில் பிரதிபலிப்பதாலும், யோவானுடைய வயோதிக தன்மை பிரதிபலிப்பதாலும் ஆதித்திருச்சபை எழுத்தாளர்களின் கூற்றுப்படியும் இக்கடிதம் கி.பி.85 க்கும் 95 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கவேண்டும்.

யாருக்கு எழுதப்பட்டது?

எபேசு பகுதியில் வாழ்ந்து வந்த திருச்சபை மூப்பராகிய காயு என்பவருக்கு யோவான் எழுதினார்.

எழுதப்பட்ட சூழ்நிலையும் நோக்கமும்

யோவான் சிறிய ஆசியா பகுதியில் உள்ள எபேசு பட்டணத்திற்கு அருகிலுள்ள ஊர்களுக்கு வேதத்தைப்போதிக்கும் பொருட்டு வேத ஆசிரியர்களை அனுப்புவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு ஒரு பகுதிக்கு தன்னுடைய ஊழியர்களை (தேமேத்திரியுவும் ஒருவர்) அனுப்பியபொழுது தியோத்திரேப்பு என்னும் சபை மூப்பர் இவர்களை ஏற்றுக்கொள்ளாமல் அனுப்பி விட்டார். மட்டுமல்லாமல் இவர்களை ஏற்று உபசரித்த மக்களை சபையிலிருந்து தள்ளிவைத்துவிட்டார். எனவே யோவான் காயூ என்னும் சபை மூப்பருக்கு தன்னுடைய ஊழியர்களை ஏற்றக்கொண்டு உபசரிக்க கட்டளையிடும் பொருட்டாக இக்கடிதம் எழுதப்பட்டது.

யூதா Jude

ஆசிரியர்

ஆசிரியர் தன்னை யூதா என்று முதல் வசனத்தில் குறிப்பிடுகிறார். யூதா என்ற பெயரில் நாம் புதிய ஏற்பாட்டில் இருவரை காண்கிறோம். ஒருவர் இயேசுவின் சீடராகிய யூதா (லூக்கா 6:16, அப்போஸ்தலர் 1:13), மற்றவர் இயேசுவின் சகோதரனாகிய யூதா (மத் 13:55, மாற்கு 6:3) ஆசிரியர் கூறுவதை வைத்து, நாம் இவர் இயேசுவின் சகோதரனாகிய யூதா என்று தெளிவாக அறிகிறோம். ஏனெனில் இவர் தன்னை அப்போஸ்தலரில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறார். (யூதா 17ம. வசனம்) மேலும் தன்னை யாக்கோபின் சகோதரனாக அறிமுகப்படுத்துகிறார் (யூதா 1ம் வசனம்) இது மட்டுமல்லாமல் 2ம் 3ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மூப்பர்களும் தலைவர்களும் குறிப்பாக திருச்சபையின் தலைவர் (Clement of Rome) (கி.பி.96), டெர்டூலியன் (Tertulian) கி.பி.150 இக்கருத்தை வழிமொழிந்துள்ளார். 

காலம்

யூதா எழுதப்பட்ட காலத்தைக் குறித்து இரண்டு வகையான கருத்துக்கள் நிலவுகின்றன

  • 1) கி.பி. 65.
  • 2) கி.பி.80.

யாருக்காக எழுதப்பட்டது?

முதலாம் வசனத்தை நோக்கும்பெழுது இது குறிப்பிட் திருச்சபைக்கோ அல்லது ஒரு குறிப்பிட வகுப்பினர்ககோ எழுதப்படாமல் பொதுவாக கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்டது என்பது தெளிவாக புரிகிறது. இது அக்காலத்தில் வாழ்ந்த யூத கிறிஸ்தவர்களுக்கோ அல்லது புறஜாதி கிறிஸ்தவர்களுக்காகவா அல்லது இருவருக்குமா என்று தெளிவாக குறிப்பிட இயலாது. இதன் சாரம்சத்தைக் குறிப்பாக 4 முதல் 18 வரையுள்ள வசனங்கள் நோக்கும்பொழுது இது 2பேதுரு இரண்டாம் அதிகாரத்திற்கு மிகவும் ஒத்துக்காணப்படுவதால் இரண்டும் ஒரே கூட்ட மக்களுக்கு எழுதப்பட்டதாக இருக்கலாம்.

எழுதப்பட்ட சூழ்நிலையும் நோக்கமும்

யூதா தன்னுடைய நிருபத்திலே இரட்சிப்பைப்பற்றி வாசிப்பவர்களுக்கு தெளிவாக எடுத்துகூற விரும்பி இருப்பினும், அக்காலத்தில் உள்ள பொதுவான எண்ணத்திற்கும், கள்ளப்போதனைகளுக்கும் எதிராக இக்கடிதத்தை வரைகிறார். இக்கள்ளப்போதனை என்னவெனில், ஒரு மனிதன் இரட்சிக்கப்படும் போது தேவனுடைய கிருபையை பெறுகிறான். அவ்வாறு கிருபையைப்பெற்ற மனிதன் பாவம் செய்யினும் தேவனுடைய கிருபை மேலோங்கியிருப்பதால் அது பாவமாக கருதப்படுவதில்லை. இப்படிப்பட்ட தவறான போதனைகளுக்கு எதிராக இந்நிருபத்தை எழுதினார்.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation

முதலாம் நூற்றாண்டில் இறுதியில் சிறிய ஆசியாவிலிருந்து இப்புத்தகம் எழுதப்பட்டது. இப்புத்தகம் இன்றை தினம் வரை திகைக்க வைக்கும் ஒரு நூலாக இருந்து வருகிறது. வேதாகமத்தில் உள்ள மற்ற எல்லா நூல்களையும் விட இது சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. இந்நூலின் மொழிநடை இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். எனவே வெளிப்படுத்தின விஷேம் கூர்ந்து ஆராய்ச்சி செய்யப்படவேண்டும். யோவானின் இம்மாறுபட்ட மொழிநடையை புரிந்துகொள்ளும் வரை இந்நூலை சரியாக புரிந்துகொள்வது மிகக்கடினமாகும். வியாக்கியானத்திற்கும் இது வழிவகுக்கும். தவறான

வேதத்தில் இதைப்போன்ற ஒரு நூல் இல்லை என்ற கருத்து நிலவினாலும் எசேக்கியேல் தீர்க்கதரிசன நூலின் ஒருசில பகுதிகள், சகரியா மற்றும் தானியேலும் இதைப்போன்ற நூலாகவே உள்ளது.

கி.மு. 200 முதல் கி.பி.100 வரை யூத பாரம்ரரியத்தில் பல நூல்கள் எழுதப்பட்டுள்ளது. இவற்றுள் கடைசியாக வெளியான நூல் வெளிப்படுத்தின விசேஷம். மற்ற புத்தகங்கள் முக்கியமாக கருதப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டன. இவை புதைபொருள் ஆராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றைப்பற்றி ஆராயும் பொழுது யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட விசேஷம் மிக சுலபமாக புரிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நூலை ஆராயும் முன்பு ஒரு முக்கியமான கருத்தை மனதில் கொள்ளவேண்டும். வெளிப்படுத்தின விசேஷம் நமக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அதைவிட இந்நூல் யாருக்கு எழுதப்பட்டதோ அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. அப்படியில்லையெனில் இந்நூல் புதிய ஏற்பாட்டில் இடம் பெற்றிருக்காது. அதே நேரத்தில் யோவான் தான் எழுதிய நூல் அனைவருக்கும் புரிய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எழுதினாரே தவிர புதிர்கள் அடங்கிய புரியாத நூலாக இருக்க விரும்பவில்லை.

எழுதியவர்

இந்நூலை எழுதியவர் யோவான் என்பதை நான்கு இடங்களில் குறிப்பிடுகிறார். இவர் ஒரு யூதர் ஏனெனில் பழைய ஏற்பாடு நன்கு தெரிந்தவர். சிறிய ஆசியாவிலே உள்ள திருச்சபைத்தலைவர் மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களை நன்கு அறிந்தவர். குறிப்பாக இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு திருச்சபைகளுக்கும் நன்கு அறிமுகமானவர். அப்பகுதி மக்களோடு உபத்திரவத்திலே பங்குகொண்டவர். இவர் நற்செய்தி நூல் மற்றும் 3 கடிதங்களை எழுதிய இயேசுவின் சீடராகிய யோவானாகவே இருக்கவேண்டும்.

காலம்

இந்நூல் கிறிஸ்தவர்கள் உபத்திரவ காலத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்தபொழுது எழுதப்படடிருக்கலாம். ரோமபேரரசின் இரு கால கட்டங்களில் கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவம் காணப்பட்டது.

1)நீரோ (கி.பி.54-68) மன்னன் காலத்தில்

2) டோமிடியன் (81-96)ன் கடைசிகால ஆட்சியில் வேத ஆராய்சியாளர்கள் கி.பி.95ல் எழுதப்பட்டிருக்கலாம் என கருத்து தெரிவிக்கின்றனர். 

எழுதப்பட்ட சூழ்நிலை

பேரரசை தேவனாக வழிபடும் நிலை மறுமுறையாக ரோமப்பேரரசில் டோமிட்டியன் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கிறிஸ்தவர்கள் சீசரை (பேரரசரை) வழிபடாமல் கிறிஸ்துவை வழிபட்டதன் நிமித்தம் பகை ஏற்பட்டது. பேரரசின் கட்டளைக்கு இணங்காத மக்கள் துன்பப்படுத்தப்பட்டனர். சிமிர்னா சபை துன்ப காலத்திற்கு எதிராக எச்சரிக்கப்பட்டது (2:10). பில்தெல்பியா சபை சோதனை காலத்திற்கு தப்பும்படியாக அறிவுறுத்தப்பட்டது (3:10). அந்திப்பா என்பவன் கொல்லப்பட்டான் (2:13)மற்றும் அநேகர் உண்டு (6:9). இந்நூலை எழுதிய யோவான் உபத்திரவத்திற்கு உட்பட்டு பத்மு தீவுக்கு அனுப்பப்பட்டான் (1: 9). இச்சூழ்நிலையில் திருச்சபையிலுள்ள சிலர் அவர்களோடு ஒத்துப்போக யோசனை பண்ணுகிறார்கள் (2:14,15,20)இச்சூழ்நிலையில் மிகத் துன்பகாலம் வரும்முன் அவர்களுக்கு அறிவுரை வழங்கும்படி இந்நூல் எழுதப்பட்டது.

எழுதியதன் நோக்கம்

இந்நூலை யோவான் ஏன் எழுதினார் என்ற சிறிய சந்தேகம் ஏற்படுகிறது. யோவானுக்கு கிடைத்த தரிசனம் யோவானுக்கும் அந்நூல் எழுதப்பட்ட மக்களுக்கும் அடுத்து என்ன நடக்கவிருக்கிறது (1:1) என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது மட்டும்மல்லாமல் அவர்களை எச்சரிக்கவும், வழிநடத்தவும் ஆறுதல்படுத்தவம் இந்நூல் எழுதப்பட்டது.

சீக்கரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளை தம்முடைய ஊழியக்காரருக்கு காண்பிக்கும் பொருட்டு…… (வெளி 1:1)

இவ்வசனத்தின் முதல் வார்த்தையான சீக்கிரம் என்பது மிக முக்கியமானதாகும். யோவானுக்கு கொடுக்கப்பட்ட தரிசனம் தன்னுடைய உண்மையான வெளிப்பாடு எனக்கருதுவோமானால் இங்கு குறிப்பிட்ட காரியங்கள் அந்த சூழ்நிலையில் வாழ்ந்த மக்களுக்கு உதவி செய்ய தரப்பட்டவை என்பது தெளிவாகிறது. எனவே இந்நூலின் பெரும்பாலான பகுதி நிகழ்காலத்திற்கும், குறுகிய எதிர்காலத்திற்கும் பொருத்தமானது. யோவான் குறுகிய எதிர்காலத்தில், உபத்திரவத்தை சந்திக்கும் என எதிர்பார்த்ததில் திருச்சபையானது உபத்திரவத்தின் ஊடாக நடந்து செல்ல உற்சாகப்படுத்தவும் இந்நூலை எழுதினார். தேவனுடைய கரத்தில் பாதுகாப்பாக உள்ளனர் என்பதையும் தெளிவுபடுத்துகின்றார். சுருங்கக் கூறினால், யோவானுடைய செய்தி கிறிஸ்தவ மக்களை வரப்போகிற உபத்திரவத்தை குறித்து எச்சரிக்கையாயிருக்கவும் அதை ஏற்று உற்சாகதோடு முன் செல்லும் மனநிலையை கொடுக்கவும் இந்நூலை எழுதுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *