உபவாசத்தின் அவசியம்

உபவாசத்தின் அவசியம்

 அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி. எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக்

கேட்டருளினார் (எஸ்றா 8:23)

  • கருப்பொருள் : எதற்காக உபவாசிக்க வேண்டும்?
  • தலைப்பு : உபவாசத்தின் அவசியம்
  • ஆதார வசனம் : எஸ்றா 8:23
  • துணை வசனம்: 2கொரி 11:27; அப் 14:23; 13:2

1. தேவ கோபத்தை ஆற்றுவதற்காக (உபா 9:18,19)

  • அவரது சத்தத்திற்கு கீழ்ப்படியாதபோது கோபம் கொள்கிறார் (யாத் 4:14)
  • முறுமுறுக்கும்போது தேவன் கோபம் கொள்கிறார் (எண் 11:1)
  •  இரத்தம் சிந்தப்படும்போது தேவன் கோபம் கொள்கிறார் (எசே 24:7,8)

2. தேவ சித்தம் அறிவதற்கு [அப் 13:2)

  • தேவ சித்தம் செய்யும்போது ஜெபம் கேட்கப்படுகிறது (1 யோவா 5:14)
  • எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்வதே தேவ சித்தம் (1தெச 5:18)
  • பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பது தேவ சித்தம் (1தெச 4:3)

 3. தேவனிடம் இரக்கத்தைப் பெறுவதற்கு [யாக் 4:10)

  • சத்தத்திற்கு செவிகொடுக்கும்போது இரங்குகிறார் (உபா 30:2,3)
  • உண்மையாய் விண்ணப்பம்பண்ணும்போது இரங்குகிறார் (யாக் 4:10) 
  • கூப்பிடுதலின் சத்தத்திற்கு உருக்கமாய் இரங்குகிறார் (ஏசா 30:19)

4. தேவனுக்குமுன் தாழ்த்துவதற்கு (எபி 13:17)

  •  நம்முடைய இருதயத்தைத் தாழ்த்த வேண்டும் (லேவி 26:41)
  •  ஆகாப் தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தினான் (1இரா 21:29)
  • இஸ்ரவேலின் பிரபுக்கள் தங்களைத் தாழ்த்தினார்கள் (2நாளா 12:6,7)

5. தேவ வல்லமையைப் பெற்றுக்கொள்வதற்கு (மாற் 9:29] 

  • தரிசனத்தை தேவனிடமிருந்து பெற வேண்டும் (அப் 9:16) 
  • தரிசனத்திற்கு கீழ்ப்படிய வேண்டும் (அப் 26:19)
  • தரிசனத்தை நிறைவேற்ற வேண்டும் (2தீமோ 4:7)

6. சத்துருக்களை மேற்கொள்வதற்கு (2நாளா 20:2-3) 

  • யோசபாத் ராஜா மோவாப் புத்திரரை மேற்கொள்ள (2நாளா 20:1)
  •  எஸ்தர் ஆமானின் சதிகளை முறியடிப்பதற்கு (எஸ்தர் 4:16)
  • எஸ்றா சத்துருக்களை கர்த்தர் விலக்குவதற்காக (எஸ்றா 8:22)

7.செவ்வையான வழியைத் தேடுவதற்கு (எஸ்றா 8:21)

  • உதடுகளிலிருந்து புறப்படுவது செவ்வையாயிருக்க வேண்டும் (எரே 17:16)
  • கண்ணிமைகள் செவ்வையானதைப் பார்க்க வேண்டும் (நீதி 4:25)
  • கர்த்தர் கோணலானதை செவ்வையாக்குகிறார் (ஏசா 45:2)

அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்து கிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன் (எஸ்றா 8:21)

அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான் (2நாளா 20:3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *