You are currently viewing வேதாகம நாட்டின் வாழ்க்கை முறைகள் 1.குடியிருப்புகள்

வேதாகம நாட்டின் வாழ்க்கை முறைகள் 1.குடியிருப்புகள்

வேதாகம நாட்டின் வாழ்க்கை முறைகள் 1.குடியிருப்புகள்

அ. கூடாரங்கள்

ஆதாளின் மகன் யாபால், கூடாரங்களில் குடியிருந்தவர்களின் ஆதித் தகப்பன் (ஆதி. 4:20). நோவா, திராட்சை ரசம் குடித்து வெறித்து, தன் கூடாரத்திலே ஆடை விலகிப் படுத்திருந்தான் (ஆதி.9:21) ஆபிரகாம் வெயில் நேரத்தில், கூடார வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தான் (ஆதி. 18:1).

ஆதிகாலத்திலிருந்து, கூடாரமே மக்களின் குடியிருப்பாக இருந்தது. ஆபிரகாமின் மகன் ஈசாக்கு, கூடாரங்களில் குடியிருந்தான். ஈசாக்கு அங்கிருந்து புறப்பட்டுப் போய், கேராரின் பள்ளத்தாக்கிலே, நகரத்துக்கு முன்பாக, தன் கூடாரத்தைப் போட்டு, குடியிருந்தான் (ஆதி.26:17). யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்து, நகரத்துக்கு முன்பாகக் கூடாரம் போட்டான் (ஆதி.33:18).ஆதி முன்னோர்கள் கூடாரங்களிலே குடியிருந்தார்கள். விசுவாசத்தினாலே, ஆபிரகாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே (பரதேசி) நாடோடியைப் போல், ஈசாக்கோடும், யாக்கோபோடும், கூடாரங்களிலே வாழ்ந்தான் (எபி.11:9). அவர்கள் பர்தேசிகளாய் இருந்தார்கள். நிலையான குடி யிருப்பு அவர்களுக்கு இல்லை. இஸ்ரவேல் மக்கள் 40 ஆண்டுகள், வனாந்திரத்திலே அலைந்து, திரிந்து, கூடாரங்களிலே குடியிருந் தார்கள்.

ஆடு மற்றும் ஒட்டகத்தின் உரோமத்தினால் இக்கூடாரங்களைச் செய்வார்கள்.உரோமத்தைக் கயிறுகளாக முறுக்கிப் பின்னுவார்கள். பின்னிய பகுதிகளை ஒன்றோடொன்று இணைப்பார்கள். அவை மழையில்நனைந்து, வெயிலில் காய்ந்து நீர் ஒழுகாவண்ணம் உறுதிப் படும்.

இரண்டு பகுதிகளாகக் கூடாரத்தை அமைப்பார்கள். முதலாவது புழக்கத்திற்கான பகுதி யாகும். இரண்டாவது பகுதி சமையலறையா கவும், பெண்கள் தங் கும் பகுதியாகவும் விளங்கும்.ஒரு தடி யைக் குறுக்காக வைத்து அதின்மேல் கம்பளியைத் தொங்க விட்டு இவ்விரு பகுதிகளையும் உண்டாக்கு வார்கள். இவ்வகையில் ஒரு கூடாரத்தை மூன்று அல்லது நான்கு பகுதி களாகவும் எளிதில் விரிவுபடுத்தலாம். அவர்களது பொருளாதார நிலையையும், குடும்பத்தின் எண்ணிக்கையையும் பொருத்து கூடாரம்

கூடாரத்தின் சமையலறைப் பகுதியிலே பெண்கள் இருப்பதால் வெளியாட்கள் வரும்போது அவர்களைக் காணமுடியாது. என்றாலும், முன் அறையில் பேசும் பேச்சுகளை எளிதில் கேட்கமுடியும். அந்தப்படியே தேவதூதர்களும், ஆபிரகாமும் பேசியதை சாராள் ஒட்டுக்கேட்டாள் (ஆதி.18:10-15).

சாய்ந்து அமர்வதற்கான வட்டவடிவத் திண்டுகளையும், தலையணைகளையும் மற்றும் மெத்தைகளையும் கூடாரத்தில் காணலாம். இரவு நேரங்களில் உறங்குவதற்கும் இவற்றையே பயன்படுத்துவர்.

புதிய ஏற்பாட்டுக் காலத்தில், கூடாரங்கள் செய்வது ஒரு மேன்மை யான தொழிலாகக் கருதப்பட்டது. கம்பளிப் போர்வைகள், கம்பங்கள் (தடிகள்), முளைக்குச்சிகள், கட்டுவதற்கான நார்க்கயிறு ஆகியவை செய்வதும் இத்தொழிலில் அடங்கும். பாலஸ்தீன நாட்டின் வெப்ப நிலைக்கு, கூடாரம் ஒரு பொருத்தமான உறைவிடம். கோடை காலத் தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும், தங்குவதற்கு வசதியாகவும் இருக்கும். பவுல் கொரிந்து பட்டணத்தில் இந்தக் கூடாரத் தொழிலைச் செய்தார்.

ஆ. வீடுகள்

இஸ்ரவேல் மக்கள், கானான் தேசத்திற்கு வந்து சேர்ந்தபின், குடியிருக்க வீடுகளைக் கட்டினார்கள். நாடோடிகளாக இருந்த அவர்கள் வாழ்க்கை முறை மாறி ஓர் இடத்தில் நிலையாகத் தங்க ஆரம்பித்தார்கள். விவசாயத்திலும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டார்கள். எனவே, கூடாரங்கள், வீடுகளாக மாறின.

இந்தியாவின் சிற்றூர்களுக்கு ஒப்பாகவே, பாலஸ்தீனத்திலும் சாதாரணமாக ஓர் அறை வீடுகளைக் காணமுடியும். அந்த அறையே தங்கும் அறையாகவும், சமையல் அறையாகவும், படுக்கை அறையாகவும் ஏன் கால்நடைகளின் கொட்டமாகவும் பயன்படும். ‘பாவித்” என்னும் எபிரெயச் சொல் வீடு என்பதைக் குறிக்கும். பாதுகாப்பிடம், புகலிடம், அடைக்கலம் என்பதே இச்சொல்லின் பொருளாகும். பகல் முழுவதும் வெளியில் வேலை செய்யும் மக்கள், இரவில் தங்குவதற்கு மட்டுமே வீட்டிற்கு வருவார்கள்.

இந்த அறை வீட்டில், உயரமான பகுதியாகத் திண்ணை ஒன்று இருக்கும். அவர்கள் உட்காருவது, சாப்பிடுவது, தூங்குவது எல்லாமே இந்தத் திண்ணையில் தான். சமதளமான பகுதியில் இரவில் கால்நடைகள் கட்டப்படும். வீட்டின் மூலைப் பகுதி சமையல் அறை யாகப் பயன்படுத்தப்படும். சில வீடுகளின் முன் பகுதியில், திறந்த வெளி இருக்கும். சில வீடுகளின் உள்ளேயே கிணறு இருக்கும். இந்த திறந்த வெளிப் பகுதியில் கால்நடைகள் கட்டி வைக்கப்படும்.

ஆனால், சத்திரத்தில் பல அறைகளும் சுற்றுச் சுவரும், உள்ளே காலியிடமும் இருக்கும். இந்த இடத்தில் ஒட்டகங்களும் மற்ற மிருகங் களும், அவற்றை நடத்துபவர்களும் தங்குவார்கள். கால்நடைகளின் உரிமையாளர்கள் சத்திரத்தின் உள் அறையில் தங்குவர்.

இப்படிப்பட்ட சத்திரத்தின் உள்ளே திறந்த வெளிப்பகுதியில், மரியாளும், யோசேப்பும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்குச் சத்திரத்தில் இடம் கிடைக்கவில்லை. ஒருவேளை அவர்கள் கால்நடை களைக் கட்டி வைக்கும் ஒரே அறை வீட்டில் தங்கியிருக்கலாம். மரியாள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தினாள் (லூக்.2:7)

இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்த இடத்தின் தன்மைதான் என்னே! அது மரியாளுக்கும், யோசேப்புக்கும் சவுகரியக் குறைவான இடமும், சமுதாயத்தில் தரக்குறைவான நிகழ்ச்சியாகவும் இருந்தது. மகிமையின் தேவன் நமக்காக மனிதராகப் பிறந்த இடம் எவ்வளவு தாழ்மையானது; தரித்திரமானது பாருங்கள் (1 கொரி.9:7).

பொதுவாக வீடுகள் மண்ணினாலும், மண்ணாலான செங்கல் களினாலும் கட்டப்பட்டன. செங்கற்களைச் சுடாமல், சூரிய ஒளியிலே காய வைப்பார்கள். தரையை நன்றாக அழுத்தி, சமப்படுத்தி, சிறிது வழுவழுப்பாகச் செய்வார்கள்.

i. கூரைகள் 

ஒரு சுவர் தொடங்கி மறுசுவர் வரை உத்திரங்களை அடுக்கி வைப்பார்கள். உத்திரங்களுக்கு இடையே காணப்படும் இடைவெளியை நாணல் அல்லது கோரை கொண்டு நிரப்புவார்கள். களிமண்ணையும் சிறு கற்களையும் குழைத்து அதன் மேலே பூசுவார்கள். அதற்குப் பின் சுண்ணாம்புச் சாந்து கொண்டு நன்றாக மெழுகுவார்கள். சூரிய ஒளி அதன்மேல்பட்டு வெப்பத்தினால் அங்கு வெடிப்புகள் உண்டாகும். மழைக்காலத்தில் அதன் வழியாக மழைநீர் உட்புகுந்து கூரை நன்றாக நனைந்துவிடும். இருந்தாலும் நீர் உடனே ஒழுகாது. மழைநின்று வெகுநேரம் கழித்தும் நீர் சொட்டிக்கொண்டே இருக்கும். இது சண்டைக்காரிக்கு உவமையாக நீதிமொழிகள் நூலில் சொல்லப்பட்டுள்ளது. “அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக் காரியான ஸ்திரீயும் சரி” (நீதி. 27:15). சண்டைக்காரி சண்டையைச் சட்டென்று நிறுத்தாமல் தொடர்ந்து நச்சரிப்பாள், முறுமுறுப்பாள். உண்மையான கிறிஸ்தவன் நிதானத்தை இழக்கக்கூடாது. ஒருவேளை அதை இழந்து போனால் கூடிய விரைவில் நிதானத்திற்கு வந்து விடவேண்டும். அவ்வாறின்றி தனக்கும், பிறருக்கும் தொல்லை கொடுத்து வாழ்க்கையை வெறுப்பிற்குரியதாக்கிக் கொள்ளக்கூடாது.

வீட்டின் கூரை கால்நடைத் தீவனம் வைக்குமிடமாகவும் பயன்படும். தொழுகை மற்றும் ஜெபம் செய்யுமிடமாகவும், அறிவிப்பு கள் செய்யுமிடமாகவும் அது பயன்படும். இதுவே, “நீங்கள் அறை களிலே காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின் மேல் கூறப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது (லூக். 12:3).

ii. வீட்டை அழகுபடுத்துதல் 

ஏழைகளுடைய வீடுகளில் பாய்களும், பணக்காரர்களுடைய வீடுகளில் கம்பளியும் விரிப்பதற்குப் பயன்படுத்துவார்கள். அவை பகலில் உட்காருவதற்கும் இரவில் உறங்குவதற்கும் பயன்படும். மேலும் திண்டுகளை, சாய்ந்து அமர் வதற்கும், படுத்துக்கொள்வதற்குத் தலையணையாகவும் பயன்படுத்து வார்கள். பாத்திரங்கள் பொதுவாக, களிமண்ணால் செய்யப்பட்டவை. உலோகப் பாத்திரங்களை உபயோகிப்பது அரிது.

iii. வீட்டுக்கு வெளிச்சம் (விளக்கு) 

களிமண்ணால் செய்யப்பட்ட தட்டு போன்ற அகல் விளக்கில் ஒலிவ எண்ணையை ஊற்றி, திரியைப் பற்றவைத்து விளக்கைக் குறிப்பிட்ட ஓரிடத்தில் வைப்பார்கள். ஆனால் செல்வந்தர்களின் வீடுகளில் பித்தளை விளக்கைப் பயன்படுத்து வார்கள். அது ஒரு தண்டின் மேல் வைக்கப்படும். சில தண்டுகள் அலங்காரமாய் இருக்கும். ஆசரிப்புக் கூடாரத்தில் இருந்த விளக்குத் தண்டு தங்கத்தால் ஆனது. மிகவும் வேலைப்பாடுள்ளது. விளக்குத் தண்டு இல்லாத வீடுகளில், ஒரு கூடையைத் தலைகீழாய்க் கவிழ்த் துப் போட்டு, அதன் மேல் விளக்கை வைப்பார்கள். விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடி வைக்காமல், விளக் குத் தண்டின்மேல் வைப்பார்கள். அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக் கும் வெளிச்சம் கொடுக்கும் (மத்.5:15).

விளக்கில் எண்ணெய் தீர்ந்து விட்டால், திரி கருகி, புகை வரும். அப் பொழுது திரியைத் தூண்டி விட்டுத் திரியை விரல்களால் கசக்கி, கரியை நீக்கி, பிறகு எண்ணெய் ஊற்றி, மறு படியும் பற்றவைப்பார்கள். நமது இரட்சகரின் கிருபையுள்ள செய்கை இவ்விதமாய் வர்ணிக்கப்பட்டுள்ளது. அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும் இருப்பார் (ஏசா. 42:3). அவர் உதவியற்றவர்களுக்கு உதவி செய்கிறவர். விழுந்து போனவர்களைத் தூக்கி விடுகிறவரும் அவரே. வீடுகளில் பொதுவாக இரவு முழுவதும் விளக்கு எரியும்.

வெளிச்சம் ஜீவனுக்கு (உயிருக்கு) அடையாளம். தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர். என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச் சமாக்குவார் (சங். 18:28). நான்

உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன், இரு ளிலே நடவாமல், ஜீவ ஒளியை அடைந்திருப்பான் (யோவா. 8:12). அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந் தது (யோவா.1:4). ஒளி எங்கே உண்டோ, அங்கே ஜீவன் உண்டு; மாறாக இருள் இருக்கும் இடத்தில் மரணம் இருக்கும்.

 

Leave a Reply